Thursday, October 11, 2012

நித்யானந்தா Vs ஆர்த்தி ராவ் -> நீதிபதி கே சந்துரு


Vs


நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு எழுதவேண்டிய தேவை இருக்கிறது. என்னுடைய வாசகர்கள் (அப்படி யாராவது இருந்தா) மன்னிக்க. இந்த பதிவு பரபரப்புக்காகவோ / சூடான இடுகையில் வரவேண்டுமென்றோ எழுதப்படுவதல்ல...

இன்றைய நாளேடுகளில் வந்திருக்கும் செய்தி. நித்யானந்தா நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். ஆர்த்தி ராவ் மற்றும் லெனின் கருப்பன் ஆகியோர் செய்தி / காட்சி ஊடகங்களுக்கு தன்னைப்பற்றி பேட்டிகள் வழங்கக்கூடாது என்பது அவரது மனுவின் சாராம்சம்.

இதனை விசாரித்த நீதியரசர் சந்துரு (நீதிபதி என்று சொன்னால் போதும் என்று சொல்கிறார் வழக்கறிஞர் பிரபு ராஜதுரை. நீதியரசர் என்பது தனிமனித துதி என்கிறார். அப்ப சினிமாவில் காண்பிப்பதுபோல இப்பல்லாம் மை லார்ட் - யுவர் ஹானர் சொல்வதில்லையா ? ) - மறுபதி விஷயத்துக்கு வருகிறேன். நீதிபதி சந்துரு, இந்த மனுவை நிராகரித்திருக்கிறார்.

நீதிமன்றத்தை அணுகுபவர்கள் சுத்தமான கையோடு இருக்கவேண்டும் (Clean Hands) என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார்.

நித்யானந்தா பற்றிய வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் இருக்கிறது, இன்னும் தீர்ப்பு வரவில்லை. அப்படி இருக்கையில் நித்யானந்தா Clean Hands இல்லாதவர் என்ற முன் முடிவோடு நித்யானந்தாவின் மனுவை நீதிபதி நிராகரித்திருக்கிறார். இது முறையா ? இதன் மூலம் செய்தி / காட்சி ஊடகங்களில் (அவை அவதூறா அல்லது உண்மையா என்பது வேறு வழக்கு) வந்த செய்திகளால் நீதிபதி இன்ப்ளூயன்ஸ் செய்யப்பட்டுவிட்டாரோ என்ற கேள்வி எழுகிறது என்று ட்விட்டர் குறுந்தகவல் தளத்தில் பதிவிட்டேன்.

நீதிபதி கே சந்துரு அவர்கள் ஒரு வழக்கில் போலீசாருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை (அவர்களது வழக்கு மேல் முறையீட்டில் தள்ளுபடி செய்யப்பட்டபிறகும் திருப்பி தர உத்தரவிடவில்லை - டெக்னிக்கலாக மறுத்துவிட்டார் (அப்பவே ஏன் பணத்தை திருப்பி கேட்டு வழக்கு போடவில்லை என்று சொல்லி)) என்று என் தந்தையார் ஆறு மாதம் முன்பு சொன்னது நியாபகம் வருகிறது...அதுவும் அந்த குறுந்தகவலுக்கு காரணம்..

வழக்கறிஞர் பிரபு ராஜதுரை எனக்கு பதிலாக கொடுத்த விடயங்களை, திரு ரெக்ஸ் அருள் மறுத்திருக்கிறார்...

வழக்கறிஞர் பிரபு ராஜதுரையின் பதில்கள்..

Prabhu Rajadurai ‏:@prabhuadv

clean hand principle will be applied only in cases where one seeks discretionery relief like a writ petition

However the clean hands principle won't apply here Judges sometimes stretch it too far, even to personal character & repute


செந்தழல்_ரவி ‏@senthazalravi
@prabhuadv அதை தான் சார் நான் சொல்கிறேன். நீதியரசர் அதிகப்படியான வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார் என்று.


