Thursday, October 18, 2007

சூடான இடுகையில் புனித பிம்பம்



என்னுடைய புனித பிம்பம் பதிவு சூடான இடுகையில் வந்திருக்கு...!!! ( பூங்காவில வந்திருக்கு, ஆனந்தவிகடனில் வந்திருக்கு அப்படீங்குற மாதிரி )

Wednesday, October 17, 2007

புனித பிம்பம் !!!!!



இப்பல்லாம் நல்லவங்க தொல்லை தாங்க முடியலடா சாமியோவ் !!!!!!!!!!

தமிழ்மணமா, கண்டிப்பு மாமியா, தடி ஊன்றும் தாத்தாவா ?

அதென்ன இப்படி ஒரு வம்படியான தலைப்புன்னு பாக்க்குறீங்களா ? சில சமயம் அப்படித்தோன்றும் எனக்கு..பதிவின் பெயரே இம்சைதானே...சும்மா இருந்தா எப்படி ? ஆங்...விஷயம் என்னன்னு கேட்குறீங்களா ?

சூடான இடுகைகளுக்கு சூடு வைத்த தமிழ்மணத்தின் பாஸிச நடவடிக்கையை எதிர்த்துத்தான் இந்த பதிவு...இதை ஏன் அப்பவே போடலைன்னு கேட்குறீங்களே ? எனக்கு எப்ப தோனுதோ அப்பத்தான் போடுவேன்....(என்ன திமிர் !!!)

எல்லாருக்கும் நூத்துக்கணக்கா பின்னூட்டம் வருது...பின்னூட்ட விளையாட்டு விளையாடுறாங்க..அதை தடு...அப்படீன்னு ரவிஷங்கர் புலம்பினாரு...உடனே புள்ளைங்க விளையாட்டை தடுக்க வந்த கண்டிப்பு மாமி மாதிரி, நாப்பது உயரெல்லை..ஷட்டப்...எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ளே விளையாடு...வெளிய போப்படாது...ஷனியனே...அப்படீன்னு மடக்கிப்போட்டுட்டாங்க...

நாங்களும் எவ்ளோ சொன்னோம்...பதிவெல்லாம் கூட போட்டோம்.."யோவ் அந்தாள் வயத்தெரிச்சல்ல சொல்றான்யா", அவனுக்கு எவனும் பின்னூட்டம் போடுறதில்லைன்னு புலம்புறான்யா...பின்னூட்டம் நூத்துக்கணக்கா போறது ஒன்னும் பெரிய மேட்டர் இல்லைய்யா, அது நாங்களே போடுறது தான்யா...அப்படீன்னெல்லாம் சொன்னோம்...கேக்குற வழியா தெரியல்லியே...இன்னைக்கும் அந்த பாஸிஸ நடவடிக்கை தொடந்துக்கிட்டுத்தான் இருக்கு...

அந்த ஆள் பதிவு போட்டதுக்கு பரிசீலிச்சு நடவடிக்கை எடுத்தீங்க இல்ல...ஏன் அதுக்கப்புறம் பதிவு போட்ட பயலுக பதிவை மறுபடி பரிசீலிக்கறது ? சுப்ரீம் கோர்ட்டே வழக்குகளை திரும்ப ஆராயும் போது, தமிழ்மணம் ஆராயக்கூடாதா ?

சரி அடுத்த மேட்டருக்கு போவோம்..(போயிட்டாண்டா...நாரதப்பய...கொளுத்திப்போடுறதுக்குன்னே கிளம்பிடுறாய்ங்கடா...)

அடுத்த விஷயத்துக்கு வரும்போது ஒரு டிஸ்கி போடுவோம்...இந்த பதிவு யாரையும் குறிப்பது அல்ல..(டேய் இப்பதானடா ரவிஷங்கர கலாய்ச்ச..)

அடுத்தது ஏன் தமிழ்மணம் எனக்கு தடி ஊன்றும் தாத்தாவா தோன்றுதுன்னா (நல்லா கிளப்புறானுங்கடா பீதிய...) யாரோ எவரோ, யாரு பெத்த புள்ளையோ, சூடான இடுகைகள் பற்றி டென்ஷனா ஒரு ஒப்பாரி வெச்சுதாம்...

ஓசை செல்லா பதிவு எப்ப பார்த்தாலும் ஜூடான இடுகையில வருது...மடிப்பாக்கம் சுனாமி எதைச்சொன்னாலும் அது சூடான இடுகையா, திராவிட திம்மிகள் போடும் இடுகைகள் மட்டும் ஏன் சூடான இடுகையில வருது, காண்ட்ரவர்ஸியா தலைப்பு வெச்சா சூடான இடுகையில வருதுன்னு எல்லாரும் காண்ட்ரவர்ஸியாவே தலைப்பு வெக்குறானுங்க ( லேய், அவன் எப்படி தலைப்பு வெச்சா உனக்கென்ன), அப்படின்னு ஒரே கொடுமைக்கூத்து புலம்பல்...

என்னடா இவனுங்க புலம்பல் ஓவராப்போச்சேன்னு தமிழ்மணமும் சூடான இடுகைக்கு ஜூடு வெச்சுருச்சு ( என்னோட கற்பனைதானுங்க இது)....அதனால தான் சொன்னேன்...தடி ஊன்றும் தாத்தா மாதிரி...லைட்டா தட்டினா டடங்கு புடங்குன்னு ஆடி உழுந்துடுறாரு...பாவம் தாத்தா..

