Wednesday, May 13, 2009
அரசியல் for Dummies...
அரசியலில் குதிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது இயல்புதான். அரசியல் என்றால் மக்களுக்கு சேவை செய்வது என்று நீங்கள் நினைத்திருந்தீர்கள் என்றால், மேற்க்கொண்டு படிக்காமல் எஸ்கேப் ஆகுங்கள். அதுதான் சால சிறந்தது...
எப்படி சினிமாக்காரர்கள், சினிமா எனது தொழில், என்று முழங்குகிறார்களோ, அரசியலும் ஒரு தொழில். அதில் சேவை என்ற பேச்சுக்கே இடமில்லை.
அரசியல் என்றால் என்ன என்ற அடிப்படையை முதலில் தெரிந்துகொள்ளாம். அரசியல் என்றால் பிழைப்பு. பெட்டிக்கடை வைத்தல், ஹோட்டல் நடத்துதல், கோழிப்பண்ணை வைத்தல் மாதிரி அரசியலும் ஒரு தொழில். ஒரு சிலர், இருக்கும் சொத்தை காத்துக்கொள்ள அரசியலில் திடீர் குதியல் போடுவார்கள். அவர்களுக்கானது அல்ல இந்த பதிவு, ஊர் சுற்றித்திரியும் வெட்டிப்பயல், வெறும்பயல்களுக்கானது...
இப்போதெல்லாம் அரசு வேலைகள் அருகிவிட்டன...அதனால அதுக்கும் போவ முடியாது...கம்பியூட்டரும் படிக்கல...படிச்ச பி.ஏவில் பதினைந்து அரியர்..
மிலிட்டரிக்கோ, போலீசுக்கோ போகும் அளவுக்கு உடல் தகுதியில்லை. சொந்தமாக பெரிய அளவில் நிலமோ, வாடகை வருமானம் வரும் அளவுக்கு ரெண்டு மூனு வீடோ இல்லை...கடனை உடனை வாங்கி செய்த ஒன்றிரண்டு பிஸினசும் புஸ்ஸாகிவிட்டது...சிகரெட்டுக்கு கூட நாடார் கடையில் கடன்...இதுதான் இப்போதைக்கு உங்கள் நிலை என்றால், உங்களுக்காகவே எழுதப்பட்ட கட்டுரை இது...
சார்...நீங்க அரசியல்ல குதிச்சு அமைச்சர் ஆக முழு தகுதியும் உங்ககிட்ட இருக்கு...என்ன சார் போடறேன்னு பாக்குறீங்களா ? வருங்கால வட்டம், மாவட்டம், அமைச்சர்யா நீ..சாரி நீங்க...இப்பவே கொடுக்கவேண்டாமா மரியாதை ? ஓக்கே இப்ப அரசியல் அரிச்சுவடியை படிக்கலாம் வாங்க..
இந்த கட்டுரை, ஏற்கனவே அரசியல் பாதையில் பயணிப்பவர்களுக்கானது அல்ல. அதை "வெற்றிகரமான அரசியல்வாதியாவது எப்படி" என்ற எனது வருங்கால கட்டுரை விளக்கும்...இது ஜஸ்ட் லைக் தட் குதிக்க மட்டுமே...
இந்த கட்டுரையில் முக்கியமாக நான் சொல்லவருவது, உங்களது அரசியல் பாதையின் வெற்றி என்ன, தோல்வி என்ன என்பதை நீங்கள் வரையறுத்துக்கொள்ளவேண்டியது முக்கியம்...அதை சொல்வது இந்த கட்டுரை...
உங்கள் அரசியல் பாதையின் வெற்றியாக நீங்கள் நினைப்பது, பதவியா, பணமா என்பதை பொறுத்தே இந்த வரையறையின் முடிவு அமையும்..பதவி மட்டும் போதும், பணம் வேண்டாம் என்றால், உங்களை லூசு என்பேன்...
