பாடகி சின்மயி, கமிஷனர் அலுவலகத்தில் இரண்டு புகார்களை அளித்துள்ளார். ஒன்று அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்பாளர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்பது. மற்றையது தமிழ் இணைய ட்விட்டர் உலகில் இருக்கும் சிலர் தனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் / தொந்தரவு தருகிறார்கள் என்று. அதில் ஒரு குறிப்பிட்ட நபர் (ராஜன் இல்லாத மற்றைய ஒருவர்) மீது மேலும் கடுமையான புகாரை சொல்லியிருக்கிறார்...
இதில் ராஜன் தவிர்த்து மற்றைய யாரும் எனக்கு பரிச்சயம் இல்லாதவர்கள், ஒரு முறைகூட தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள் அல்ல. அதனால் அவர்கள் செய்த தவறுகள் என்ன என்பதை பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் பாடகி சின்மயியின் மாடஸ்டியை குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் இணைய உலகில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது அவருக்கு மிரட்டல் விடுத்திருந்தாலோ அல்லது அவருக்கு மன உளைச்சல் தந்திருந்தாலோ அதற்கு காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
தமிழக காவல்துறை, அதிலும் சைபர் க்ரைம், தமிழ் இணைய உலகுக்கு பரிச்சயமானது தான். தமிழ் இணையத்தில் அனைவரையும் ஆபாச அர்ச்சனை செய்துவந்த ஒரு சைக்கோவை வெறும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் வைத்து டவுசரை கழட்டி உட்காரவைத்தவர்கள். கூகிள் / ட்விட்டர் / யாஹூ உட்பட அனைத்து நிறுவனங்களும் தமிழக காவல்துறை அனுப்பும் மின்னஞ்சலுக்கு உடனே பதில் தருகிறார்கள். மின்னஞ்சல் முகவரி / ட்விட்டர் முகவரியை உருவாக்கியதில் இருந்து என்ன என்ன எழுதியிருந்தாலும் (டெலீட் செய்யப்பட்டவை உட்பட) முழுமையான பி.டி.எப் கோப்பாக அனுப்பிவிடுகிறார்கள். ஆகவே இதுபோன்ற சைபர் குற்றங்களில் தமிழக காவல்துறையின் அனுபவம் பற்றியோ, அல்லது அவர்களின் வேகம் பற்றியோ எனக்கு எள் அளவும் சந்தேகமில்லை...
ஆனால் இந்த குறிப்பிட்ட புகார் எப்படி தொடங்கியது என்பது பற்றி எனக்கு தெரிந்த வகையில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்...(சமீப காலங்களில் ட்விட்டர் முகவரி உருவாக்கியவர்களுக்கு இது பற்றி தெரியாது, அவர்களுக்கு விளக்கம் தரவேண்டும் என்பதை விட, டெல்லியில் இருந்துகொண்டு என்னால் சைபர் க்ரைம் காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆகி விளக்கம் கொடுக்க இயலாத நிலையில் என்னால் முடிந்த வகையில் ஆரம்பகால தகவல்களை பதிவு செய்து வைப்பது என் கடமை என்று கருதுகிறேன்).
மேலும் பொதுவாகவே பெண் புகார் கொடுத்தால் இளகும் மனம் உள்ள காவல் துறையினர், பாடகி சின்மயி போன்ற ஒரு பிரபலம் / செலப்ரட்டி புகார் கொடுத்தால் எதிர் தரப்பில் உள்ள சிவிலியன்கள் (ராஜன் உட்பட), என்ன சொல்லியிருக்கிறார்கள் / செய்திருக்கிறார்கள் என்று அவர்களது விளக்கத்தை தர கூட அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறியே...!!! அதனால் இது போன்ற விளக்கத்தை எழுதி, எனக்கு தெரிந்த காவல்துறை நன்பர்கள் மூலம் அவர்களுக்கு முன்பே கிடைக்குமாறு செய்வதும் இந்த பிரச்சனையில் இரண்டு தரப்பையும் விளக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். (மேலும் இந்த வாரம் தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் பெரிதாக ஏதும் நடைபெற்றிருக்காது என்று நம்புகிறேன்)..
