Monday, October 29, 2012

தினத்தந்தியில் இருந்து எழுந்த உள்ளொளி !!

ஒரு மொக்கை பதிவை எழுதக்கூட பல முறை யோசிக்கவேண்டிய காலகட்டதை உருவாக்கியவர்களே. உங்களுக்கு என்னை எல்லாம் பார்த்தால் பாவமாக இல்லையா ? சரி பரவாயில்லை. அங்கங்கே திரு சார் எல்லாம் போட்டு மரியாதையாக திட்டி எழுதிக்கொள்கிறேன்..எழுத்துலக பிதாமகனார், பல ஆயிரம் பக்கங்களுக்கு காத்திரமான நாவல்களை (கதபுக் என்கிறார் தோழர் கல்வெட்டு என்கிற பலூன் மாமா) எழுதி குவித்த, குவிக்கும், குவிக்கப்போகும் இலக்கிய சூப்பர் ஸ்டார் ஜெயமோகன் சார் சமீபத்தில் இணையத்தில் நடந்த சில அக்கப்போர்களை பற்றி தனது முத்தான கருத்துக்களை தனது வலைப்பூவில் உதிர்த்திருக்கிறார்..சாம்பிளுக்கு ரெண்டு...

- சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவருக்கு ஆபாச தாக்குதல் தொடுத்தார்கள், அவரது படத்தை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பினார்கள். இது அவரது முதல் பதிவில் பொங்கியதன் சாராம்சம். இந்த விடயம் அவர் காலையில் படிக்கும் தினத்தந்தி அல்லது தினமலரில் வந்திருக்கலாம் (http://www.jeyamohan.in/ என்ற இணைய தளத்தில் இருக்கும். என் நேரக்கொடுமை இந்த கந்தாயம் என்னுடைய கணினியில் திறக்க மறுக்கிறது. சரியான சுட்டியை கொடுக்க இயலவில்லை. இதற்கு என்னுடைய வாசகர்களிடம் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்)

- சம்பந்தபட்ட பலான பலான நபருக்கு உதவ 15 லட்சம் அளவுக்கு பணம் சேர்த்துள்ளார்கள். இந்த விஷயம் அவரது நட்பு வட்டத்தில் உள்ள எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் சொல்லியது. இதுவும் அவரது பதிவிலேயே இருக்கிறது...அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர் எனக்கு தெரிந்து திரு சிரில் அலெக்ஸ் சார். வலைப்பதிவு / சற்றுமுன் காலத்தில் இருந்து (6 ஆண்டுகளாக) அவரை அறிந்தவன் அடியேன்..அவர் இது போன்ற மொக்கையான தகவலை சொல்லமாட்டார். ஆகவே மேற்படி தகவலை அவரைப்போன்றதொரு தினத்தந்தி தினமலர் சொம்பு சார் தான் சொல்லியிருக்கவேண்டும்... இந்த குறிப்பிட்ட விடயம் பற்றி அடியேன் கடைசியாக ட்வீட்டியதொரு ட்வீட்டு எப்படி போகிறதென்றால் தனிப்பட்ட வன்மம் மற்றும் சண்டை போன்றவைகளை நியூஸ் வொர்தியாக்க அவரை தொடர்ந்து பாலோ செய்து போலி பெயரில் பின் தொடர்ந்து அவர் ஆட்சியாளர்களை விமர்சிக்கும்போதெல்லாம் ஸ்க்ரீன் ஷாட் திரைச்சொட்டு எடுத்து குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த இணையம் அறிந்த இனவெறியரான (சூத்திரர்களை ஆபாசமாக திட்டியவர் - திரைச்சொட்டு இருக்கிறது) பல்லாவரத்தான் என்பவர் உதவியோடு பழிவாங்கப்பட்டார் என்கிறது. (Safe Para கரெக்டுதானே) 

இணையத்தில் இன்று புழங்குகிற நடுநிலை நட்டநடு செண்டர் வாதிகளில் இருந்து, தீவிர தமிழ் தேசிய திடீர் குபீர் இணைய புரட்சியாளர்கள் வரையிலும், கபடநாடகவேடதாரி போலி கம்யூனிஸ்டுகள் வரையிலும், கணிப்பொறி வல்லுனர்கள், டி.டி.பி ஆப்பரேட்டர்கள், கல்லூரி மாணவர்கள், குடும்பத்தலைவிகள் அனைவரும் அறிந்ததான உண்மை இது..

