Thursday, May 07, 2009

வினவை நோக்கி வினவுகிறேன். பதில் சொல்லுங்கள் !!!




வினவு பக்கம் பக்கமாக நீட்டி முழக்கி, ஏன் அ.இ.அ.தி.மு.கவுக்கு வாய்ப்போ, வாக்கோ தரக்கூடாது என்று எழுதியுள்ளார்.

வழமைபோல திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் அதை மேற்கோள் காட்டி, அய்யோ போடாதீங்க, போடாதீங்க என்கிறார்கள்..அ.தி.முகவுக்கு வாக்குகளைத்தான்..

இப்போது தி.மு.கவின் நிலை பரிதாபம். தங்களுக்கு வாக்கு கேட்பதைவிடுத்து, அடுத்த கட்சிக்கு வாக்கு போடாதீங்க என்று புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்..

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரை விலைக்கு வாங்க முயல்கிறார்கள்...தோல்வி பயம்...அட ஜே.கே ரித்திஷ்க்கு தேர்தல் சீட்டு கொடுக்கும்போதே தெரியவில்லையா ? திராவிட முன்னேற்க்கழகத்தின் தலைமையின் மதியற்ற நிலை ?

வினவுக்கு மிக எளிமையான கேள்வியை முன்வைக்கிறேன்...




நான் திருந்திவிட்டேன்...ஈழம் தான் தமிழகத்தின் தேர்தல் பிரச்சினை, என்று ஊர் ஊராக முழங்குகிறார் ஜெ.

சிட்டிகளில் மட்டும் சுற்றிக்கொண்டிருந்த ஈழப்பிரச்சினையை, இன்றைக்கு தமிழகத்தின் மூலை முடுக்குக்கு எல்லாம் எடுத்துச்சென்றுவிட்டார்...

முதல்வர் கலைஞர் அவர்களோ, ஈழப்பிரச்சினையை கிண்டலாக அணுக ஆரம்பித்துவிட்டார்.,,

அவரது பேட்டியில்

கேள்வி> அய்யா, நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபிறகும் குண்டுவிழுகிறதே ?

பதில்> மழைவிட்டாலும் தூவானம் விடலை போலிக்கு...

கேள்வி> ஈழப்பிரச்சினை தேர்தல் பிரச்சனையா ?

பதில்> வாங்க காப்பி சாப்பிட போலாம்.

இதனை அட்டகாசமாக சிரித்து சொன்னார்...

இது ஒரு பொறுப்பான முதல்வரின் பதிலா ? இவரை தமிழின தலைவர் என்று வணங்கிய, வாழ்த்திய, நம்பிய உணர்வாளர்களின் முகத்தில் இப்படியா உமிழ்வது ?

ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினையை தேர்தல் பிரச்சனையாக்கி டி.ஆர்.எஸ் வெற்றி பெற்றது. ஆனால் மக்களை ஏமாற்றிய பின், தோல்வி. இனி ஒவ்வொரு தேர்தலிலும் தெலுங்கானா பிரச்சினை இல்லாமல் ஆந்திர அரசியல் இல்லை.

ஆந்திராவில் தெலுங்கானா கண்டிப்பாக உருவாகும்...

அந்த நிலை தமிழகத்தில் வந்தால் மட்டுமே, தமிழ் ஈழம் உருவாகும், அந்த மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று எவ்வளவு வருந்தியிருப்பேன்...

அந்த நிலை இன்று ஜெயலலிதாவால் உருவாகியுள்ளது.

தமிழ் ஈழப்பிரச்சினை, இன்று தேர்தல் பிரச்சினை...தமிழகத்தின் அனைத்து அரசியல் சக்கரங்களும் அதில் சுழலுது.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்...நடந்துவிட்டது...

அதனால், நீங்கள் போட்டும் பட்டியல் இனிமேல் உணர்வாளர்களிடம் எடுபடாது...

நடந்தது நடந்ததாக இருக்கட்டும்..இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்..!!!

