Thursday, January 17, 2013

B.Sc/BCA/M.Sc/MCA/BE/B.Tech இறுதியாண்டில் செய்யும் ப்ராஜக்ட்



சுற்றிவளைத்து சொல்ல விருப்பமில்லை. எந்த வெகுஜன ஊடகங்களிலும் பார்த்த நினைவில்லை. செமஸ்டர் இறுதியாண்டு ப்ராஜக்ட்டை காசு கொடுத்து வாங்கி உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லத்தான் இந்த பதிவு !!!

பொதுவாக இண்டர்வீயூவில் சந்திக்கும் ப்ரஷ்ஷரிடம் (இளம்பொறியாளர்), அவர் என்ன தெரியும் என்று ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ளாரோ அதை பற்றிய கேள்விகளை (C, Java) கேட்போம். அதன் பிறகு இறுதியாண்டு ப்ராஜக்ட் என்ன செய்துள்ளார் என்பதை பற்றி கேட்போம். அதை அவர் எப்படி விளக்குகிறார் என்பதை உன்னிப்பாக கவனிப்போம். (எக்ஸ்பீரியன்ஸ் மக்களிடம் கடைசியாக பணிபுரியும் / பணியாற்றிய நிறுவனத்தில் என்ன வேலை செய்தார், அதில் அவரது பங்கு என்ன என்று கேட்பது மாதிரி)...

பொதுவாக / என்னுடைய பார்வையில் (அதாவது நான் பார்த்தவரையில்) பே-பே-பே என்று 90 சதவீதம் பிள்ளைகள் உளறல்ஸ் ஆப் இண்டியாவாக திருதிரு என்று விழிக்கும். இது இந்தியா முழுமையிலும் உள்ள நிலை. காரணம் இது தான். ப்ராஜக்ட் செய்யுங்கள் என்று பல்கலைகழகம் அளிக்கும் 6 மாதத்தில் 5 மாதம் ஊர் சுற்றிவிட்டு (கடைசி செமஸ்டரில் தான் ப்ராஜக்ட்டும் வைவாவும் மட்டும் தான் இருக்கும் - மற்ற வாசகர்களுக்காக குறிப்பிடுகிறேன்), கடைசி ஒரு மாதத்தில் இந்த புராஜக்டுகளை விற்பதற்கென்றே உள்ள நிறுவனங்களிடம் சென்று 5 முதல் 10 ஆயிரம் வரை கட்டி (இதுதான் கடைசி செலவு என்று பெற்றோர்களிடம் வாங்குவது) ப்ராஜக்டை முடித்துவிடுவது. இந்த புற்றீசல் நிறுவனங்களும் (எதாவது ஒரு டெக்னாலஜி என்று நிறுவனம் பெயர் முடியும்) பணத்தை வாங்கிக்கொண்டு, இது தான் ப்பா ப்ராஜக்ட் டைட்டில், இது தான் டிஸ்க்ரிப்ஷன் என்று ப்ராஜக்டை கொடுத்துவிடுவார்கள். சில நிறுவனங்களில் எக்ஸ்ப்ளைன் செய்வர்கள், லேபை உபயொகப்படுத்திக்கொள்ள அனுமதிப்பார்கள். சில நிறுவனங்கள் புத்தகம் வரை ஸ்பைரல் பைண்டிங் செய்து கொடுத்துவிடுகிறார்கள்...

இதில் கொடுமை என்னவென்றால் HOD க்களும் இதை கண்டும் காணாமல் விட்டுவிடுவது தான். மாணவன் / மாணவி பெப்பெரெப்பே என்று வைவாவில் விழிப்பார்கள். என்னடா ப்ராஜக்ட் என்றால் முழுமையாக சொல்லமாட்டார்கள். மாணவன் / மாணவியின் வாழ்க்கையாயிற்றே ! என்று HOD கள் கொஞ்சம் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். எக்ஸ்டர்னல் வந்தாலும் அவர்களிடமும் கொஞ்சி / கெஞ்சி உங்கள் வாழ்க்கையை HOD காப்பாற்றுவார். (நீங்கள் அவர்களை என்னதான் கிண்டல் அடித்திருந்தாலும்)(இந்த ப்ராஜக்ட் வைவாவில் பெயில் ஆனால் டிகிரி கிடைக்காது).