இவர்கள் தான் உங்களை கொண்டாடி, உங்கள் புத்தகங்களை காசு கொடுத்து எக்போக்களிலும், டயல் பார் புக்ஸ்களிலும், புத்தக கடைகளிலும் வாங்குபவர்கள்.. உங்களது சோ கால்ட் (திரு சோ ராமசாமி அவதூறு வழக்கு போட்டுடப்போறார்). so called  இணைய தினத்தந்தி தினமலர் கக்கூஸ் / காபி ரீடிங் சொம்புகள் ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள் அல்ல...

ஆகவே இன்றைக்கு அனைவரும் அறிந்த பிரச்சனையில் நீங்கள் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப்போல  வேட்டி அவிழ்ந்த குடிகாரனைப்போல அம்பலப்பட்டு நிற்பது கண்டு உண்மையில் பரிதாபப்படுகிறேன் சார். உங்களை நேருக்கு நேர் டவுசர் கழட்டி கேள்வி கேட்டு உங்கள் வாசகர் வட்ட (??) கூட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஆர்.பி.ராஜநாயஹம் அளவுக்கு நான் பெரிய வாசகன் அல்ல. உங்களது புத்தகம் ஒன்று கூட அடியேடினிடம் இல்லை. (வாங்கலாம் என்றிருந்தேன், ஆனால் இனி வாங்கப்போவதும் இல்லை)..

எனக்கு எழும் கேள்வி எல்லாம் இது தான் நித்யானந்த யதியிம் இருந்து பெற்ற உள்ளொளியா ? இந்த அவதூறு தான் இந்து ஞான மரபு தமிழ் கூறும் நல் உலகுக்கு தந்ததா ? இது தான் உங்கள் வாசகருக்கு நீங்க அளிக்கும் மன அமைதியா / ஆறுதலா ? இது தான் உங்களை பெரிய அறிவு ஜீவி என்று இது காறும் எண்ணிய அடியேனைப்போன்றவர்களுக்கு (அட என்னைத்தான் சொல்கிறேன்) நீங்கள் காட்டும் நித்திய பரிசுத்த தூய போற்றுதலுக்குறிய மன வெளிச்சமா ? 

இந்த குறிப்பிட்ட பிரச்சனையில் உங்களது காத்திரமான இலக்கிய கத புத்தகத்தை பல பேர் முன்பு கிழித்து போட்ட திரு சாரு நிவேதிதா சாரும் கருத்து சொல்லியிருக்கிறார். அவரை யாரும் மதிக்கப்போவதில்லை. அவரது தீவிர வாசகர் / ஆதரவாளரான திரு யுவக்கிருஷ்ணா கூட மனம் நொந்திருக்கிறார்...அவரை பற்றி எல்லாருக்கும் தெரியும் (உதா : நித்யானந்தா வெளியிட்ட கடிதமும் ஒரு பெண்ணிடம் இணையத்தில் அவர் காட்டிய வக்கிரமும்), ஆகவே 90 சதவீதம் பேர் அவரை புறக்கணித்துவிடுவார்கள். ஆனால் நீங்களும் இந்த பிரச்சனையில் டவுசர் கழண்டு நிற்பீர்கள் என்று உண்மையில் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை...

அப்புறம் என்ன...இந்த பதிவு 100 பேருக்காவது ஷேர் ஆகும். பேஸ்புக்கில் / ட்விட்டரில் / கூகிள் ப்ளஸ்ஸில் நானே ஷேர் செய்வேன். (எனக்கு மார்க்கெட்டிங் நான் தானே சார்)...உங்கள் புத்தகங்களை நான் புறக்கணிப்பது போல இன்னும் 100 பேர் புறக்கணிக்கமாட்டார்களா என்ற நம்பிக்கையில் மெய் நிகர் உலகான இந்த இணையம் மூலமாக உங்கள் பொற்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து உள்ளம் உருகி வணங்கி உங்கள் பாதங்களை முத்தமிட்டு உளப்பூர்வமாக சொல்கிறேன், நீங்கள் ஒரு மரண மொக்கை சார் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பதிவை முடிக்கிறேன்..


7 comments:

Mathi said...

+1. நன்று மிக அருமை, நன்றி ரவி...........


இவரை சுற்றி நாலு அல்லகைகள், அவர்களிடம் விஷயத்தை சேகரித்து இவர் பதிவு இடுவாராம்......வன்மத்தை வாரி இரைதிருகின்றார்......ஒருவான் வாழ்வை கெடுத்து உள்ளே அனுப்பிட்டாங்க.....மேலும் கண்டதை எழுதி மேலும் சிக்கல் ஆக்கவேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோள்

தகிடுதத்தம் ரமணி said...

