Monday, December 14, 2015

விளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க

யூடியூப் பார்க்கும்போது வீடியோ விளம்பரங்கள் (சில சமயம் Skip பட்டனுடன், சில சமயம் ஸ்கிப் பட்டன் இல்லாமல் கிட்டத்தட்ட 15 வினாடிகள் வரை) தொல்லை தருகிறதா ?

விளம்பரங்கள் இல்லாமல் யூ-டியூப் வீடியோக்களை பார்க்க ஒரு நுணுக்கம் இருக்கிறது. இது கூகிள் நிறுவனமே வழங்கும் ஒரு பரிசோதனை, அதனால் கூகிள் இந்த வசதியை தரும் வரை பயன்படுத்தி மகிழ்க.

இந்த வசதியை கொண்டுவர நீங்கள் உங்கள் டெவலப்பர் கன்ஸோலில் ஒரு சிறிய நிரலை உள்ளிட்டு எண்டர் தட்டவேண்டும். வெயிட், வெயிட், ரொம்ப கஷ்டமில்லை, ஈஸி தான்..

ஸ்டெப் 1 : முதலில் உங்கள் ப்ரவுசரை (க்ரோம், பயர்பாக்ஸ், ஓபரா) ஒப்பன் செய்து, ஏதாவது ஒரு யூ.டியூப் வீடியோவை ஓப்பன் செய்க..(பீப் சாங் வேண்டாம் பாஸ்)

ஓப்பன் செய்தாச்சா ? பாட்டு ஓடுதா ? அப்படியே ஓடட்டும் விடுங்க..

ஸ்டெப் 2:  இந்த குறிப்பிட்ட ஷார்ட் கட் கீயை உங்க ப்ரவுசரில் அழுத்தவும்..

க்ரோம், ஓபரா : Control + Shift + J
பயபாக்ஸ் : Control + Shirt + K

இப்ப ஒரு கன்ஸோல் விண்டோ வருதா ?

ஸ்டெப் 3 :  இந்த குறிப்பிட்ட நிரலை உள்ளீடு செய்து எண்டர் தட்டவும்..

document.cookie="VISITOR_INFO1_LIVE=oKckVSqvaGw; path=/; domain=.youtube.com";window.location.reload();
அஷ்டே !!

இனி உங்கள் உலாவியில் யூடியூப் பயன்படுத்தும்போது எந்த விளம்பரமும் வராது !!!

படம் - கூகிள் க்ரோம்



படம் - ஓபரா ப்ரவுசர்



நெருப்பு நரி நான் பயன்படுத்துவதில்லை, அதனால் ஸ்கிரீன்ஷாட் போடமுடியவில்லை.

சோர்ஸ் பதிவு : http://lifehacker.com/disable-ads-on-youtube-by-enabling-a-youtube-experiment-1171802208

டேய் டேய் தம்பி, காப்பி அடிக்க்காதடா, அப்படி அடிச்சா என்னோட பதிவு அல்லது மூல பதிவை சுட்டி கொடுத்து காப்பி அடிடா !!!

ஸாரி மக்கள்ஸ், ஒரு சின்ன கான்வர்ஸேஷன் நம்ப காப்பிமனோஹரோட..

வாழ்த்துக்கள் இணைய உலாவியில் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க !!

Monday, February 25, 2013

அமீரின் ஆதி பகவன்

அமீரின் ஆதி பகவன் படத்தை நேன்று பார்க்கும் பாக்கியம் கிட்டியது. பி.வி.ஆர்  குர்கான், டிக்கெட் விலை 835 (பாப்கார்ன், மோமோஸ், கார்ன் 550). திரைப்பட விமர்சனம் எழுதி கனநாளாச்சு, ஏன் வலைப்பதிவு எழுதியே ரொம்ப நாளாச்சு. எப்படி வருதுன்னு தெரியல, இருந்தாலும் எனக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான (டேய் டேய்) வாசகர்களை நம்பி எழுத உக்காந்துட்டேன் !! நீங்க கண்டுக்காதீங்க.


இந்த விமர்சனத்தை அமீரோ, அவரோட தயாரிப்பாளர் அன்பழகன் எம்.எல்.ஏவோ படிச்சுட்டு, தூக்குடா அந்த செந்தழல் ரவியன்னு என்னை சென்னைக்கு ப்ளைட் டிக்கெட் போட்டு கூட்டிக்கிட்டு போயி ரூம போட்டு குமுற குமுற கும்ம வாய்ப்பு இருக்கு. இல்லைன்னா அமீர் கமிஷனர் அலுவலக வாசல்ல டி.வி பேட்டி கொடுக்கவும் வாய்ப்பு இருக்கு ( டெல்லியை சேர்ந்த மென்பொருள் வல்லுனர் என்னுடைய படத்தை பற்றி தவறான தகவல் பரப்புகிறார், அவரை உடனே கைது செய்யனும் அப்படீன்னு). இருந்தாலும் டம்மி பீஸான என்னை ஏன் கைது எல்லாம் செய்யப்போறாங்க ? (ஒரு வேளை படத்துக்கு விளம்பரமா போவுதுன்னு போனாலும் போவார், டேய் ரவி உனக்கு வாயில வாஸ்து சரியில்ல, உனக்கு நீயே ஆப்பு வெச்சுக்கற பாரு?)



புகை பழக்கத்தை பற்றி கொலைவெறியான ஒரு நீயூஸ் ரீலுக்கு அப்புறம் படம் ஆரம்பிச்சது. யாழினிக்கிட்ட சொல்லியிருந்தேன். சவுண்டு விடக்கூடாது, மெனி பீப்புள் படத்த பாத்துக்கிட்டிருப்பாங்க, டிஸ்டர்ப் ஆகும்னு. மோமோஸும், கார்னும் வாங்கித்தந்தா கம்முனு இருக்கேன்னு சொல்லி ஒத்துக்கிட்டா. படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துல மோமோஸ் எங்க, கார்ன் எங்கன்னு கேட்டு தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுட்டா. அதை வெளியே போய் வாங்கி வந்த வகையில 5 நிமிஷம் வேஸ்ட் ( படம் பாத்த மொத்த ரெண்டரை மணி நேரமும் மரண வேஸ்டுங்கறா என் பொண்டாட்டி, அதை நீங்க கண்டுக்கிடாதீங்க)..



ஈஸ் திஸ் தெலுங்கு மூவி ன்னு கேட்டா பொண்ணு. நோ நோ டமில் மூவின்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே படத்துல ஆந்திரா, ஹைதராபாத், படபடன்னு தெலுங்கு வசனம்னு பேச ஆரம்பிச்சானுங்க. அடடா, தெலுங்கு படம்னே சொல்லியிருக்கலாமேன்னு நினைச்சேன் !

ஆரம்பத்துல இரண்டு மெகா லஞ்ச ஊழல் அண்ணன் தம்பிகளை சி.பி.ஐ புடிக்க போவுதுன்னு டிவியில நியூஸ் காட்டறாங்க. சி.பி.ஐ அதிகாரிகள் மின்னல் வேகத்துல வந்து (அதுல ஒரு ஆபீஸர் தான் ஜெயம் ரவி) தங்கம், வைரம், பணம்னு அள்ளுறாங்க. பெட்டை கிழிக்கறார், அதுல நோட்டு நோட்டா பணம். (டேய் இன்னுமா பெட்டுக்குள்ள பணம் வெக்கறீங்க, சுவிஸ்ல அக்கவுண்ட் இல்லையா ? )

ஜெயம் ரவி மாடியில இருந்து கீழ பாக்குறார். கீழே நாய் கொலைக்குது. தரையை சுரண்டி சுரண்டி காட்டுது. அங்க நோண்டி பாத்தா கட்டி கட்டியா தங்கம். அந்த நாய்க்கு பிஸ்கெட் எதுவும் போடலியா ? அட்லீஸ்ட் ரெண்டு சிக்கன் பீஸ் ? அந்த ஆந்திரா குடும்பத்துல இருக்கவங்க எல்லாம் ரெண்டு எடுப்பு சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்காங்க, நாய்க்கு கூடவா சோறு வைக்கமாட்டாங்க ? கரெக்டா சிபிஐ அதிகாரிங்க வரும்போது கொலைச்சு தங்கத்த காட்டி கொடுக்குது பாரு டாபரு..

