Monday, May 18, 2009

பொய்யர்களும் போலி டாக்டர்களும்...



பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்று சொல்கிறது ஒரு குடுமி பழமொழி. பொய் சொன்னால் வாயில் புழு வைக்கும் என்று சின்ன வயதில் மிரட்டப்பட்டு, ரொம்ப நாளைக்கு பொய் சொல்லாமல் இருந்தேன்..பொய்யை பற்றி வேறு சில சொல்லாடல்கள், கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கு என்பனபோன்றவை இப்போது நியாபகம் வருகின்றன...

ஆனால் ஒன்று...இதுபோன்ற பொய்களை சந்தோஷமாக பரப்புபவர்களை கண்டுகொள்வதன் மூலம் தமிழின துரோகிகளை எளிதாக அடையாளம் காணலாம். காலையில் இட்லிவடை சாப்பிட்டேன். முந்தைய வரிக்கும் அடுத்த வரிக்கும் சம்பந்தம் உண்டு..

**************

கடந்த டிசம்பர் 15, பெங்களூரில் என்னுடைய மனைவிக்கு சுகப்பிரசவம்.
மூன்று நாளில் டிஸ்சார்ஜ் என்றார்கள். பூப்போல கைகளில் தவழ்ந்த அழகான பெண் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, கொஞ்சிக்கொண்டு, அவள் அழுவதை ரசித்துக்கொண்டு, அவளின் மெல்லிய ரோஜாப்பூ பாதங்களை வருடிக்கொண்டு, அந்த மூன்று நாட்கள் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை...

என்னுடைய நிறுவனம், என் மனைவிக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தது. கேஷ் ப்ரீ அட்மிஷன் மற்றும் டெலிவரி என்றார்கள். மூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் அன்று டிஸ்சார்ஜ் சம்மரி ஷீட் தயாரித்தார்கள். இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பவேண்டிய விண்ணப்பங்களில் கையொப்பம் பெற்றார்கள். ஏதோ கொஞ்சம் மருந்து வாங்கியமைக்கு வெறும் 200 ரூபாய் மட்டும் கட்டச்சொன்னார்கள்...

மனைவியும் கிட்டத்தட்ட தானே எழுந்து எல்லா வேலைகளையும் செய்யும் அளவுக்கு தேறியிருந்தார். அனைத்து பொருட்களையும் சேகரித்துக்கொண்டு, மருத்துவரின் இறுதி சோதனைக்காக காத்திருந்தோம்.

மருத்துவர் வந்தார், அப்படி இப்படி பார்த்தார்.

பேபி லைட்டா யெல்லோயிஷ்ஷா இருக்கு. லைட்டா ஜாண்டிஸ் இருக்கு. இன்னோரு நாள் இருக்கனும் என்றார்...

தூக்கிவாரிப்போட்டது..

ஜாண்டிஸா ? நானும் மனைவியும் ஒரு சேர அதிர்ந்தோம்...பெரிய ஆர்ப்பாட்டம் செய்தாள் மனைவி...

அய்யோ, எனக்கு சின்ன வயசுல ஜாண்டிஸ் வந்திருக்குங்க...என்னோட குழந்தைக்கும் வந்திருச்சா ? என்று கண் கலங்க ஆரம்பித்தாள்..

டாக்டர் ரொம்ப கூலாக சொன்னார்..

ஒன்னும் பதட்டப்படத்தேவையில்லை...எல்லா குழந்தைகளுக்கும் வருவதுதான்...

வீ ஹேவ் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் பார் பேபி ஜாண்டிஸ்...

சிஸ்டர், இன்னைக்கு இவங்க ஸ்டே பண்றாங்க...பேபி ஜாண்டிஸ் ரிமூவ் பண்ற மெஷினுக்கு அடியில குழந்தையை நைட் புல்லா வைங்க...மார்னிங் செக் பண்ணிட்டு, அப்புறமா டிஸ்சார்ஜ் பண்ணலாம்...

ஐந்து நிமிட யோசனைக்குபின் எனக்கு புரிந்துபோனது..

இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நார்மல் டெலிவரிக்கு நான்கு நாட்கள் வரை படுக்கை வசதி மற்றும் மருத்துவர் பார்வையிடல் வசதியை தருகிறார்கள்..

பேஷண்ட் சொந்தமாக பணம் கட்டுபவர் என்றால் 3 நாளில் டிஸ்சார்ஜ். இன்ஸூரன்ஸ் கம்பெனி பணம் கட்டுகிறது என்றால் 4 நாளில் டிஸ்சார்ஜ். கடைசி நாளைக்கு இந்த பேபி ஜாண்டிஸ் உடான்ஸ்...

ஒரு தொட்டில், அதன் மேலும் ரெண்டு பவர்புல் ட்யூப் லைட். அதன் கீழ் வெறும் உடம்புடன் குழந்தையை படுக்கவைக்கவேண்டுமாம்..

தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துவிட்டுப்போனாள் தாதி...

குழந்தையை வெறும் உடம்புடன் ட்யூப் லைட்க்கு அடியில் படுக்கவைப்பதை பார்க்க எனக்கும் சரி, என் மனைவிக்கும் சரி, சம்மதமில்லை...

மனைவியிடம் இந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி விவகாரத்தை விளக்கி, சாந்தப்படுத்தினேன்.

தாதி அந்தப்பக்கம் விலகியதும் குழந்தையை அந்த தொட்டியில் இருந்து எடுத்து மனைவியிடம் கொடுத்துவிட்டேன்...

காலை மருத்துவர் வரும் நேரத்துக்கு பத்து நிமிடத்துக்கு முன் மீண்டும் பாப்பாவை அந்த ஜாண்டிஸ் ரிமூவிங் டியூபு லைட் தொட்டியில் போட்டேன்...

டாக்டர் வந்தார். குழந்தையை பரிசோதித்துவிட்டு..

யூ சீ...ஜாண்டிஸ் சுத்தமா போயிருச்சி...யூ கேன் கோ டுடே...என்றார்...

நான் மனைவியை பார்க்க, அவளுடை மர்மச்சிரிப்புக்கு எனக்கு மட்டும்தானே அர்த்தம் தெரியும் ?

டிஸ்சார்ஜ் சம்மரியை நோட்டம் விட்டபோது, ஜாண்டிஸுக்கு மெஷின் வைத்த வகையில் மூன்றாயிரம் ரூபாய், நாலாவது நாள் படுக்கை நான்காயிரம் ரூபாய், மருத்துவர் பார்வையிட்ட வகையில் 2000 ரூபாய் என்று சப் டோட்டல் போட்டிருந்ததை அவளிடம் காட்டியிருந்தேனே ??

*******************

சமீபத்தில் நன்பருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது...பத்து நாள் விடுமுறைக்குப்பின் ஸ்கைப்பில் வந்தார்...

நானும் மனைவியும் வாழ்த்துக்களை பரிமாறினோம்...

அப்போது அவர் சொன்னார்...நார்மல் டெலிவரிதாங்க...குழந்தைக்கு லாஸ்ட் டே லைட்டா ஜாண்டிஸ் வந்திருச்சு...அதனால கொஞ்சம் கஷ்டமாயிருச்சுங்க...

நான் "தெவிடியா பசங்க", காசுக்கு பீ கூட திம்பானுங்க...என்று ரொம்ப நாளைக்கு பிறகு கொஞ்சம் கோபப்பட்டேன்...

*******************

இதே போல் இன்னோரு மோசடி, கர்ப்பப்பை ரீமூவல் ஆப்பரேஷன்...

மாதவிடாய் நின்றபின் கர்ப்பப்பையை ரிமூவ் செய்வது உடல் நலனுக்கு நல்லது என்று என்னுடைய மாமியார் 25 ஆயிரம் செலவில் இப்போது செய்துள்ளார்கள். இது ஒரு மாபெரும் மோசடி..இந்த மோசடிகளை பத்திரிக்கை நன்பர்கள் அம்பலப்படுத்தவேண்டும்..

*********************

41 comments:

Anonymous said...

//பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்று சொல்கிறது ஒரு குடுமி பழமொழி//

அல்லூலுயா கும்பலிலே ஒருத்தனுக்கும் போஜனமே கிடைக்காதே அப்படிப் பாத்தா!

கல்வெட்டு said...

ரவி,
டாக்டர் சொன்னதில் உண்மையும் இருக்கலாம். பொய்யும் இருக்கலாம்.

குழந்தைகளுக்கு பிறந்தவுடன் மஞ்சள்காமாலை நோய்க்கான அறிகுறிகள் இருப்பது இயல்பானது. உதாரணமாக 30 முதல் 40 சதவீத குழந்தைகளுக்கு வரும் என்று சொல்லலால் (Dr. புரூனோ சரியான சதவீதம் சொல்லலாம்)

குழந்தையின் இரத்தப்பரிசோதனையில் இருந்துதான் உறுதிசெய்யமுடியும். சூரப்புலி டாக்டராக இருந்தாலும் அறிகுறிகளின் பேரில் இப்படி இருக்கலாம் என்று கணித்தாலும் , இரத்தப்பரிசோதனை நிச்சயம் செய்வார்கள். அதில் தெரிந்துவிடும்.

If the bilirubin level is not too high, your baby might not need any treatment. Your doctor might just want you to feed your baby breast milk or formula more often.

If the bilirubin level is very high or is getting higher very quickly, your baby will need light therapy. This is also called phototherapy. Phototherapy helps to break down bilirubin in your baby's skin.

http://familydoctor.org/online/famdocen/home/children/parents/common/common/756.html

டாக்டர்கள்/மருத்துவமனைகள் பில் போட இப்படிச் செய்தாலும், குழந்தைக்கு அப்படி வர வாய்ப்பும் உள்ளது என்பதும் உண்மை. உங்கள் குழந்தைக்கு மிகச்சொற்ப அளவில் bilirubin biliruபின் இருக்கும் பட்சத்தில் breast milk லேயே சரியாக வாய்ப்பும் உண்டு.

