Thursday, May 10, 2007

அட்டாக் பாண்டியன்....

மதுரை சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

http://www.sanmargroup.com/Newsmain/Matrix/June2001/kattpix1.jpg


இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஈவிரக்கம் இல்லாத ரவுடிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்...துணைபோனவர்களும் தூண்டிவிட்டவர்களும் அதைவிட கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பதை இந்த பதிவில் பதிவு செய்கிறேன்...

பதிவுக்கு காரணம் ? : அரசியல் வன்முறையும் , உயிரிழப்புகளும் எங்கே நடந்தாலும், எந்த கட்சியால் நடந்தாலும் அதை வன்மையாக கண்டிக்கிறேன்...இதற்கு ஆரிய / திராவிட குஞ்சாகத்தான் இருக்கவேண்டுமா என்ன ? இந்த வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டுபவர்களும் இருப்பது சலிப்பை தருகிறது...

தலைப்பு ? : ரவுடிகளுக்கு தலைமை தாங்கியவர் பெயர்...

படம் ? : கூகிளிட்டதில் கிடைத்தது..

பின்னூட்டம் ? : உடனே ரிலீஸ் பண்ண முடியாது...







#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

2 comments:

Anonymous said...

அடக்கொடுமையே!!!!

அட்டாக் பாண்டியன் ஒரு கூலித்தொழிலாளி, கூலிக்காக கொலை செய்பவன், வன்முறை செய்பவன்...(நான் மதுரைக்காரன் இந்த பாண்டியன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்)...

தூண்டிவிட்ட நபர் ஆட்சியாளரின் மகன், அவர்களது பத்திரிகையிலேயே வந்துள்ளது, அவர் ரன்னிங் கமண்டரி கேட்டு மகிழ்ந்ததாக. அவரையும் உங்கள் கண்டனம் உள்ளடக்கட்டும்.

இந்த மகனை ஈன்றதற்கு பெரிதுவந்து இன்றைய பாராட்டுக்கூட்டத்தில் பத்திரமும் வாசிக்கட்டும் உடன்பிறப்புக்களும், முதுகெலும்பற்ற காங்கிரஸ் பெரியக்கமும்.

Anonymous said...

ஓன்னுமே புரியல ஒலகதுல....

:=))

கொஞம் இத பருங்கோ...........

சென்னையில் முக.அழகிரி-சமாதானப் பேச்சு

அழகிரியின் சென்னை வருகை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மதுரை தாக்குதலைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடந்து கொண்டுள்ளன.

பேச்சு நடத்துவதற்காக கலாநிதி மாறனையும், தயாநிதி மாறனையும் முதல்வர் கருணாநிதி பலமுறை அழைத்தும் கூட அவர்கள் வர மறுத்து விட்டனராம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.


http://thatstamil.oneindia.in/news/2007/05/11/mkazhagiri.htmல்

க‌ல‌வ‌ர‌த்துட‌ன்,பாலு