பணம் இல்லாமல் பதவி இல்லை...பதவி இல்லாமல் பணம் இல்லை...இரண்டும் செம்புலப்பெயல்நீர் போல கலந்தவை...என்ன புரியலியா...க்வாட்டரும் வாட்டரும் போல கலந்தவை...
ஒரு மத்திய அல்லது மாநில அமைச்சராக ஆவது உங்கள் லட்சியம் என்றால் அதற்கான ப்ராபபிளிட்டி மிகவும் குறைவு, போட்டி மிக அதிகம்.
இன்னோரு விஷயம், கொஞ்சம் எளிமையான டார்கெட்டை வைத்துக்கொள்வது மிக முக்கியம்.
ஒரு ஒன்றியச்செயலாளர் பதவி அல்லது மாவட்ட கவுன்சிலர் பதவியை குறிவைத்து நகர்ந்தால் உண்மையில் அதனை அடைவது மிக எளிது.
அப்படியே அடைய முடியவில்லை...ஒரு பதவியும் கிடைக்கவில்லை என்றாலும், மினிமம் கேரண்டியாக, வெட்டிப்பயல் வெறும்பயல் என்று ஊராரால் தூற்றப்பட்ட நீங்கள், ஒரு புறம்போக்கு நில ஹைவேஸ் மோட்டல் முதலாளியாகவோ, அல்லது ஒரு ட்ராவல்ஸ் ஓனராகவே உட்கார்ந்துவிடலாம்...
கொஞ்சம் அதிஷ்டமும் பேச்சுத்திறமையும் இருந்தால் கிரானைட் அதிபராகவோ அல்லது பெரும் இம்போர்ட் எக்ஸ்போர்ட் வியாபார காந்தமாகவோ மாறலாம்...
சரி மேட்டருக்கு வருவோம்...மேல படிங்க...யோவ்..கீழ படிய்யா...முதல் வரியில இருந்து படிக்கறான் பாரு...சாரி...சார்...கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்...உங்களோட எட்டாவது பெயில் கல்வித்தகுதிக்கு இந்த அளவுதான் நான் எதிர்பார்க்கமுடியும் என்றாலும், அரசியலில் படிப்பு ஒரு மேட்டரே இல்லை...படிப்பு குறைய குறைய பதவி உயரும்...
ஜாதியா, கட்சியா, மன்றமா ?
ஜாதி அரசியல் அரிச்சுவடி
"கல்வியா செல்வமா வீரமா" என்ற சரஸ்வதி சபதம் படத்தில் வரும் கணீர் பாடல் உங்கள் நினைவுக்கு வந்தால் அதை தூக்கி போடுங்கள்...முதலில் நீங்கள் கையில் எடுக்கப்போவது எந்த வகையான அரசியல் என்பதை தீர்மானிக்கவேண்டும்...
உங்கள் ஏரியாவில் உங்கள் சாதி மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களா ? அப்போ ஜாதி அரசியல் எளிமையாக ஒர்க் அவுட் ஆகும்...
எளிமையாக எடுத்துக்காட்டுகளுடன் சொன்னால், விழுப்புரம் திண்டிவனம் ஏரியாவா, நீங்கள் வன்னியர் சாதியை சேர்த்தவர் என்றால் நீங்கள் பயணிக்கவேண்டிய திசை, வன்னியர் சாதி அரசியல்...மதுரை, தேனியை சேர்ந்தவரா ? தேவர் அரசியலுங்க...கோவை, ஈரோடு...அட நம்ம கவுண்டர் அரசியல்...வேலூரா, அப்படீன்னா இருக்கவே இருக்கு முதலியார் அரசியல்...
இன்னோரு விஷயத்தையும் நல்லா புரிஞ்சுக்கோங்க...வன்னியர் ஜாதி அரசியல் மதுரையில எடுபடாது.....தேவர் அரசியல் விழுப்புரத்துல எடுபடாது...அதனால எந்தவித காண்ட்ரடிக்சனும் வராம உங்க அரசியல் பாதையை தீர்மானிக்க இது ரொம்ப முக்கியம்...