நான் சொல்வது அனுபவ/பாட்டி வைத்தியம் போலவே மருத்துவர்கள் மேலும் விளக்கலாம்.

குழலி / Kuzhali said...

//கடைசி நாளைக்கு இந்த பேபி ஜாண்டிஸ் உடான்ஸ்...
//
என் பையனுக்கும் பிறந்த உடன் இருந்தது, இதே போன்ற வைத்தியம் தான், அதன் பின் சூரிய ஒளியில் தினமும் காண்பிக்க சொன்னார்கள்... இன்ஷ்யூரன்ஸ் எதுவும் இல்லை... மேலும் பல நண்பர்களின் குழந்தைகளுக்கும்(சிங்கப்பூரில் பிரசவம், இங்கேயெல்லாம் காசுக்காக மருத்துவமனையில் ஏமாற்ற மாட்டாங்கள்) இப்படியாக இருந்தது, எதற்கு சொல்கிறேன் என்றால் டாக்டர் சொன்னதில் உண்மையும் இருக்கலாம் பொய்யும் இருக்கலாம்...

குழந்தையின் கண்களை உற்று பார்த்தாலே தெரியும் கொஞ்சம் மஞ்சளாக இருக்கும்...

sriram said...

இயேசு வருகிறார் என்று இத்தனை வருடங்களாக பொய் சொல்லிவரும் தினகரன் கும்பலுக்கே சாப்பாடு கிடைக்கும்போது Rueters இல் வந்த ஒரு செய்தியை தனது பதிவில் இட்ட இட்லி வடைக்கு ஏன் போஜனம் கிடைக்காது?
பலர் பதிவிட்ட பொது ஒருவரை பற்றி மட்டும் கூறுவது கீழ்த்தரமான பிராமண துவேசத்தையே காட்டுகிறது.
ஸ்ரீராம் Boston.

Sanjai Gandhi said...

நடந்த விஷயத்தை சொல்லி அந்த டாக்டர் நாய செருபபால அடிச்சி அங்கயே காரித் துப்பாம என்ன பதிவு போடற மாம்ஸ்? :(

இங்க மட்டும் கொய்யால காது வரைக்கும் வாய் கிழியுது. :(

சென்ஷி said...

தகவலுக்கு நன்றி ரவி.. ஆயினும் நான் கேள்விப்பட்ட மற்றும் நேரில் பார்த்த என் சகோதரிகளின் குழந்தைகளில் சிலருக்கு பிறக்கையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் மஞ்சள் காமாலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது அத்தனை தீவிரமில்லையென்று டாக்டரால் கூறப்பட்டு அது சில நாட்களில் சரியாகியும் விட்டது. நாங்கள் எந்த இன்ஸ்யூரன்ஸும் எடுத்திருக்க வில்லை.

எனினும் நாம் இன்னொரு முறை கல்வெட்டு சொன்னதுபோல் புருனோவிடம் கேட்டுவிடலாம்.

புருனோ Bruno said...

//டாக்டர் சொன்னதில் உண்மையும் இருக்கலாம். பொய்யும் இருக்கலாம்.//

//டாக்டர்கள்/மருத்துவமனைகள் பில் போட இப்படிச் செய்தாலும், குழந்தைக்கு அப்படி வர வாய்ப்பும் உள்ளது என்பதும் உண்மை. உங்கள் குழந்தைக்கு மிகச்சொற்ப அளவில் bilirubin biliruபின் இருக்கும் பட்சத்தில் breast milk லேயே சரியாக வாய்ப்பும் உண்டு.//

அதே போல் breast milk jaundice என்று கூட ஒன்று உள்ளது

மஞ்சள் காமாலை என்பதற்கு கீழ் பல நோய்கள் உள்ளன

http://www.payanangal.in/2008/05/jaundice-after-hepatitis-b-vaccine.html

சென்ஷி said...

//இங்க மட்டும் கொய்யால காது வரைக்கும் வாய் கிழியுது. :(//

இது யாரோ யாருக்கோ சொன்ன டயலாக்காச்சே.. சஞ்சய் நீயும் இதை சுட்டுட்டியா :)))

புருனோ Bruno said...

அது சரி

நீங்களும் உங்கள் மனைவியும் ஒரே blood groupஆ அல்லது வெவ்வேறு blood groupஆ

ரவி said...

//அல்லூலுயா கும்பலிலே ஒருத்தனுக்கும் போஜனமே கிடைக்காதே அப்படிப் பாத்தா!///

திரு சிரீ ராம் பாஸ்டன் ? குடும்பத்தில் அனைவரும் நலமா ?

ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான். ஆதாம், தன்னுடைய அட்டு பிகர் மனைவி ஏவாளை சூப்பர் பிகரே, அழகே, அமுதே என்று வர்ணித்து உடான்ஸ் விட்டதை அவரது பக்கத்து குகையில் வசித்த பாதாம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஆதாரம் மகாபாரதம்.

ரவி said...

கல்வெட்டு அவர்களே

இரண்டு வாரம் முந்தி அந்த மருத்துவமனையில் பிறந்த நாலு குழந்தைகளுக்கும் ஜாண்டிஸ். இதுக்கு என்ன சொல்றீங்க ?

ரவி said...

///இயேசு வருகிறார் என்று இத்தனை வருடங்களாக பொய் சொல்லிவரும் தினகரன் கும்பலுக்கே சாப்பாடு கிடைக்கும்போது Rueters இல் வந்த ஒரு செய்தியை தனது பதிவில் இட்ட இட்லி வடைக்கு ஏன் போஜனம் கிடைக்காது?
பலர் பதிவிட்ட பொது ஒருவரை பற்றி மட்டும் கூறுவது கீழ்த்தரமான பிராமண துவேசத்தையே காட்டுகிறது.
ஸ்ரீராம் Boston.///

மீண்டும் டீசண்டான கொமண்டுக்கு நன்றி சிரீராம். இட்லிவடையின் பதிவிலும் தலைப்பிலும் வெளியிட்ட படங்களிலும் உள்ள நுண்ணரசியலை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் நாங்கள் அனைத்து பார்ப்பணர்களையும் வெறுப்பதில்லை. ஆனால் 95 சதவீதம் பார்ப்பணர்கள் இணையத்தில் தவறான வாதங்களையே வைக்கிறார்கள்.
நன்பர்களும் உண்டு எங்களுக்கு. இட்லிவடையும் எமது நன்பரே.

என்னுடைய பார்ப்பணீயம் பார் டம்மீஸ் பதிவை படிக்கவும்.

உங்களை போலவே அல்லேலூயா கும்பலை நானும் வெறுக்கிறேன்.

அதே சமயம், குடுமி என்ற ஒரு வார்த்தையிலேயே ஹெர்ட் ஆகவேண்டாம். குடுமி குடுமிதான். இல்லை என்று ஆகிவிடுமா ?

தேவையான இடத்தில் தன்னை பாப்பான் என்று காட்டிக்கொள்ள நீங்கள் பர்ப்பன பாசை பேசுவதில்லையா ? இப்போது நாங்களும் பழகிவிட்டோம் உங்கள் பார்ப்பன மொழியை. பாருங்கோ..

ஆனால் டிஜிஎஸ் தினகரனின் பாடல்கள் நன்னா இருக்கும். கேட்டிருக்கேளா ?

இனிமேல் அல்லேலூயா கமெண்டு போடும்போது உங்களது சொந்த பெயரிலேயே போடவும்...

நான் அந்த மதத்தை பின்பற்றுவதில்லை என்பது உங்களுக்கு டெயில் பீஸ்..

ரவி said...

சன் 'ஜெய்', உதவிக்கு யாரும் அற்ற சூழல், பச்சிளம் குழந்தை, மனைவி.

கோபம் வந்தது, அடக்கிக்கொண்டு வந்துவிட்டேன்...அங்கே போயி கத்தி கூப்பாடு போடுதல் புத்திசாலித்தனம் இல்லையே மாம்ஸ்...

மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் மெத்தப்படித்த டாக்டர்களை சந்தேகப்படுதல் முறையில்லையே ?

அப்போதே முழுமையாக பதிவிடவேண்டும் என்று நினைத்தேன். நேரம் கூடிவரவில்லை.

இன்றைக்கு இந்த தகவலை மீண்டும் கேள்விப்பட்டு, உடனடியாக பதிவுசெய்கிறேன்.

இண்டர்நெட்டில் ஆ ஊ என்று எழுதுவதை பார்த்து நீ என்னை ரவுடி என்று நினைத்துவிட்டதை நினைத்து ரெம்ப காமெடியா கீது. நான் மிகவும் நல்லவன்.

ரவி said...

சென்ஷி வருகைக்கு நன்றி. நலம்தானே ?

ரவி said...

டாக்டர் புருனோ,

உங்களைத்தான் எதிர்பார்த்தேன். நானும் மனைவியும் வேறு வேறு ப்ளட் க்ரூப்.

Anonymous said...

//நான் அந்த மதத்தை பின்பற்றுவதில்லை என்பது உங்களுக்கு டெயில் பீஸ்.//

Can you tell me your wife / child's names? So that we can easily identify whether your statement here is true or not!

Anonymous said...