நம்பிக்கையோடு !!!!
நம்பிக்கையோடு !!!!
நம்பிக்கையோடு !!!!

31 comments:

ரவி said...

ஓட்டு போடுங்கப்பா...

அல்லது போட்டுங்கம்மா ஓட்டு...இம்சை ப்ளாக பாத்து...

Sanjai Gandhi said...

அம்மா கிட்ட ஆப்பு வாங்கற வரைக்கும் நீங்க யாரும் அடங்கப் போறதில்லை. நடத்துங்க ராசாக்களா. இன்னும் கொஞ்ச நாள் தானே. வைகோவையும் ராமதாசையும் கழுத்த பிடிச்சி வெளிய தள்ற வரைக்கும் எழுதுங்க. :)

Sanjai Gandhi said...

மாம்ஸ்.. ஒன்னு அனானி ஆப்ஷன் எடுங்க. இல்லைனா மாடுரேஷன் போடுங்க.

Anonymous said...

அம்மா ஈழம் ரேசன் கடையில கொடுக்கும். அத விஜயகாந்த் வீட்டுக்கு வந்து கொடுப்பாரு..போங்கடா பொழப்பத்த பயலுகளா

Anonymous said...

வினவு
சொல்லுவது 100/100 உண்மை. அம்மா கிட்ட ஆப்பு வாங்கற வரைக்கும் நீங்க யாரும் அடங்கப் போறதில்லை

Unknown said...

திமுகாவில் பணம் உள்ளவனுக்கும் கொலைஞர் குடும்பத்துக்கு உருவி விடுவனுகும் தான் சீட் கிடைக்கும்.

Sanjai Gandhi said...

//sanjai, i think i have to do this post again//

நம்பில்கி இந்த இன்கிலீசு எல்லாம் புரியாதுங்க. தமிழ்லையே சொல்லிடுங்க. திட்றிங்களா வாழ்த்தறிங்களான்னே தெரியலை..அவ்வ்வ்வ்வ்வ்வ் :((

இதுல கூட என் பேர் இருக்கிறதால தான், என்னை பத்தி இருக்குமோன்னு சந்தேகத்தோட கேக்கறேன். :)

ரவி said...

/// இதுல கூட என் பேர் இருக்கிறதால தான், என்னை பத்தி இருக்குமோன்னு சந்தேகத்தோட கேக்கறேன். :)

///

அது என்ன மேட்டர்னு சேட்ல சொல்றேம்பா...!!!!

Anonymous said...

கேள்வி கேக்குறேன்னு சொல்லிட்டு கட்சி வரைக்கும் ஒன்னுமே கேக்கல?

Suresh said...

நல்ல பதிவு எந்த அரசியல்வாதியையும் (திமுக அதிமுக, தேமுதிக, இன்னும் பல ) நம்ம முடியல

இளைஞர்கள் ஒரு கட்சி அரம்பிச்சா நல்லா இருக்கும்.

Anonymous said...

Dear Mr. Ravi, I think you are not in Tamil Nadu now. Because as you said in this article, there is not even 0.1% impact is made about Tamil Ealam issue, even in the Towns of Tamil Nadu. But you said Jayalalitha take this matter to knooks and corners of Tamil Nadu villages too. Since I read your earlier articls in other issues, I thought that you are not a fool. But dont make others fool. Even the village peoples here are very clearly understood that this election is for their own lives and not for Ealam Tamils lives.

ரவி said...

நீங்கள் சொல்வதை எந்த ஆதாரத்தை வைத்து நம்புவது ?

உங்க பெயரையும் எழுதினா கமெண்டு போட நல்லா இருக்கும்.

ரவி said...

&&கேள்வி கேக்குறேன்னு சொல்லிட்டு கட்சி வரைக்கும் ஒன்னுமே கேக்கல?^^

அதான் கேட்டேனே...

Anonymous said...

gud post

Anonymous said...