இதுபற்றி வரும் அத்தியாயங்களில் விரிவாக பேசலாம்...இந்த கட்டுரை வெறும் ஸ்னாப்ஷாட் மட்டும்தானுங்க...
கட்சி அரசியல் அரிச்சுவடி
திமுக, அதிமுக போன்ற பெரும் கட்சிகளில் ஏற்கனவே கிளை, இணை, துணை என்று எக்ஸ்டென்ஷன் போட்டு பதவிகளை பிரித்துவிட்டிருப்பார்கள். அடிப்படை உறுப்பினர் அட்டைக்கே ஆறு வருடம் ஆகும்...
காங்கிரஸ்,பாமக, மதிமுக,வி.சி என்று அத்தனை கட்சிகளிலும் இந்த நிலைதான்...இதிலும் சில கான்ப்ளிக்ட்ஸ் இருக்கும்...இதிலும் எண்டர் ஆவது ரொம்ப குஷ்டம்....சாரி கஷ்டம்...
ஒரு உதாரணம் சொல்லப்போனால் திமுக வெயிட்டாக இருக்கும் மதுரையில் பாட்டாளி மக்கள் கட்சியிலோ அல்லது மதிமுகவிலோ இருத்தலின் இல்லாமை நன்று...
அங்கே உங்களுக்கு பெரிய அரசியல் எதிர்காலம் இருக்காது...கொஞ்சம் அசந்தால் கழுத்தில் அரிவாள் வெட்டு கூட கிடைக்கும்...அதனால் நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டியது விஜயகாந்த் கட்சியோ, அல்லது சரத்குமார் கட்சியோ...
கையில் கொஞ்சம் டப்பு தேத்தி, மேலுக்கு கொஞ்சம் கடனை உடனை வாங்கி மாவட்டம் வட்டத்தை பார்த்து ஒரு கிளை இணை செயலாளர் பதவியை வாங்கிவிடுவது நலம் பயக்கும். அதுவும் கிடைக்கலியா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், கார்த்திக் கட்சி, லட்சிய திமுக என்று எதாவது ஒரு கம்பெனியில் ஒரு பதவியை அமவுண்டை வெட்டி பெறுதல் முதல் பணி.
கொஞ்சம் நாள் ஆனாலும், சில பலரை சரிக்கட்டி, அமவுண்டு தட்டி, இந்த பதவியை புடிச்சுட்டீங்க என்றால் விசிட்டிங் கார்டு போட்டுடலாம். நாலு நன்பர்களை இணைத்து, வீட்டை ஒட்டி கட்சி அலுவலகம், கட்சி தலைமையின் ப்ளக்ஸ் பேனர் என்று அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்தீர்கள் என்றால் மற்ற பெரிய, சிறு, குறு கட்சிகளிடம் இருந்து அழைப்பு வரும்...இது தான் உங்கள் எண்ட்ரி பாய்ண்ட்.
கப்பென்று அங்கே தாவி ஒரு கிளை, இணை செயலாளர் போன்ற கட்சி பதவியை பிடிப்பது உங்கள் அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல். மேல் விவரங்களை பின்னால் பார்க்கலாம்...
இந்த கட்சி அரசியலில் உள்ள ட்ராபேக், உங்களிடம் கொஞ்சம் அமவுண்ட் இருக்கவேண்டும், அல்லது அங்கே வாங்கி இங்கே மாற்றி ரொட்டேஷன் செய்யும் திறமையாவது இருக்கவேண்டும். இல்லை என்றால் இந்த வகை அரசியலில் உங்களால் ஆரம்ப முதலீடு செய்வது கடினம்.
