Friday, May 04, 2007

எங்க ஆயா வீட்டிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்

ஏற்கனவே "அஞ்சரை பெட்டியிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்" என்று விவரமான கட்டுரையொன்றை எழுதியிருந்தோம்.
பாசிசப்புலிகளின் உலகளாவிய அடாவடிகளை இனங்கண்டு அவற்றை வேரோடு களைய அனைவரையும் அணிதிரளும் வண்ணம் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
அதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதற்கப்பால் எம்மை நையாண்டி வேறு செய்தார்கள்.இப்போது பார்த்தீர்களா புலிகளின் வேலையை? இப்போதாவது நம்புகிறீர்களா நாம் முன்பு சொன்னதை?

அப்படி என்னதான் செய்தார்கள் புலிகள்?

எங்க ஆயா அண்மையில் நண்டுக்குழம்பு வைத்தது...வழமையாக கிராமத்தில் நிலத்தில் இருந்து பிடித்த நண்டுகள் அல்ல...ரிலையன்ஸ் ப்ரஸ் கடையில் இருந்து வாங்கிய கடல் நண்டு...அந்த நண்டுகளை வைப்பதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய கடையிலேயே கடலை உருவாக்கி வைத்திருந்தது தெரியுமா..

Ok Lets Not Get In to that.

பாசிச புலிகள் என்ன செய்தார்கள் தெரியுமா ? அந்த நண்டுக்குழம்பை பின்கட்டு வழியாக வந்து ஆட்டையை போட்டுச்சென்றுவிட்டார்கள்....முற்றத்தில் ஆயாவுக்கு வெற்றிலைப்பாக்கு இடித்துக்கொண்டிருந்த நாங்கள் உள்ளே சென்று பார்த்தபோது குழம்பு இல்லாமல் வெறுமனே சோற்று குண்டான் மட்டும் இருந்தது...

இதை எப்படி சாதித்தார்கள் புலிகள் ?

எங்க ஆயா பொக்கை வாயை போட்டுக்கொண்டு மரகதம் அக்கா பொட்டிக்கடையில் மொளகாத்தூள் வாங்கும்போது அங்கிருந்த இத்துப்போன கிழவனிடம் இதை உளறி வைத்துள்ளது...அந்த கிழவன் எதிர்த்தாப்புல சீட்டாட போகும்போது அங்க நின்றுகொண்டிருந்த மயூரனிடம் இதை உளற, அவன் தன்னுடைய பாசிச கூலீப்படையை அனுப்பி இதை சாதித்துவிட்டான்....

இதை முறியடிக்க எங்கள் (மூத்திர சந்தில் நின்றுகொண்டிருக்கும்) தலைவன் கருணாவின் உதவியுடன், தோட்டத்தில் வேலி அடைப்போம்...

"தூரம் அதிகமில்லை -துயரம்
வழியிலில்லை"
_____________
"வாருங்கள் வீரர்களே -ஒன்றாய்ச்
சேருங்கள் தோழர்களே"

நண்டுகொழம்பு வேண்டி
-விருமாண்டி-

9 comments:

Anonymous said...

அமெரிக்காவிலும் கைவைத்து விட்டனர் புலிகள்

பாசிச புலி said...

அடுத்த தரம் ஒங்காயாவ நண்டு கொழம்பு வெக்க சொல்லோ கொஞ்சம் ஒரப்பா வெக்க சொல்லு...உப்புமில்ல சப்புமில்ல

Anonymous said...

athu!!!!

Anonymous said...

