Tuesday, February 26, 2008

தமிழச்சியின் பதிவை நீக்க கூடாது...

தமிழச்சி பதிவை நீக்க பாரி.அரசு, உண்மைத்தமிழன் ஆகியோர் பதிவிட்டுள்ளார்கள்...தமிழ் பித்தன் கூட தன்னுடைய பழைய பகையை தீர்த்துக்கொள்ள தமிழச்சியை கலாய்க்க முயல்கிறார்...(இவர் பதிவு நாறிய போது நான் நீக்க கோரிக்கை விடுத்திருக்கனும், ராஸ்கல் வந்துட்டான் நாதாரி)

பாரி அரசுவின் பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை சார் வெளியிடவில்லை...நான் அப்படி ஒன்றும் எழுதவில்லை...தமிழச்சி எழுதவேண்டும் என்று தான் லைட்டாக எழுதினேன்...ஹும்...பழகும் இடம் சரியில்ல என்ன செய்வது ?

அப்படி பார்த்தால் பக்கம் பக்கமாக எழுதும் உண்மைத்தமிழன் பதிவை நீக்கவேண்டும்...

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதும் தமிழ் பித்தனின் பதிவையும் நீக்கவேண்டும்...

புரியாமல் கவிதை எழுதும் அய்யனாரை நீக்கவேண்டும்..

எப்போதும் மொக்கை போடும் அபி அப்பாவை நீக்கவேண்டும்...

குசும்பை தொழிலாக கொண்ட குசும்பனை நீக்கவேண்டும்...

எல்லாரையும் நீக்கிடுங்க...யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்தப்போறீங்க ?

தமிழச்சி பதிவை படிக்க விரும்பவில்லை என்றால் மூடிவிட்டு போங்கள்..யாரும் இங்க அழல அதுக்காக...பெண்ணீயத்துக்கு எதிராக உங்கள் முகத்திரை இதன் மூலம் கிழியுது....

Tuesday, February 12, 2008

Wishes !!!! கருத்து கந்தசாமி !!!!உங்கள் கருத்துடனே நானும் ஒரு பிட்டைப் போட்டுக் கொள்கிறேன். !!!!!

Wishes : ILA...Wishes ILA...!!!!!!!

Monday, February 11, 2008

கிழக்கு தைமூர் மேட்டர்.....வழக்கமாக அவுஸ்திரேலிய பயணங்களின்போது நான் மிகவும் ரசிக்கும் தீவு தைமூர்...இரண்டு பக்கமும் சேர்ந்தால் கூட மொத்தமே 10 கி.மி அகலம் இருக்கும் என்று நினைக்கிறேன்...ஆனால் உயர உயர மரங்களுடன் ரொம்பவே ரசிக்கும்படி இருக்கும்...

விமானத்தில் உள்ள மேப்பில் திமோர் கடல் என்று பெரிய கடல்பரப்பு இருக்கும்...மனசுக்குள் அப்பாடா...அரைக்கிணறு தாண்டிட்டோம்...அடுத்து டார்வின்...அடுத்து சிட்னி...என்று கணக்கு போட்டுக்கொண்டே போவதும் இந்த கிழக்கு தைமூரை பார்த்துக்கொண்டுதான்...

போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தில் இருந்து 1977ல் விடுபட்டதுன்னு நினைக்கிறேன்...அதிலிருந்து தைமூரில் இந்தோனேசிய ஆதிக்கம்...1999ல இந்தோனேசியா - போங்கடான்னு விட்டுட்டானுங்க...அட 2002ல தாங்க உருப்புடியான ஜனநாயகம் மலர்ந்தது...அதை வாங்கிக்கொடுத்த ஜோஸ் ரமோஸ் கோர்த்தாவுக்கு நோபல் பரிசு ( அமைத்திக்கான) கிடைச்சது...அதே சமயம் அவர் கிழக்கு தைமூரின் அதிபராகவும் பொறுப்பேற்றாருங்க...

2006 ல முன்னாள் காவல்துறை தலைவரான அல்பர்டோ ரோனிடோவுக்கு நாட்டை ஆளனும்னு ஆசைவந்து கலவரம் - காம்ப்ரமைஸ் எல்லாம் ஆச்சுங்க...(அந்தாளுக்கிட்ட மொத்தமே 600 சோல்ஜர்ஸாம்)...( அதுலேயே எனக்கு டவுட்டு...)

பாவிப்பய...ரெண்டு ஜீப்ல வந்து அதிபரை அதிகாலையில 4.30 மணிக்கு போட்டுட்டான்...குண்டு காயத்தோட, ஆஸ்திரேலிய படையினர் அவரை டார்வினுக்கு (ஆஸ்திரேலியாவில் உள்ளது) தூக்கிட்டு போயிருக்காங்களாம்...ஆள் கோமா ஸ்டேஜ்ல இருக்காராம்...

அதிபர் மாளிகை செக்கியூரிட்டிகளோட நடந்த சண்டையில ரோனிடொவும் செத்துட்டானாம்...உலக நாடுகளோட அதிபர்கள் எல்லாம் கவலை தெரிவிச்சிருக்காங்க...

நம்ம இந்திய பிரதமர் அலுவகத்துல இருந்துகூட இரங்கல் அறிக்கையும், தைமுரில் ஜனநாயகத்தை நிலைநாட்டனும், அப்பாவி மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் காக்கனும்னு சிங்ஜி அறிக்கை உட்டிருக்கார்...

எங்கியோ இருக்க தைமூர் தீவுக்கு குரல்கொடுக்கும் இந்திய பிரதமர் அலுவலகம், இங்கே இருக்க இலங்கைத்தீவில் இருக்கும் தீவிரவாதியான ராஜபக்சேவிடம் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மனித உரிமைகள் காக்கவும் அறிக்கை விடாமல் வாய்மூடி மவுனியாக உள்ளது ஏனோ ? மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி எல்லாம் என்னைக்கு வாய திறக்குமோ ?