//
அதான் கேட்டேனே...//

இன்னா கேட்டுருக்க?

கருணாநிதி கேள்வி பதில போட்டுரக்க... கட்சீல கருணாநிதிக்கே கேள்வி கேட்டுரக்க.... இதுல வினவை நோக்கி எதுவும் வினவுன மாதிரி தெரியலியே?

நீ இன்னா கருணாநிதிய புச்சா கேள்வி கேக்குறது...வினவுலதான் கருணாநிதி நொங்க பிதுக்கி எடுத்துறுக்காங்களே....

Anonymous said...

I am not saying a news which can not be traced or which is in dark or a hypothication so that to not believed by you. If you come and enquire any citizen of Tamil Nadu it will be proved. Every body is aware of this Ealam issue, but they dont consider this issue in front of them to vote for a candidate or party. For your convenient to answer, my name is Sowmian residing with Tamil Nadu peoples.

vinavu said...

ஆனாலும் ரவி,

கேள்வி கேட்பது சுலபம். அதுவும் யூ.கே.ஜி செல்லும் ஒரு அழகான குழந்தை இந்த உலகம் எப்படி தோன்றியது என்று கேட்டால் எப்படி புரிய வைப்பது?

இதனால் கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை என கூறுவதாக நினைத்து விடாதீர்கள். எப்படி சுருக்கமாக பதிலளிப்பது என்ற அசதியினால்தான் அப்படி.

முதலில் ஜெயா ஈழம் குறித்த பிரச்சினையில் தான் திருந்திவிட்டதாக எங்கேயும் கூறவில்லை. அப்படி கூறமளவுக்கு அவர் ஒரு சுமாரான நல்லவரும் இல்லை. நெல்லையில் நடந்த முதல் பிரச்சாரக் கூட்டத்தில் இலங்கையின் அரசியல் சட்ட அடிப்படையில் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட மாநில உரிமை, அது மறுக்கப்பட்டால் தனி ஈழம் என போகிற போக்கில் பேசினார்.

பின்னர் இதையே விரித்து சவடாலாக இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பியாவது ஈழத்தை வாங்கித் தருவேன் என சளைக்காமல் எடுத்து விட்டார். முக்கியமாக இந்த ஈழ மாற்றம் அவரிடத்தில் எப்படி வந்த்து?

ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் எனும் கும்பகோணத்து பார்ப்பனச் சாமியார் இலங்கை சென்று அகதிகளைப் பார்த்து ஏதோ வீடியோவெல்லாம் எடுத்து இந்தியா திரும்பி ஜெவுக்கு போட்டுக் காண்பித்தாராம். இதுவரை வைகோவும், ராமதாசும், தா.பாண்டியனும் புரியவைக்காத ஈழப்பிரச்சினையை அந்த சாமியாரின் சி.டி புரியவைத்த்தாம். உடனே அம்மாவும் ஈழத்துக்கு ஜே என உடுக்கடிக்க ஆரம்பித்தாராம். இதை இணையத்தில் மட்டும் உலவும் அப்பாவிகள் பலர் உண்மையென நம்புகிறார்களாம்.

அடுத்து ஈழம் குறித்து இதுவரை ஜெயா தெரிவித்தவை வெறும் கருத்தல்ல. இருபதாண்டுகளாக இங்கிருக்கும் ஈழ அகதிகள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதற்கு ஜெ தான் காரணம். அவரது ஆட்சியில்தான் எல்லா அகதி முகாம்களும் திறந்த வெளிச்சிறைச் சாலையாக மாற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களும், ஈழத்திற்காக குரல் கொடுத்த தமிழகத் தமிழர்களும் அவரது ஆட்சியில் பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டனர்.