இது HOD அவர்களின் தவறா ? அல்லது இந்த மாணவர்களின் ப்ராஜக்ட் ஐ மட்டும் நம்பி நிறுவனம் நடத்தும் புற்றீசல் ப்ராஜக்ட் நிறுவனத்தின் தவறா ? உங்கள் கல்லூரிக்கு வந்து உங்களுடைய போலி  / பொய் ப்ராஜக்டில் HOD யின் அன்புக்கும் நட்புக்கும் கட்டுப்பட்டு உங்களை பாஸ் செய்கிறார்களே அந்த எக்ஸ்டேர்னலின் தவறா ? அல்லது உங்களுக்கு இறுதியாண்டு ப்ராஜக்ட் என்பது எப்படியான வாழ்க்கையை கொடுக்கும் என்று கற்பிக்க தவறிய ட்ரெயிங் டைரக்டரின் தவறா ? அல்லது உங்களுக்கு புராஜக்ட்டை நிறுவனத்தில் வாங்கி தரதவறிய ப்ளேஸ்மெண்ட் டைரக்டரின் தவறா ?

இது அனைத்துக்கும் பதில் 'இல்லை' என்பதே !!!

அவர்கள் குதிரையை தண்ணீர் தொட்டிவரை கொண்டு சென்றுவிட்டார்கள். தண்ணீர் குதிரை தான் குடிக்கவேண்டும் !!!

இது முழுக்க மாணவனின் / மாணவியின் தவறே !!!

1999 ஆம் ஆண்டு Interrupt for Beginners என்று C மொழியில் B.Sc ப்ராஜெக்ட் செய்தோம் ! நான் பெரிய அளவில் செயல்படவில்லை என்றாலும், என்னுடைய தோழர் மணிவண்ணன் தனசேகரன் (திண்டிவனத்தை சேர்ந்தவர், இப்போது DELL நிறுவனம், பங்களூரிவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்) முழுமூச்சாக உழைத்தார். இந்த ப்ராஜக்ட் C மொழியில் உள்ள எடிட்டரில் சிறு மாறுதல்கள் செய்து அதனை சிறப்பாக மாற்றுவதாகும் ! அந்த புராஜக்ட் செய்து 7 ஆண்டுகள் கழித்து 2007 இல் பார்க்கும் வேலையினை விட்டு வேறு ஒரு வேலை மாறுவதற்காக இண்டர்வியூவை சந்திக்கும்போது, இண்டர்வியூ எடுத்தவர் புராஜக்ட் பற்றி நிரம்ப கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டார் ! எனக்கு வேலைக்கான ஆபரும் தந்தார்.  இது ஒரு எடுத்துக்காட்டு !

ப்ராஜட் என்பது நீங்கள் செய்யவேண்டியது. அதனை பணம் கொடுத்து எக்காரணம் கொண்டும் வாங்காதீர்கள். 4 மாதம் ஊர் சுற்றினால் கூட குறைந்தபட்சம் கடைசி 2 மாதத்தில் உட்கார்ந்து ப்ராஜக்ட் செய்யுங்கள். அல்லது உங்கள் ரெஸ்யுமோடு சென்று நிறுவனங்களின் கதவை தட்டுங்கள். உங்கள் ப்ளேஸ்மெண்ட் டைரக்டரை வம்புக்கு இழுத்து (நகைச்சுவைக்காக) அவர் மூலமாக அவர் உதவியோடு ஏதாவது ஒரு சிறிய நிறுவனத்தில் உங்கள் ப்ராஜக்டை செய்யுங்கள்.

இது ஒரு WIN - WIN சிச்சுவேஷன். ஒரு சிறிய நிறுவனத்தில் நீங்கள் உங்களுடைய லேப்டாப்பை உபயோகப்படுத்திக்கொள்கிறேன், உங்களுடைய தேவை ஒன்றை (HR சிஸ்டம், அட்மின் மேனேஜ்மெண்ட், அவர்களுடைய மொபைல் அப்ளிக்கேஷன், அல்லது அவர்களுடைய வெப்-சைட்) நீங்கள் கம்யூட்டரைஸ் செய்து தருகிறேன் என்று சொன்னால் (சம்பளம் தேவையில்லை) அது அவர்களுக்கு லாபம் தானே ? அதே சமயம் உங்களுக்கும் ஒரு ப்ராஜக்ட் எப்படி செய்வது என்ற உண்மையான அனுபவம் கிடைக்கும் !