மன்ற அரசியல் அரிச்சுவடி
ரஜினி மன்ற பதிவெண் தருவதை நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு. அவர்களும் தலைவர் இப்போ அரசியலுக்கு வருவார், அப்போ வருவார், வாய்ஸ் தந்துட்டார், கிளம்பிட்டார் என்று இழவு காத்த குயிலாக கிடந்தும், ரஜினிகாந்த் இவர்களை சீண்டக்கூட இல்லை. கல்யாண மண்டப்பத்தில் அவ்வப்போது மிக்ஸர் பிஸ்கெட் தருவதோடு சரி.
அவர்களும், தலைவர் எந்திரனுக்கு அப்புறம் வந்திருவார், அப்போ உங்களுக்கு தான் ஆதரவு தருவார், இப்போதைக்கு எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று பெரிய கட்சிகளிடம் அமவுண்டு தேத்தி புள்ள குட்டிகளை படிக்கவைக்கிறார்கள்...சில முக்கியஸ்தர்கள் கொஞ்சம் வெற்றிகரமாக அரசு புறம்போக்கு நிலங்களை கூட வளைத்து டீக்கடை, சைக்கிள் கடை நடத்தி பிழைப்பை ஓட்டுகிறார்கள்..
இந்த வகை அரசியல்தான் எந்தவித இன்வெஸ்ட்மெண்ட்டும் தேவை இல்லாத அரசியல். மிக எளிதாக உங்களை உள்ளே நுழைத்துக்கொள்ள வாகான இடம் இது...மேலும் உங்களுக்கு நிறைய ஆப்ஷன்களையும் விட்டுவைத்திருக்கும் இடம் இதுதான்...
இன்றைக்கு ரஜினி மன்றத்திலோ, விஜயகாந்தும், சரத் குமாரும் ஏற்கனவே கட்சி ஆரம்பித்து நடத்துவதாலோ, அங்கே நுழையமுடியாது என்றாலும், 2016ல் மகனை முதல்வர் ஆக்கிவிடலாம் என்று நைட் ட்ரீம் கொண்டிருக்கும் எஸ்.ஏ சந்திரசேகரின் மகன் இளைய தளபதி விஜய் மன்றத்திலோ, தல அஜீத், புரட்சி தளபதி விஷால், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு, சூப்பர் ஸ்டார் மருமகன் தனுஷ் என்று ஏராளமான ஆப்ஷன்கள்.
ஒரு படத்துக்கு ஹீரோவாக மேக்கப் போட்டுவிட்டாலே அடுத்தது நாற்காலிதான் என்று ஒவ்வொரு ஹீரோவும் நினைக்கும் காலம் இது. உங்கள் ஊரில் குறிப்பிட்ட நடிகருக்கு மன்றம் இல்லையா ? நீங்கள் ஆரம்பிக்கிறீர்கள்.
ஜே.கே.ரித்திஷ், பரத், சூர்யா, ஆர்யாவாக இருந்தாலும் பரவாயில்லை. அல்லது தயாரிப்பில் இருக்கும் படத்தில் நடிக்கும் இளம் ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை...
நாலைந்து நன்பர்களை சேர்த்து, பர்மனெண்டாக இருக்கும்படி எட்டுக்கு எட்டு தகர போர்டில் தலைவரின் படத்தை வரைந்து, .கீழே உங்கள் போட்டோவோடு, உங்கள் நன்பர்களின் போட்டோவும் சேர்த்து, உங்கள் பெயர், உங்கள் நன்பர்கள் பெயர் என்று அனைத்தையும் இணைத்து ஊரில் பஸ்டாண்டுக்கு பக்கத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வைக்கவும்...
அந்த போர்டில், தலைவா, நீ சூரியன், செவ்வாய்...புதன்....நீ ஆஸ்கர் நாயகன்...கிராமி அவர்டு நாயகன்...என்று எந்த கருமத்தையாவது எழுதி, வாழ்த்துக்கள்...அல்லது, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று முடித்துவைக்கவும்...
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம், உங்கள் பெயரும் உங்கள் படிப்பும்...