மேலும் வீரப்பனை பிடிக்கப் போவதாக தேவாரத்தின் அதிரடிப்படை மலைவாழ் மக்களை கற்பழித்தும் கொன்று போட்டதும் இவர் ஆட்சியில்தான். இப்படி ஈழத்துக்கெதிராகவும், தமிழகத்திற்கு எதிராகவும் குற்றம்புரிந்திருக்கிற ஜெயாவை குறைந்த பட்சம் ஒரு ஆயுள் தண்டனையாவது சிறையில் அடைத்தால்தான் அவரை மன்னிக்க முடியும்.

இன்று தேர்தல் நாடகத்திற்காக அவரது ஈழப்பிரகடனம் வெற்றுக் கூச்சலாக வருகிறது.மற்றபடி அவர் தேர்தல் முடிந்ததும் காங்கிரசு அல்லது பா.ஜ.க இரண்டின் பின்னாலும் செல்லக் கூடியவர்தான். மத்தியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் காங்கிரசு, பா.ஜ.க, மூன்றாவது அணி மூன்றுமே ஈழம் குறித்த நிலைப்பாட்டில் ஒத்த கருத்துள்ளவைதாம்.

அதாவது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை இந்திய அரசு ஆதரிக்கும் என்பதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடில்லை. இதை பகிரங்கமாகச் செய்வதா, இரகசியமாகச் செய்வதா என்பதில்தான் வேறுபாடு. கருணாநிதியும், ஜெவும் இந்த நிலைக்கு உட்பட்டவர்கள்தான். மேலும் இந்திய அரசின் தெற்காசிய பிராந்தியத்தில் வல்லாதிக்கம் செய்யவேண்டும் என்ற நிலையை சோனியா, கருணாநிதி எனும் தனிநபர்களின் நிலையாக பார்ப்பது பாமரத்தனம். மன்மோகன்சிங் இட்த்தில் அத்வானியும், கருணாநிதி இடத்தில் ஜெயாவும் வந்து விட்டால் ஈழம் குறித்த இந்தியாவின் அணுகுமுறை மாறிவிடாது.

எனவேதான் இவர்களை மக்கள் ம்த்தியில் அம்பலப்படுத்தி, ஈழத்திற்காக தமிழக மக்கள் குரல் கொடுப்பதற்கு தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென கூறுகிறோம்.

தமிழகத்து மக்களைப் பொறுத்தவரை ஈழப்பிரச்சினை ஒரு தேர்தல்பிரச்சினையாக இல்லை. உண்மையில் ஈழம் குறித்த விழப்புணர்வு தமிழக மக்களிடமில்லை. ஏதோ இலங்கையில் தமிழர்கள் சாகிறார்கள், நாம் ஏதோ பணம், துணி கொடுத்து உதவுவோம் என்றுதான் அவர்கள் கருதுகிறார்கள். மற்றபடி மக்களை இப்படி ஈழம் குறித்த விழ்ப்புணர்வு இல்லாமல் ஆக்கியதற்கு இங்கிருக்கும் எல்லாக் கட்சிகளுக்கும் பங்கு இருக்கிறது.

ஜெயாவும்தனது தேர்தல் பிரச்சாரத்தில் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளில் ஈழத்தை ஒன்றாக பேசுகிறார். தன்னை நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறவைத்தால்தான் ஈழம் என ஒரு வியாபாரியைப் போல அலட்சியாமாகத்தான் பேசுகிறார்.மற்றபடி மற்ற மக்கள் பிரச்சினைகள், கருணாநிதியின் குடும்ப அரசியல் முதலியவற்றைத்தான் அவர் பிரதானமாக பேசுகிறார். இதில் ஈழம் ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் அவ்வளவுதான்.

இறுதியாக இரண்டு கழகங்களும் வைட்டமின் ப வை வைத்து வாக்களார்களை கவர வேண்டுமென முயல்கிறார்கள். மக்களும் தமது வாழ்வில் இந்த தேர்தல்கள் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என்பதை புரிந்திருப்பதால் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நமது வாக்கு என முடிவெடுக்காலம். அப்படித்தான் அழகிரி மதுரையில் வெற்றி பெறப் போவதாக பேச்சு.