நல்லா யோசிச்சு பாருங்க..படிக்கறவன் எதை வேனாலும் படிப்பான்...அது சூடான இடுகையா இருந்தா என்ன, ஆறிப்போன நாறிப்போன இடுகையா இருந்தா என்ன ? தமிழச்சி பெரியார் பற்றி போடும் எல்லா இடுகையும் நல்ல இடுகை என்னைப்பொறுத்தவரை...ஒரு நாளைக்கு பத்து போடுறாங்க..எல்லாம் சூடான இடுகையில வந்தா பரவால்லையா...

பரண் அப்படீன்னா என்ன ? பழசு...பழைய சாதம் வேண்டுமா இல்ல புதிய சாதம் வேண்டுமான்னா எதை எடுப்பாங்க மக்கள் ? ( நான் தனிப்பட்ட முறையில் பழைய சாதம் மற்றும் கெட்டித்தயிரை 'செல்வம்' எலுமிச்சை ஊறுகாயோடு வெட்டு வெட்டென்று ஒரு காலத்தில் வெட்டியவன்)...

பரணில் இருப்பவை பற்றி சொல்லும்போது, இந்திராகாந்தி செத்ததை பழையை பேப்பரை வைத்து டீக்கடையில் படிச்ச விவேக் ஜோக் நியாபகம் வருவதை தடுக்க முடியவில்லல..

பத்ரி எழுதிய பழைய இடுகை உண்மையில் நல்லாத்தான் இருக்கு...ஆனால் அதோட சேர்ந்து பழைய மொக்கைகளான ஆண் பெண் கற்பு நிலை (4), எனது ஒரிசா நினைவுகள் ( அப்போது பிஜு பாட்டீல் முதல்வர்), ஜெயலலிதா அரசு சாலைப்பணியாளர்களை ஏன் நீக்கியது (அவன் மறுபடி ஜாப்புக்கு வந்து ரிட்டேரே ஆயிட்டான்), போன்ற மொக்கை தூசு பிடித்த மேட்டர்களை படிக்கவேண்டி இருக்கு..

டோண்டு ராகவன் எப்பவாது நல்லதா ஒரு பதிவு போட்டா ஆட்டோமேட்டிக்கா அது சூடான இடுகையில வருது...அதை விட்டு, அவரோட ஐ.டி.பி.எல் நினைவுகளையா படிக்குறாங்க மக்கள் ? தீவு மற்றும் பெயரிலி கூட மொக்கைப்பதிவு போட ஆரம்பித்துவிட்ட இந்த காலத்தில் தமிழ்மணம் நிர்வாக குழு சிந்தித்து, முடிவெடுக்கவேண்டும்..

இந்த பதிவின் மூலமாக விடுக்கும் கோரிக்கை..

1.பின்னூட்ட உயரெல்லையை அகற்றுவது..
2.சூடான இடுகைகளை மீண்டும் முகப்பில் காட்டுவது..

என் மேல டென்ஷனாகாதீங்க...நான் அப்படித்தான்...இது சூடான இடுகையில் வந்துத்தொலையும்...வழக்கம் போல மேலும் ஒரு முறை சூடான இடுகை மேல் க்ளிக் செய்து பேண்ட் விட்த் வேஸ்ட் செய்து படிங்க...வணக்கம்..

Tuesday, October 16, 2007

நல்லவர்க்கெல்லாம்....!!!!!



என்ன உச்சரிப்பு...!!! என்ன முகபாவம்.....!!! என்ன பாடிலாங்வேஜ் !!!!

அய்யா நீர் கலைஞன் !!!!

யார் இந்த ABCD ?



நீ வெளங்குனாப்புலதான்...போயும்போயும் 'அங்கே' போய் மாட்டுனபாரு ?

Saturday, October 13, 2007

தமிழச்சிக்கு மீண்டும்...சாணக்கியரை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாமா பெரியார் இயக்கப்படி



////எம் இயக்கத்திற்கு பக்கபலமாக இருக்கும் தோழர் ப்ளான் போட்டு செயலாக்குவதில் சாணக்கியன். "தலீத்" பற்றிய நோட்டீஸ் அனுப்பியவர். எங்கள் இயக்கத்தை இயக்குபவர். எனக்கும் இயக்கத்தின் தோழர்களுக்கும் மூளையே அவர் தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றோம்////

இப்படி சொல்லும் தோழர் தமிழச்சியை நான் ஒரு கேள்வி கேட்கிறேன்...இந்த சாணக்கியரோட ஜாதியை கண்மூடித்தனமாக எதிர்க்கும்படி பெரியார் சொல்லியிருக்காரே ? படிச்சதில்லையோ ?

நோக்கு என்னத்தத்த சொல்லி நான் இனிமே புரியவைக்க ?

உங்கள் சாணக்கியர் இந்த 'விஷ'யம் எல்லாம் சொல்லிக்கொடுப்பதில்லையா ?

சூடாக காபி அருந்திவிட்டு பெரியார் கருத்துக்களை யோசிக்கவும்...!!!

Friday, October 12, 2007

பெங்களூர் தமிழச்சியின் காமெடி பதிவு...!!!!