உங்கள் பதிவைப்பார்த்த பின்னர்தான் தெரிந்துகொண்டேன். பழமொழியில் “குடுமி”ப் பழமொழி என்ற ஒன்று உண்டு என்று. முன்குடுமிப் பெருவழுதியின் பழமொழியாக இருக்கலாமோ என்னவோ? உங்கள் பதிவில் செந்தமிழ் விளையாடுகிறது. அதனால் தாங்கள் ஒரு செந்தமிழ்ப் புலவராக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
பாமரன்

கலையரசன் said...

...த்தா! இந்த அனானிங்க தொல்ல தாங்கமுடியலடா நாராயணா!

பாஸூ.. நீங்க கிழிங்க எல்லாரையும். அங்க சத்தம் போட்டிருந்தா,
டாக்டருக்கு மட்டும்தான் தெரிஞ்சிருக்கும். இங்க வாய் கிழிரதால, நாங்கெல்லாம் உசாரா இருப்போமுல்ல!

லக்கிலுக் said...

தொடர்ந்து குழந்தைப் பதிவாவே வருதே ரவி? :-)

MeenaArun said...

jaundcie is quite possible.me and my 2 brothers had jaundice from day 3 to day 6 and my daughter also had jaundice from day 3 today 5
.if you suspect you can chk the bilrubin level by means blood test.sometimes this jaundice is quite danger also,my sister had it on day 3 but b'cos of some negligence on our part ,she died with in 2 days.

ரவி said...

Can you tell me your wife / child's names? So that we can easily identify whether your statement here is true or not!

அன்புள்ள அனானி..

என்னை பற்றி அறியாத உங்களிடம் எந்த அடிப்படையில் நான் என்னுடைய தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவேன் என்று நினைக்கிறீர்கள் ? சொந்த பெயரில் கமெண்ட் எழுத கற்கவும்

ரவி said...

நன்றி பாமரன். கொமண்டுக்கு..

Dr.Pasi said...

Hi Ravi,
Sorry i dont know tamil typing. i am a physician practicing in USA. I am from same college as Dr.Bruno( Tirunelveli medical College). Please take a little time & research the topic before doubting the doctor or you should stop the doctor ask all the questions u need answer for. Let Me come to topic of Jaundice in Newborn. there are 2 type Physilogical and pathological Jaundice. Jaundice(Hyperbilirubinemia) on day one is always bad called pathological - most possibly from Blood group mismatch between father and mother or inborn errors. second one is Physiological not that dangerous but bilirubin level in the blood is important. checking bilirubin before discharge is standard practice in USA. Bilirubin at high level will attach to brain and cause problem called KERNICTRUS - SEVERE NEUROLOGICAL PROBLEM. treatment at the early phase is exposure to flouroscent light/ sunlight it helps to metabolise bilirubin faster and reduce the blood level. Jaundice your wife had in childhood is nothing to do with newborn jaundice. the stuff you did is (taking the bay from light) ignorance at the least and stupitidy at the worst. you were playing with your child's future out of ignorance. SORRY FOR MY WORDS. In future if you have doubt STOP THE DOCTOR , ASK QUESTION AND CLARIFY. DO NOT SELF TREAT THING YOU DO NOT KNOW.

WISH YOU & YOUR WIFE A GREAT TIME WITH YOUR NEW LITTLE GIRL. (i had a little boy 3 weeks ago, he had jaundice on 2 day but bilirubin level was low & as i am a doctor i took him home on 2nd day)

Sanjai Gandhi said...

//மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் மெத்தப்படித்த டாக்டர்களை சந்தேகப்படுதல் முறையில்லையே ?//

தெய்வமே.. டாக்டரை நான் சந்தேகப் பட சொல்லலை.. ஆனா நடந்த விஷ்யம என்ன? இலலாத ஒரு விஷயத்தை பணத்துக்காக்வே பொய் சொல்லி இருக்கார்.

//மருத்துவர் வந்தார், அப்படி இப்படி பார்த்தார்.

பேபி லைட்டா யெல்லோயிஷ்ஷா இருக்கு. லைட்டா ஜாண்டிஸ் இருக்கு. இன்னோரு நாள் இருக்கனும் என்றார்...//

இருக்கலாம்னு சொல்லலை. இருக்குன்னு உறுதியா சொல்லி இருக்கார்.

//தாதி அந்தப்பக்கம் விலகியதும் குழந்தையை அந்த தொட்டியில் இருந்து எடுத்து மனைவியிடம் கொடுத்துவிட்டேன்...//

ஆக, எந்த ட்ரீட்மெண்டும் எடுத்துக்கல்.

//டாக்டர் வந்தார். குழந்தையை பரிசோதித்துவிட்டு..

யூ சீ...ஜாண்டிஸ் சுத்தமா போயிருச்சி...யூ கேன் கோ டுடே...என்றார்...//

இது எவ்ளோ பெரிய பித்தலாட்டம். அங்கயே சத்தம் போட்டிருந்தா இன்னும் சிலருக்கும் தெரிஞ்சிருக்கும். தேவை இல்லாம் அந்த இன்ஸூரன்ஸ் கம்பனிக்கும் இழப்பு.