அன்புள்ள கோகுல்,

இதேபோன்ற ஒரு தருணத்தில் நான் என்ன நடக்கிறது என்பதை சமநிலை உடையவர்கள் என நான் நம்பும் சிலரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதே வழக்கம். அவ்விதமே தெரிந்துகொண்டேன்.

இணையத்திற்கு வரும் எல்லாப் பெண்களும் ஆபாசமனங்களால் ஓட ஓடத் துரத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று சின்மயி பிராமணப்பெண் என்றும் பிராமணவாதம் பேசினார் என்றும் ஆகவே அவரை வசைபாடலாம் தப்பில்லை என்றும் வாதிடும் இதே கும்பல் கொஞ்சநாள் முன்பு சிவகாசி விபத்து பேரைச்சொல்லி நிதிமோசடிசெய்த சிலரை அடையாளம் காட்டிய ஒரு மலேசியப்பெண்ணை ஆபாசத்தால் ஓடஒட விரட்டியது. அதற்குமுன்பு இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புடைய ஒரு பெண்மணியைப்பற்றி இதேவகையான ஆபாசத்துரத்தல். குறைந்தது ஐம்பது நிகழ்ச்சிகளை நான் சுட்டிக்காட்டமுடியும். ஒவ்வொரு ஆபாசத்தாக்குதலுக்கும் இணையத்தில் ஆதரவு குவிந்தது, உங்களைப்போன்ற இளைஞர்களிடமிருந்து.

உங்கள் முக்கியமான வாதங்கள் இரண்டு. ஒன்று, ஒரு பெண் சரியாக இல்லை என்றால் ஆபாசமாகப் பேசலாம், தப்பில்லை. ஏன் ஆபாசமாக நடந்துகொண்டாய் என்று கேட்டால் எந்தப்பொறுக்கிக்கும் ‘அவ என்ன யோக்கியமா?’ என்ற ஒரு பதில் இருக்கும். அந்த விளக்கத்தையும் கேட்டு பஞ்சாயத்துசெய்துதான் முடிவெடுக்கவேண்டும் என்றால் அதைப்போல அபத்தாமான கோரிக்கை ஏதுமில்லை

இந்த மனநிலை நம் இளைஞர்கள் பெரும்பாலானவர்களிடம் உள்ள ஒன்று. கல்லூரி வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கக்கூடிய பெண்ணை, போட்டிகளில் முந்திச்செல்லக்கூடிய பெண்ணை, கொஞ்சம் சுதந்திரமாகப் பேசக்கூடிய பெண்ணை, உடனடியாக அவள் நடத்தையை சுட்டிக்காட்டி இழித்துரைப்பது நம் இளைஞர்களின் வழக்கம். அதே மனநிலை இது. நாம் கொஞ்சமேனும் பரிசீலனை செய்துகொள்ளவேண்டிய ஆதார மனக்கோளாறு இது.

இந்த தளத்தில் நியாயம் பேசும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுப்பெண்கள் இந்த தளத்திற்கு வரமல் பாதுகாத்தபின்னரே இதைப்பேசுகிறார்கள்.

இணையத்தில் சின்மயி பேசியதாகச் சொல்லப்படுவதைவிட சாதிய விஷத்தைக் கக்கும் பலர் இருக்கிறார்கள். அங்கெல்லாம் இந்த ஆபாசக்கும்பல் செல்லவில்லை. அவர் பெண் என்பதும் பெண்ணைப்பற்றி ஆபாசமாகப்பேசுவது ஒரு மனச்சிக்கல் என்பதும் தவிர இதில் எதுவுமே இல்லை.

இரண்டு, சின்மயி பிரபலம் ஆகவே அவர் புகார் கொடுக்கிறார் என்பது. ஆக, உங்களுக்கே தெரியும், இங்கே எல்லாப் பெண்களும் அவமதிக்கப்படுகிறார்கள் என்பது. ‘அவளெல்லாம் சும்மாதானே இருந்தா நீ மட்டும் ஏன் துள்றே?’ என்கிறீர்கள். ஆம், இம்மாதிரி விஷயங்களில் நடுத்தரவர்க்கப் பெண்கள் அடங்கித்தான் செல்வார்கள். எப்போதாவது ஒரு பிரபலமோ பணமுள்ளவரோ மட்டுமே துணிந்து நியாயம் கேட்பார்கள். உடனே அவர்கள் பிரபலம், பணமுள்ளவர்கள், அந்தத் திமிர் அவர்களுக்கு என ‘நியாயம்’ பேச ஆரம்பித்துவிடுவீர்கள் இல்லையா?