ஏதோ சில எம்பிக்கள் இருந்தால் அடுத்த மத்திய ஆட்சியில் சில மந்திரிகளைப் பெற்று பொறுக்கித் தின்னலாம் என்பதைத் தாண்டி இரு கழகங்களுக்கும் வேறு எந்த நோக்கும் இல்லை. இதைப் போய் ஈழ்த்திற்கான மகாபாரதப்போர் போல நீங்கள் கருதுவது வியப்பளிக்கிறது.

நட்புடன்
வினவு

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

\\
ஓட்டு போடுங்கப்பா...

அல்லது போட்டுங்கம்மா ஓட்டு...இம்சை ப்ளாக பாத்து...
\\

இதை இப்படியெல்லாம் சொல்லலாமா.. :)

ஆர்.கே said...

ரவி,

வினவு என்பது மா.லெ இயக்கத்தவர்கள் சிலர் நடத்தும் தளம். பொதுவாக மா.லெ இயக்கத்தவர்கள் இந்தியத் தேர்தல் முறையையும் நடப்பில் இருக்கும் ஜனநாயக முறையையும் அடியோடு மாற்றியமைக்க வேண்டும் - அதுவும் புரட்சியின் மூலம் புதிய ஜனநாயகம் ஏற்படுத்த வேண்டும் என்னும் வேலைத்திட்டத்தோடு செயல்படுபவர்கள்.

இது அவர்கள் கட்சியின் நிலை - இதை அவர்கள் பின்பற்றுவதில் நமக்கு என்ன பிரச்சினை வந்து விட்டது?

இந்த அடிப்படையில் தான் நீங்கள் அவர்களின் நிலைப்பாட்டை ஆராய வேண்டும். ஈழத்தின் இன்றைய துயர நிலையைப் பொருத்தளவில் அவர்கள் ஏற்கனவே புலிகள் மீது இத்தனை வருடங்களாக வைத்து வந்த விமர்சனங்களின் நீட்சி தான். அதாவது ஒரு விடுதலைப் போராட்டம் மக்கள் மயமாக இருக்க வேண்டும் என்பது மார்க்சிய நிலைப்பாடு. குறிப்பாக சந்தர்ப்பவாத அரசியல் அமைப்புகளின் ஆதரவு என்பது குறுகிய கால நலன்களுக்கு வழியேற்படுத்தினாலும் - அது நீண்ட கால நோக்கில் விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகமே ஏற்படுத்தும். குறிப்பாக இந்தியத் தேர்தல் அமைப்புகள் எல்லாமுமே சந்தர்ப்பவாத நடைமுறையையே அதிலும் குறிப்பாக ஜெயலலிதா ஒரு கடைந்தெடுத்த பாசிஸ்ட் சந்தர்ப்பவாதி. தேர்தலில் வென்ற மறுகணம் ஈழத்தமிழர்களை தூக்கியெறிந்து விடுவார் என்பது எல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது.

வினவு சொல்வதெல்லாம் - ஏன் தி.மு.க / அ.தி.மு.க என்னும் சந்தர்ப்பவாத அமைப்புகளின் பின்னே செல்ல வேண்டும், மக்களை அணிதிரட்டி இந்திய மைய்ய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவும் ஈழத்தில் தலையிட்டால், தமிழகத்தை இழக்க நேரிடும் என்று அஞ்சும் அளவுக்கு அந்த அழுத்தம் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது எரிவதைப் பிடுங்கிவிட்டால் கொதிப்பது தானே அடங்கிவிடும் என்கிறார்கள்.