ரவி said...

வாங்க மீரா அருண். ஜாண்டிஸ் வர வாய்ப்பு என்பது சரி தான். ஆனால் இப்போது எல்லாம் அது மருத்துவர்கள் பணம் பறிக்க வாய்ப்பாகிவிடுவதுதான் கொடுமை...

Anonymous said...

I wish u would have done some analysis before making this post.
A lot of kids have this jaundice and it can be detacted only after 2/3days. they do a blood test and check for a particular value(don't remember which one, the medicos can help). the acceptable limit is 12. If the child has above this then they have to keep in phototherapy.. you can check the report what value your baby had...

One of my relatives baby, they did not do the test and detect it as all was normal with the baby. Then got increased and when they noticed and detected it got severe and had to shift to another specialist hospital and kept in ICU for 4 days ... it was torture for the bay and parents..

believe me it is better to detect early and cure this in the initial stages itself.

ரவி said...

மருத்துவர் Pasi அவர்களே...

விளக்கமான கருத்துக்கு நன்றி..டெக்னிக்கலாக நீங்கள் சொல்வதை 100 சதவீதம் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் பெங்களூரில் நூற்றுக்கு எத்தனை குழந்தைகளுக்கு இந்த ஜாண்டிஸ் வருகிறது ? அவற்றில் எத்தனை நார்மல் டெலிவரி ஆன குழந்தைகளுக்கு, எத்தனை சிசேரியன் செய்யப்பட்ட குழந்தைகளுக்கு என்று புள்ளிவிவரம் எடுத்தால் உண்மை வெள்ளிடைமலை போல தெரியும்.

மணிகண்டன் said...

ravi,

I have come across these scenarios several times in my life. A lot of people in my family would like to have 2nd opinion and then 3rd opinion on everything that relates to medicine & doctors. In a way, they might be right. But they finally stop asking for opinions when a doctor says what they want to hear.

Like Dr pasi said, you should ask all the relevant questions but at no point of time, try to do the self medication. statistics does not really matter and i am sure that we cannot collect one such statistics from a city like bangalore also. once we made a decision to go for a doctor, try to trust him.

Just after reading your post, i also felt very bad about the doctor and how can they be so unemotional to milk money from a 3 day old baby. But see the responses and also look at the web.

ரவி said...

&&&&இது எவ்ளோ பெரிய பித்தலாட்டம். அங்கயே சத்தம் போட்டிருந்தா இன்னும் சிலருக்கும் தெரிஞ்சிருக்கும். தேவை இல்லாம் அந்த இன்ஸூரன்ஸ் கம்பனிக்கும் இழப்பு.^^^^^^


மாம்ஸ் நீங்கள் சொல்வது சரிதான். திருமணம் ஆகான பண்ணி ச்சே கண்ணி இளைஞரான உமக்கு குடும்பஸ்தர்கள் கஷ்டம் எங்க புரியப்போவுது ?

அங்கே சத்தம் போடுவதை விட உங்கள் தம்பி எப்படி புத்திசாலித்தனமாக காரியம் ஆற்றினான் என்பதையும் சொல்லிவிடுகிறேன்...

இரண்டு வாரம் கழித்து குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்டேன்.

அப்புறம் என்னுடைய இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு மருத்துவமனையில் நடந்த விவரங்களை விளக்கமாக எழுதி, ஒரு மின்னஞ்சல் தட்டினேன்..

என்ன நடந்ததோ தெரியாது., அடுத்த வாரத்தில் மருத்துவமனையில் இருந்து தொலைபேசி அழைப்பு.

இன்ஸூரன்ஸ் கம்பெனி குறைவாக பணம் அப்ரூவ் செய்திருப்பதாகவும், அதனை என்னிடம் பெறாமல் டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாகவும், மருத்துவமனைக்கு வந்து ரூ ஏழாயிரம் கட்டுமாறும் பேசினார்கள்...

மலைமுழுங்கி முருகேசனாகியன் என்னிடம் பப்பு வேகுமா ?? போடா நீயும் உன்னுடைய ஹாஸ்பிட்டலும். என்று ரெண்டு ஏறு ஏறி, தொடர்ந்து தொலைபேசினால் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் செல்லவேண்டியிருக்கும் என்று டவுசரை கழட்டினேன். அதன் பிறகு தொலைபேசி அழைப்பு வரவில்லை.

இதனை அடுத்த பதிவில் எழுதலாம் என்று இருந்தேன். வாயை புடுங்கிவிட்டீர்...

ரவி said...

I wish u would have done some analysis before making this post.

நான் எந்த அனாலிஸுசும் செய்யவில்லை என்று நீங்கள் எப்படி எழுதலாம் ? என்னை முதலில் நீங்கள் அனலைஸ் செய்யவேண்டும். பின்னூட்டத்துக்கு நன்றி. வலைப்பதிவு துவங்கவும்..ப்லாகர் ப்ரீ தான்..