நீங்கள் IT / CS டிப்பார்ட்மெண்ட் ஆக இருந்து எதாவது ஒரு சிறிய IT கம்பெனியில் சம்பளம் இல்லாமல் நான் வேலை செய்கிறேன், என்னுடைய ப்ராஜக்ட்டை இங்கே செய்துகொள்கிறேன் என்று சொல்லி HR இடம் கேட்டு பாருங்கள். அவர்களை பொறுத்தவரை இது லாபம் தான். அதே நேரம் அந்த இரண்டு மூன்று மாதத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றினால், அந்த நிறுவனம் உங்களை 100 சதவீதம் தன்னுடைய எம்ப்ளாயி ஆக மாற்றிக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேம்பஸிலோ, ஆப் கேம்பஸிலோ செலக்ட் ஆகவில்லை என்றாலும் இந்த ரூட் மூலமாக நீங்கள் எளிதில் ஒரு வேலையை பிடிக்கமுடியும். Trust Me !!

இந்த பதிவு எழுதும் நோக்கமே, இது பலரை சென்றடையும், அதன் மூலம் மாணவ மாணவிகள் சிறு நிறுவனங்களின் கதவை தட்டுவீர்கள் என்பதே ! உங்கள் தோழர்கள் / தோழிகள் நார்த் இண்டியன்ஸ், மலையாளி ஆக இருந்தால், அவர்களுக்கு இந்த பதிவை ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்லுங்கள்.

வெற்றி உங்களுடையதாகட்டும் !!!

Tuesday, January 01, 2013

பொது (வெஸ்டர்ன்) கழிப்பிடமும் - மேலே கீழே தூக்கியும் (லிப்ட்)

வெஸ்டர்ன் கழிப்பிடம்

இது பேசாப்பொருள் தான். ஆனால் யாராவது பேசியாக வேண்டுமே ? புத்தாண்டின் முதல் பதிவே இப்படி டாய்லெட்டில் ஆரம்பிக்கவேண்டுமா என்று நினைத்தேன். ஆனால் நாம் எல்லாரும் காலையில் ஆரம்பிப்பது அதில்தான் இல்லையா கி கி கி !!

வெஸ்டர்ன் டாய்லெட்

பதிவின் முதல் விஷயம் ஆண்களுக்கு மட்டுமேயானது. பெண்கள் யாராவது படிக்க நேர்ந்தால் இரண்டாவது மேட்டருக்கு தாவிக்கொள்ளுங்களேன் ப்ளீஸ்...

வெஸ்டர்ன் டாய்லெட் பொதுவாக பல இடங்களில் வந்துவிட்டது. அலுவலகங்களில் கண்டிப்பாக வெஸ்டர்ன், சில வீடுகளில் வெஸ்டனும் நார்மல் இண்டியன் டாய்லெட்டும் இருப்பதை பார்த்திருக்கிறேன். இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் முதலில் ஒரு மூடி, அதன் கீழே உட்கார ஒரு சீட், அதன் கீழே பேசின் (சீட் அமைந்திருக்கும் இடமும் அந்த பேசினின் மேல்தான் இல்லையா)

வீடுகளில் அல்லது அலுவலகத்தில் ஒன் டாய்லெட் (அதாங்க மூச்சா / சூச்ச்சூ) போகும்போது சில பக்கிகள் மேலே இருக்கும் சீட்டை தூக்காமல் அப்படியே நின்று அடித்துவிட்டு செல்வார்கள். இதனால் அந்த சீட்டின் நுனி பகுதியில் இரண்டு மூன்று துளி மூத்திர சொட்டு இருக்கும். அதில் உட்காரவே அருவருப்பாக இருக்கும். அன் ஹைஜீனிக் ஆன இந்த வேலையை செய்யாமல், உட்காரும் சீட் பகுதியை தூக்கிவிட்டு மூச்சா போய் தொலைங்களேன் மூதேவிகளா !!!

