Sunday, October 28, 2012

அப்பார்ட்மெண்ட் வாசிகளே ! உஷார் !



காலையிலேயே அப்பார்ட்மெண்ட் சொசைட்டியினரிடம் இருந்து மின்னஞ்சல். அப்பார்ட்மெண்டில் இணைந்து அப்பார்ட்மெண்டுக்கு உள்ளேயே (மொத்தம் 1000 வீடுகள்) இருந்த மளிகை கடை பையன் பொருட்களை கொடுக்க வந்தபோது வீட்டில் இருந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்..

இங்கே மளிகைகடை, மெடிக்கல்ஸ், பார்பர் ஷாப் என்று அனைத்து வசதிகளும் அப்பார்ட்மெண்ட் உள்ளேயே இருப்பதால், எக்ஸ்டென்ஷன் போனை கொண்டு தக்காளி ஒரு கிலோ, பூண்டு கால்கிலோ என்று சொன்னால் மளிகைப்பொருளை ஆள் அனுப்பி வீட்டுக்கே கொடுப்பார்கள். அப்படி வந்த ஒரு பையன் இந்த கொடூர செயலை செய்துள்ளான்..காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்கள், மளிகை கடையை உடனே அப்பார்ட்மெண்டை விட்டு வெளியேறுமாறு சொசைட்டியினர் சொல்லிவிட்டார்கள்.

இந்த கொடூரத்தில் இருந்து மீண்டுவர அந்த சிறுமிக்கு எவ்வளவு நாள் பிடிக்குமோ ? இந்த அப்பார்ட்மெண்ட்டில் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது என்று இதுநாள் வரை நினைத்திருந்த என்னுடைய நினைப்பில் சம்மட்டி அடியாக இறங்கியிருக்கிறது இந்த சம்பவம். பெற்றோர்களில் அக்கறையின்மை என்று சொல்வதா அல்லது பாலியல் வறட்சியில் அலையும் சமூகத்தை சொல்வதா ?

5 comments:

வவ்வால் said...

கொடுமையான சம்பவம் தான்.

குடியிருப்புக்குள் அனைத்து கடைகளும் வைக்க அனுமதிப்பது கூடாது என நினைக்கிறேன்.

டெல்லி மாநகராட்சி இதனை தடை செய்துள்ளது.

ஆனால் சென்னையில் எல்லா குடியிருப்புக்குள் வைக்குறோம்னு சொல்ல்i விலையை ஏற்றி விற்கிறார்கள்.

சேக்கனா M. நிஜாம் said...

சீன தேசத்தில் இருப்பது போன்று இது போன்ற அபார்ட்மென்ட்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியாளர்களின் பராமரிப்பில் இருப்பது அவசியமானதொன்று.

ரவி said...

கடைகளை வைப்பது இங்கே பாதுகாப்பு. வெளியில் இதை விட பெரிய கூன்ஸ் :))

ரவி said...

இருங்காங்க பாதுகாப்பு பணியில். ஆனால் அவர்களை மீறி இது நடந்துவிட்டது...

Williams said...

கடைகளை வைப்பது இங்கே பாதுகாப்பு. வெளியில் இதை விட பெரிய கூன்ஸ் :))