பெங்களூர் தமிழச்சியின் இந்த பதிவை படித்துவிட்டு அடக்க மாட்டாமல் சிரித்து வயிறை புண்ணாக்கி கொண்டேன்...ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவான அந்த பதிவு, "சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில வரும்" என்று நன்றாக உணர்த்துகிறது...

பெங்களூர் தமிழ்ச்சங்கம், பெங்களூரின் தமிழர் எண்ணிக்கை, எத்தனை ஆண்டுகாலமாக தமிழர்கள் பெங்களூரில் வசிக்கிறார்கள், தமிழர்கள் பெங்களூரில் செய்யும் தொழில்கள் என்ன என்பது குறித்து கிஞ்சித்தும் தெரியாமல், ஏதோ ஐ.டி கம்பெனிகள் வந்தவுடன் எம்.சி.யே படித்தவர்கள் வந்துதான் பெங்களூரில் குடியேறினார்கள் என்ற ரீதியில் அரைவேக்காட்டு பதிவொன்றை இட்டுள்ளார்...

தனித்தமிழ் சேனை என்று ரெண்டு மூனு இடத்தில் எழுதி இருக்காம்...அம்மாடி அது தமிழ்ல தான எழுதி இருக்கு ? அதை படிச்சுட்டு கன்னடாக்காரன் தமிழனை உதைப்பான் என்றால் அதைவிட அரைவேக்காட்டுத்தனம் என்ன இருக்கு ?

கன்னடமெல்லாம் தமிழில் இருந்து தான் வந்தது என்று கூறிக்கொண்டு அலைபவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்...அப்படி கூறியவரின் தமிழ் பற்றுக்கு தலைவணங்குகிறேன்...அதை கிண்டல் செய்யும் உங்களை பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்கு நாடு கடத்தலாம் என்று உள்ளேன்...

ஏதாவது ஹோட்டலுக்கு போனா சென்னையில் உள்ள சாப்பாடு மாதிரி வராது என்று கூறிக்கொண்டே சாப்பிடுவாங்களாம்...சரவணபவனில் சாப்பிடுவதற்கு சென்னை வரை போகும் எவ்ளோ பேர் இருக்காங்க தாயி...

இ-கலப்பையை வைத்து உழுது எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்...அந்த இ-கலப்பையை தமிழ் உலகுக்கு அளித்த முகுந்த் பெங்களூரில் இருக்கிறார்...தமிழின் முதல் மடலாடற்குழுக்களில் பங்குபெற்று - பாலாபிள்ளை போன்றவர்களுடன் பழகி - பெங்களுர் தமிழ்ச்சங்கத்தில் உள்ள அத்துனைபேரையும் அறிந்த அரவிந்தன் பெங்களூரில் இருக்கிறார்...அதெல்லாம் விட, அற்புதமான சிறுகதைகள் எழுதும், எழுத்தாளர் சுஜாதாவின் நன்பர் தேசிகன் பெங்களூரில் தான் இருக்கிறார்...

அவ்வளவு ஏன், வ.வா.சங்கத்தின் முக்கிய கைப்புவான இராம், விவசாயி இளா, ஜி.ரா, இம்சை அரசி போன்றவர்களும் பெங்களூரில் தான் இருக்கிறார்கள்...இவர்களுக்கு ஹிஸ்டரி, ஜியாகிரபி பற்றி தெரியுமான்னு தெரியல...சும்மா ஒரு பில்டப்புக்கு இந்த பேரா..

மியாவ் கண்ணை மூடிக்கொண்டால் வேர்ல்டு இருட்டிக்கும் என்பது போல இருக்கு இந்த அரைவேக்காட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவு...ஆனால் மேட்டரை விளங்கிக்கொண்டு பதிவு எழுதுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

தமிழச்சிக்கு எனது சூடான பின்னூட்டம்

தோழர்..

என்ன இது...இவ்வளவு அசிங்க பின்னூட்டங்கள் அனுமதித்திருக்கீங்க !!!!

அன்றே சொன்னேன்...உங்கள் கண்ணியம் காக்கப்படவேண்டும் என்றால் அதர் அனானி ஆப்ஷன் அனுமதிக்காதீங்க என்று...

உங்களுக்கு பல தமிழ் லோக்கல் கலோக்கியல் வார்த்தைகள் விளங்கவில்லை...

இந்த நிலையில் நீங்கள் சபேசன்,இராயகரன்,வீரமணி அய்யா, கொளத்தூர் மணி அண்ணன், கவிஞர் கணிமொழி, நெடுமாறன் அய்யா, பெயரிலி இவர்களோடெல்லாம் புழங்கி, சண்டையிட்டு, விவாதம் செய்து...என்னத்த போங்க...

பெரியார் இருந்திருந்தால் இந்த கோணங்கித்தனத்தை எல்லாம் பொறுத்துக்கொள்ளமாட்டார் தோழர்...

உங்கள் பின்னால் இருக்கும் நன்பர்கள், கழக உறுப்பினர்கள் சற்றேனும் தங்களது லெமன் சைஸ் ப்ரைனை வைத்து யோசிக்கட்டும்..!!

Sunday, October 07, 2007

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்

மாபாரதத்தில் வரும் நகுசன் மகன் யயாதி சுக்கிராச்சாரியின்
மகள் தெய்வானையை மணக்கிறான். ஒரு பூசலின் விளைவாக அவளது வேலைக்காரியாக அசுர அரசன் விடபன்மன் மகளிடம் மூன்று மக்களைப் பெற்றான்.