துக்ளக்கின் சமீபத்திய இதழில் ஏன் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கட்டுரையில் அக்கட்சியின் சமீபத்திய ஈழ ஆதரவு நாடகங்கள் குறித்து மூச்சே இல்லை என்பதையும் - ராகுல் காந்தியின் அழைப்பையும் , அதற்கு ஜெயலலிதாவின் மழுப்பலான பதிலையும் நீங்கள் கவனத்தில் கொள்வது நல்லது

வலைப்பதிவுகளில் ஸ்பெக்ட்ரம் ஊழலை யாரும் அதிகம் பேசாத நிலையில் வினவு தளமே ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து எழுதியது. தி.மு.க மீதி கடும் விமர்சனமும் வைத்தது. முன்பும் ம.க.இ.க ஆதரவாளர் அசுரன் தி.க வீரமணியின் சந்தர்ப்பவாதத்தை நிறைய விமர்சித்து எழுதியுள்ளார் - அதன் காரணமாக அவ்வமைப்பின் செயலாளரின் பிறப்பு குறித்து பேசும் அளவுக்கு தி.மு,க / தி.க பதிவர்களால் கீழ்த்தரமாக தாக்கப்பட்டார் - இப்படியிருக்க வினவு தி.மு.க ஆதரவு நிலைப்பாடு எடுத்து இருக்கிறது என்று சொல்வது எப்படி அறிவுடைமையாகும்?

இதற்கு இன்னொரு லாஜிக் பேசுகிறார்கள் - அதாவது தி.மு.கவுக்கு பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைப் பரிசளித்து விட்டால் பின்னர் அக்கட்சி திருந்தி மீண்டும் தமிழர் ஆதரவு நிலை எடுக்கும் என்கிறார்கள். இதுவும் வீண் கனவே. தி.மு.க என்பது எப்போதோ ஒரு கார்பொரேட் கம்பெனியாகி விட்டது. திராவிட அரசியலை அவர்கள் கைகழுவி எத்தனையோ ஆண்டுகள் ஓடி விட்டது. வேண்டுமானால் அடுத்த தேர்தல் வெற்றி வரை தி.மு.க ஈழ ஆதரவு வேடம் போடலாம் - அவ்வளவு தான். நீண்ட காலப் போக்கில் தமிழ் தேசிய உணர்வை பாட்டாளி வர்க்க தலைமையில் அணி திரட்டி இந்திய அரசை பணிய வைப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.


- சரி அனானி கொழுந்துகளே இனி நீங்கள் என்னைத் திட்டலாம்!

ரவி said...

வினவு

இன்னும் விரிவாக பேசவேண்டும்...உங்கள் தளத்துக்கே வரேன்...

bala said...

//கேள்வி கேட்பது சுலபம். அதுவும் யூ.கே.ஜி செல்லும் ஒரு அழகான குழந்தை //

கொலைகார நக்சல் தீவிராவதியான முண்டம் வினவு அய்யா,

இது என்ன பேத்தல்.செந்தழல் ஒரு யூ கே ஜி பாஸ் பண்ணக்கூடிய அளவுக்கு ஐ க்யூ உள்ள குழந்தை என்பது சரி, ஆனால் " அழகான குழந்தை" என்று சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?

பாலா

ரவி said...

நன்றி பாலா. ரொம்ப நாளா ஆளை கானோம் ? வரவணையான் பொட்டீக்கடையார் வெச்ச ஆப்புகளை எண்ணை தடவி வழிச்சி நீவி எடுத்துட்டீங்களா ?

றமணன் said...

கனம், "கள்ள வோடடுமன்னர்கள்" வினவு பதிவர்களுக்கு தங்களுக்கு சார்பில்லாத கருத்துக்களை நீக்கி நலலா நடத்துறாங்களப்பா இணையம் தேர்தலை புறக்கணியாம் ஆமா அப்பதானே திமுக விற்கு கள்ளவோட்டு போடலாம். அதுசரி தமிழ்மணத்தில கள்ளவோட்டு போடுற மாதிரி இல்லையப்பு நிஜத்திலே மாட்டினே ரின்னு கட்டிடுவானுங்க ஜாக்கிரதை.

ஆர்.கே said...

