Saturday, October 13, 2012

மாற்றான் - விமர்சனம்.


கூட்டிக்கிட்டு போறதெல்லாம் ஆங்கிலம், ஹிந்தி. கல்லூரி காலத்தில் தமிழ் படத்தை த்யேட்டரில் பார்த்ததோடு சரி என்று தங்கமணி ஒரு பாட்டம் புலம்பி வைக்க...(ஏற்கனவே இந்த விஜய் ரசிகை துப்பாக்கிக்கு டிட்டெக் புக் செய்துவிடுவார் என்ற சந்தேகங்கள் இருந்தாலும்), சரி டிக்கெட்ட போடு என்றேன்...

பி.வி.ஆர், கடைசி இருக்கைகள் மூன்று (இப்போதெல்லாம் மகளுக்கும் சேர்த்து - 4 வயது ஆகப்போகிறது, மடியில் உட்காருவதில்லை) புக் செய்தாயிற்று.

படத்துக்கு கிளம்பும் முன் கேபிள் சங்கர் மாற்றான் விமர்சனம் என்று கூகிளில் தேடினேன். விமர்சனம் எழுதியிருந்தார். வழக்கம்போல அவரது அரசியலை அதில் புகுத்தியிருந்தாலும் படத்தில் லாஜிக் ஓட்டை அது இது என்று மரண மொக்கை என்று சொல்லாமல் சொல்லியிருந்தார். ஏற்கனவே கேபிள் சங்கர் மொக்கை என்று சொல்லிய படங்கள் சூப்பராகவும், அவர் சூப்பர் என்று சொல்லிய படங்கள் த்ராபையாகவும் இருந்து - அனுபவப்பட்டவன் என்ற முறையில் படத்தை சந்தோஷமாகவே எதிர்கொள்ள தயாராக இருந்தேன்...



நாலு நாற்பது படத்துக்கு 4 மணிக்கு காரை எடுத்தால் வழியில் கடும் ட்ராபிக். 5:10 க்கு தான் படத்துக்குள் நுழைய முடிந்தது. தமிழ் படத்தை பொறுத்தவரை க்ளைமாக்ஸில் உட்கார்ந்தாலும் கதை புரியும் என்ற நியதிப்படி, மூன்றாவது பாப்கார்னை கொறிக்கும்போது கதை புரிய ஆரம்பித்தது. 

என்னை பொறுத்தவரை படத்தின் ப்ளஸ்கள்..

இரண்டு சூர்யாக்கள் - அவர்களை திரையில் கொண்டுவர அவரது கடுமையான உழைப்பு.
காஜல் அகர்வால் - அழகாக இருக்கிறார். இளமையாக இருக்கிறார். சப்பி சீக்ஸ், ரோஸீ லிப்ஸ் என்று ரைம்ஸ் பாடலாம் போலிருக்கிறது..



இசை - ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இரண்டு பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு. அந்த பாடல்களை உயிர்ப்போடு கொடுக்க சூர்யா(க்கள்), காஜல் அகர்வால், இயக்குனர், உதவி இயக்குனர்கள், பாரின் லொக்கேஷன்கள்..பிண்ணனி இசையும் பரவாயில்லை. (இது என்ன கொரியன் மூவியா பிண்ணனி இசையிலேயே வாழுறதுக்கு ? எல்லாம் இதுக்கு இது போதும் போங்கயா)..



வசனம் : பல இடங்களில் அட போடவைக்கும் வசனம். சுபா நன்றாக எழுதியிருக்கிறார்... (க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரையும் கூட்டிவாங்கப்பா)



திரைக்கதை, இயக்கம் : பொதுவாக வேகமான திரைக்கதையை தர முயற்சி பண்ணியிருக்கிறார் கேவி ஆனந்த். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

குறை : படத்தில் சந்தானம் / வடிவேலு / விவேக் - அட குறைந்த பட்சம் ஒரு சிவ கார்த்திகேயனையாவது போட்டிருக்கலாம். ஆனாலும் அது பெரிய குறையாக தெரியாமல் படம் மின்னல் வேகத்தில் போகிறது. சில இடங்களில் சூர்யாவின் வசனமே காமெடியில் ஸ்கோர் செய்கிறது. (த்யேட்டர் ரெஸ்பான்ஸ்)..

மொத்தத்தில் படம் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க ஏதுவானது. (எந்த இடத்திலும் ஆபாச காட்சிகளோ, முகம் சுளிக்கவைக்கும் காட்சிகளோ, அருவருப்பான விஷயங்களோ இல்லை. அறுவை சிகிச்சை நடைபெறுவதை அப்படியே காட்டும்போது சில பேர் விரும்பாமல் போகலாம்..). என்னுடைய மார்க் - நூத்துக்கு 80.

டிஸ்கிகள் : சூர்யாவோ, கேவி ஆனந்தோ, காஜல் அகர்வாலோ, அல்லது படத்தை வினியோகிக்கும் தோழர்களோ எனக்கு மாமன் மச்சான் மச்சினி உறவு இல்லை. இந்த விமர்சனத்தின் பின்னால் எந்த அரசியலும் இல்லை. படத்தை காசு கொடுத்து திரை அரங்கில் பார்த்த வெறும் பார்வையாளனாக என்னுடைய சொந்த கருத்தை பதிவு செய்கிறேன்... ஏதோ ஒரு ஆங்கில படம் பார்த்து இயக்குனர் காப்பி அடித்தார் என்றும் பேசிக்கொள்கிறார்கள். அப்படி அந்த தகவல் உண்மையாக இருந்தால் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்...வலைப்பதிவுகளில் வரும் விமர்சனங்கள் அந்த வலைப்பதிவர்களின் சொந்த கருத்துக்கள். அதனால் நீங்கள் படத்தை பார்த்து முடிவு செய்யுங்கள். 


5 comments:

Philosophy Prabhakaran said...

// வழக்கம்போல அவரது அரசியலை அதில் புகுத்தியிருந்தாலும் //

அது என்ன என்று விவரமாக சொன்னால் என் போன்ற அப்பாவிகள் தெரிந்து பயனடைவோம்...

Philosophy Prabhakaran said...

நீங்கள் லாஜிக் பற்றி எதுவும் யோசிக்காமல் பார்த்திருப்பதால் படம் உங்களுக்கு பிடித்திருக்கு போல...

முத்தரசு said...

சரிங்க இம்சை

jscjohny said...

James bond in paambu padagi la adi vangum irattaiyar ninaivil varuginranar bro!

jscjohny said...

James bond in "paambu padagi " ninaivirukka bro? That's it. The villain uses twins to fight with bond. I like soorya's act and kajal very much. Vellai kara pennai innum azhagiyaga select panni irunthal "ko" pia effect kidaithirukkum. No heart touching in her murder. My mark 45/100