Thursday, March 15, 2007

உங்கள் வலது கால் : உண்மையில் சரியா வேலை செய்யுதா ?

உங்கள் வலது காலை பற்றிய ஒரு சிறிய செக்கிங் பதிவு இது...உங்கள் வலது கால் எவ்வளவு புத்திசாலி என்று பார்ப்போமா ?

நீங்கள் இதை நம்புவது கடினம் தான்..ஆனால் இந்த சிறிய பயிற்சிக்கு பிறகு உங்கள் முகத்தில் புன்னகையோ, வெடிச்சிரிப்போ தோன்றப்போவது உண்மைதான்...

இந்த பயிற்சியில் இரண்டு விஷயங்கள் உள்ளன..

ஒன்று : உங்கள் வலது பாதத்தை கடிகார திசையில் சுற்றவேண்டும்...

இரண்டு : கையால் - காற்றில் உங்கள் முகத்துக்கு நேரே 6 ( எண் ஆறு) போடவேண்டும்...

இதை ஒரே நேரத்தில் செய்யவேண்டும்...

எங்கே முயலுங்கள்...

முடிந்ததா ? இல்லையா ? ஏன்....:))

உங்கள் மூளையை அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாதுங்க....

உங்களுக்கு என்ன நடந்தது என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்க...

:))))))))))

Saturday, March 10, 2007

புனே ஆர்க்குட் பார்ட்டியில் கலந்துகொண்டவர்களில் சிலர்

புனே ஆர்க்குட் பார்ட்டியில் தரமான பல பிகர்கள் கலந்துகொண்டது உலகம் அறிந்த உண்மை...என்னிடமுள்ள பல படங்களில் டீசண்டான ஒரே போட்டோவை இம்சையில் வெளியிடுகிறேன்...

செந்தழல் ரவி

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Friday, March 02, 2007

நான் பார்த்ததிலேயே சிறந்த இ-புக்என் வாழ்நாளில் நான் பார்த்த பல இ-புக்குகளில் இது தான் மிகவும் சிறந்தது...பாருங்கள்...

Thursday, March 01, 2007

கமெண்ட் மாடரேஷன் நீக்கப்பட்டது...

என்னுடைய எல்லா பதிவுகளிலும் கமெண்ட் மாடரேஷனை நீக்கி மனது உத்தவிட்டுள்ளது...யார் சொல்லி தமிழ்மணத்தில் முக்காவாசி பேர் கமெண்ட் மாடரேஷன் போட்டாங்களோ ( ரவி, நீயுமா இம்சை குடுக்கற அவருக்கு) அவரே அனானியாகிட்டார். இனிமேலும் போலி கண்ணீர், நீலி கண்ணீர் என்பதை நம்ப நான் தயாரா இல்லை...

அதுமட்டும் இல்லாமல் வேலை அதிகரிச்சுட்டது...சில நாளா...மேலும் தமிழ்மனமும் கமண்ட் மாடாரேஷன் இல்லாமலேயே திரட்டுறேன்னு சொல்லிருச்சு...

அதனால் கமெண்டை பார்த்து பப்ளிஷ் செய்ய நேரம் இல்லை....அதனால அப்படியே போடுங்க...

எல்லாரும் கமண்ட் மாடரேஷன் நீக்குமாறு நான் இனிமே நீலிக்கண்ணீர் வடிக்கப்போறேன்...

வர்ட்ட்ட்ட்ட்டா.....

கலைஞர்,வைகோ,அம்மா

இன்றைய தினத்தந்தியில் இருந்து மூன்று விஷயம் மண்டை காயவைத்தது...!!

செய்தி 1: இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்...கலைஞர் இரண்டாம் முறையாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம்....

என் 'இம்சை' பார்வை : சார்...சீ.எம் சார்...ப்ளீஸ்..வேண்டாம்...இன்னுமா லெட்டர் எழுதி தபால் ஆபீஸ் மூலமா அனுப்புறீங்க...ஒரு எஸ்.எம்.எஸ் / இமெயில் போடுங்க...அட்லீஸ்ட் பேக்ஸ்லயாவது அனுப்புங்களேன்...இன்னுமா அரதப்பழசு லெட்டர் எல்லாம்...என்னதான் பேரன் ஸ்டாம்பு ப்ரீயா குடுத்தாலும்....

செய்தி 2: பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதலுக்கு வைகோ வாழ்த்து.."வீரம் செறிந்த பஞ்சாப் மக்கள் உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி...அப்புடி இப்புடி சோன் பப்புடி" : மதிமுக தலைமைக்கழக அறிக்கை..

என் 'இம்சை' பார்வை : அடப்பாவிங்களா..உட்டா அர்னால்டு சுவாசுநேகருக்கு, ஹிலாரி கி'லி'ண்டனுக்கு, கிரேக்க ஸ்பார்ட்டாக்கஸ் எல்லாருக்கும் வாழ்த்து சொல்வீங்க போலிருக்கே...இந்த விஷயம் பாதலுக்கு தெரியுமா ? இல்லை பஞ்சாப் எஸ்.டி.டி கோர்டு தெரியுமா உங்களுக்கு ? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது எப்படிப்பா கரெக்ட்டா எதிர்க்கட்சிக்கு போயிடுறீங்க ? (சொந்த)அம்மாவின் ஆசீர்வாதமாவது கிடைக்கட்டும்.

செய்தி : மத்திய பட்ஜெட்டில், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக எதுவும் இல்லை. பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க வந்த பட்ஜெட்..

என் 'இம்சை' பார்வை: அடப்பாவமே...மொதல்ல வாழப்பாடி ராமமூர்த்தி எடுத்ததுக்கெல்லாம் அறிக்கை கொடுத்து டார்ச்சர் ஆவாரு..அதை இந்தம்மா கையில் எடுத்திருச்சே..வீட்ல வேலை இல்லையோ...பேசாம யாராவது தமிழ்மணத்தை அறிமுகப்படுத்துங்கப்பா...ஆந்திராக்காரன் வேற திராச்சை தோட்டத்தை ஆட்டையை போடப்பாக்குறான்....யாராவது ஒரு கிலோ சீட்லெஸ் திராட்சை பார்சல் அனுப்புங்கப்பா...

கலைஞர்,வைகோ,அம்மா

இன்றைய தினத்தந்தியில் இருந்து ரெண்டு விஷயம் மண்டை காயவைத்தது...!!