செந்தழல்_ரவி ‏@senthazalravi
@prabhuadv இது போல சிரி சிரி ரவிஷங்கர் மீது அவதூறு செய்பவர்கள் பற்றிய வழக்கு வந்தால் ( அவர் மீது இப்போது எந்த குற்றச்சாட்டும் இல்லை)


Rex Arul ‏@rexarul\

@prabhuadv /:clean hand principle will be applied only in cases where one seeks discretionery relief like a writ petition:/ @senthazalravi

@prabhuadv Prabhu, you are DEAD wrong on this fallacious claim. You're entitled to your opinion, which can be wrong or right

@prabhuadv But, here you are wrong. Supreme Court of India has repeatedly clarified the "clean hands" doctrine. @senthazalravi 3/

@prabhuadv It never said that "clean-hands" doctrine applies only to WRIT & not ORIGINAL or APPELLATE side. That's ur view

@prabhuadv Supreme Court of India has repeatedly clarified that any litigant-writ or otherwise-approaching w/ vexatious @senthazalravi 5/

@prabhuadv claims & unclean hands to mislead by prevarications & outright lies comes under "fraud vitiates all" doctrine @senthazalravi

@prabhuadv Right from "State of Haryana Vs. Karnal Distillery Co Ltd" to "G Jayshree & ors Vs. Bhagwandas S Patel & ors"

@prabhuadv it's simple & clear: do NOT lie to the court. Get that Prabhu? Do NOT lie to the courts. That's heart of it @senthazalravi 8/

@prabhuadv "It is settled law that a person who approaches the Court for grant of relief, equitable or otherwise " @senthazalravi 9/

@prabhuadv " is under a solemn obligation to candidly disclose all the material/important facts " @senthazalravi 10/

@prabhuadv "which have bearing on the adjudication of the issues raised in the case. In other words, " @senthazalravi 11/

@prabhuadv "he owes a duty to the court to bring out all the facts and refrain from concealing/suppressing" @senthazalravi 12/

@prabhuadv "any material fact within his knowledge or which he could have known by exercising diligence expected " @senthazalravi

@prabhuadv "of a person of ordinary prudence.If he is found guilty of concealment of material facts or making an attempt "@senthazalravi

@prabhuadv "to pollute the pure stream of justice, the court not only has the right but a duty to deny relief to such person" @senthazalravi

@prabhuadv Those were Supreme Court of India's words on "unclean hands" doctrine & "fraud vitiates all". @senthazalravi 15/

@prabhuadv You may have your own compulsions to attack "clean hands" doctrine as I can understand.But,pls don't mislead

@prabhuadv What you tweeted is your misunderstanding of law. Jurisprudence & settled-law is different than ur opinion

@prabhuadv To even remotely impute "unclean hands" not applicable 2 other branches of law except Writ as u say is travesty.

@senthazalravi நான் இந்திய உச்ச நீதிமன்ற மேற்கோள்களை காட்டினேன். அமெரிக்காவில் perjury என்னும் கோட்பாட்டுக்கு அருகில் வரும் @prabhuadv

@senthazalravi ஒரு case law evolution தான் இந்திய நீதிமன்றங்களின் "unclean hands" concept. இதன் அடுத்த பரிணாமம் perjuryஐ @prabhuadv

@senthazalravi வேரோடு அறுப்பது தான். இந்திய உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு இது குறித்து வேறு ஒரு landmark தீர்ப்பு வழங்கியது @prabhuadv

திரு ரெக்ஸ் அருள் தான் ஒரு வழக்கறிஞர் அல்ல என்றும், தான் ஒரு பொறியாளர் என்றும் தெரிவித்திருக்கிறார்..சட்ட புத்தகங்களில் இருந்தெல்லாம் உதாரணம் தருகிறார்...கலக்குறீங்க...இது பற்றி உங்கள் இருவரின் முழுமையான கருத்தை ட்விட்டர் குறுந்தளத்தில் (இவர்கள் இருவருக்கும் நேரம் இருக்கும்போது எழுதினார்கள் என்றால் படிக்க அருமையாக இருக்கும்)...

பதிவில் இருக்கும் படங்களை கூகிள் இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தியிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் (நித்யானந்தா அவர்கள் அல்லது ஆர்த்தி ராவ் அவர்கள் கேட்டுக்கொண்டால் நீக்கிவிட தயாராக இருக்கிறேன்..ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா ரொம்ப சட்ட சிக்கல் பாக்கவேண்டியிருக்கு இப்பல்லாம்..)