இதையறிந்த சுக்கிரன் அவனை முதுமையடையச் செய்து பின்னர்
மகன்களிலொருவனிடமிருந்து இளமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றான்.
தெய்வானையின் மக்கள் மறுக்க ஒப்புக்கொண்ட வேலைக்காரியின் மகன் பூரு
அவனுக்குப் பின் அரசனானான். மனைவியின் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அவர்களில் யது என்பவனது வழிவந்தவர்கள் யாதவர் எனப்படுவர். பூகு வழி
வந்தவர்கள் துரியோதனன் முதலியோர். யது வழி வந்தவர்களாக கண்ணனும் சேர,
சோழ, பாண்டியர்களும் கூறப்படுகின்றனர்.

கபாடபுரம் கழக தலைநகராக இருந்த போது துவரைக் கோமான் என்ற பெயரில் ஆண்டவன் இவர்களில் ஒருவனாய் இருக்கலாம். துவாரகை எனப்படும் துவரையையும் அதற்கு முன் வட மதுரையையும் ஆண்டவனாகக் கூறப்படும் கிருட்டினன் அதே குலத்தை
சேர்ந்தவனாக இருக்கலாம்.

யூதர்களின் பழைய ஏற்பாட்டின்படி ஆபிரகாம் என்பவனுக்கு குழந்தைகள் இல்லை
மனைவி சாராளின் வேண்டுகோள்படி வேலைக்காரியைக் கூடி ஒரு ஆண் பிள்ளை
பிறக்கிறது. பின்னர் அவனுக்கு 99ம் மனைவிக்கு 90ம் அகவை ஆனபோது
மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கிறது. மூத்தவன் வெளியேறுகிறான்.

இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள் என்றும் மூத்தவன் வழி வந்தவர்கள்
அரேபியர்களென்றும் கூறப்படுகிறது.

மிசிரத்தானம் என்ற சொல்லுக்கு ஐரோப்பியரால் எகிப்து என்று அழைக்கப்படும்
நாடு என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி கூறுகிறது. யயாதியால்
தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச
தேசத்திற்சென்று அத்தேசத்தாராகி அந்த தேசத்துச் சனங்ககோடு கலந்தமையால்
இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று.

மிசிரம் என்ற சொல்லுக்கு கலப்பு என்பது ஒரு பொருள்

இக்கதைகளிலுள்ள கருக்களின் ஒற்றுமை வியப்பூட்டுகிறது. இரு கதைகளிலும்
வேலைக்காரிக்குப் பிள்ளைகள் பிறப்பது, தந்தையரின் முதுமை ஆகியவை அவை
அத்துடன் யூதர்கள் எகிப்தியர்களின் அடிமைகளாயிருந்து விடுதலை பெற்றவர்
என்ற செய்தியை எரிக் வான் டெனிக்கன் போன்ற ஆய்வாளர்கள் ஏற்கின்ற போதும்
மோசே எகிப்திய இளவரசன் என்றும் அரசுரிமைப் போட்டியில் வெளியேற்றப்பட்ட
அவன் எகிப்திய அடிமைகளைத் திரட்டி வெளியேறி புதிய ஒரு சமயத்தையும் அதைச்
சார்ந்து ஒரு புதிய மக்களினத்தையும் உருவாக்கினான் என்றும்
கருதுகிறார்கள்.

எகிப்திய அரண்மனை நூலகத்திலிருந்து தான் படித்த
வரலாறுகளை இணைத்து யூதர்களின் பழைய ஏற்பாட்டை எழுதினான் என்றும்
கருதுகின்றனர். மிசிரத்தானம் என்ற சொல்லின் பொருள் தெளிவாகவே இக்கதைக்கரு
குமரிக்கண்டத்திலிருந்து அங்கு சென்றதற்கு அசைக்க முடியாத சான்றாகும்.

மூவாரியின் புதிர்கள் என்ற நூல் எழுதிய உருசிய ஆய்வாளர் கோந்திரத்தோவ்,
பண்டை எகிப்திய நாகரிகம் மிகத் தாழ்வான நிலையிலிருந்து திடீரென்று ஒரு
புதிய உயரத்தை எட்டியுள்ளமை, நல்ல உயர்ந்த நாகரிக நிலையை எய்திய ஒரு
புதிய மக்கள் அங்கு குடியேறியுள்ளதற்குச் சான்று என்று கூறுகிறார்.

மிசிரத்தாநம் என்ற சொற்பொருள் அதை ஐயத்திற்கிடமின்றி உறுதிப்படுத்துகிறது.

மனித இன முன்னேற்றத்தில் மிக முகாமையான கட்டம் அவர்கள் நெருப்பைக் கையாளக் கற்றது. கொல் விலங்குகள் தங்களை நெருங்காமலிருக்க நெருப்பை அவர்கள் ஓம்பினர். நெருப்பு தெய்வமானது. நெருப்போம்புவோர் பூசகராயினர்.