அப்புறம் வாட்டர் டேங்ல தங்கம், ரூம்ல வைரம்னு எல்லாத்தையும் அள்ளி மூட்டையா கட்டி கொண்டு போறார். இங்கிலீஷ் சானல் நியூஸ் அளவுக்கு வர பெரிய கிரிமினெல்ஸ ரொம்ப சப்பையா காமிக்கறாங்க (ரெட்டி சகோதரர்களை மனசுல வெச்சு அவங்க கேரக்டரை பின்னியிருக்கார் ஏதோ ஒரு உதவி இயக்குனர்)..

இந்த நேரத்துல தான் நான் பாப் கார்ன் வாங்க போறேன். வந்து பாத்தா, ஜெயம் ரவி உண்மையிலேயே போலீஸ் இல்லையாம். (சிபிஐயும் இல்லையாம்). தொங்கனா கொடுக்காவாம். கூட வந்த சப் இன்ஸ்பெக்டர்ஸ் கூட வெறும் யூனிபார்மும், ஹைதராபாத் பிரியாணியும் கொடுத்து கூட்டி வரப்பட்ட டம்மி பீசுகளாம். (ரைடின் போது ரெட்டி பிரதர் அண்ணைய்யா ஒரு இன்ஸை பார்த்து கேப்பார். டேய் உன்னை இந்த ஏரியாவுல பார்த்ததே இல்லைன்னு. அவர் சொல்வார், நான் இந்த ஏரியாவுக்கு புதுசா வந்து ஜாயின் பண்ணியிருக்கேன்னு. லாஜிக்கு ? அடப்போங்கய்யா)...

கட் பண்ணா தாய்லாந்து. அங்க அம்மா தங்கச்சியோட பஞ்சம் பொழைக்க போறார் ஜெயம் ரவி. ஏன்யா பஞ்ச பரதேசி எப்படி தாய்லாந்துல / அதுவும் கரெக்டா பட்டாயாவுல பஞ்சம் பொழைக்க போறான் ? பாஸ்போட்டு விசா ஒர்க் பர்மிட் இதுக்கெல்லாம் ரொம்ப செலவாகுமேய்யா ? அன்பழகன் எம்.எல்.ஏ காசு போடுறார் அப்படீங்கறதுக்கா அங்க சாண்ட்விச் மசாஜை எஞ்சாய் பண்ணிட்டீங்க. வாழ்வு தான் போங்க. அங்க பொட்டலம் விக்கறதை பார்த்து அந்த தொழில் செய்ய முடிவெடுக்கிறார் ஜெயம் ரவி. பக்கிகளா, படங்கள்ல குடிக்கறதையோ, புகைபுடிக்கறதையோ செய்யமாட்டேன்னு கடைசி வரை நின்ன எம்.ஜி.யார் எங்க, அன்புமணி ஏதோ கோச்சுக்கிட்டார்னு படங்கள்ல புகைபுடிக்கறதை விட்ட ரசினிகாந்து எங்க ? ஹீரோ பொட்டலம் விக்கிற மாதிரியான கேவலமான ஒரு தொழிலை வலிந்து செய்யுறமாதிரி ஏன் காட்டனும் ? ஹீரோவை ஒர்ஷிப் பண்ணுற தேசம்யா இது. அட ஹீரோ பணம் சம்பாதிங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டார், அதன் பிறகு தான் இந்த முடிவு எடுத்தார்னு காட்டினீங்களா ? இல்லையே ? (ஒருவேளை நான் பாப்கார்ன் வாங்க போன சைக்கிள் கேப்ல காட்டினீங்களா ? என் மகள்கிட்ட கேக்கலாம்னா அவளுக்கு நாலு வயசு. டோரோமான்ல சிசூக்கா என்ன செஞ்சான்னு கேட்டாலாவது சொல்வா, இதெல்லாம் எப்படி கேக்க முடியும்)...

ரைட்டு. அப்படியே தாய்லாந்துல கேங்ஸ்டர் ஆகிடுறார் ஜெயம் ரவி. ஒரு கேங்ஸ்டர் அப்படீங்கறீங்க, ஒரு நாலு பேரையாவது கோட்டு போட்டு சுத்தி நிக்க வெக்கலாம்ல ? மொக்கையா தன்னந்தனியா ஜிம்பாடியோட ஒரு ப்ரண்டோட ஒரு கேங்ஸ்டர் இருக்க முடியுமாய்யா ? இதையெல்லாமா நாங்க சொல்ல முடியும ? மும்பையில கேங்ஸ்டர் ஆவுறார்னு காமிச்சிருந்தா அந்த ப்ளைட் டிக்கெட் / தாய் மசாஜ்ஜுக்கு ஆன செலவுல பத்து டாட்டா சுமோவ வாடகை எடுத்து அதகளம் பண்ணியிருக்கலாமே. கோபி கோட்டை போட்டு குறுக்கால நெடுக்கால எதுத்தாப்ல பின்னாலன்னு பதினைஞ்சு ஷாட் எடுத்திருக்கலாமேடா ?



அங்க ஹீரோயினை (நீத்து சந்திரா) சந்திக்கிறார் ஆதி (படத்தில் ஜெயம் ரவி ஒரு கேரக்டர் பெயர்). ஹீரோயின் பார் கேளா வேலை செய்யுறா. டம்ளரை கீழ போட்டு பார் ஓனர் கிட்ட பளார்னு அறை வாங்குறா. அதை கண்டு மனம் பொறுக்காம காப்பாத்துறார் ஹீரோ. ஹீரோயின் நீத்து சந்திரா ரெட்டை நாடி சரீரம். ஒரு காட்சியில குண்டா தெரியுறாங்க, ஒரு காட்சியில ஒல்லியா தெரியுறாங்க (சும்மாவா, படம் நாலஞ்சு வருசமா எடுக்கறாங்களாமே). இதை விட மரண மொக்கையான ஒரு ஹீரோயினை நான் சமீபத்துல பாக்கல. ஆனா அவங்களுக்கு பர்பார்ம் பண்ணக்கூடிய / ஸ்கோப் உள்ள ஒரு ரோல். க்ளைமாக்ஸ் வரைக்கும் அடிக்கடி வராங்க. (இது தமிழ்படத்துல அபூர்வம்). மேற்கொண்டு அவங்களை பத்தி பின்னால / கீழ பாக்கலாம்...விமர்சனத்துல..

படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் ரகுமானும் வருகிறார். ஆனால் பெரிய ஸ்கோப் இல்லாத ரோல். இதில் நடிச்சதுக்கு (???) நடிக்காம இருந்திருக்கலாம். ஜெயம் ரவியின் அம்மா கேரக்டரில் வரும் நடிகையை எங்கயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா பெயர் தான் நியாபகம் வரலை. அவங்களுக்கும் எந்த ஸ்கோப்பும் இல்லை...



ஹீரோவை ஏமாத்தி, மும்பைக்கு கூட்டிட்டு வராங்க நீத்து சந்திரா. தன்னந்தனியா ஏர்போர்ட்ல கோட்டை மாட்டிக்கிட்டு, அவரோட சொந்த லக்கேஜை உருட்டிக்கிட்டு (தாய்லாந்துல பெரிய கேங்க்ஸ்டர்) வரார் ஹீரோ ஆதி. வந்தவுடன் இங்கே மும்பையில் கால் டாக்சியில் உட்கார்ந்த ஹீரோவை மயக்க மருந்து கலந்த கூல்ட்ரிங்ஸ் மூலம் மயக்கி (வேற ஐடியா எதுவும் தோணலியா) முடக்குகிறார் நீத்து சந்திரா...மும்பை கேங்ஸ்டராக இருக்கும் ஆதியை போன்ற உருவத்தில் இருக்கும் பகவான் என்பவன் காதலியான நீத்து, ஆதியை காவு கொடுத்து பகவானை காப்பாற்ற இப்படி நடித்தாராம்...

