Monday, May 18, 2009

சிலவேளைகளில் அமைதிகாக்க விரும்புகிறேன்...



சிலவேளைகளில் அமைதிகாக்க விரும்புகிறேன்...என்னால் பார்க்கமுடியவில்லை...என்னால் உணரமுடியவில்லை...என்னால் கேட்கவும்கூட முடியவில்லை...

தொலைவில் ஏதோ தெரிகிறது, ஆனால் அருகில் தெரியாமல் இருக்கிறது...குழப்பமாகவும் சில சமயம் மிகவும் தெளிவாகவும் இருக்கிறது...இருப்பு சார்ந்த இயக்கம்..இயங்காமல் நிற்கவும் முடியாது...

அதனால் இயங்கிக்கொண்டுதானிருக்கவேண்ண்டும்...

எதிர்கொள்வது கடினம்தான், ஆனால் வேறு வாய்ப்புகள் இல்லை...

ஏதோ சொல்ல நினைக்கிறேன்...முடியவில்லை...முடித்துக்கொள்கிறேன்...

13 comments:

யாரோ - ? said...

ஹாய் ரவி கவலைப்படவேண்டாம். உங்களைப்போல்தான் எல்லா தமிழனின் உள்ளமும் இப்போது வெந்துகொண்டிருக்கின்றது. இங்கு கொழும்பில் ஒரே கொண்டாட்டங்களும் கூத்துக்களுமாகவே இருக்கின்றது. ஒன்றும் பண்ணமுடியவல்லை தமிழனுக்கு தமிழனே எதிரியாயிருக்கும் போது அமைதியாக இருப்பதுதான் நல்லம். ஒன்று மட்டும் உறுதி பிரபாகரன் மரணம் பற்றி புலிகள் வாய் திறந்தால் மட்டுமே அல்லது பிரபாகரன் உடலம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே உண்மை. சுனாமியால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும் இலங்கை அரச தொலைக்காட்சிதான் அறிவித்தது. அதனை புலிகள் மறுக்கவில்லை. கிட்டத்தட்ட உண்மை என்றே பரப்புரைக்கப்பட்டது. பின்பு புலிகளின் தலைவர் மாவீரர் உரையின்போதே உண்மை தெளிவானது. சில வேலை நாமும் அடுத்த மாவீரர் தினம் வரை பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். மனதை தளரவிடாதீர்கள். உங்களைப் போன்னறவர்கள்தான் எங்களுக்கு உண்மையான ஆறுதல்.

நர்சிம் said...

“ப்ச்”

DHANS said...

இந்த பதிவு எழுவது எனக்காக மட்டுமே எதையும் எழுத தோன்ற வில்லை மௌனம் மட்டுமே மருந்தாக அமையும்

ஜெகதீசன் said...

:(

பதி said...

:(

Raj said...

மனதை தளர விடாதீர்கள்....வரும் செய்திகள் எதுவும் உண்மையா இருக்காது என்றே தோன்றுகிறது.

Anonymous said...

இப்பத்தான் பிரபாகரன் அம்புலன்சில் தப்ப வெளிக்கிட்டாராம்.கொன்றுவிட்டார்களாம்..
நம்பக்கூடியமாதிரியா சொல்கிறார்கள்?

பிற:-
கலைஞர் வாழ்க அவர்தம் அடிப்பொடிகள் வாழ்க
500 ரூபா காசு வாழ்க விசயகாந் வாழ்க

-தீவு -

Suresh Kumar said...

என்னால் நம்ப முடியவில்லை இது உண்மையான செய்தியாக இருக்க வாய்ப்பில்லை தளாராமல் நம் லட்சியத்தில் உறுதியுடன் இருப்போம்

ஜோசப் பால்ராஜ் said...

http://www.maraneri.com/2009/05/blog-post.html


வதந்திகளை நம்பாதீர்கள் இரவி.
இது போல் பலமுறை நிகழ்ந்துள்ளது.

கார்க்கிபவா said...

இன்னும் இருக்கு சகா.. நீங்களே இப்படி சொன்னா எப்படி?

வருவார்.வெல்வார்..

Anonymous said...

NO LEADERS IN THE WORLD TO STOPCRIME AGAINST HUMANITY. It is SHAME ON BAN KI MOON and his sfaff. shame on indian leaders. At begining GOSL said only 65,000 people in safe zone,india said 70,000. They murdered and maimed over 25,000 civilians in safe zone, brought 192,000 people from death zone to concentration camps.again 165,000 civilians in the fire only zone. SL President is the KING OF GENOCIDE. How many still in the death zone, where is truth? GOSL killed over 50,000 Human within a week, world is watching like movie. SRI LANKA SHAME ON YOU, YOU KILLED THE HUMANITY, YOU MADE SAFE ZONE INTO DEATH ZONE OF TAMILS, YOU STILL THIRST OF TAMIL BLOOD, YOU IMF money to cover this Genocide. DONT LIE ANY MORE.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-(((

placeman said...

ENAKUM INTHA NOI ULLATHU

ADANAL NEENGAL UNGALUKU MATTUM INTHA NOI ULLATHAGA NENAITHU KAVALAI PADAVENDAM