நீங்கள் வைத்திருப்பது அப்பாவின் டி.வி.எஸ் பிப்டியாக இருந்தாலும் புல்லட் குமார் என்று வைக்கவேண்டும். கராத்தே க்ளாஸில் சேர்ந்து ரெண்டு நாள் ஊ.ஆ.என்று அடி தொண்டையில் கத்தி முன்னும் பின்னும் கையை நீட்டி ஆட்டி இருந்தீர்கள் என்றால் அதைவிட சூப்பர் தகுதி வேறில்லை...இன்னுமா புரியல...கராத்தே சுரேசுய்யா நீ...கராத்தே சுரேஷ் B.A என்று போட்டால் அற்புதமாக இருக்கும்...
அரியர்ஸ் என்றால் என்னவென்றே நாட்டில் முக்காவாசி பேருக்கு தெரியாது என்பது மிகப்பெரிய அட்வாண்டேஜ். B.A B.L என்று போட்டுக்கொண்டால், எல்லோரும் உங்களை வக்கீல் என்று கூட நினைப்பார்கள். யார் வந்து வெரிபை செய்யப்போகிறார்கள் ?
இதன் அடுத்த கட்டம் உங்கள் பெயர் அனைவர் மனதிலும் பதிய நீங்கள் எடுக்கும் நடவடிக்கை...
நாடார் கடையில் சிகரெட் வாங்கிவிட்டு, புல்லட் குமார் அக்கவுண்டுல எழுதிக்க என்று கெத்தாக, கடையில் தக்காளி வாங்க காத்திருக்கும் லேடீஸ் காதில் விழும்படி சொல்லிவிட்டு வருவது மிக முக்கியம்...
அடுத்த கட்டுரையில் சில பல ஐடியாக்களை கொடுத்து உங்களை அரசியல்வாதியாக்கிவிடுவேன் என்றாலும், ஒரு சின்ன ஐடியா ஸ்னிப்பெட்டுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன்...
தலைவர் பிறந்தநாள் வரும்போது, நூறு நாற்பது பக்க நோட்டும், அதே அளவில் ரெணால்ஸ் பேனாவும் வாங்கி வைத்துக்கொள்ளவும். கொஞ்சம் திறந்த இடமாக பார்த்து ஒரு பந்தல் போட்டு, இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா என்று ப்ளக்ஸ் போர்டு வைக்கவும். 200 நோட்டீஸ் அடித்து ஏரியாவில் வழங்கவும்...ஒரு போட்டோகிராபரை ஏற்பாடு செய்யவும்...ஏரியாவில் முக்கியமாக உள்ள பிரமுகரை நன்பர்கள் புடைசூழ சென்று அழைக்கவும்...அவரது பெயரும் நோட்டீஸில் இருப்பது முக்கியம்...
குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் கூடியதும், அங்கே வந்திருக்கும் குழந்தைகள், தாய்மார்கள், டாஸ்மாக்குக்கு போகும் வழியில் கூட்டத்தை எட்டிப்பார்த்தவர் என்று அனைவருக்கும் நோட்டு,பேனா கொடுக்கவும்...அதனை புகைப்படமும் எடுக்கவும்...கொஞ்சம்போல அமவுண்டு தேறினால் அதனை லோக்கல் நியூஸ் பேப்பரிலும் வெளியிடலாம்..
மொத்த பட்ஜெட் என்ன பார்க்கலாமா ? நோட்டு பேனா ரூ 500, பந்தல் 2000, ப்ளக்ஸ், நோட்டீஸ் 2000, போட்டோகிராப் 500, பசங்களுக்கு நைட்டு சரக்கு, சைடிஷ், தம்மு ரூ 500. ஆக ரூ 5500. இந்த சின்ன இன்வெஸ்ட்மெண்ட் வருங்காலத்தில் நீங்கள் 5000 கோடி சேர்க்க உதவும். என்ன நம்ப முடியலையா ? அடுத்த கட்டுரையில் விரிவாக காணலாம்...