தாம் நேசிக்கும், மதிக்கும் அல்லது அஞ்சும் மனிதர்களுக்குத் தாம் மிக விரும்பியுண்ணும் பொருட்களையும் வழக்கமாக உண்ணும் உணவுகளையும் அன்பளிப்பாக அளிப்பது மனித இயல்பு. அதுபோலவே அவற்றைத் தெய்வத்திற்குப் படையலாக்குவதும் வழக்கம். அவ்வாறே அண்டையிலுள்ள குழுக்களோடு நடைபெற்ற சண்டைகளில் செத்தோரையும் பிடிபட்டோரையும் உண்ணும் நரவுண்ணி வாழ்க்கைக் கட்டத்தில் மனிதர்களைக் காவு கொடுத்து நெருப்பிலிட்டு உண்டனர்.

இந்த வரலாற்றுக் கட்டத்தில் தமிழ் மக்கள் இருந்ததற்கு
ஐயத்திற்கிடமில்லாத சான்று உள்ளது. தென் மாவட்டங்களில் வழிபடப்படும்
சுடலை மாடன் கோயில் திருவிழாவில் (தென் மாவட்டங்களில் சிறு தெய்வக்
கோயில் திருவிழாவினை கொடை விழா என்பர்.) நடைபெறும் கணியாட்டில் (கணியான்
கூத்து) பெண் வேடமிட்டு ஆடும் கணியான் வகுப்பு ஆடவர்கள் தங்கள் கையை
அறுத்து வடிக்கும் குருதி கலந்த சோற்றையும் சுடுகாடு சென்று எரியும்
பிணத்தையும் தெய்வங்கொண்டாடுவோன் உண்ணும் நிகழ்ச்சி இன்றும்
நடைபெறுகிறது. *

குழந்தைகளை வருணனுக்குக் காவு கொடுப்பதாக நேர்ந்த செய்தி
மறைகளில் உள்ளது. அரிச்சந்திரன் என்பவன் தனக்குப் பிள்ளை பிறந்தால் அவனை
வேள்வியில் பலியிடுவதாக வேண்ட வருணன் அளித்த வரத்தால் பிறந்த பிள்ளை
அச்சத்தால் நாட்டைவிட்டோட அரிச்சந்திரனுக்கு வருணன் நோயை
உண்டாக்குகிறான். அறிந்த மகன் தன்னைக் காவு கொடுக்க புறப்பட்டுவரும்போது
இந்திரன் 6 ஆண்டுகள் அவனை தன் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறான். பின்னர்
சுனச்சேபன் என்பவனது தந்தைக்கு மாடுகளை விலையாகக் கொடுத்து அவனை வாங்கித்
தந்தை அரிச்சந்திரன் மூலம் அவனைக் காவு கொடுத்து வருணனிடமிருந்து
இருவரும் விடுதலை பெறுகின்றனர்.

தென்னிந்தியக் கடற்கரையில் இருந்து சென்று அசிரியாவில் குடியேறியவர்களாக
கூறப்படும் பினீசியர்கள் முதல் ஆண் மகவைக் காவு கொடுத்த செய்தியும்
உள்ளது. யூதர்களின் பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் எனப்படுபவன் காவு
கொடுப்பதாகக் கடவுளுக்கு நேர்ந்து பெற்றப் பிள்ளையை காவு கொடுக்கச்
செல்லும்போது மகவுக்குப் பகரம் ஆட்டைக் காவு கேட்டு மகனை விடுவித்த கதை
உள்ளது. இக்கதை குரானிலும் இடம்பெற்றுள்ளது.

பிறந்தால் காவு கொடுப்பதாக வேண்டி ஆண்மகவைப் பெற்றுக்கொள்வது
விந்தையாகத் தோன்றுகிறது. ஒரு பெண்தலைமைக் குமுகத்தில் ஆண்களின்
எண்ணிக்கை தேவைக்கு மிஞ்சியது என்ற அடிப்படையில் இது இருக்கலாம் அல்லது
பெண்தலைமை நீங்கி ஆண்தலைமைக் குமுகமாக

மலரும் சூழலில் மிகவும் வேண்டப்படும் ஆண் மகவைக் காவு கொடுப்பது
கடவுளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்ற எண்ணத்தில் இருக்கலாம்.

மேலேயுள்ள இரு கதைகளிலும் உள்ள இந்த பொதுக்கூறு தவிர இந்தியக்
கதையில் தன் மகனை மீட்க மாட்டைக் கொடுக்கிறான் அரிச்சந்திரன்.
சுனச்சேபனின் தந்தையோ மாட்டைப் பெற தன் மகனைக் கொடுக்கிறான். இரண்டு
நேர்வுகளிலும் மாட்டுக்காக மகன் மாற்றப்படுகிறான். ஒரு வகையில் காவு
கொடுப்பவன் வாக்குறுதியை நிறைவேற்றினாலும் இன்னொரு வகையில் தன் மகனை
காப்பாற்றியதன் மூலம் வாக்குத் தவறுகிறான் அரிச்சந்திரன். பழைய ஏற்பாடு
கதையில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன் வந்தமைக்காக தந்தையையும்,
மகனையும் கடவுள் பாராட்டுகிறார்.