தமிழ் பேசும் பெரிய மூக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் அவரை தூக்கி சிறையில் அடைக்கிறார். மராட்டியர்களுக்கே உரிய முகவெட்டு. சீரியஸான நடிப்பு. கொஞ்சம் குள்ளம், சின்ன உருவம். ஆனால் ஷார்ப்பான நடிப்பு. இவரை நிறைய படங்களில் எதிர்பார்க்கிறேன் !

மும்பை பகவான் என்ற கேரக்டரில் ஜெயம் ரவி, பெரிய கேங்ஸ்டர். லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ் எல்லாம் போட்டுக்கொண்டு... (இவர் ஒரு திருநங்கையா என்றால் அதுவும் இல்லை. நீத்து சந்திரா எதிரில் பார்கேளை தள்ளிக்கொண்டு போவதுபோல காட்டுவது).  என் மகள் யாழினி விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது இந்த காட்சியைத்தான். காட்சியின் சீரியஸ்நெஸ் தெரியாமல் சீ, ஒன் பாய் ஈஸ் புட்டிங் நெய்ல் பாலீஷ் என்று காமெடி செய்தாள்...அந்த பகவான் கேரக்டருக்கும் நீத்து சந்திராவுக்கும் ஏன் இவ்வளவு காதல் என்று அழுத்தமான காட்சிகளை வைக்காததால் மனதில் ஒட்டவேயில்லை. இவனும் கேங்ஸ்டர், அவனும் கேங்ஸ்டர். நீயும் கெட்டவ. தாய்லாந்துல செட்டில் ஆகவேண்டியது தானே என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை...(பார் கேளா இருந்தவளை வீட்டுக்கு வரியான்னு கூப்பிட்டாராம் பகவான் ஜெயம் ரவி. அது தான் இந்த காதலுக்கு காரணம் என்ற எக்ஸ்ப்ளனேஷனும் வெக்குறான்)..


இன்னொரு சக்கத்த காமெடி, தாய்லாந்தில் குண்டடி பட்டு சிகிச்சையில் இருக்கும் ஆதி (இந்த கட்டு போடும்போது மேல ரெண்டு சொட்டு ரத்தம் வெச்சு கட்டுறதை எந்த டாக்டர் டா சொல்லி கொடுத்தான் ? எல்லா படத்திலும் சொல்லி வெச்ச மாதிரி கட்டு மேல ரத்தம். ஒழுங்கா ட்ரெஸ்ஸிங் கூட பண்ணத்தெரியாதா இந்த சினிமா டாக்டேர்ஸுக்கு) ஜெயம்ரவி, நீத்து சந்திரா வரைந்த படம் ஒன்றை பார்ப்பார். நீ ஸ்கெட்ச் எல்லாம் பண்ணுவியா என்று கேட்பார். அந்த படத்தை ஆடியன்ஸிடம் காமிக்கும்போது, மீசை இல்லாத சூர்யா மாதிரி இருக்கும். ஏன் சூர்யா படத்தை நீத்து சந்திரா வரைந்தார் (அல்லது வரையவே தெரியாத உதவி இயக்குனர்) என்பது புரியாத புதிர்...ஹி ஹி !!!

கடைசியில் ரெட்டி பிரதர்சிடமும் (எங்கடா எங்க காசு என்று கேட்டு உதைக்கிறார்கள்), மும்பை காவல்துறையிடமும் மரண அடி வாங்கி (மினிஸ்டர் தம்பியை பகவான் கொன்றது, ஆனால் பழியை ஆதி மேல் போட்டு என்கவுண்டர் செய்ய ப்ளான்), பகவானிடம் வேலை செய்த ஒரு அடியாளுடன் கோவா தப்புகிறார் ஆதி ஜெயம் ரவி. தாய்லாந்து, அப்புறம் கோவா, நல்லா எஞ்சாய் பண்ணிட்டீங்க உதவி இயக்குனர்ஸ்...ஏன் கம்மியா காசு செலவாகுற ஒரு சிட்டியில எடுக்கறது ? ஏன் பாண்டியிச்சேரியில எடுக்கிறது ? நீங்களே இப்படி செலவை இழுத்து விடுறது அப்புறம் தயாரிப்பாளர் சரியா காசு கொடுக்கலைன்னு வருசக்கணக்கா படத்தை எடுக்கறது ? போங்க சார் !!!

மும்பை பகவான் அடியாளாக வந்து ஆதி ஜெயம் ரவிக்கு உதவி செய்யும் தோழர், ஹேர் ஸ்டைல், உடல் மொழி, உடைந்த தமிழ் வசன உச்சரிப்பு என்று பல இடங்களில் இம்ப்ரஸ் செய்கிறார். இயக்குனர்கள் கவனித்து இந்த தங்கத்தை மண்ணில் இருந்து பிரித்து எடுக்கவேண்டும் :) - பல படங்களில் இவரை பார்க்க விரும்புகிறேன் !!!



கடைசியில் நீத்து சந்திராவோடு ஒரு க்ளைமாக்ஸ் பைட், அதன் பிறகு அவரை கொல்லுதல், பிறகு பகவானோடு பைட், அவரை கத்தியால் குத்துதல் (பகவான் தப்பிச்சுடறானாம், செக்கண்ட் பார்ட் வெக்குறாங்க போலிருக்கு) போன்ற இம்சைகளுக்கு பிறகு படம் முடிகிறது.

இவ்வளவு அழுத்தமான கேங்ஸ்டர் கதையில் கடைசியில் நீத்து சந்திராவின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதாக முயற்சி செய்து (ஹும், யாரோட இன்புளூயன்ஸ், தயாரிப்பாளரா இயக்குனரா ? ) லேடீசுக்கு பைட் வெச்சு, அவரை ஹீரோ கத்தியால் குத்தி கொல்வதாக காட்டுவது படு மொக்கை. தமிழ் கூறும் நல்லுலகில் (குறைந்தபட்சம் திரைப்படங்களிலாவது) பெண்களை தெய்வமாக மதித்து காட்டுங்கப்பா. அது இல்லை என்றால் பெண்களின் ஆதரவு கிடைக்காது. திருமதி செல்வம் இயக்குனர் கிட்ட டியூஷன் போங்க !!!



மேக்கப் பற்றி - தாய்லாந்து காட்சிகளில் நீத்து சந்திரா பாதி தூக்கத்தில் எழுந்தது போல ஒரு மொக்கை மேக்கப். பகவான் கேரக்டர் புருவத்தை மொக்கையாக்கி ஒரு மேக்கப். இந்த துறை கம்ப்ளீட் பெயிலியர் என்று தான் நான் சொல்வேன் ! (அமவுண்ட் செட்டில் பண்ணலியா)



நீத்து சந்திரா எப்போதும் புகை பிடிப்பது போல காட்டுவது சகிக்கலை. ஏன்யா கெட்டவன் என்றால் புகை பிடித்துக்கொண்டிருப்பது போல காட்டினா போதுமா ? புகை பிடிக்கறவன் எல்லாம் கெட்டவன், மீதி பேர் எல்லாம் நல்லவனா ? ஏற்கனவே ஒரு சூர்யா படத்துல அவர் முக்காவாசி நேரம் புகை புடிச்சுக்கிட்டே இருக்கறது பார்த்து நொந்தவன் நான். அப்பவே உங்களை யாரும் கேக்கலை, அதனால இன்னும் நீங்க மாத்தலை !!