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
//இந்த பதிவு, ஊர் சுற்றித்திரியும் வெட்டிப்பயல்//
பிராஜெக்டுக்காக ஊர் சுற்றும் வெட்டிப்பயலை வம்புக்கிழுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் சரத்பாபுவுக்கு ஆதரவு தெரிவிச்சதுக்காக இப்படியா கவுக்குறது
I was thinking in same lines after seeing sarath katchi.
appadiye 'puratchi for dummies' eludhavum.
//நோட்டு பேனா ரூ 500 //
budget cut -
kodutha notu pena, iron box e rotation vudalam.
alladhu kadayil kadanuku vaangi, photo eduthaprom thiruppi kuduthudalam.
உங்கள் பெயரை போட்டு எழுதவும் நன்பரே. அல்லது ஒரு ப்ளாக் ப்ரொபைல் உருவாக்கவும். இல்லைன்னா நானே கமெண்டு போட்டுக்கிடேன்னுவானுங்க ஹி ஹி
kodutha notu pena, iron box e rotation vudalam.
alladhu kadayil kadanuku vaangi, photo eduthaprom thiruppi kuduthudalam.
தங்கிலீஷை தவித்து, தமிழிலேயே எழுத முயலவும்...
அரசியல் என்றாலே வருமானம் இல்லாமலா ?
appadiye 'puratchi for dummies' eludhavum.
லக்கி எழுதியுள்ளார்
நீங்க கட்சி ஆரமித்தால் நான் தான் முதல் தொண்டன்
வெல்கம் நசரேயன்...கம்பேனி உங்களை கண்டிப்பாக இணைத்துக்கொள்ளும்...
:))))
வர.. வர.. ஊர்ல இருக்குற அத்தனை பயபுள்ளைகளுக்கும் துளிர் விட்டுப் போச்சு.. பயமே இல்லாம போச்சு..
இப்படி எனக்குப் போட்டியா பெரிசு, பெரிசா எழுதினா.. நான் என்னத்தை வைச்சு இதைவிட பெரிசா எழுதறது..?
நான்சென்ஸ்.. ஸ்டூப்பிட்.. இடியட்.. ராஸ்கோலு..
பரவாயில்லை..
பழகுன பாவத்துக்கு ஒரு ஓட்டுக் குத்திட்டேன்..
தலைப்பைப் பார்த்துட்டு என்னை மாதிரி Dum களத்தான் கூப்பிடுறீங்களோன்னு ஓடு வந்துட்டேன்:)
(சரி அது கிடக்கட்டும்.ஜெயிச்சது நீங்களா?லக்கியா?)
எனக்கும் சீட்டு கிடைக்கும் மாதிரிதான் தெரியுது.அதனால நேரா உண்மைத் தமிழன் பின்னூட்டத்துக்கு ஓடியாந்துட்டேன்:)
ராஜநடராஜன், கவுண்டிங்குக்கு பிறகு தெரியும் :)))
UT DONKU
அண்ணன் வருங்கால பிரதமர் ரவி B.E.. IAS.. வாழ்க! வளர்க!
Donku tamil priyan
// செந்தழல் ரவி said...
உங்கள் பெயரை போட்டு எழுதவும் நன்பரே. அல்லது ஒரு ப்ளாக் ப்ரொபைல் உருவாக்கவும். இல்லைன்னா நானே கமெண்டு போட்டுக்கிடேன்னுவானுங்க//
நம்பிட்டோம்..நம்பிட்டோம்..
தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.
அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.
ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா
எங்க தாத்தா செத்துட்டார்.
வாங்க செத்து செத்து விளையாடலாம்.
கண்ணோ
அது அந்த காலம். நாங்க எறங்கி ஆடுடா நாடு தாங்காது ஹி ஹி
its big fun......................................
// Kanna said...
எங்க தாத்தா செத்துட்டார்.
Thursday, 14 May, 2009
Kanna said...