பீடிகையிலேயே பீடி குடிக்க போகும் அளவுக்கு ப்ளேடு போடாதே ரவி விஷயத்துக்கு வா என்று அண்ணன் உண்மைத்தமிழன் அலறுகிறார்...!!
- பாடகி சின்மயி ட்விட்டருக்கு வந்தபோது உற்சாகமாக அனைவரும் பாலோ செய்தோம், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவரது கருத்துக்களை தெரிந்துகொள்ள....
- இலங்கை படையினர் தமிழக மீனவர்களை சுட்டு கொன்ற ஒரு நிகழ்வின்போது, மீனவன் மீனை கொல்றான், சிங்கள படையினர் மீனவனை கொல்றான் என்ற வகையில் ஒரு ட்வீட்டை இட்டார். இது பரந்துபட்ட அளவில் அனைத்து தமிழ் ட்வீட்டர்கள் மத்தியில் எதிர்ப்பு எழ காரணமாக இருந்தது. தமிழ் உணர்வாளர்கள், நடுநிலையாளர்கள், பெண்கள் என அனைவரும் பாடகி சின்மயிக்கு எதிராக தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை எழுதினார்கள். பாடகி சின்மயி, இதற்கு மறுப்போ மன்னிப்போ தெரிவிக்காமல், நான் ப்ராமின் என்பதால் என்னை தாக்குகிறீர்கள் என்ற ரீதியில் - சரியாக நினைவில்லை - எழுதினார். அதே நேரம் அவரை கேள்வி கேட்டவர்களை எல்லாம் தடை செய்தார். இந்த குறிப்பிட்ட நிகழ்வின் போது நான் ட்விட்டரில் ஆக்டிவ் ஆக பங்கேற்க இயலாத வகையில் பணி சுமை இருந்தது. அதனால் நான் இதில் கலந்துகொள்ள இயலவில்லை...
- சாதி ரீதியான இட ஒதுக்கீடு தவறு என்று தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை தூற்றி எழுதினார். பொருளாதார அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு அமைய வேண்டும் என்றும் சொன்னார். இது அவரது கருத்து என்ற வகையில் அல்லாமல், வன்மம் தெறிக்கும் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருந்தார். நானும் என்னைப்போல மற்றவர்களும் அவரை கேள்வி கேட்டோம். சாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுத்து அதன் படியே இட ஒதுக்கீடு அமையவேண்டும் என்று நான் அவரிடம் விவாதம் செய்தேன். விவாதம் என்னவோ ஆரோக்கியமான வகையில் தான் சென்றது. ஆனால் ஒரு பிரபலம் / செலப்ரட்டி என்பதற்கான எந்த மெச்சூரிட்டியும் இல்லாமல் தன்னுடைய கருத்தை எதிர்த்து கருத்து சொன்னவர்களை எல்லாம் க்ளிக் / ப்ளாக் (தடை செய்வது) செய்தார். ஒரு கட்டத்தில் தமிழில் பதில் சொன்னவர்களை எல்லாம் தடை செய்தார். குறைந்தபட்சம் 100 பேரையாவது தடை செய்திருப்பார் என்பது என் கணிப்பு. பள்ளிக்கூட பிள்ளைகள் டூ விடுவது போல மிகையான இம்மெச்சூரிட்டியோடு நடந்துகொண்டார்...
இது தான் ஆரம்பம்.
இதன் பிறகு ராஜன் என்ன சொன்னாலும் அது தன்னை நோக்கித்தான் சொல்கிறார் என்ற வகையில் நடந்துகொண்டார். அதற்கு தூபம் போடுவது போல அவருடைய பாலோவர் ஆக இருக்கும் சில தோழர்கள் / தோழிகள் அவருக்கு தவறான வழிகாட்டியாக இருந்து "ஏய் அவன் உன்னைத்தான் சொல்கிறான்" என்பது போல அந்த ட்வீட்டுகளை எல்லாம் படம் எடுத்து பாடகி சின்மயிக்கு தொடந்து அனுப்பிவைத்திருக்கிறார்கள்...