இதே அரிச்சந்திரன் இராமாயணத்தில் இராமனின் முன்னோனாகக் காட்டப்பட்டு வாய்மைக்குத் தனக்கு வழிகாட்டியாக இருந்தவனாக மோகன்தாசு கரம் சந்து காந்தியால் பாராட்டப்பட்டவன். இந்தக் கதையிலும் ஆண் மகவு பாம்பால் சாகும் நிகழ்வு மூலம் குழந்தைச் சாவு எனும்
கதைக்கரு வருகிறது. மொத்தத்தில் மனிதக் காவு விலங்குக் காவாக மாறிய மனித
குல வரலாற்றுச் செய்தி வேத, யூத மரபுகளில் பதிவாகியுள்ளது. தமிழ் மண்ணில்
கோவில் சடங்காக குருதியும் சதையுமாக இன்றும் நிலவுகிறது. இது தமிழகத்தின்
தென்கோடியில் மட்டும் நிலவுகிறது என்ற உண்மை இது குமரிக்கண்டத்தில்
நிகழ்ந்தது என்பதற்கு ஆணித்தரமான சான்று. அத்துடன் பெண்வேடமிட்ட ஆடவர்
இதை நிகழ்த்துவது பெண் பூசாரியர் தலைமையில் இந்தக் காவுகள் நடைபெற்றன
என்பதைச் சுட்டி நிற்கிறது.****

உணவுப் பண்டங்களாக இருந்த காளையும் ஆவும் முறையே உழைப்புக்
கருவியாகவும், பால் முதலியவற்றின் விளைப்பு வகைதுறையாகவும் மாறிய பின்
மாடுகளைக் காவு கொடுத்து நெருப்பிலிடும் வேள்விகளுக்கு ஒட்டுமொத்த
குமுகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. இதிலும் பெண்களே
தலைமைதாங்கியுள்ளனர். தாடகை போன்ற பெண்கள் (அரக்கிகள்) வேள்விகளை
அழித்தனர் என்று பொதுவாகத் தொன்மங்கள் கூறினாலும் தக்கன் வேள்வியை அழித்த
காளியை மட்டும் தெய்வமாகக் கொண்டுள்ள உண்மை, மக்கள் இந்த வேள்வி
அழிப்புகளை வரவேற்றனர் என்பதற்கு தொன்ம பூசாரியரையும் மீறிப் படிந்து
விட்ட வரலாற்று எச்சமாகும்.

இங்கு பூசாரியருக்கும் அரசர்களுக்குமான போட்டி தொடங்குகிறது.
மாட்டு வேள்விகள் தகர்க்கப்பட்டதும் பின்னர் போர்க்கருவியான
தேர்க்குதிரைகளை (இரட்டையர்களான அசுவினி தேவர்களை)க் கொண்டு அவை
மீண்டதையும் உபநிடதங்களிலிருந்து மேற்கோள்களால் விளக்குகிறார்
தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா தன் Lokayatha(லோகாயதா) நூலில். அது போல்
அழிந்துபட்ட வேள்வியை மீட்க அரசனும் பூசாரியும் முயன்றதில் அரசன் தோற்று
பூசாரியிடம் அடிபணிந்ததற்கு அவர் சான்று காட்டியுள்ளார்.

காமதேனு போன்ற கேட்டது அனைத்தையும் அளவின்றி வழங்கும் ஆவுக்காக
முனிவர்களுடன் அரசர்கள் போரிட்டு அழிந்த பல கதைகள் தொன்மங்களில் உள்ளன.
இவற்றுடன் பரசுராமன் 21 தலைமுறைகள் அரசர்களை அழித்ததைத் தொடர்ந்து
நாரிகவசன் என்பவன் பெண்களை அரணாகக் கொண்டு அரசாட்சியை மீட்டான். எனவே
அவனுக்கு மூலகன் என்ற பெயரும் உண்டு என்கிறது அபிதான சிந்தாமணி.

[7] இது பூசாரியர் - அரசர் போட்டியில் பூசாரியின் கட்டுக்கடங்கிய
அரசர்கள் என்ற இறுதி அமைப்பு உருவானதற்கான ஒரு தடயம். பரசுராமனே இன்றைய
சேரநாட்டை உருவாக்கினான் என்கிறது தொன்மக் கேரளத்தை கோடாரியை கடலில் வீசி
உருவாக்கினான் என்பதற்கு இரும்புக் கோடாரியை கண்டுபிடித்து அடர்ந்த
காட்டை அழித்தான் என்று பொருள் கொள்வது பொருந்தும். இரணியனைக் கொன்று
அவன் மகன் பிரகலாதனுக்கு பட்டஞ்சூட்டியது, அவனது பெயரனான மாவலியை
நிலத்தில் அழுத்தியது என்று மூன்று தலைமுறைகளுக்கு சேரநாட்டில்
பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான போட்டியில் பார்ப்பனர்கள்
வென்றது தொன்மத்தில் பதிவாகியுள்ளது. நாமறிந்த தமிழரசர் அனைவரும்
பூசாரியரின் இந்தக் கட்டுக்கு அடங்கியவர்களே என்பதற்குக் கழக
இலக்கியத்தில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.
உலக முழுவதும் அரசுக்கும் சமயத்துக்குமான இந்தப் போட்டி நடந்திருக்கிறது,
இன்றும் தொடர்கிறது. அதே வேளையில் பொதுமக்களை ஒடுக்குவதில் பொதுவில் அவை
இணைந்தே செயல்படுகின்றன. விதிவிலக்கான நேர்வுகளில் அவற்றுக்கிடையில்
நிகழ்ந்த பூசல்களில் மக்கள் பயனடைந்துள்ளனர். மார்ட்டின் லூதருக்கும்
வாட்டிக்கனுக்கும் நடந்த மோதலில் ஐரோப்பியச் சிற்றரசர் சிலர் லூதர்
பக்கம் நின்றனர். இங்கிலாந்தின் 4-ஆம் என்ரிக்கும் போப்புக்கும் உருவான
மோதலில் இங்கிலாந்தின் சமயத் தலைமையை அவனே மேற்கொண்டான். அவனுடன்
சேர்ந்து கோயில் சொத்துக்களைப் பங்கு போட்டுக்கொண்ட அவனது நண்பர்களே
அங்கு முதலாளியக் குமுகம் உருவாகக் காரணமாயினர். அதிலிருந்தே பாராளுமன்ற
மக்களாட்சி, மதச்சார்பற்ற அரசு போன்ற கருத்துக்கள் ஐரோப்பாவில்
உருவாகியன. நம் நாட்டிலும் அதனுடைய வீச்சு இருப்பதாக நம்புகிறோம். ஆனால்
நிலக்கிழமைப் பொருளியல் அடித்தளத்தின் மீது பரவிய வல்லரசிய சுரண்டலில்
வளங்களனைத்தையும் இழந்து நிற்கும் நம் நாட்டில் ஆயுத பூசை என்ற பெயரில்
அரசு அலுவலகங்களில் நடக்கும் கூத்துகள் நாம் சமயச் சார்பான
ஆட்சியிலிருந்து விடுபடவில்லை என்பதை விளக்குகின்றன.