வாங்க செத்து செத்து விளையாடலாம்.
Thursday, 14 May, 2009
செந்தழல் ரவி said...
கண்ணோ
அது அந்த காலம். நாங்க எறங்கி ஆடுடா நாடு தாங்காது ஹி ஹி //
ரவி...
என்ன இது...!!!!!
இது போல கீழ்தரமாக விளையாட முயற்சிக்க வேண்டாம்..
இதுபோல் கீழ்தரமாக விளையாடதானே உண்மைபெயர் உபயோகிக்க வில்லை...
நீங்களெல்லாம் ரொம்ப மேலே நிற்பதாக நினைத்து கொண்டதால்தான் இந்தளவுக்கு தலைகனம்.. கொஞ்சம் இறங்கி வாங்க...
இதுக்கெல்லாம் பதில் சொல்ல ஓம்போது மாதிரி புனைபெயர் உபயோகிக்க வேண்டாம்.. நிஜபெயரிலேயே வரவும்..
கண்ணா என்ன இது ? அவசரப்பட்டுவிட்டீர்களே ?
என்னுடைய ப்ரொபைலை பார்த்தீர்களா ? அதர் ஆப்ஷன். யாரோ விளையாடியுள்ளார்கள்.
அதற்குள் அசிங்கமாக பேசுகிறீர்களே ?
எலிக்குட்டி சோதனையை பற்றி தெரிந்துகொள்ளவும். நான் போட்ட கமெண்ட் என்றால் ப்ரொபைல் படம் இருக்கும். அதர் ஆப்ஷன் என்றால் படம் இருக்காது.
முதலில் உங்கள் வார்த்தைப்பிரயோகத்தை மாற்றுங்கள். மூன்றாம் பாலினத்துக்கு எதிரான மிகப்பெரிய வன்முறை அது. ஒரு ஒம்போதுடன் ஒண்டிக்கு ஒண்டி நிக்க முடியுமா உங்களால் ?
அவசரபட்டதற்கு வருந்துகிறேன்..
இது அதர் ஆப்சன் என்பது தெரியும். ஆனால் இது நீங்களாக இருக்கும் என்ற யூகத்தில் நான் அவசரபட்டுவிட்டேன்..
அது நீங்களாக இல்லாத பட்சத்தில் எனக்கு மன்னிப்பு கேட்க எவ்வித தயக்கமும் கிடையாது...
மன்னித்து கொள்ளுங்கள்..
தயவு செய்து அனானி ஆப்சனை தூக்கி, கமெண்ட் மாடுரேஷன் வைக்கவும்...
உங்கள் தளத்தின் பின்னூட்டம் ..உங்களின் கட்டுபாட்டில் வையுங்கள்..
அண்ணே கடை சரியா போனி ஆக மாட்டேங்குது...
நான் கூட கடைய மூடிட்டு லக்கி அண்ணனுக்கு பின்னூட்ட ரிலீசராவோ, பின்னூட்ட எடிட்டராவோ போலாம்னு இருந்தேன்...
இப்போ உங்க பதிவை பார்த்தவுடன் தான் ஒரு தெம்பே வருது....
என்னையும் உங்க கோச்சிங் கிளாசில் சேர்த்துகோங்க.
பிளீஸ் தயவு செய்து அடுத்த செட்டுலே சேர்ந்துக்கோ ன்னு மட்டும் சொல்லி என்னை ரிஜக்டு பண்ணாதீங்கோ.
உடனே பதில் தேவை.
பிளீஸ் தயவு செய்து அடுத்த செட்டுலே சேர்ந்துக்கோ ன்னு மட்டும் சொல்லி என்னை ரிஜக்டு பண்ணாதீங்கோ.
உடனே பதில் தேவை.
this comany need people
:))))))))))))))
ஒபாமாவுக்கு அட்வைசரா இருக்கவேண்டியவர் நீங்க. யார் செய்த சதியோ!!!!!!
hehe
Post a Comment