ரவி,

ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போச்சு -

இரண்டு மாதம் முன்பும், முத்துகுமார் இறந்த உடனும் தமிழகத்தில் ஒரு எழுச்சி தென்பட்டதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மாணவர்கள் போராட்டம், வக்கீல்கள் போராட்டம் என்று ஒவ்வொரு பிரிவினராக கிளர்ந்தெழுந்தனர். நான் அப்போது தமிழகத்தில் வேலை நிமித்தம் அலைந்து கொண்டிருந்தேன் - போகுமிடமெல்லாம் கொஞ்சம் படித்த மக்களிடம் கொதிப்பை உணர முடிந்தது; குறிப்பாக எல்லோரும் இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவுவதை வெறுப்புடன் நோக்கினர்.

அந்த உணர்வுகளை தி.மு.க நேரடியாக ஒடுக்கியது.

சரி - இந்த வைக்கோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன், இந்திய பொதுவுடைமை கட்சியின் பாண்டியன் போன்றவர்கள் அதை ஏன் வளர்த்தெடுக்கவில்லை? மக்களிடம் போர்குணம் மிக்க போராட்டத்துக்கு அறைகூவல் விடாமல் மொக்கைத் தனமான~அமைதியான~இந்திய அரசை தடவிக்கொடுப்பதைப் போன்ற போராட்டங்களையே நடத்திக் கொண்டிருந்தார்களே ஏன்?

நெடுமாறன் இந்திய மைய்ய அரசுக்கு வின்னப்பம் போட்டுக் கொண்டிருந்தாரே - அதைவிட்டு இந்திய அரசு மிரளும் அளவுக்கு ஒரு போராட்டத்தை அவரோ மற்ற தமிழினக் குழுக்களோ ஏன் முன்னெடுக்கவில்லை?

அன்றைக்குப் பொங்கிய உணர்வில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தவர்கள் தான் இப்போது சவடால் அடிக்கிறார்கள். இந்தச் சவடாலில் உந்தப் பட்ட மீண்டும் ஒரு கிளர்ச்சி மனோபாவம் உண்டாகுமானால் மீண்டும் மனிதச் சங்கிலி, அமைதி ஊர்வலம், மைய்ய அரசுக்கு வேண்டுகோள் என்று தான் செக்கு மாட்டுத் தனமாகச் சிந்திப்பார்கள்.


ரவி, என்பதுகளின் கருணாநிதி செய்த அதே போன்ற துரோகத்தைத் தான் இப்போது இவர்கள் செய்கிறார்கள்.

ராமதாஸ், திருமா, வைக்கோ - இவர்களெல்லாம் wannabe கருணா. அவ்வளவு தான்!

ஆர்.கே said...

அமைதி ஊர்வலம்~மனிதச் சங்கிலி~வேண்டுகோள்~தந்தி~ஃபேக்ஸ் = > தக்காளி இந்த வார்த்தைகளைக் கேக்கும் போதெல்லாம் அப்படியே பத்திட்டு வருது..

அயோக்கிய ராஸ்கல்ஸ்...

suvanappiriyan said...

என்ன ரவி!

ஜெயலலிதா நடத்துவது நாடகம் என்று தெரிந்துமா உங்களின் நிலைப்பாடு இவ்வாறு இருக்கிறது! தற்போதய நிலையில் ஈழப்பிரச்னை ஒன்றுதான் கரை சேர்க்கும் என்பதால் வேண்டா வெறுப்பாகத்தான் 'தனி ஈழம் அமைப்பேன்' என்று ஜெயலலிதா சூளுரைக்கிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தேர்தலுக்குப்பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவும் கொடுக்கப் போகிறார்.

ஈழப்பிரச்னையில் அப்பாவிகள் கொல்லப்படுவதால் நாம் ராஜபக்ஷேயை கண்டிக்கிறோம். அதே நேரம் தாங்கள் போரில் வெல்வதற்க்காக அதே ஈழத்தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தும் விடுதலைப்புலிகளை நாம் தட்டிக் கேட்கிறோமா? என்ற ரீதியிலும் சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம்.

