
தமிழக ஊடகங்களில் காணகிடைக்கவில்லை. அதனால் நான் எழுதவேண்டியதா போச்சு. இரண்டு ஸ்போர்ட்ஸ் செய்திகள். 1. போர்ஸ் இண்டியா நேற்றைய இட்டாலியன் க்ரான்ப்ரிக்ஸில் நான்காவது இடத்தில் நிறைவு செய்துள்ளது. மொத்தம் பதிமூன்று புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தில் போர்ஸ் இண்டியா. ட்ரைவர் இருபத்தாறு வயது ஆட்ரியன் சுடில், ஜெர்மனிக்காரர். நிறைய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கிவருகிறது போர்ஸ் இண்டியா F1 டீம். நிறுவனர் விஜய் மல்லைய்யா மெருமைப்பட இன்னும் பல விஷயங்கள் நடதேறியிருக்கிறது. 2. யூ.எஸ் ஓப்பன் டென்னிஸில் ரபேல் நடாலை குமுறிவிட்டார் டெல்பெட்ரோ. 6- என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தினார். நடால் எப்பவும் கொஞ்சம் பெரிய டவுசராக போட்டு விளையாடுவார். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே என்னடா டவுசர் சின்னதாக இருக்கிறது, கிழிந்துவிடுமோ என்று நினைத்தேன். ஆனால் இப்படி கிழியும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே ஆறுமுறை ரோஜரிடம் நேரடியாக தோற்றவர்தான் டெல் பெட்ரோ. ஆனால் மறுபடி ஒருவாய்ப்பு அவருக்கு, ரோஜருக்கோ, பதினைந்தாவது க்ரான்ஸ்லாம் வரலாற்று கனவு. பார்ப்போம் ஆட்டம் எப்படி அமைகிறது என்று. என்னைப்பொறுத்தவரை, நடாலை வீழ்த்த யாராலும் முடியாது என்று நினைப்பேன். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு என்பது டைம் டு டைம் நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.

நடுவரை முறைத்துக்கொண்ட வில்லிய்ம்ஸும் குழந்தையோடும் பெண்கள் பிரிவிவின் கிம் க்ளிஸ்டர்ஸும் உபரி நியூஸ். பைனஸ்ஸில் கிம்முடன் மோதிய மேடம் Caroline Wozniacki படத்தை பதிவில் போடுகிறேன். நன்றி.முதல் முறையாக யூ எஸ் ஓப்பன் பைனல்ஸ் வந்தவருக்கு இம்சையின் பாராட்டு.