கேமரா மரண மொக்கை. மேலே இருந்து கீழே காட்டுவது ஒன்னுதான் நீங்க கண்டுபிடிச்ச டெக்கினிக்கா ? (SOB Network கார்க்கி / ராஜன் வீடியோ விமர்சனத்தில் கார்க்கி இதை சரியாக பாயிண்ட் செய்தார்...). மும்பையில் ஜட்கா வண்டிகளோடு குதிரைகள் நிற்கும் ஒரு ஷார், மொபைல் காமிராவில் எடுத்தது போல இருக்கே ? (எப்புடி சரியா கண்டுபுடிச்சேனா ? )

இரட்டை ஜெயம் ரவிகளை க்ளைமாக்ஸ் பைட்டில் கொண்டுவரும் காட்சி - படத்தின் உயிர்நாடியான காட்சி - அரதப்பழசான கேமரா டெக்னிக்குகளால் மரண மொக்கையாகிறது. ஒரு ஆள் நடந்துவரும்போது இன்னொரு ஆளை ஷோல்டரை காட்டுவது / காலை காட்டுவது என்பது எல்லாம் ஒரு டெக்னிக்கா ? பழைய எம்ஜியார் படங்களில் வரும் இரட்டையர் காட்சிகளின் போஸ்ட் ப்ரொடக்சன் ஒர்க்கில் 10 சதவீதம் கூட இல்லை. இதில் சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டியது கேமராமேன் மட்டுமல்ல எடிட்டரும்தான். ஒரு காட்சியில் ஒரு லாங் ஷாட் அப்புறம் திடீரென ஒரு க்ளோசப் என எடிட்டரும் மரண மொக்கையாகிறார். பொதுவாக நான் இது போல திரைக்காட்சிகளை நுணுக்கமாக பார்ப்பவன் அல்ல. ஓவராலாக / பொத்தாம்பொதுவாக திரையின் மையத்தை பார்ப்பவன். எனக்கே எடிட்டரின் மொக்கைத்தனம் விசிபிளாக தெரிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !!!

ஆரோ திரிடி தொழில்நுட்பத்தை விஸ்வரூபத்துக்கு பிறகு பயன்படுத்தும் படம் என்று சொன்னார்கள். எதிர்பார்ப்போடு போனேன். ஆனால் மகள் அதிக சத்தம் வருகிறது என்று பயந்ததால் அவளது காதுகளை என் கையால் மூடிக்கொண்டு படம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம். ஆரோ திரிடி அட்டு திரிடியானது இங்கே ! விஸ்வரூபம் பார்க்கும்போது எந்த கம்ப்ளைண்ட்டும் செய்யவில்லையே அவள். தவறு எங்கே என்பது வெள்ளிடைமலை !!



இசை - கோவாவில் நடக்கும் ஒரு பாட்டு ரசிக்கும்படியாக இருந்தது. வேறு பாடல்கள் எதுவும் இருந்ததா ? எதுவும் நினைவில் தங்கவில்லை என்பது தான் நிஜம் !! யுவன் சங்கர் ராஜாவா இசை ? வாரிசு நடிகர்கள் போல வாரிசு இசையமைப்பாளர்கள், வாரிசு கவிஞர்கள், வாரிசு எடிட்டர்கள் அடாடா ! போதும்யா. க்ரியேட்டிவ் பிஸினஸிலாவது நல்ல கலைஞர்களை வரவிடுங்கள். வாரிசுகள் தொல்லை தாங்கலை !!!



படம் முடிந்தவுடன் கொலைவெறியோடு முறைக்கும் மனைவியை - நீதான தமிழ் படத்துக்கு கூட்டிட்டு போன்னு சொன்ன என்று சமாளித்து, மேலெங்கும் இறைந்திருந்த பாப்கார்னை தட்டிவிட்டுக்கொண்டு யாழினியை தூக்கிக்கொண்டு எழுந்தால், அமீர் படம் எப்படி எல்லாம் எடுக்கிறார் (ஜாக்கி சான் படத்துல கடைசியில வருமே) என்று காட்டுகிறார்கள். பருத்தி வீரன் எடுத்த அமீரா இது என்று கடைசியில் ஒரு லுக் விட்டுவிட்டு, தப்பித்தால் போதும் என்று கார் பார்க்கிங் நோக்கி ஓடி, வீட்டுக்கு வந்து வரட்டு ரொட்டியை  தின்ற (தோசை கூட ஊத்தி தரமாட்டேன்னுட்டாய்யா) ஒரு அப்பாவியின் விமர்சனம் தான் இது. உங்களுக்கு குமுறனும் என்றால் கமெண்ட் செக்சனில் குமுறுக. ப்ளைட் டிக்கெட் போட்டால் நானே வந்துவிடுகிறேன். இழுத்து வெச்சு குமுறுங்க...அதை விட்டுட்டு போலீசுக்கு எல்லாம் போகாதீங்க !!!



இந்த படத்தை இந்து அமைப்புகள் எதிர்த்தன. எதிர்த்தவங்களுக்கு எல்லாம் போட்டு காட்டியிருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும் :))  - இப்ப பட்டது நாங்க மட்டும் தானே ?


படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் ! ஏன்ன படம் வந்து ரொம்ப நாளாச்சு. நீங்களே கேள்விப்பட்டிருப்பீங்க !! கடைசியா ஒரு விஷயத்தோட விமர்சனத்தை முடிச்சுக்கறேன்... !!! (தாய்லாந்து காட்சிகள்ல ஹோட்டல் ரூம்ஸ்லாம் நல்லா இருக்கு. எந்த ஓட்டல் சார் ? குடும்பத்தோட போனா தங்கலாம்)


க்ளைமாக்ஸில் ஆதி ஜெயம் ரவி, பகவான் ஜெயம் ரவியை சந்திக்கும்போது, டேய் பகவான், உன்னால நான் ரொம்ப பட்டுட்டேண்டா என்பார். த்யேட்டரில் ஒரு குரல் - நாங்களும்தாண்டா !! என்று. இது ஒரு சாம்பிள் தான் !!! உங்க கருத்துக்களை ஆர்.டி ஆக / லைக் ஆக / பின்னூட்டமாக எழுதுங்க !!! படங்கள் உதவி இண்டர்நெட். யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் பதிவில் உள்ள படங்களை (ஏன் பதிவையே) நீக்க தயங்கமாட்டேன் !!



Thursday, January 17, 2013

B.Sc/BCA/M.Sc/MCA/BE/B.Tech இறுதியாண்டில் செய்யும் ப்ராஜக்ட்



சுற்றிவளைத்து சொல்ல விருப்பமில்லை. எந்த வெகுஜன ஊடகங்களிலும் பார்த்த நினைவில்லை. செமஸ்டர் இறுதியாண்டு ப்ராஜக்ட்டை காசு கொடுத்து வாங்கி உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லத்தான் இந்த பதிவு !!!

பொதுவாக இண்டர்வீயூவில் சந்திக்கும் ப்ரஷ்ஷரிடம் (இளம்பொறியாளர்), அவர் என்ன தெரியும் என்று ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ளாரோ அதை பற்றிய கேள்விகளை (C, Java) கேட்போம். அதன் பிறகு இறுதியாண்டு ப்ராஜக்ட் என்ன செய்துள்ளார் என்பதை பற்றி கேட்போம். அதை அவர் எப்படி விளக்குகிறார் என்பதை உன்னிப்பாக கவனிப்போம். (எக்ஸ்பீரியன்ஸ் மக்களிடம் கடைசியாக பணிபுரியும் / பணியாற்றிய நிறுவனத்தில் என்ன வேலை செய்தார், அதில் அவரது பங்கு என்ன என்று கேட்பது மாதிரி)...

பொதுவாக / என்னுடைய பார்வையில் (அதாவது நான் பார்த்தவரையில்) பே-பே-பே என்று 90 சதவீதம் பிள்ளைகள் உளறல்ஸ் ஆப் இண்டியாவாக திருதிரு என்று விழிக்கும். இது இந்தியா முழுமையிலும் உள்ள நிலை. காரணம் இது தான். ப்ராஜக்ட் செய்யுங்கள் என்று பல்கலைகழகம் அளிக்கும் 6 மாதத்தில் 5 மாதம் ஊர் சுற்றிவிட்டு (கடைசி செமஸ்டரில் தான் ப்ராஜக்ட்டும் வைவாவும் மட்டும் தான் இருக்கும் - மற்ற வாசகர்களுக்காக குறிப்பிடுகிறேன்), கடைசி ஒரு மாதத்தில் இந்த புராஜக்டுகளை விற்பதற்கென்றே உள்ள நிறுவனங்களிடம் சென்று 5 முதல் 10 ஆயிரம் வரை கட்டி (இதுதான் கடைசி செலவு என்று பெற்றோர்களிடம் வாங்குவது) ப்ராஜக்டை முடித்துவிடுவது. இந்த புற்றீசல் நிறுவனங்களும் (எதாவது ஒரு டெக்னாலஜி என்று நிறுவனம் பெயர் முடியும்) பணத்தை வாங்கிக்கொண்டு, இது தான் ப்பா ப்ராஜக்ட் டைட்டில், இது தான் டிஸ்க்ரிப்ஷன் என்று ப்ராஜக்டை கொடுத்துவிடுவார்கள். சில நிறுவனங்களில் எக்ஸ்ப்ளைன் செய்வர்கள், லேபை உபயொகப்படுத்திக்கொள்ள அனுமதிப்பார்கள். சில நிறுவனங்கள் புத்தகம் வரை ஸ்பைரல் பைண்டிங் செய்து கொடுத்துவிடுகிறார்கள்...