ஒரு படத்தில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய முயலும் வைகை புயல் வடிவேலு, புரோக்கராக செயல்பட்ட சிங்க முத்துவுக்கு கமிஷன் தொகையினை தர மறுக்க, சொம்பு கேட்கிறான், தங்க சொம்பு கேட்கிறான் என்று சொல்லியும், அதிலும், வடிவேலு காலை தூக்கி கொசு அடிக்க, "அங்க பாரு சொம்புக்காக ஒத்தை காலில் நிற்கிறான்" என்று ஒரே போடாக போட்டு தரும அடி வாங்க வைத்து கல்யாணத்தையே நிறுத்துவார்...
இறுதியில் அந்த நிலையானதுங்க இந்த பிரச்சனை...
ராஜனை பொறுத்த வரை இது தான் நேர்ந்தது. ஆனால் ராஜனுக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்துக்கொண்டு சில அல்லக்கைகள் ஓவராக நடந்துகொண்டார்கள், (அதிலும் குறிப்பிட்ட ஒருவர் படு ஆபாசமாக பேசியிருக்கிறார் )..அவர்களை கண்டறிந்து (அதற்கான ஸ்க்ரீன் ஷாட் எல்லாம் பாடகி சின்மயி கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்) தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அதன் மூலம் தமிழ் இணையத்தில் பெண்கள் மேலும் சுகந்திரமாக இயங்கும் நிலை ஏற்படவேண்டும் என்பது சரியானதே...
இதை பற்றி மேலும் பார்த்தோமானால், பொதுவாகவே தமிழ் இணையத்தில் பெண்கள் சுகந்திரமாக இயங்க இயலாத சூழ்நிலை கடந்த ஒரு ஆண்டாகவே ஏற்பட்டது. பெண்கள் தொட்டா சிணுங்கிகளாக இருக்கிறார்கள் என்பதை விட, அடிப்படை மனித பண்புகள், தனிமனித ஒழுக்கம் இல்லாத வீணாப்போனதுகளும் ட்விட்டர் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பங்கேற்க தொடங்கியதும் ஒரு காரணம். இதற்கு காரணம், நமது கல்வி முறை. ஒழுக்கத்தை கட்டுப்பாடாக கற்பிக்கிறோமே தவிர, அதனை ஒரு வாழ்வியல் முறையாக கற்பிப்பது இல்லை. இதற்கு காரணம் மெக்காலே. ஆங்கிலேய ஆட்சி. இப்படி காரணம் சொல்லிக்கொண்டே போகலாம். இவை இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் மாறப்போவதில்லை. பெண்கள் தான் மாற வேண்டும். you have to be more stronger in the social networks. நெல்லில் அடித்தால் கல்லில் அடியுங்கள். இது தான் தேவை. இதன் மூலம் தான், படிப்பினை தந்து மாற்றத்தை கொண்டுவர முடியும். கொஞ்சம் off topic ஆக போகிறேன் என்று நினைக்கிறேன்...!!
நான் சொல்ல நினைத்ததை கன்வே செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்...!!
மேலும் ராஜனோ அல்லது அவரது டிசைப்பிள்ஸோ வேறு என்ன வகையில் பாடகி சின்மயிக்கு மன உளைச்சல் தந்தார்கள் என்பது பற்றி வேறு தகவல்கள் எதுவும் எனக்கு தெரியாத நிலையில், எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துவிட்டேன்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ராஜன் உட்பட இந்த பிரச்சனையில் இருக்கும் யாரையும் நான் சந்தித்ததே இல்லை. ராஜனிடம் மட்டும் சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன்...வேறு ஒரு பிரச்சனையில், மனித தன்மை இல்லாமல் நடந்துகொண்ட ராஜன் உட்பட அனைவரையும் ப்ளாக் செய்துவிட்டேன்..இதனால் இவர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் எழுதுவதும் இவர்களுக்கு போகாது :)))
எல்லோரும் வாழ்க வளமுடன்...
பி.கு: சில மாதம் முன் சென்னை சென்றிருந்தபோது, பாடகி சின்மயியை சந்தித்து இது குறித்து விளக்கம் தர முயன்றபோது, அவர் நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவில்லை...
(பதிவில் உள்ள படம் உதவி : விக்கிபீடியா)
13 comments:
ராஜன் எதுவாக இருந்தாலும் ஓப்பன் டாக்காக பேசுபவர், தனிபட்ட முறையில் ஆபாசமாக மெயில் அனுப்பினார், பேஸ்புக்கில் ஆபாச படம் போட்டார் என்பதை என்னால் நம்பமுடியாது. ராஜனை எனக்கு நன்றாக தெரியும்!