ரவி said...

வணக்கம் லக்கி, மணிகண்டன்...

லக்கி, பேபி நியூசாக கிடைப்பதால் பேபி போஸ்ட்.

மணி, சரியா சொன்ன..

sriram said...

Hi Antony Ravi
this is just to clarify a point.
My only comment earlier was posted under my name, the Alleluya comment was surely not mine. I would never leave any anonymous comment on any blog page, I am not a coward.
will write a detailed reply to your reply later.
Sriram, Boston USA

ஆ.ஞானசேகரன் said...

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவது உண்டு. உண்மையும் இருக்கலாம்...

ny said...

வணக்கம் ரவி..
பல மற்றும் பலமான பின்னூட்டங்கள் பெறத்தகுந்த பதிவு!
ஒரு பெற்றோரின் நிலையில் உங்கள் வாதம் வலியோடிருப்பினும்
i preferred to take a look at it from the other side!!
அந்த doctor ஐப் பொய்யர் என்றாலும் அவர் கூறியதாக நீங்கள் கூறியிருப்பது நிஜம் என்று கொள்ளும் பட்சத்தில்....
lets throw some light here...
//பேபி லைட்டா யெல்லோயிஷ்ஷா இருக்கு. லைட்டா ஜாண்டிஸ் இருக்கு. இன்னோரு நாள் இருக்கனும் என்றார்...//
1. neonatal jaundice is detected fairly accurately by looking at baby's skin colour (kramer' rule. Advancement of Dermal Icterus in the Jaundiced Newborn. Amer J Dis Child. 1969; 118: 454-458.)
//ஒன்னும் பதட்டப்படத்தேவையில்லை...எல்லா குழந்தைகளுக்கும் வருவதுதான்...//
2. Jaundice is observed in 60% of term newborns and a greater proportion of pre-term newborns (Cloherty manual of neonatal care 2008, page 181-212)
// வீ ஹேவ் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் பார் பேபி ஜாண்டிஸ்...

சிஸ்டர், இன்னைக்கு இவங்க ஸ்டே பண்றாங்க...பேபி ஜாண்டிஸ் ரிமூவ் பண்ற மெஷினுக்கு அடியில குழந்தையை நைட் புல்லா வைங்க...மார்னிங் செக் பண்ணிட்டு, அப்புறமா டிஸ்சார்ஜ் பண்ணலாம்... //
3.phototherapy (keeping under special lights which may look like tube lights as it is also made by philips company!! ) is a simple and effective and of course a special treatment used in neonatal jaundice... infact it is the only harmless treatment.
//ஒரு தொட்டில், அதன் மேலும் ரெண்டு பவர்புல் ட்யூப் லைட். அதன் கீழ் வெறும் உடம்புடன் குழந்தையை படுக்கவைக்கவேண்டுமாம்..//
4. u cant explain simpler than this, yes you are absolutely right.

ny said...

//டாக்டர் வந்தார். குழந்தையை பரிசோதித்துவிட்டு..
யூ சீ...ஜாண்டிஸ் சுத்தமா போயிருச்சி...யூ கேன் கோ டுடே...என்றார்...//
5. இங்கே கொஞ்சம் நீண்ட விளக்கம் அவசியமாகிறது... கூடவே புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவும்...
if what the doctor did is true, then u can very well blame him for taking the baby out of light and sending you home... yes although u can predict jaundice visually, u should need a lab report before declaring it to be at a safe level.
(i really doubt in a hospital set up where they are billing thousands, they didnot check a bilirubin (jaundice) level which takes hardly 10 minutes or atleast a highly educated man like you didnot ask for it !)

few more clarifications...
6. newborn jaundice occurs predominantly in the first week of life, especially on day 3 or 4. (approximately அம்மா discharge ஆகும் நாள்)
7. most of them get resolved by the end of one week
(although 60% of normal term newborns develop jaundice, only 3% develop severe enough requiring treatment as quoted in national neonatal perinatal database 2002-2003 , page 29 (indian report ங்க..)
8. treatment is based on baby's jaundice level and day of life. (உதாரணமாக jaundice அளவு 12 க்கு மூன்றாம் நாளில் light ல் வைக்க வேண்டும். நான்காம் நாளில் தேவையில்லை. )
...................... may be உங்க டாக்டர் visually கணித்த jaundice மூன்றாம் நாளில் அதிகமாகவும் நான்காம் நாளுக்கு குறைவாகவும் தென்பட்டிருக்கலாம். (நீங்க light ல வைக்காம இருந்தாலும் 97% குழந்தைகளில் அவ்வாறு நடக்கும் வாய்ப்புண்டு !!)