இதில் கொடுமை என்னவென்றால் HOD க்களும் இதை கண்டும் காணாமல் விட்டுவிடுவது தான். மாணவன் / மாணவி பெப்பெரெப்பே என்று வைவாவில் விழிப்பார்கள். என்னடா ப்ராஜக்ட் என்றால் முழுமையாக சொல்லமாட்டார்கள். மாணவன் / மாணவியின் வாழ்க்கையாயிற்றே ! என்று HOD கள் கொஞ்சம் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். எக்ஸ்டர்னல் வந்தாலும் அவர்களிடமும் கொஞ்சி / கெஞ்சி உங்கள் வாழ்க்கையை HOD காப்பாற்றுவார். (நீங்கள் அவர்களை என்னதான் கிண்டல் அடித்திருந்தாலும்)(இந்த ப்ராஜக்ட் வைவாவில் பெயில் ஆனால் டிகிரி கிடைக்காது).

இது HOD அவர்களின் தவறா ? அல்லது இந்த மாணவர்களின் ப்ராஜக்ட் ஐ மட்டும் நம்பி நிறுவனம் நடத்தும் புற்றீசல் ப்ராஜக்ட் நிறுவனத்தின் தவறா ? உங்கள் கல்லூரிக்கு வந்து உங்களுடைய போலி  / பொய் ப்ராஜக்டில் HOD யின் அன்புக்கும் நட்புக்கும் கட்டுப்பட்டு உங்களை பாஸ் செய்கிறார்களே அந்த எக்ஸ்டேர்னலின் தவறா ? அல்லது உங்களுக்கு இறுதியாண்டு ப்ராஜக்ட் என்பது எப்படியான வாழ்க்கையை கொடுக்கும் என்று கற்பிக்க தவறிய ட்ரெயிங் டைரக்டரின் தவறா ? அல்லது உங்களுக்கு புராஜக்ட்டை நிறுவனத்தில் வாங்கி தரதவறிய ப்ளேஸ்மெண்ட் டைரக்டரின் தவறா ?

இது அனைத்துக்கும் பதில் 'இல்லை' என்பதே !!!

அவர்கள் குதிரையை தண்ணீர் தொட்டிவரை கொண்டு சென்றுவிட்டார்கள். தண்ணீர் குதிரை தான் குடிக்கவேண்டும் !!!

இது முழுக்க மாணவனின் / மாணவியின் தவறே !!!

1999 ஆம் ஆண்டு Interrupt for Beginners என்று C மொழியில் B.Sc ப்ராஜெக்ட் செய்தோம் ! நான் பெரிய அளவில் செயல்படவில்லை என்றாலும், என்னுடைய தோழர் மணிவண்ணன் தனசேகரன் (திண்டிவனத்தை சேர்ந்தவர், இப்போது DELL நிறுவனம், பங்களூரிவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்) முழுமூச்சாக உழைத்தார். இந்த ப்ராஜக்ட் C மொழியில் உள்ள எடிட்டரில் சிறு மாறுதல்கள் செய்து அதனை சிறப்பாக மாற்றுவதாகும் ! அந்த புராஜக்ட் செய்து 7 ஆண்டுகள் கழித்து 2007 இல் பார்க்கும் வேலையினை விட்டு வேறு ஒரு வேலை மாறுவதற்காக இண்டர்வியூவை சந்திக்கும்போது, இண்டர்வியூ எடுத்தவர் புராஜக்ட் பற்றி நிரம்ப கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டார் ! எனக்கு வேலைக்கான ஆபரும் தந்தார்.  இது ஒரு எடுத்துக்காட்டு !

ப்ராஜட் என்பது நீங்கள் செய்யவேண்டியது. அதனை பணம் கொடுத்து எக்காரணம் கொண்டும் வாங்காதீர்கள். 4 மாதம் ஊர் சுற்றினால் கூட குறைந்தபட்சம் கடைசி 2 மாதத்தில் உட்கார்ந்து ப்ராஜக்ட் செய்யுங்கள். அல்லது உங்கள் ரெஸ்யுமோடு சென்று நிறுவனங்களின் கதவை தட்டுங்கள். உங்கள் ப்ளேஸ்மெண்ட் டைரக்டரை வம்புக்கு இழுத்து (நகைச்சுவைக்காக) அவர் மூலமாக அவர் உதவியோடு ஏதாவது ஒரு சிறிய நிறுவனத்தில் உங்கள் ப்ராஜக்டை செய்யுங்கள்.

இது ஒரு WIN - WIN சிச்சுவேஷன். ஒரு சிறிய நிறுவனத்தில் நீங்கள் உங்களுடைய லேப்டாப்பை உபயோகப்படுத்திக்கொள்கிறேன், உங்களுடைய தேவை ஒன்றை (HR சிஸ்டம், அட்மின் மேனேஜ்மெண்ட், அவர்களுடைய மொபைல் அப்ளிக்கேஷன், அல்லது அவர்களுடைய வெப்-சைட்) நீங்கள் கம்யூட்டரைஸ் செய்து தருகிறேன் என்று சொன்னால் (சம்பளம் தேவையில்லை) அது அவர்களுக்கு லாபம் தானே ? அதே சமயம் உங்களுக்கும் ஒரு ப்ராஜக்ட் எப்படி செய்வது என்ற உண்மையான அனுபவம் கிடைக்கும் !

நீங்கள் IT / CS டிப்பார்ட்மெண்ட் ஆக இருந்து எதாவது ஒரு சிறிய IT கம்பெனியில் சம்பளம் இல்லாமல் நான் வேலை செய்கிறேன், என்னுடைய ப்ராஜக்ட்டை இங்கே செய்துகொள்கிறேன் என்று சொல்லி HR இடம் கேட்டு பாருங்கள். அவர்களை பொறுத்தவரை இது லாபம் தான். அதே நேரம் அந்த இரண்டு மூன்று மாதத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றினால், அந்த நிறுவனம் உங்களை 100 சதவீதம் தன்னுடைய எம்ப்ளாயி ஆக மாற்றிக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேம்பஸிலோ, ஆப் கேம்பஸிலோ செலக்ட் ஆகவில்லை என்றாலும் இந்த ரூட் மூலமாக நீங்கள் எளிதில் ஒரு வேலையை பிடிக்கமுடியும். Trust Me !!

இந்த பதிவு எழுதும் நோக்கமே, இது பலரை சென்றடையும், அதன் மூலம் மாணவ மாணவிகள் சிறு நிறுவனங்களின் கதவை தட்டுவீர்கள் என்பதே ! உங்கள் தோழர்கள் / தோழிகள் நார்த் இண்டியன்ஸ், மலையாளி ஆக இருந்தால், அவர்களுக்கு இந்த பதிவை ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்லுங்கள்.

வெற்றி உங்களுடையதாகட்டும் !!!

Tuesday, January 01, 2013

பொது (வெஸ்டர்ன்) கழிப்பிடமும் - மேலே கீழே தூக்கியும் (லிப்ட்)

வெஸ்டர்ன் கழிப்பிடம்

இது பேசாப்பொருள் தான். ஆனால் யாராவது பேசியாக வேண்டுமே ? புத்தாண்டின் முதல் பதிவே இப்படி டாய்லெட்டில் ஆரம்பிக்கவேண்டுமா என்று நினைத்தேன். ஆனால் நாம் எல்லாரும் காலையில் ஆரம்பிப்பது அதில்தான் இல்லையா கி கி கி !!