தப்புன்னா தப்புன்னு சொல்வார், சில நேரங்களில் வார்த்தை தான் கொஞ்சம் தடித்து விடுகிறது!
பாலோ அப்புக்கு
அவர் அவ்வாறு செய்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். ஆனால் தொடர்ந்தும் ஒருவருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்று தெரிந்தும் அவரை குறிப்பிட்டு சமூக ஊடகத்தில் தாக்கினால் மேலும் அவருக்கு மன உளைச்சல் ஏற்படும் என்று தெரியாத குழந்தை அல்ல ராஜன்.
ஒரு கோடி பிரபலங்கள் ட்விட்டெரில் இருக்கும் போது இந்த சின்னத்தனமான சின்மயியையா செக்ஸ் டார்ச்சர் கொடுப்பார்
அம்மா உன்னை பார்த்தா பாடகி மாதிரியாம்மா தெரியுது. நீ அப்படி எல்லாம் சொல்லக்கூடாது.சுசீலா ஜானகி அவங்கதான் பாடகி மாதிரி இருப்பாங்க
Right time analysis bro. Nice efforts. Take care.
எனக்கும் ட்விட்டர் பழக்கம் இல்லை. அதனால் என்ன நடந்தது என்று சொல்ல இயலவில்லை. பேஸ்புக்கில் யாரோ ஒருவர் உங்களுடைய வலைப்பதிவை கொடுத்ததால் படிக்க நேர்ந்தது.
எனக்கு ஒன்று புரியவில்லை. ராஜன் என்ன செய்தார் என்று கூறும் நீங்களே ஒரு இடத்தில் அவரை வேறு ஒரு பிரச்சினையில் மனித தன்மை இன்றி நடந்து கொண்டார் என்று கூறி உள்ளீர்கள். அப்படி இங்கேயும் நடந்திருக்க வாய்ப்பு உண்டல்லவா? நீங்கள் அவரை தடுத்த பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அல்லது இது தான் நடந்தது என்று நாம் சொல்ல இயலுமா?
அதாவது உங்களிடத்தில் மனித தன்மை இல்லாமல் நடந்து கொண்ட ராஜன் போன்றவர்கள் அடுத்தவர் இடத்தில் மனித தன்மை உடன் தான் நடந்து கொண்டிருப்பர் என்று எந்த வகையில் முடிவுக்கு வந்தீர்கள் என்று புரியவில்லை.
செந்தழல்,
நாமும் துவித்தர், முகநூல் எல்லாம் போனதில்லை என்ன நடநது என தெரியாது, இப்போது கொஞ்சம் பிறாய்ந்து படித்தேன்,
சின்மயி சொன்னது கருத்தியல் ரீதியாக பிற்போக்கானது , அதற்கான பதிலை கருத்தியல் ரீதியாக கொடுத்து கண்டிக்க வேண்டியதே.
ஆனால் அவர் குற்றம் சாட்டுபவர்கள் எவ்வகையில் பேசினார்கள் என்பது அறிய முடியவில்லை/ முழுதாக தெரியவில்லை.
எனவே அவரின் குற்றசாட்டினை தனி நபர் தாக்குதல் என எடுத்துக்கொண்டாலும், சின்மயி சொன்ன கருத்துக்கள் மிகவும் விஷமத்தனமானவை, அரசியல் மற்றும் தர்க்க ரீதியாக இப்படியான கருத்துக்கு சரியான எதிர்வினை தேவை ஆனால் வருங்காலத்தில் இவர் சொல்லும் விஷமக்கருத்திற்கு எதிர்வினை ஆற்றினாலும் பெண் என்னும் பெயரில் ஒரு போலியான பாதுகாப்பு பரிதாபத்தினை தேடுவார் என்பது போல உள்ளது அவர் பேசுவது.
சின்மயி போன்றவர்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழுக்கும் , தமிழ் மக்களுக்கும் எதிராகவே பேசிக்கொண்டிருப்பதாக படுகிறது.
அவருடன் துவித்தரில் பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்பது முழுதாக தெரியவில்லை,ஆனால் சின்மயின் கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை, இப்படி பேசிவிட்டு தமிழ் திரையுலகில் இருக்க வேண்டும் என நினைப்பது எதற்கு , இந்தம்மா பாடவில்லை என்றால் தமிழன் வாழ மாட்டானா?