கொஞ்சம் சம்பந்தம் இல்லாத அப்டேட்: கூடங்குளம் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான கேள்விகளுடன் உச்சநீதிமன்றத்தை அணுகி அதில் மத்திய அரசு / அணுசக்தி கழகம் மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் என்ற வரலாற்று தீர்ப்பை பெற்றுள்ளார்கள் பூவுலகின் நன்பர்கள் (வலைப்பதிவர்கள் அனைவரும் அறிந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன்). வாழ்த்துக்கள் !!!! மிக்க மகிழ்ச்சி...


8 comments:

ஜோதிஜி said...

நான் உங்கள் எழுத்தை விரும்பி படிக்கின்றவன் ரவி.

வவ்வால் said...

செந்தழல்,

கிளீன் ஹேண்ட்ஸ் என்ர சொற்பதத்தை விட்டு தள்ளுங்கள், ஆனால் இன்னார் என்னைப்பற்றி பேட்டி தரக்கூடாது என தடைக்கேட்பதற்கு பதிலாக , இன்னார் என் மீது அவதூறாக பேசுகிறார் என அவதூறு வழக்குப்போடலாமே?

அம்மையார் அப்படி தானே செய்கிறார்?

கேஜ்ரிவால் ராபர்ட் வதோரா மீது குற்றச்சாட்டினை வைக்கிறார்? இதே போல வதோரா தடைக்கேட்கலாம் அல்லவா?

பொது வாழ்வில் வந்தவர்கள் சந்தேகத்திற்கு அப்பார்ப்பட்டு இருக்க வேண்டும், அப்படி சந்தேகம் கிளப்பப்படுமாயின் அவர்கள் அதனை சந்தேகத்திற்கு இடமின்றி நீக்க வேண்டும் என்ற அடிப்படையில் , தடை வழங்க மறுத்து இருக்கலாம்.

சீசர் மனைவி என்றாலும் சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்டவள் அல்ல என சொல்வதைப்போல தான்.
--------------

நாங்க எல்லாம் செந்தழல் எழுத்தை விரும்பாமல் படிக்கிறோம்@ ஜோதிஜி :-))
-----------

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாங்க எழுதுங்க!

Rex Arul said...

ரவி அவர்களே - இது நான் முதன்முறையாக உங்கள் தளத்தில் விடும் பின்னூட்டம். பிழை இருந்தால் பொறுத்தருள்க.

அமெரிக்காவில் வசிப்பதால், அமெரிக்க சட்ட கோட்பாடுகளின்படி இந்த Disclaimerஐ போட்டு விடுகிறேன்: IANAL - நான் வழக்குரைஞரோ சட்ட வல்லுநரோ அல்ல; இவை வெறும் என் சொந்தக் கருத்துக்களே அன்றி சட்ட அறிவுரை அல்ல.

இனி பேசலாம். இதோ:

முதலில் சில clarifications கொடுத்துடலாமா?

/:நீதிபதி என்று சொன்னால் போதும் என்று சொல்கிறார் வழக்கறிஞர் பிரபு ராஜதுரை:/

பிரபு ராஜதுரை சொல்வதை நீங்கள் extrapolate செய்துவிடாதீர்கள். நீதிபதி சந்துரு அவர்கள் தன்னை யாரும் "நீதியரசர்" என்றும் "Lord" என்றும் "Lordship" என்றும் அழைக்கப்படாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். அதைத் தான் இங்கு பிரபு சுட்டிக்காட்டுகிறார். எல்லாரையும் அப்படி அழைத்துவிட வேண்டாம் :-) Just wanted to clarify.