Anonymous said...

என்னமோ
இரட்டை இலை பாவை
இரட்டை நாக்கு பாம்பு
ஆகாமல் இருந்தால் சந்தோசமுங்க.

vijay tiruppur said...

பெ.தி.க. மீது காவல்துறையினர் அடக்குமுறை: கொளத்தூர் மணி கண்டனம்

பெரியார் திராவிடர் கழகத்தின் மீது காவல்துறை கையாண்டு வரும் அடக்குமுறை எல்லை மீறிச்சென்று கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழத் தமிழர் இனப் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரசை தோற்கடிக்கும் முழக்கத்தை முன்வைத்து பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் பரப்புரையை முடக்குவதற்குத் தமிழகத் காவல்துறை கையாண்டு வரும் அடக்குமுறை எல்லை மீறிச்சென்று கொண்டிருக்கிறது.

குறுந்தகடுகள், துண்டறிக்கைகள் பறிமுதல், குறுந்தகடுகள் வைத்திருந்த தோழர்கள் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது, பிரச்சார வாகனம் பறிமுதல், பரப்புரை மேற்கொண்ட பெரியார் தி.க. தோழர்கள் கைது எனத் தொடரும் நடவடிக்கைகளோடு, தற்போது சென்னையில் வன்முறை கும்பல் துணையோடு இராயப்பேட்டையில் பெரியார் படிப்பகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர், கலைஞர் நூல்கள் உள்பட நூற்றுக்கணக்கான நூல்கள் வன்முறைக் கும்பல்களால் அங்கிருந்து களவாடிச் செல்லப்பட்டன.

அடக்குமுறையின் உச்சக்கட்டமாக, பெரியார் சிலையைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்திய தமிழ்ச்செல்வி, சுதா என்ற இரு பெண்கள் காவல்துறையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மத்திய சென்னை தொகுதி – மற்றொரு ‘மதுரை’யாகி அறிவிக்கப்படாத அடக்குமுறையை சந்தித்துக்கொண்டிருக்கிறது. சிலைகளைச் சேதப்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று எச்சரித்து வரும் தமிழக காவல்துறை. ராயப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்திய திமுக ஏவிய வன்முறை கும்பலைக் கைது செய்யாதது ஏன் என்று கேட்க விழைகிறேன்.

காங்கிரஸ் தலைவர் சோனியா வருவதையொட்டி, முன்னெச்சரிக்கை கைது என்ற பெயரில் மே 5ஆம் தேதி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வன்முறையில் ஈடுபட்டதாக பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோனியா வருகை ரத்து செய்யப்பட்ட செய்திக்குப் பின்னரும் உடல் ஊனமுற்ற தோழர் சேத்துப்பட்டு ராஜன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவையில் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த நிகழ்வில் தொடர்பே இல்லாதவர்களும், அச்சம்பவத்தின் போது ஊரிலேயே இல்லாத பெரியார் தி.க. தோழர்களையும்கூட காவல்துறை கோவையில் கைது செய்து வருகிறது. பல ஊர்களில் இரவிலும் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தி வருகிறது.

பெரியார் இலட்சியங்களுக்காக சமரசமின்றி வீரியத்துடன் போராடி வருகிற பெரியார் திராவிடர் கழகத்தை, வன்முறை கும்பல்போல சித்தரிக்க முற்படும் காவல்துறையின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எல்லை மீறி காவல்துறையும், ஆளுங்கட்சி ஆதரவு வன்முறை கும்பலும் நடத்தும் இந்த வன்முறை வெளியாட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு, அராஜகத்துக்குத் துணை நின்று அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Suresh Kumar said...

அவர்களுக்கு தேர்தலுக்கு தேர்தல் ஒரு காரணம் வேண்டும் இந்த தேர்தல் இது ஒரு காரணம் அவ்வளவு தான் .

http://kotticodu.blogspot.com/2009/05/blog-post_09.html

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009