இவ்வாறு அரசும் சமயமும் சேர்ந்து மக்களை ஒடுக்குவற்குத் தோதாக
மக்களுக்குப் புரியாத ஒரு மொழி தேவைப்பட்டது. அது ஒருவேளை ஐந்திர
இலக்கணப்படி அமைந்த ஒரு மொழியாக இருக்கலாம். அல்லது பூசகர்கள்
தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட மறைமொழி போன்ற ஒரு குழுஉக்குறி மொழியை
முறைப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கலாம். அரசன் என்ற பதவியின்
வளர்ச்சி பெற்ற ஒரு கட்டமாக இந்திரனைக் கொண்டால், இந்திரனால் அல்லது
இந்திரனின் முன்முயற்சியால் உருவானது என்று கூறலாம். அதிலேயே இன்றைய
தமிழ் இலக்கணம் உருவாகியிருக்கலாம். *****

ஐரோப்பாவில் உருவான இற்றைப் பல்துறை வளர்ச்சியில் புதிதாக உருவான கலைச்
சொற்களையும் புதிய பொருளில் கலைச்சொற்களாகக் கையாளப்பட்ட பழைய
சொற்களையும் கொண்ட துறை அகரமுதலிகளும் கலைக் களஞ்சியங்களும் உருவாயின.
அதே வேளையில் புதிய சூழலில் உருவான இலக்கியப் படைப்புகள் அறிவியல்
செய்திகளைக் கூறியதோடு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடிகளாகவும்
இருந்தன. எனவே பொது அகரமுதலிகளும் அனைத்து கலைச் சொற்களுடன் உருவாக
வேண்டி வந்தது.

[10] அதே நேரத்தல் கணினி போன்று எண்ணற்ற புதுத் துறைகளின் தோற்றம்
வளர்ச்சி ஆகியவற்றால் அவற்றுக்குரிய சிறப்பு அகரமுதலிகள் உருவாவதும் அவை
மீண்டும் பொது அகரமுதலிகளை வளப்படுத்துவதும் ஒன்று மாற்றி ஒன்று
நிகழ்ந்து கொண்டிருக்கும் வளர்ச்சி நிலைகள்.

இதே வளர்ச்சி நிலைகள் நாம் இங்கு அலசும் காலகட்டத்தில் இடம் பெற்றிருக்க
வேண்டும். குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமையால்
தான் பூசாரியர் அரசன் என்ற ஒரு பதவியை உருவாக்க வேண்டி வந்தது. அவ்வாறு
அரச பதவி உருவான பின் புதிய வளர்ச்சி நிலைகள் வேகம் கொண்டிருக்கும்.
புதிய புதிய துறைகள் தோன்றி வளர்ந்திருக்கும். அப்போது உருவான
துறைநூற்களில் உள்ள சொற்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் இருந்ததால்
அவற்றை மறை நூல்கள் என்றனர். தொல்காப்பியரும் இசை நூலை நரம்பின் மறை[11]
என்றார்

அடிக்குறிப்பு

[1]அபிதான சிந்தாமணி யது, யாதவர் என்ற சொற்களைக் காண்க

[2முதற்கழகமிருந்த தென்மதுரையை கடல்கொள்ள கபாடபுரம் எனப்படும் துவரையை
(துவார் = கதவு; துவார் → துவாரகை → துவரை. கபாடம் = கதவு) அடைந்தனர்
குமரிக்கண்ட மக்கள். அங்கு இரண்டாம் கழகத்தை நிறுவினர். அங்கு அரசனாய்
இருந்த ஒருவன் பெயர் துவரைக் கோமான். மகாபாரதக் கண்ணன் வட மதுரையைத்
தலைநகராகக் கொண்டு ஆண்டபோது சராசந்தன் என்பவனுக்கு அஞ்சி குசராத்
பகுதியில் இருந்த துவரைக்கு ஓடி தலைநகர் அமைத்து ஆண்டான். மகாபாரதக் கதை,
குமரிக் கண்டத்தில் நடந்த பெரும் போரை, பின்னர் அங்கிருந்த மக்கள்
குடியேறிய வட இந்தியாவில் நடந்த ஒரு போருடன் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
குமரிக் கண்டத்து நகரங்கள், மலைகள், ஆறுகளின் பெயரைத் தாம் குடியேறிய
இடங்களிலும் இட்டுள்ளனர்