/:அப்ப சினிமாவில் காண்பிப்பதுபோல இப்பல்லாம் மை லார்ட் - யுவர் ஹானர் சொல்வதில்லையா ?:/

இந்தியாவில் இனிமேல் நீதிபதிகளை "Lord" என்றும் "Lordship" என்றும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பார் கவுன்சில் கொண்டுவந்த மாற்றங்களை எல்லாம், நம்மவர்களால் விடமுடியவில்லை. ஆதலால் பழைய பழக்கம் தொடர்கிறது. நீதிபதி சந்துரு, அவரிடம் வரும் வக்கீல்களுக்கு இதை ஞாபகப்படுத்துவார் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

/:நீதிமன்றத்தை அணுகுபவர்கள் சுத்தமான கையோடு இருக்கவேண்டும் (Clean Hands) என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார்.:/

இங்கே தான் நீங்கள் சறுக்கி விழுந்துவிட்டீர்கள். அதாவது, you have taken the term literally, instead of legally. "Clean hands" என்பது சட்ட பொருள் நிறைந்த வார்த்தை. அதாவது, நீங்கள் என்ன நினைத்துவிட்டீர்கள் என்றால், நித்தி ரஞ்சிதாவுடன் இருந்த உல்லாசத்தை நீதிபதி சாடுவதாக பொருள் கொண்டுவிட்டீர்களோ என்று அச்சம் ஏற்படுகிறது. அது தவறு. இங்கே நீதிபதி சுட்டிகாட்டி இருப்பது சட்டத்தை.

அதாவது, ஒரு வழக்குக்காக நீதிமன்றம் வரும் வாதி, பிரதிவாதி -- இருவருமே, சொல்வதில் உண்மையும், இருக்கிற உண்மையை மறைக்காமலும் இருக்க வேண்டும். அதாவது, பொய் கூறக்கூடாது. இது ஒன்று.

மற்றொன்று vexatious என்று சொல்லப்படக்கூடிய malicious அல்லது தீய எண்ணத்தோடு நீதிமன்றத்தை நாடி, அதை ஒரு கருவியாக பயன்படுத்தி, மற்றவர் உரிமையைப் பறித்து காரியம் சாத்திதுக்கொள்ள துணிவது.

இதில் நித்தி சாமி இரண்டையும் செய்ததால் தான் நீதிபதி சந்துரு அவரின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.

அதாவது, நித்தி பல பேட்டிகள், பிரசுரம், என்றேல்லாம் ஒரே தாக்குதலில் இறங்குகிறார் -- லேல்னின் மற்றும் ஆரத்திக்கு எதிராக. ஆனால், மௌனமாக இருந்த ஆரத்தி அம்மையார், பதில் சொல்ல விழைந்தபோது, அவரின் வாயை அடைக்க சென்னை உயர்நீதி மன்றத்தை நாடி ஒரு வாயடைப்பு ஆணை -- இடைக்காலத்தடை ஆணை (ad interim injunction) வாங்கத் துடிக்கிறார். இது தவறு அல்லாவா? இவர் பேசுவாராம். இவர் பேட்டி கொடுப்பாராம். 101 கேள்விகள் என்றெல்லாம் பதிப்பாராம், ஆனால் இந்த அம்மையார் பதில் சொல்ல வந்தால், நீதிமன்ற வழக்குகள் போட்டு அவரின் உரிமையை தடுக்கப் பார்ப்பாராம். இது எப்படி சரியாகும் என்று நீதிபதி சந்துரு தனது ஆணையில் சாடியுள்ளார்.

தனிமனித உரிமையை gag செய்வது அவ்வளவு சுலபமல்ல. தவறு செய்பவன் எல்லாம், "நீ என் தவறை சுட்டிக்காட்டக் கூடாது. அது மான நஷ்டம்" என்று எழுந்தால், தவறை எப்படி தான் சுட்டிக்காட்டுவது? இந்தக் கருத்தில் தான் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்ற மாதத்தில் இந்திய உச்ச நீதி மன்றம் "அரசியல் சாசன அமர்வு" ஒரு மாபெரும் தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கு தான் மிக முக்கியமாக மேற்கோள் காட்டப்பட்டு தள்ளுபடி செய்து இருக்கிறார் நீதிபதி சந்துரு.

மற்றபடி, நீங்கள் அஞ்சியது போல, ஊடகங்களைப் பார்த்து அவர் "unclean hands" என்று சொல்லவில்லை.

(...to be continued...)

Rex Arul said...

(..continued...)

இதோ அவரின் தீர்ப்பில் இருந்து சில பகுதிகள். ( நேரம் அதிகாலை 1 மணி ஆதலால், உறங்கிவிட்டு, மற்ற விஷயங்களை நாளை தொடர்கிறேன். நன்றி.)

