இட்லிவடை பதிவை திறந்தால் இட்லிவடை பல குக்கிகளையும், அன்னியலோகம் டாட் காம் என்ற இணைய தளத்தில் இரண்டு குக்கிகளையும் என்னுடைய கணினியில் நிறுவுகின்றது.
குக்கிகள் என்றால் என்ன ? குக்கி என்பது ஒரு உளவாளி போன்றவர். நமது கணியில் அமர்ந்துகொண்டு தகவல்களை வெளி ஆட்களுக்கு தருபவர் இந்த குக்கி.
குக்கி பற்றி திண்ணையில் குமாரபாரதி அவர்கள் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையில் :
வலைப் பட்சணங்கள்
பிறிதொரு வகை ஊடுருவல், வலையில் உலவும் பொழுது நடைபெறுகிறது. பல வகை பட்சணங்களை - குக்கிகளை கணினியில் (C:WindowCookies) விதைக்கின்றன. பல குக்கிகள் வலைத்தொடரபுகளை விரைவில் ஏற்படுத்தத் துணைபுரிகின்றன. இன்னும் குறிப்பாகக் கூறினால் குக்கிகள் இல்லாமல் சில தளங்களுடன் ஊடாட முடியாது. குக்கிகளை ஏற்றுக் கொள்ளவும் என்ற கட்டளையை Tools>>Internet Options >>Advanced ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் சில வகைக் குக்கிகள் கணினியில் உட்கார்ந்து கொண்டு பல தகவல்களை வெளியேற்று கின்றன.எங்கள் வாழ்வு முறைகள் வாங்கும் பொருட்கள் போன்றவற்றை சந்தைப் படுத்துகை ஆராய்ச்சிகளுக்காக சேகரித்து அனுப்புகின்றன. இவை மிக நாசூக்காகவே இயங்குவன. உலக வலைத்தளத்தில் எனது நடவடிக்கைகளை ஆராய்ந்து இவர்கள் சந்தை கட்ட முனைந்தால் .. .
திண்ணை கட்டுரையின் முழு உரல் > http://www.thinnai.com/?module=displaystory&story_id=40106021&format=html
திண்ணை கட்டுரையின் சுட்டி
குக்கி பற்றிய விக்கி பக்கம். குக்கி விக்கி.

இட்லிவடை இன்ஸ்டால் செய்த இட்லிவடை தளத்தின் குக்கிகள்.

இட்லிவடை இன்ஸ்டால் செய்த அன்னியலோகம் தளத்தின் குக்கிகள்.
குக்கிகள் மூலமாக நாம் ப்ரவுஸ் செய்த தளங்கள், நமது புரொபைல், நமது தனிப்பட்ட தகவல்களை திருடமுடியும். நமது அலுவலகம் எது, நமது நாடு என்ன, நாம் ப்ரவுஸ் செய்யும் கணினி என்ன என்பது வரை திருட முடியும் என்று ஒரு தளத்தில் படித்தேன்.
இட்லிவரை தான் மட்டும் வரவில்லை, அன்னியலோகம் தளத்து நன்பரையும் என்னுடைய கணினி பெட்டிக்குள் நுழைத்துவிட்டார். ஒரு வீட்டுக்குள் சொல்லாமல் நுழைவது ட்ரெஸ்பாஸிங். நீங்கள் என்னுடைய வீட்டுக்குள் சொல்லாமல் ஏன் நுழைந்தீர்கள் ?
நான் தினமும் பார்வையிடும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் செய்யாத ஒரு வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் ? உங்களது உண்மையான நோக்கம் என்ன ?
அடியேன் கேட்பது இதுதான். தொழில் நுட்பம் அறியாத பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை ஏன் இப்படி உளவு பார்க்கிறீர்கள் ? நேர்மையான பதிலை இட்லிவடை குழுவினரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.