வெஸ்டர்ன் டாய்லெட்

பதிவின் முதல் விஷயம் ஆண்களுக்கு மட்டுமேயானது. பெண்கள் யாராவது படிக்க நேர்ந்தால் இரண்டாவது மேட்டருக்கு தாவிக்கொள்ளுங்களேன் ப்ளீஸ்...

வெஸ்டர்ன் டாய்லெட் பொதுவாக பல இடங்களில் வந்துவிட்டது. அலுவலகங்களில் கண்டிப்பாக வெஸ்டர்ன், சில வீடுகளில் வெஸ்டனும் நார்மல் இண்டியன் டாய்லெட்டும் இருப்பதை பார்த்திருக்கிறேன். இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் முதலில் ஒரு மூடி, அதன் கீழே உட்கார ஒரு சீட், அதன் கீழே பேசின் (சீட் அமைந்திருக்கும் இடமும் அந்த பேசினின் மேல்தான் இல்லையா)

வீடுகளில் அல்லது அலுவலகத்தில் ஒன் டாய்லெட் (அதாங்க மூச்சா / சூச்ச்சூ) போகும்போது சில பக்கிகள் மேலே இருக்கும் சீட்டை தூக்காமல் அப்படியே நின்று அடித்துவிட்டு செல்வார்கள். இதனால் அந்த சீட்டின் நுனி பகுதியில் இரண்டு மூன்று துளி மூத்திர சொட்டு இருக்கும். அதில் உட்காரவே அருவருப்பாக இருக்கும். அன் ஹைஜீனிக் ஆன இந்த வேலையை செய்யாமல், உட்காரும் சீட் பகுதியை தூக்கிவிட்டு மூச்சா போய் தொலைங்களேன் மூதேவிகளா !!!

அப்படி சீட்டை தூக்கி போகும்போதும், டாய்லெட்டுக்கும் உங்கள் 'அதுக்கும்' இடையே சரியான இடைவெளியை (எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் சென்று) போகவும். அதனால் டாய்லெட் தவிர்த்து கீழே சிந்துவதை தவிர்க்கலாம்...

பொது (வெஸ்டர்ன்) டாய்லெட்டை உபயோகிக்கும்போது, அங்கே டாய்லெட் பேப்பர் இருக்கும் பட்சத்தில் (உங்கள் அதிஷ்டத்தை பொறுத்தது) அதனை டாய்லெட் சீட் மேல் (மூன்று பக்கமும்) போட்டுக்கொள்ளலாம். அமெரிக்கன் பை படத்தில் கூட காட்டுவார்கள்.

கொரிய பைடெட் ( bidet)


கொரியாவில் பைடெட் என்று சொல்லுவார்கள். டாய்லெட் சீட்டில் ஆயிரத்தெட்டு பட்டன் இருக்கும். ஒரு பட்டனை அமுக்கினால் கீழே இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். இன்னொரு பட்டன் சூடான காற்று. (நான் 200 டாலர் கொடுத்து ஒன்று வாங்கி வந்தேன், வீட்டில் இருக்கிறது - பிட் செய்யவில்லை).. என்ன - மெனு எல்லாம் கொரிய மொழியில் இருக்கிறது. எந்த பட்டன் எதற்கு என்று கொரிய மொழி தெரிந்திருந்தால் தான் புரியும் அல்லது அனுபவத்தில் கண்டடைய முடியும் :)

சொல்ல வந்ததை எப்படியோ நீட்டி முழக்கி சொல்லிவிட்டேன். இனிமேல் பீ-கேர்புல். என்னை சொன்னேன்...


லிப்ட் மேட்டர்

இதுவும் ஒரு சாதாரண / சின்ன விஷயம் தான். ஆனால் யாராவது ஒருவர் விளக்கித்தானே ஆகவேண்டும். (ஏன் என்றால் எனக்கும் இது ரொம்ப நாளைக்கு விளங்காமல் தான் இருந்தது).

லிப்ட் திடீர் என்று நின்று விட்டால் என்ன செய்வது, கயிறு அறுந்துவிட்டால் எப்படி தப்பிப்பது, லிப்டில் போன் வொர்க் ஆகுமா என்று டெக்னிக்கல் மேட்டர் பேச வரவில்லை. மேலே சொன்னபடி ஒரு சிம்பிள் மேட்டர் தான்..

லிப்ட் பட்டன்ஸ்
லிப்ட் முன்னால் மேலே / கீழே என்று ரெண்டு பட்டன் இருக்கும். அண்டர் கிரவுண்ட் இருக்கும் பில்டிங் ஆக இருந்தால் கீழே பட்டன். அண்டர் கிரவுண்ட் இல்லாத ஒரு பில்டிங்கில் நீங்கள் க்ரவுண்ட் ப்ளோரில் நின்றால் அங்கே மேலே செல்ல மட்டும் பட்டன் இருக்கும். அல்லது நீங்கள் ஒரு ஐந்தாவது மாடியில் இருந்தால் அந்த இடத்தில் நான் படத்தில் காட்டியது போல மேலும் கீழும் பட்டன்ஸ் இருக்கும்.

பல பேர் நினைப்பது இரண்டு பட்டனையும் அழுத்தினால் லிப்ட் வேகமாக வந்துவிடும் / ஆனால் அது உண்மை இல்லை. கண்டிப்பாக வராது. அது வரும்போது தான் வரும் :)

மேலே போகவேண்டும் என்றால் (அட நீங்கள் இருக்கும் தளத்தில் இருந்துங்க) மேலே உள்ள பொத்தான். கீழே போகவேண்டும் என்றால் கீழே உள்ள பொத்தான். இரண்டு பொத்தானையும் அழுத்தினீர்கள் என்றால், லிப்ட் வந்தபிறகு கதவு மீண்டும் ஒரு முறை திறந்து மூடும். இதனை தவிர்க்க நான் மேலே சொன்னபடி (எங்கே போகவேண்டுமோ அதன்படி) அழுத்தவும்.

நன்றி !!

Monday, December 17, 2012

நான் Fresher. எனக்கு எதுவும் தெரியாது..


காலையில் நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தார் ஒரு இளம்பொறியாளர். (Fresher). என்ன செய்கிறார் என்று விசாரித்தேன். கடந்த ஆண்டு BE படிப்பை முடித்துவிட்டு ஒரு ஆண்டாக வேலை தேடுகிறார்.

என்ன தெரியும் என்று கேட்டேன்.. C, C++ என்று கல்லூரியில் படித்த சப்ஜெக்டுகளை சொன்னார். அதில் ஆழமான / இண்டஸ்ட்ரிக்கு தேவைப்படும் விஷயங்கள் அவருக்கு தெரியவில்லை அல்லது கற்பிக்கப்படவில்லை...

ஆக அவரை நேரடியாக ஒரு பணியில் உட்கார வைத்து வேலை வாங்க முடியாது. ட்ரெயினிங் தரவேண்டும். ஒரு இரண்டு மாதங்களாவது ஆகும்.

வேலை தேடும் இந்த ஒரு ஆண்டில் அண்ட்ராய்ட், ஐபோன், HTML5, வெப் சர்வீசஸ், XML, நெட்வொர்க்கிங் என்று எதையாவது பழகினீ ர்களா என்றேன், அதுவும் இல்லை.

புற்றீசல் போல முளைத்திருக்கும் கணிணி படிப்பை சொல்லித்தரும் டிவி விளம்பர ஸ்காலர்ஷிப் நிறுவனங்களிடம் ரெண்டு சர்ட்டிபிக்கேட்ஸ் வாங்கி வைத்துள்ளார். ஆனால் அது இண்டஸ்ட்ரிக்கு தேவையானதாக / லேட்டஸ்ட் டெக்னாலஜியாக இருக்கவில்லை...

ஆக, ஒரு ப்ரஷ்ஷர் அல்லது இளம்பொறியாளராக இருப்பவருக்கு உருப்படியாக எதுவும் தெரிவதில்லை, அல்லது என்ன தெரியவேண்டும் என்ன படிக்கவேண்டும் என்றும் தெரியவில்லை.