நிஜமாகவா! ஆயாவைக் கடத்தி வந்திருந்தா ஈழத்தில சுடச் சுட நண்டுக் குழம்பு வைச்சு தின்னலாமே. எல்லாம் போச்சு. நம்ம கைவசம் விமானங்கள்
இருக்கே விரும்பிய நேரம் ஆயா வீட்டுக்கு வந்து சாப்பபிட்டாப் போச்சு.
சுப்பிரமணிய சுவாமியும் சோவும் தான் ஆயாட்ட எங்களைப் போட்டுக் குடுப்பாங்க. பாவிப் பசங்க.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

நிஜமாகவா! ஆயாவைக் கடத்தி வந்திருந்தா ஈழத்தில சுடச் சுட நண்டுக் குழம்பு வைச்சு தின்னலாமே. எல்லாம் போச்சு. நம்ம கைவசம் விமானங்கள்
இருக்கே விரும்பிய நேரம் ஆயா வீட்டுக்கு வந்து சாப்பபிட்டாப் போச்சு.
சுப்பிரமணிய சுவாமியும் சோவும் தான் ஆயாட்ட எங்களைப் போட்டுக் குடுப்பாங்க. பாவிப் பசங்க.

ஒரு ஈழத் தமிழன்


சோழன்

Anonymous said...

ஆயா வீட்டு நண்டு கொழம்பில் புலிகள் கை வச்சிட்டாங்கா எண்டு ஜெயா
அன்டி வெளியிட்ட கண்டன அறிக்கையை ஹிண்டுப் பத்திரிகையில பாத்தேன்.
எல்லாத்துக்கும் காரணம் புலிகள் தான் எண்டு முகர்ஜி சொல்லிட்டாரு.

Segar from VANNI

ஞாயிறு said...

ஜெயா செய்திகள்::
மைனாரிட்ட்டி திமுக ஆட்சியில்தான் உலகிலேயே ஒரு தீவிரவாத இயக்கம் ஆயா வீட்டிலேயே கைவைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.

பக்கத்து வீட்டு தேசிய தாத்தா::
ஆயா வீட்டிலேயே கை வைத்துவிட்டனரா... நாம ஆயாவுக்கு வெளக்கமாத்துக் கட்டை வழங்கி உதவி செய்வோம். எல்லா நாட்டு இறையாண்மையும் வாழ்க! தமிழனின் வாழ்வுரிமை ஒழிக!!


குப்பன்: இறையாண்மைன்னா என்னாப்பா??

சுப்பன்: அதெல்லாம் என்னான்னு கேக்கப்படாது. அதாவது ரொம்பக் கேள்வி கேக்கப்படாது. அதுக்குப் பேருதான் இறையாண்மை.

குப்பன்: ஒன்னுமே புரியலப்பா ...

சுப்பன் : இப்ப நீயும் நானும் ஒரு குடும்பம்னு வச்சுக்க ... என்ன வச்சுக்கிறது... அப்படின்னு நம்ம பரங்கித்தலை சுப்பரமணி சொல்லிட்டுப் போயிட்டான்னு வச்சுக்க ... அப்பறம் நீ நான் என்னதான் ஒதச்சாலும் வாங்கிகணும்... அப்பதான் நம்ம குடும்பத்தோட இறையாண்மையக் காப்பத்த முடியும். பக்கத்து வீட்டு சந்தியா வேடிக்கைதான் பாக்கும்... ஏன்னா அதுவும் இதே மாதிரி கேசுதான்... முடிஞ்சா சந்தியா ஒதைக்கிறவனுக்கு உதவி பண்ணும். எல்லாம் இறையாண்மையக் காப்பத்தறதுக்கு.

குப்பன்: என்னமோ சொல்ற... ஒண்ணும் புரியல... இருந்தாலும் திருடனுங்களுக்கு இறையாண்மை ரொம்பப் பிடிக்கும் போல இருக்கு.

Anonymous said...

டோண்டு பதிவில் பின்னூட்ட வேண்டாம்! - தலை.

Anonymous said...

இலங்கைக்கான உதவிகளை இங்கிலாந்து நிறுத்தி விட்டதாம். எல்லாத்துக்கும் புலிகளின் மிரட்டல்கள் தான் காரணம். என்ன இருந்தாலும் இங்கிலாந்து இப்படி ஒரேயடியாக மிரண்டிருக்கக் கூடாது.