bangalore இந்தியாவில் இருப்பதாலும் குழந்தைகளின் உடல் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே எங்கும் வேலை செய்வதாலும்...
இங்கு தந்த indian data உங்கள் குழந்தைக்கும் சாலப் பொருந்தும்!!!
(ur baby is an absolutely normal indian baby who represents both 60% as well as 97% of the population.....smiles :))

and,
* there is no big difference in newborn jaundice in babies born by normal vaginal delivery and cesarean section. infact normal delivery babies have higher chance if mother is given oxytocin drip (பிரசவ ஊக்கி )

*sunlight has no therapeutic benefit in neonatal jaundice. infact UV rays are harmful to babies (தயவு செய்து யாரின் அறிவுரையின் பேரிலும் jaundice க்கு சூரிய ஒளியில் காட்டாதீர்கள் )

*neonatal jaundice at high level is so dangerous as without appropriate treatment, it can leave your child nothing but a mentally retarded!!
(talk to a trusted doctor, dont ever take baby out of light on your own)

I am here to defend no one! but to say one little thing ' படித்தவர்கள் மேலும் படிக்கிறார்கள்'!

இத்தனை பெரிய பின்னூட்டமிட வைத்தாலும் தாயைப் பழிக்கும் சில தகாத வார்த்தைகளால் தரம் குறைந்த இந்தப் பதிவை 'குட்' ஆக்கிய யூத்புல் விகடனைக் 'குட்டு'கிறேன்... கூடவே உங்களையும்!!

ரவி said...

உங்க குட்டை வாங்கிக்கிறேன்...

இந்த சம்பவம் நினைவுக்கு வர காரணம், அதே மருத்துவமனையில் பிறந்த நன்பரின் குழந்தைக்கு ஜண்டிஸ், அன்றைக்கு பிறந்த மற்ற நான்கு குழந்தைகளுக்கு ஜாண்டிஸ்.

சிஸ்டருக்கு ஜாண்டிஸ், டாக்டருக்கும் ஜாண்டிஸ், குழந்தையை பார்வையிட வந்த ஆயாவுக்கு ஜாண்டிஸ் என்று பணம் புடுங்கி பரசுராமராக டாக்டர் மாறியதுதான்...

ஆங்கிலமும் தமிழும் கலந்திருந்தாலும் மிக கோர்வையான நிதான பின்னூட்டம்...

நன்றி டாக்டர்.

Anonymous said...

ரவி

காமாலை கண் உள்ளவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்

நீங்க ரொம்ப புத்திசாலி

உங்க கிட்ட பேச முடியாது

நீங்க சொல்றது தான் சரி

போதுமா

தமிழ் சசி | Tamil SASI said...

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இது ரொம்ப சகஜம். 50% குழந்தைகளுக்கு இது வரும் என கூறுவார்கள். என் குழந்தைகளுக்கு பிறந்தவுடனே ஜாண்டிஸ் ஷாட் போட்டு விட்டார்கள். அவர்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் சொன்னதால் செய்து விடுங்கள் என்று கூறி விட்டேன். மருத்துவர்கள் எதை சொல்கிறார்களோ அதை அப்படியே கேட்டு விடுவது என் பழக்கம். நம்முடைய ஆராய்ச்சியையெல்லாம் இந்த விஷயத்தில் செய்யக்கூடாது என்பது என் கொள்கை. நல்ல மருத்துவரை தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர மருத்துவர் சொல்வதில் நமக்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க கூடாது என்பது என் கொள்கை

குழந்தைகளைப் பொறுத்தவரை பெற்றோர்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்புவதில்லை. அதனால் சில மருத்துவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் பெற்றோர்களும் மருத்துவரிடம் இருந்து கூடுதல் தகவ்ல்களை கேட்டு பெற வேண்டும்.
நான் தொடர்ச்சியாக babycenter போன்றவற்றை வாசிப்பேன். பெரும்பாலும் நமக்கு அது கூடுதல் அறிவினை தரும். என்றாலும் மருத்துவர்கள் சொல்வதை கேட்பதே நல்லது.

ரவி said...

பேபிசெண்டர்ல படிச்சு குழம்பிய கதைகளும் உண்டு, அதில் இருந்து நல்ல அறிவுரை பெற்றதும் உண்டு...

அய்யோ புள்ளைக்கு என்னாச்சோ என்று பதறும்போது அறிவு வேலை செய்யமாட்டேங்குது..

நன்றி தமிழ் சசி...

அனானி, நன்றி...

Sathik Ali said...

உங்களைப் போன்று எனக்கும் ஏற்பட்ட அனுவத்தை பதிவு செய்திருக்கிறேன்.இங்கே http://sathik-ali.blogspot.com/2008/12/3.html.மருத்துவம் மிகப்பெரிய வியாபாரம் ஆகிவிட்டது இப்போது.மருத்துவரை தேர்வு செய்யுமுன் நிறைய யோசிக்க வேண்டும்.பிறகு அவர் மீது நம்பிக்கை வைக்கத்தான் வேண்டும்.வேறு வழியில்லை.

minsarakannan said...

i fell the same what u wrote