ஏதாவது ஓப்பன் சோர்ஸ் போரம்மில் இணைந்துள்ளாரா / தனியாக ஏதுவும் ப்ராஜக்ட் செய்துள்ளாரா என்று பார்த்தேன் அதுவும் இல்லை.

ஆக, படிப்பு முடிந்து வெளியே வந்தவுடன், மனதில் பயத்தோடு, வேலை வேண்டுமே என்று தேடுவதை செய்கிறார்கள், பேஸ் புக்கில் "நான் எஞ்ஜினீயர் எனக்கு வேலை இல்லை" என்று ஏதாவது ஒரு த்ராபை குழுமத்தில் இணைந்து போட்டோஷாப் வேலைகள் செய்து விளையாடுகிறார்கள்.

ஆனால் இந்த இண்டஸ்ட்ரி என்ன மாதிரியான ஆட்களை தேடுகிறது அதற்கு எப்படி தகுதியாவது என்று ஆழமாக சிந்திப்பதே இல்லை...

"வேலை வேண்டும் என்றால் எக்ஸ்பீரியன்ஸ் தேவை என்று சொல்கிறாயே, நீ வேலை கொடுத்தாத்தாண்டா எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்" என்பது இளம்பொறியாளர்கள் மத்தியில் எப்போதும் வளைய வரும் ஜோக்.

எக்ஸ்பீரியன்ஸ் இல்லையா ?  எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் என்ன செய்யுறாங்க என்று பார்த்து அதை செய்யுங்க. CAD CAM Civil என்று அனைத்து துறைகளுக்கும் பொருந்தக்கூடியது தான் இது.  (IT துறைக்கு அதிகம் பொருந்தும்).

ஒரு ஆண்டு 'வேலை தேடிய வேலை' செய்தமைக்கு கூடவே அண்ட்ராய்ட் / HTML5 / SQL Server / Web Development அப்படீன்னு எதையாவது செய்துகொண்டே இருந்தால் அதை வேலைக்கான நேர்முகத்தேர்வில் உங்களை ஷோகேஸ் செய்ய பயன்படுத்தலாமே ?

ஒரு டிசைனர் அவருடைய டிசைன்களை கையோடு கொண்டுபோய் காட்டினால் - அந்த டிசைன் அற்புதமாக இருந்தால் - வேலை தருவாங்களா மாட்டாங்களா ? அந்த டிசைன் தானே அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் ? பி.டெக், பி.இ, எம்.இ, எம்.சி.ஏ முடித்துவிட்டு உங்கள் துறையில் ப்ராக்டிக்கலாக என்ன செய்யமுடியுமோ (தகவல் தொழில் நுட்ப துறையாக இருந்தால் ஒரு மொபைல் அப்ளிக்கேஷன் செய்யலாம்) அதை செய்யுங்களேன். அதை உங்கள் எக்ஸ்பீரியன்ஸ் ஆக காட்டுங்களேன்...

நீங்கள் இப்படி களத்தில் குதித்து ராப்பகலாக உங்கள் துறையில் உழைக்கும்போது நல்ல வேலையும் உங்களை தேடிவரும், உங்கள் பெற்றோரும், நன்பர்களும் உங்களை மதிப்பார்கள் ! நீண்ட நாட்களாக சொல்லவேண்டும் என்று தோன்றிய விஷயம். மனதின் பாரம். இறக்கி வைத்துவிட்டேன்...

டெயில் பீஸ் : நேர்முகத்தேர்வில் அந்த இளம்பொறியாளரை கனத்த இதயத்தோடு ரிஜெக்ட் செய்துவிட்டேன்...!!! 


Tuesday, October 30, 2012

பவா செல்லத்துரைக்கான பேஸ்புக் குழுமம்



பவா செல்லத்துரைக்கான பேஸ்புக் குழுமத்தை உருவாக்கியுள்ளோம்...

http://www.facebook.com/groups/384202364990745/

பவா செல்லத்துரை பற்றிய எனது 2009 ஆண்டு பதிவு http://imsai.blogspot.in/2009/07/blog-post_24.html (படங்கள் எல்லாம் காணவில்லை)..

அந்த சமயத்தில் பால குமாரன் அவர்களை பற்றிய கொலைவெறியில் இருந்தவன். என்னடா இவரது புத்தகங்களில் ரொம்ப அறிவுரை சொல்லி கொடுமைப்படுத்துகிறார் என்று...

ஆனால் பாலகுமாரன் ஆட்சி செய்த காலத்தில் அவரது தேவை இருந்திருக்கிறது. அவரும் பலரை நல்வழிப்படுத்தியிருக்கிறார் என்று உணர்ந்திருக்கிறேன்...சாரி பாலகுமாரன்...

லெட்ஸ் கம் பேக் டு த பாய்ண்ட்...

மறுபடி லிங்க் தரேன், இது தான் பேஸ்புக் குழுமம்...

http://www.facebook.com/groups/384202364990745/

தமிழின் வெகுஜன ஊடகங்கள் பவாவை, கோணங்கியை, ஆர்.பி.ராஜநாயஹத்தை கொண்டாடவேண்டும்...அவர்களுடைய எழுத்துத்தான் நேர்மையான எழுத்து...

சாரு மற்றும் ஜெயமோகனின் இணைய தளங்கள் வழியாக இருவரும் ஓவர் எக்ஸ்போஸ் ஆகிவிட்டார்கள் :)))

பவாவையும் இந்த பேஸ்புக் குழுமத்தில் சிறிய போஸ்டுகள் கூடிய விரைவில் போடவைப்போம்...அவரை தீவிர வாசகர்கள் ஏற்கனவே அறிந்திருப்பார்கள்..அனைவரையும் ஒன்று சேர்க்க ஒரு முயற்சி தான் இந்த குழுமம்...சேரும் அனைவருக்கும் நன்றி...

Monday, October 29, 2012

ஸ்க்ரீன் ஷான் மேனிப்புலேட் செய்வது எப்படி ?

தோழி கவிதா அவர்களை பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவரது பொற்பாதங்களை வணங்கி இந்த பதிவை போட்டுக்கொள்கிறேன்...

அடியேன் சமீபத்தில் ஒரு பதிவிட்டேன். அதன் இணைய முகவரியை ட்விட்டரில் கொடுத்து அனைவரையும் படிக்குமாறு கேட்டேன். அந்த முகவரி http://imsai.blogspot.in/2012/10/blog-post_29.html

இதை நீங்களா எழுதியது ? படிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் அவர். இருந்தாலும் அடியேன் அவர்களை படிச்சுருங்க என்று கெஞ்சி காலில் விழுந்து கதறி கேட்கும் ஸ்க்ரீன் ஷாட், மற்றும் அதை வன்மையான காமெடி மொழியில் பின் இணைப்புடன் தரும் வகையில் பதில் ட்வீட். இதனை ஸ்க்ரீன் ஷாட் மேனிப்புலேட் செய்பவர்கள், இணையத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவி என்று ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொடுக்க வாய்ப்பு உண்டு. பெயிண்ட் ப்ரஷ்ஷில் இரண்டு நிமிடத்தில் இந்த இரண்டு ஸ்கீரீன் ஷாட்கள் (ஒரிஜினல், மேனிப்புலேட் செய்யப்பட்டது) தயாரிக்கப்பட்டது. பாருங்கள்...


படம் 1



படம் 2


டிஸ்கி : இந்த பதிவை நீக்குமாறு கவிதா அவர்கள் ஒரு போன் அடித்தால் போதும். அடுத்த நிமிடம் டெலீட் செய்ய காத்திருக்கிறேன்..இது போன்ற ஆட்டோ பிக்சனுக்கு அவரது ஐடியை பயன்படுத்தியமைக்கு அவரிடம் மானசீக மன்னிப்பை கேட்டுகொள்கிறேன்...

தினத்தந்தியில் இருந்து எழுந்த உள்ளொளி !!