அப்படி சீட்டை தூக்கி போகும்போதும், டாய்லெட்டுக்கும் உங்கள் 'அதுக்கும்' இடையே சரியான இடைவெளியை (எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் சென்று) போகவும். அதனால் டாய்லெட் தவிர்த்து கீழே சிந்துவதை தவிர்க்கலாம்...

பொது (வெஸ்டர்ன்) டாய்லெட்டை உபயோகிக்கும்போது, அங்கே டாய்லெட் பேப்பர் இருக்கும் பட்சத்தில் (உங்கள் அதிஷ்டத்தை பொறுத்தது) அதனை டாய்லெட் சீட் மேல் (மூன்று பக்கமும்) போட்டுக்கொள்ளலாம். அமெரிக்கன் பை படத்தில் கூட காட்டுவார்கள்.

கொரிய பைடெட் ( bidet)


கொரியாவில் பைடெட் என்று சொல்லுவார்கள். டாய்லெட் சீட்டில் ஆயிரத்தெட்டு பட்டன் இருக்கும். ஒரு பட்டனை அமுக்கினால் கீழே இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். இன்னொரு பட்டன் சூடான காற்று. (நான் 200 டாலர் கொடுத்து ஒன்று வாங்கி வந்தேன், வீட்டில் இருக்கிறது - பிட் செய்யவில்லை).. என்ன - மெனு எல்லாம் கொரிய மொழியில் இருக்கிறது. எந்த பட்டன் எதற்கு என்று கொரிய மொழி தெரிந்திருந்தால் தான் புரியும் அல்லது அனுபவத்தில் கண்டடைய முடியும் :)

சொல்ல வந்ததை எப்படியோ நீட்டி முழக்கி சொல்லிவிட்டேன். இனிமேல் பீ-கேர்புல். என்னை சொன்னேன்...


லிப்ட் மேட்டர்

இதுவும் ஒரு சாதாரண / சின்ன விஷயம் தான். ஆனால் யாராவது ஒருவர் விளக்கித்தானே ஆகவேண்டும். (ஏன் என்றால் எனக்கும் இது ரொம்ப நாளைக்கு விளங்காமல் தான் இருந்தது).

லிப்ட் திடீர் என்று நின்று விட்டால் என்ன செய்வது, கயிறு அறுந்துவிட்டால் எப்படி தப்பிப்பது, லிப்டில் போன் வொர்க் ஆகுமா என்று டெக்னிக்கல் மேட்டர் பேச வரவில்லை. மேலே சொன்னபடி ஒரு சிம்பிள் மேட்டர் தான்..

லிப்ட் பட்டன்ஸ்
லிப்ட் முன்னால் மேலே / கீழே என்று ரெண்டு பட்டன் இருக்கும். அண்டர் கிரவுண்ட் இருக்கும் பில்டிங் ஆக இருந்தால் கீழே பட்டன். அண்டர் கிரவுண்ட் இல்லாத ஒரு பில்டிங்கில் நீங்கள் க்ரவுண்ட் ப்ளோரில் நின்றால் அங்கே மேலே செல்ல மட்டும் பட்டன் இருக்கும். அல்லது நீங்கள் ஒரு ஐந்தாவது மாடியில் இருந்தால் அந்த இடத்தில் நான் படத்தில் காட்டியது போல மேலும் கீழும் பட்டன்ஸ் இருக்கும்.

பல பேர் நினைப்பது இரண்டு பட்டனையும் அழுத்தினால் லிப்ட் வேகமாக வந்துவிடும் / ஆனால் அது உண்மை இல்லை. கண்டிப்பாக வராது. அது வரும்போது தான் வரும் :)

மேலே போகவேண்டும் என்றால் (அட நீங்கள் இருக்கும் தளத்தில் இருந்துங்க) மேலே உள்ள பொத்தான். கீழே போகவேண்டும் என்றால் கீழே உள்ள பொத்தான். இரண்டு பொத்தானையும் அழுத்தினீர்கள் என்றால், லிப்ட் வந்தபிறகு கதவு மீண்டும் ஒரு முறை திறந்து மூடும். இதனை தவிர்க்க நான் மேலே சொன்னபடி (எங்கே போகவேண்டுமோ அதன்படி) அழுத்தவும்.

நன்றி !!