சின்மயின் மீது தனிமனித தாக்குதல் நடத்தியிருந்தால் அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும், அவர் தமிழர்கள் மற்றும் இட ஒதுக்கீடு என பேசியதற்கு சம்மந்தப்பட்ட மக்கள் எதிர் குரல் கொடுத்தால் அதனையும் அனுபவிக்கட்டும்.
என்னை பொறுத்தவரையில் சின்மயி சொன்ன கருத்துக்கள் ,உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவையே,தனிப்பட்ட முறையில் மற்றவர்கள் தாக்குதல் செய்திருந்தால் அதுவும் கண்டனத்துக்குறியதே.
ஆனால் பெண் என்பதை பயன்ப்படுத்தி அவர் சொன்ன விஷம கருத்தினை நியாயம் என யாரும் சொல்லக்கூடாது.
வவ்வால்ஜி, சின்மயியை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு பக்குவம் இல்லாதவர்கள் சிலர் ஆபாச தாக்குதலில் இறங்கினார்கள். இதில் ராஜன் பலிகடா ஆக்கப்பட்டார் என்பதே நிஜம்...ராஜன் மீண்டு வந்துவிடுவார் என்று கருதுகிறேன்..!!!
திரு SierrA ManiaC
ராஜனுக்கும் சின்மயிக்கும் ஒரு தொடர்ந்த கேட் அண்ட் மவுஸ் இருந்து வந்தது. அவர் வேறு ஒரு பெண்ணுக்கு ஆதரவாக ஒரு கும்பலிடம் நான் மோதியபோது எனக்கு எந்த ஆதரவும் அளிக்கவில்லை. மாறாக கிண்டலில் இறங்கினார். அதன் பலனாக அவரையும் ரேணிகுண்டா பாய்ஸ் என்ற ஆபாச கும்பலையும் மொத்தமாக தடைசெய்தேன்...
வால்பையன் கூறுவதுபோல் rajan நல்லவரே.. கீழ்த்தரமாக செயல்படுபவர் அல்ல.. மனதிற்கு சரியெனப் படுவதை பேசுபவர்.
வவ்வால்ஜி...super...its true...
---by Maakkaan
சின்மயி பிற்போக்காக பேசினார் என்றால், அவரிடத்தில் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது?? ஆட்சியாளர் கொண்டு வராத மாற்றமா ஒரு பாடகி கொண்டு வந்து விடப்போகிறார்?
இலங்கை மீனவர் பிரச்சனையை, தமிழகத்தில் இருக்கும் 6 கோடி மக்கலாலயே ஏதும் செய்ய இயலவில்லை, சின்மயி மட்டும் மாறிவிட்டால், நிலைமை மாறிடுமா என்ன?
மெச்சுரிட்டி இல்லாத செலிப்ரிட்டி என்று சொல்லிவிட்டு, அவரிடம் வாக்குவாதம் செய்வது, எந்த அளவிற்கான மெச்சுரிட்டி??
நான் இதை அனைத்தும் சொல்வதால், சின்மயியின் கருத்துக்கு ஆதரவானவனல்லன்!
மாறாக வாதங்கள் எப்பொழுதும்.. நாகரீகமானதாக இருக்க வேண்டும்!!
இப்போது குற்றம் சாட்டபட்டிருப்பவர்கள், இந்நிலையடைய முதற்காரணம், அவர்கள் கீச்சில் எப்போதும் ஒரு கேலி, ஆபாசம் நிறைந்திருப்பதே ஆகும்!
இதே கீச்சர்கள், கலைஞரை, ஜெயலலிதாவை, ராமதாசை, சிதம்பரத்தை, மன்மோகனை, சோனியாவை.... இன்னும் பலரை எப்படியெல்லாம்,தூற்றி இருக்கின்றனர் என்பதை எல்லாம் ஆராய்ந்தால், அவ்வளவே.. இவர்கள் காலம் முழுவதும் கம்பிக்கு பின்னால் தான்.....
ஆகவே தான் வெகு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், இணையத்தில் நாகரீகம் அவசியம் என்று!
Post a Comment