ஒரு மொக்கை பதிவை எழுதக்கூட பல முறை யோசிக்கவேண்டிய காலகட்டதை உருவாக்கியவர்களே. உங்களுக்கு என்னை எல்லாம் பார்த்தால் பாவமாக இல்லையா ? சரி பரவாயில்லை. அங்கங்கே திரு சார் எல்லாம் போட்டு மரியாதையாக திட்டி எழுதிக்கொள்கிறேன்..



எழுத்துலக பிதாமகனார், பல ஆயிரம் பக்கங்களுக்கு காத்திரமான நாவல்களை (கதபுக் என்கிறார் தோழர் கல்வெட்டு என்கிற பலூன் மாமா) எழுதி குவித்த, குவிக்கும், குவிக்கப்போகும் இலக்கிய சூப்பர் ஸ்டார் ஜெயமோகன் சார் சமீபத்தில் இணையத்தில் நடந்த சில அக்கப்போர்களை பற்றி தனது முத்தான கருத்துக்களை தனது வலைப்பூவில் உதிர்த்திருக்கிறார்..சாம்பிளுக்கு ரெண்டு...

- சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவருக்கு ஆபாச தாக்குதல் தொடுத்தார்கள், அவரது படத்தை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பினார்கள். இது அவரது முதல் பதிவில் பொங்கியதன் சாராம்சம். இந்த விடயம் அவர் காலையில் படிக்கும் தினத்தந்தி அல்லது தினமலரில் வந்திருக்கலாம் (http://www.jeyamohan.in/ என்ற இணைய தளத்தில் இருக்கும். என் நேரக்கொடுமை இந்த கந்தாயம் என்னுடைய கணினியில் திறக்க மறுக்கிறது. சரியான சுட்டியை கொடுக்க இயலவில்லை. இதற்கு என்னுடைய வாசகர்களிடம் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்)

- சம்பந்தபட்ட பலான பலான நபருக்கு உதவ 15 லட்சம் அளவுக்கு பணம் சேர்த்துள்ளார்கள். இந்த விஷயம் அவரது நட்பு வட்டத்தில் உள்ள எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் சொல்லியது. இதுவும் அவரது பதிவிலேயே இருக்கிறது...அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர் எனக்கு தெரிந்து திரு சிரில் அலெக்ஸ் சார். வலைப்பதிவு / சற்றுமுன் காலத்தில் இருந்து (6 ஆண்டுகளாக) அவரை அறிந்தவன் அடியேன்..அவர் இது போன்ற மொக்கையான தகவலை சொல்லமாட்டார். ஆகவே மேற்படி தகவலை அவரைப்போன்றதொரு தினத்தந்தி தினமலர் சொம்பு சார் தான் சொல்லியிருக்கவேண்டும்... 



இந்த குறிப்பிட்ட விடயம் பற்றி அடியேன் கடைசியாக ட்வீட்டியதொரு ட்வீட்டு எப்படி போகிறதென்றால் தனிப்பட்ட வன்மம் மற்றும் சண்டை போன்றவைகளை நியூஸ் வொர்தியாக்க அவரை தொடர்ந்து பாலோ செய்து போலி பெயரில் பின் தொடர்ந்து அவர் ஆட்சியாளர்களை விமர்சிக்கும்போதெல்லாம் ஸ்க்ரீன் ஷாட் திரைச்சொட்டு எடுத்து குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த இணையம் அறிந்த இனவெறியரான (சூத்திரர்களை ஆபாசமாக திட்டியவர் - திரைச்சொட்டு இருக்கிறது) பல்லாவரத்தான் என்பவர் உதவியோடு பழிவாங்கப்பட்டார் என்கிறது. (Safe Para கரெக்டுதானே) 

இணையத்தில் இன்று புழங்குகிற நடுநிலை நட்டநடு செண்டர் வாதிகளில் இருந்து, தீவிர தமிழ் தேசிய திடீர் குபீர் இணைய புரட்சியாளர்கள் வரையிலும், கபடநாடகவேடதாரி போலி கம்யூனிஸ்டுகள் வரையிலும், கணிப்பொறி வல்லுனர்கள், டி.டி.பி ஆப்பரேட்டர்கள், கல்லூரி மாணவர்கள், குடும்பத்தலைவிகள் அனைவரும் அறிந்ததான உண்மை இது..

இவர்கள் தான் உங்களை கொண்டாடி, உங்கள் புத்தகங்களை காசு கொடுத்து எக்போக்களிலும், டயல் பார் புக்ஸ்களிலும், புத்தக கடைகளிலும் வாங்குபவர்கள்.. உங்களது சோ கால்ட் (திரு சோ ராமசாமி அவதூறு வழக்கு போட்டுடப்போறார்). so called  இணைய தினத்தந்தி தினமலர் கக்கூஸ் / காபி ரீடிங் சொம்புகள் ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள் அல்ல...

ஆகவே இன்றைக்கு அனைவரும் அறிந்த பிரச்சனையில் நீங்கள் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப்போல  வேட்டி அவிழ்ந்த குடிகாரனைப்போல அம்பலப்பட்டு நிற்பது கண்டு உண்மையில் பரிதாபப்படுகிறேன் சார். உங்களை நேருக்கு நேர் டவுசர் கழட்டி கேள்வி கேட்டு உங்கள் வாசகர் வட்ட (??) கூட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஆர்.பி.ராஜநாயஹம் அளவுக்கு நான் பெரிய வாசகன் அல்ல. உங்களது புத்தகம் ஒன்று கூட அடியேடினிடம் இல்லை. (வாங்கலாம் என்றிருந்தேன், ஆனால் இனி வாங்கப்போவதும் இல்லை)..

எனக்கு எழும் கேள்வி எல்லாம் இது தான் நித்யானந்த யதியிம் இருந்து பெற்ற உள்ளொளியா ? இந்த அவதூறு தான் இந்து ஞான மரபு தமிழ் கூறும் நல் உலகுக்கு தந்ததா ? இது தான் உங்கள் வாசகருக்கு நீங்க அளிக்கும் மன அமைதியா / ஆறுதலா ? இது தான் உங்களை பெரிய அறிவு ஜீவி என்று இது காறும் எண்ணிய அடியேனைப்போன்றவர்களுக்கு (அட என்னைத்தான் சொல்கிறேன்) நீங்கள் காட்டும் நித்திய பரிசுத்த தூய போற்றுதலுக்குறிய மன வெளிச்சமா ? 

இந்த குறிப்பிட்ட பிரச்சனையில் உங்களது காத்திரமான இலக்கிய கத புத்தகத்தை பல பேர் முன்பு கிழித்து போட்ட திரு சாரு நிவேதிதா சாரும் கருத்து சொல்லியிருக்கிறார். அவரை யாரும் மதிக்கப்போவதில்லை. அவரது தீவிர வாசகர் / ஆதரவாளரான திரு யுவக்கிருஷ்ணா கூட மனம் நொந்திருக்கிறார்...அவரை பற்றி எல்லாருக்கும் தெரியும் (உதா : நித்யானந்தா வெளியிட்ட கடிதமும் ஒரு பெண்ணிடம் இணையத்தில் அவர் காட்டிய வக்கிரமும்), ஆகவே 90 சதவீதம் பேர் அவரை புறக்கணித்துவிடுவார்கள். ஆனால் நீங்களும் இந்த பிரச்சனையில் டவுசர் கழண்டு நிற்பீர்கள் என்று உண்மையில் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை...

அப்புறம் என்ன...இந்த பதிவு 100 பேருக்காவது ஷேர் ஆகும். பேஸ்புக்கில் / ட்விட்டரில் / கூகிள் ப்ளஸ்ஸில் நானே ஷேர் செய்வேன். (எனக்கு மார்க்கெட்டிங் நான் தானே சார்)...உங்கள் புத்தகங்களை நான் புறக்கணிப்பது போல இன்னும் 100 பேர் புறக்கணிக்கமாட்டார்களா என்ற நம்பிக்கையில் மெய் நிகர் உலகான இந்த இணையம் மூலமாக உங்கள் பொற்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து உள்ளம் உருகி வணங்கி உங்கள் பாதங்களை முத்தமிட்டு உளப்பூர்வமாக சொல்கிறேன், நீங்கள் ஒரு மரண மொக்கை சார் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பதிவை முடிக்கிறேன்..