[3]சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் வாழ்ந்த ஆற்றல் மிக்க
பலதுறை அறிஞர்கள் அடிப்படை நூல்கள் பலவற்றைத் தொகுத்துள்ளார். அவற்றுள்
கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதியும், சிங்காரவேலு முதலியரின்
அபிதான சிந்தாமணியும் சிறப்பானவை. அவற்றுள் காணக்கிடக்கும் அரிய
செய்திகளுக்குச் சான்றுகளும் தரப்பட்டிருந்தால் மிகப் பயனளித்திருக்கும்.
நம் முன் தலைமுறையினர் செய்த பணிகளை மேம்படுத்துவதும் பின் தலைமுறையினர்
கடமையாகும். செய்வீராக.

[4]வேலைக்காரியின் மகன் வழி வந்தவர்கள் பாண்டவர்களும் கவுரவர்கள் என்பதை
மறைப்பதற்காக, சுக்கிரனின் மகள் மனைவி என்றும் அசுர அரசனின் மகள்
வேலைக்காரி என்றும் கதையைத் திரித்திருக்கக்கூடும். அசுர ஆசிரியன்
சுக்கிரன், தேவர்கள் ஆசிரியன் வியாழன் ஆகியவை இரு கோள்கள். இருவகை
மக்களினங்கள் பின்பற்றிய வானியல் முறைகளை இவை குறிக்கின்றன எனலாம்.
அபிதான சிந்தாமணி சுக்கிரன் A 14 பார்க்க

[5]மாந்தவியலில் இது தாய்வழித் தலைமகனுரிமை (Male primeogeniture in the
matriliueal society) எனப்படும்

[6]இங்கு அரசனின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலப்பரப்புகளில் வரி போன்ற
வருமானங்களை ஆவாக உருவகப்படுத்தியுள்ளனர் என்று விளக்கம் காணலாம்

[7]நாரிகவசன், மூலகன் என்ற சொற்களைப் பார்க்க. இவனது வழி வந்தவன்தான்
இராமன்

[8]பிரகல் + ஆதன், ஆதன் என்பது சேர அரசர்களின் பெயரிலுள்ள
பின்னொட்டுகளில் ஒன்று. பிரகத் என்பதற்கு முதல் என்று பொருள்

[9]திருமாலின் பதின் தோற்றரவுக் கதைகளில் பரசுராமன், நரசிம்மம், வாமனம்
ஆகிய மூன்றும் சேரநாட்டுடனும் மீன் பாண்டிய நாட்டுடனும் பன்றி
சாளுக்கியர்களுடனும் (புலிக்கேசியின் கொடி பன்றி) கண்ணனும் பலதேவனும்
குமரிக்கண்டத்துடனும் தொடர்புடையவையாக இருப்பது தொன்மங்களுக்கும்
அவற்றைப் பதிந்து வைத்திருக்கும் சமற்கிருதத்திற்கும் தமிழர்களுக்கும்
அவர்களது பிறந்தகமான குமரிகண்டத்திற்கும் உள்ள உறவைக் காட்டவில்லையா?

[10]Chambers Twentieth Century Dictionary / New Edition 1972,
Publishers preface காண்க.

[11]தொல். எழுத்து 33.

ஆக்கம்: இரவா - vasudevan.dr@gmail.com

Friday, October 05, 2007

மணமகள்(ன்) தேவை - Puthoor.R.Kumaresan

மணமகள் தேவை:

வருகின்ற நவம்பருடன் அறுபது வயது முடிகின்ற (60 மட்டில்), நாகப்பதனி ஜாதியை சேர்ந்த மனமகனுக்கு தகுந்த இளசான சைசான மனமகள் தேவை...எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இந்த வரன் கஞ்சா (மட்டும்) சுவைப்பது (நீங்கள்) கண்டுக்கபடாது..விதவைகள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், புருஷனுடன் ஊடல் கொண்டு ஊடால வந்தவர்கள் கண்டிப்பாக அப்ளை செய்யக்கூடாது...சொந்தமாக வீடு, நிலம், வாஷிங் மெஷின், அண்டர்வேர் காயவைக்க கொடி எல்லாம் உள்ள இந்த வரன் சமூகத்தில் ஒரு ஹாட் கேக்...நாகப்பதனி ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்புகொள்க...

மணமகன் தேவை:

57 வயது நிரம்பிய அரசு வேலை பார்க்கும் அழகான இளம்பெண்ணுக்கு உடனடியாக மனமகன் தேவை..தகுதியான வரன்களுக்கான இண்டர்வியூ, நேரடி நேர்முக தேர்வாக புத்தூர் கே.கே.கல்யாண மண்டபத்தில் நடைபெறும்...தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண் 9884629291

அய்யோ முடியல...!!! என்னால சிரிப்பு தாங்க முடியல....நீங்க அந்த பதிவை ஒருக்கா படிங்க...ஆப்பரேஷன் செய்த வலியை கூட தாங்கிக்கிட்டு சிரிச்சேன்...

என்ன கொடுமை சரவணன் !!!!