In Para 11, Honorable Justice Chandru says, "The applicant has to come with clean hands before seeking equitable remedy of injunction."

In Para 14 of the Judgement, the Honorable Justice says, "The applicant had indulged in mudslinging after gagging the mouth of the victim. The applicant has also been resorting to media at Will during the past two years and giving his voice on the same subject matter including the case on hand. Hence the applicant is not entitled for any relief."

In Para 16, he says, "The subject matter of two cases have been discussed in detail by the press and electronic media in Karnataka and in Tamil Nadu and the same has not affected the applicant at any time. There was no legal injury. There was apprehension of legal injury to the applicant is exaggerated. A person like the applicant who is a celebrity cannot curtain the fundamental right to seek publishing of the views of the third respondent in response to the allegations made by the applicant. "

In para 17, the Honorable Justice continues, "It must be noted that a person who comes to court seeking for equitable relief like an injunction must also come with clean hands. He cannot make the court as a tool to prevent his adversaries made silent while he can be active by posting questions in the social media. "

In para 18, "First of all, the applicant cannot claim any right to privacy because he is in a public domain and his right of privacy is very limited. "

In Para 20, he orders, "Therefore, he cannot seek any relief before this court having used his power for ventilating his own views with the case on hand. A person who comes to court seeking the relief of equity must also behave himself and not violating the very principle for which the relief was sought for from this court. "

இப்போது புரிகிறதா, நீதிபதி had applied his mind and ruled fairly based on the facts and the principle of "unclean hands" and not the way as may have been wrongly interpreted as being influenced by the news-media?

இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். அறியாமையாலோ, அல்லது தனி விருப்பு வெறுப்பு காரணமாகவோ, பிரபு ராஜதுரை சொல்லியதில் தவறு இருக்கிறது. "unclean hands" வெறும் Writ Jurisdictionக்கு மட்டும் தான் பொருந்த வேண்டும் என்ற நிலையை அவர் எங்கிருந்து இறக்குமதி செய்தார் என்பது எனக்கு இன்னும் புரியாதப் புதிராக இருக்கிறது. நான் Twitterல் சுட்டியது போல, உச்ச நீதி + உயர் நீதி மன்ற jurisprudence case lawவில் அப்படி ஒரு பாகுபாடே இல்லை.

எனவே, பிரபு ராஜதுரை கூறும் கருத்து, அபத்தமானது, தவறானது. அவரின் தனிப்பட்டக் கருத்து என்றால், "ஓ அப்படியா" என்று கேட்டுக்கொள்ளலாம். ஆனால், அது தான் சட்ட முறை என்று சொல்வதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இதோ என்னுடைய proof: If what Prabhu Rajadurai says is correct, then it implies that he finds Justice K Chandru to be wrong because this particular petition was an OSA -- ORIGINAL SIDE APPLICATION -- on a CS -- CIVIL SUIT. இதில் எங்கு Writ Jurisdiction வந்தது, பிரபு ராஜதுரை? சொல்லுங்கள்? இது Writ அல்ல. இது ORIGINAL SIDE -- LETTERS PATENT - JURISDICTIONல் முளைத்த ஒரு ORIGINAL SIDE PETITION.

ஆக, பிரபு ராஜதுரை தனது பிழையைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். ஏனென்றால், மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது அல்லவா?நன்றி

Rex Arul said...

பிரபு ராஜதுரை அவர்கள் தன் நிலையை விளக்கி, பிழையை சுட்டிக்காட்டினால் நான் திருத்திக்கொள்வேன். நன்றி.

Rex Arul said...

அதே போல நான் குறிப்பிட்டது போல, நித்தி சாமியின் மனு OSA அல்ல...OA (ORIGINAL APPLICATION).

(OSA என்பது வேறு. Original Side Appeal என்பது மேல்முறையீடு. அதனால், OA என்றிருக்க வேண்டும். என் பிழைக்கு வருந்துகிறேன்.)

ரவி said...

சூப்பர் புரிகிறது !!! வழக்கறிஞர் என்ன பதில் தருகிறார் என்று பார்ப்போம்...நல்லிரவு !!!