இந்த இணையச்சூழலில் எவ்வளவோ நியாயமான சமூகப்பிரச்சினைகளுக்காக, அரசியல்போராட்டங்களுக்காக நான் உட்பட பலர் நிதிச்சேகரிப்புக்கு அறிக்கை கொடுத்திருக்கிறோம். தலித்முரசு நிதிக்காக, நம்மாழ்வார் நிதிக்காக, நாட்டார்கலைகளுக்கான நிதிக்காக …. எங்கும் எவருக்கும் சில ஆயிரங்களுக்குக் கூட இளையதலைமுறை நிதியளித்ததில்லை

இந்த ஆபாசமனிதர்களைக் காப்பாற்ற இதுவரை 15 லட்சம் வரை நிதி வசூலாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நிதியளித்த ஒவ்வொரு இளைஞனும் வாய்ப்புக்கிடைக்கும்போது இதே ஆபாசத்தைப் பெண்கள் மேல் உமிழக்கூடியவன் என்பதே காரணம். இந்த ஆபாசமனிதர்களை இந்த இணையக்கும்பல் நிதியளித்து ஊக்குவிக்கிறது, மேலும் தூண்டிவிடுகிறது. இது இன்னும் தொடரும். இந்த ஆபாசத்தைக் கொட்டி நிதி வசூல் செய்யமுடியும் எனற நிலை உருவாகியிருக்கிறது.

இந்த ஆபாசமனிதர்களை ஆதரித்து மனுஷ்யபுத்திரன் தொலைக்காட்சியில் வந்து பேசினார் என அறிந்ததும் எழுந்த மனக்கொந்தளிப்பு சாதாரணமல்ல.

சமீபத்தில் நம் கலாச்சாரச்சூழல் பற்றி மிக அவநம்பிக்கையாக உணர்ந்தது இந்த ஆபாசமனிதர்களுக்குப் பெருகிவரும் ஆதரவைக்கண்டுதான். இங்கே வாழ்வதற்காக வெட்கி நாணும் தருணம் இது.

கடைசியாக, இந்தக்கடிதம் ஒன்றைக்காட்டுகிறது, நம்மிடையே தார்மீகமாக மிகப்பெரிய தூரம் உள்ளது. அது சமீபகாலத்தில் நிரம்பும் என நான் நினைக்கவில்லை. உங்களைப்பற்றிய மதிப்பை நான் மீட்டுக்கொள்ள வெகுகாலம் பிடிக்கும். அதுவரை நம்மிடையே விவாதமோ சந்திப்போ நல்லதல. இருவருக்குமே.நன்றி

*

இந்த தரப்பில் ஒரு விவாதமோ மாற்றுக்கருத்தோ இருக்கமுடியும் என நான் நம்பவில்லை. அப்பட்டமான நேரடியான ஒரு தார்மீகம் இதில் உள்ளது. அதைக் காணமுடியாத எவரிடமும் எனக்கு பேச்சு இல்லை. இதை இங்கே முடித்துக்கொள்கிறேன்

ஜெ
- ஜெயமோகனின் இந்த நிலைப்பாட்டை எப்படி எடுத்துக்கொள்வது என்ற குழப்பத்திலேயே தொடர்கிறேன். உங்களுக்காக இங்கே பேஸ்ட் செய்திருக்கிறேன். நன்றி

Thekkikattan|தெகா said...

கொண்டு போயி சேர்க்கட்டும். என்னமோப்பா நடக்கிது!

வால்பையன் said...

இம்மாதிரியான பொய் தகவல்களை தருவது பத்திரிக்கை துறையை சேர்ந்த கோவைக்காரர் என செய்தி அடிபடுகிறது. அவர் அடிபடாமல் இருக்க எல்லாம் வல்ல அல்லாவை வேண்டிக்கொள்கிறேன்!

வால்பையன் said...

இது ஃபாலோ அப்புக்கு

Senthazal Ravi said...

பின்னூட்டம் எண் 4 க்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. பின்னூட்டம் போட்ட திரு வால் பையன் என்பவருக்கும் எனக்கு எவ்வித ஒட்டோ உறவோ கொண்டதோ கொடுத்ததோ இல்லை, என்று பணிவாக அன்பாக ஸ்க்ரீன் ஷாட் எடுப்பவர்களின் பொற்பாதங்களில் விழுந்து வணங்கி கேட்டுகொள்ளவில்லை...

வால்பையன் said...

:)