Wednesday, February 28, 2007

கொஞ்சமேனும் இம்சைப்படுத்த இந்த படங்கள்
முடியாது. நிறுத்தமுடியாது...அவங்களை நிறுத்தச்சொல்லுங்க, நான் நிறுத்தரேன்...

Friday, February 23, 2007

அடிச்சா இப்படி அடிக்கனும்அடிச்சா இப்படி அடிப்போம்...படத்தை பார்த்துட்டு என்னை அடிக்க வராதீங்க...வர்ட்ட்டா..

இஸ்லாமை பழித்து ப்லாக்கியவருக்கு 4 ஆண்டு ஜெயில்


இது ஒரு சிறிய இண்பர்மேட்டிவ் பதிவு....அப்துல் கரீம் நபில் என்கிற 22 வயது இளைஞருக்கு இது கொஞ்சம் போறாத காலம்தான்...இஸ்லாமையும், எகிப்து ப்ரெஸிடெண்டையும் பழித்து ப்ளாக்கியதால் இவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது...இங்கே முழுத்தகவல்...

கட்டற்ற இடங்களுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்து களி தின்னவைக்க முடியும் என்று நிரூபித்துள்ளது இந்த தீர்ப்பு...ஜாக்கிரதையா இருங்கப்பா....அப்துல் கரீமின் ப்லாக்..அரபியில் இருக்கும்...பயந்துடாதீங்க...

Thursday, February 22, 2007

சுண்டக்கஞ்சி with கோயிந்தசாமி & கொலசாமியுடன் - நொச்சிக்குப்பம் பீலா

சுண்டக்கஞ்சி with கோயிந்தசாமி & கொலசாமியுடன் - நொச்சிக்குப்பம் பீலா

நம்ம அண்ணாத்தே நொச்சிக்குப்பம் பீலாவை பட்டினப்பாக்கத்தாண்ட கண்டுக்கினேன். அப்பால அப்படியே ஒரு இண்டர்வியூ வெச்சாக்க இன்னான்னு தோனுச்சு. அதேன், அப்படியே பத்துரூவா மக்கு சுண்டக்கஞ்சி ஒரு மக்கும், அயிர மீனு வறுவல் ஒரு ப்ளேட்டும், ரெண்டு கட்டு பீடியும் வாங்கித்தந்ததுல பீலா கைலிய வாகா மடிச்சு உட்டுக்கினு குந்திட்டார்..இணையத்துல போடனும்னா ரீஜெண்டா இருக்கனுமாமே? அதான், பாசையை மாத்துற ஏஜண்டு ஒருத்தன புடிச்சு இணையத்துல வரமாதிரி எழுதி வாங்கிட்டேன். இதுல காப்பி, டீ ரைட்டு பிரச்சினை ஏதும் வந்துராதே? ஏரோப்பிளேனுலேயே வித்தவுட்ல போற எனுக்கு இன்னாடா காப்பிரைட்டு ?

வாயை புடுங்கற ரவுண்டு:-

(டேய், இவன் பல்லு விளக்கியே பத்து நாள் இருக்குமே, இவன் வாயை புடுங்கலாமா, இல்லையா ? )

கோயிந்து:- பீலா, பட்டினப்பாக்கம் எதுக்கு வந்தீங்க ?

எதுத்த ஊட்டு சரோஜாவ எந்த நாதாரியோ இங்க தள்ளிக்கினு வந்துட்சி. அதுல பாரு, எவன் எந்த நாதாரிய தள்ளிக்கினு போனா எனக்கு இன்னா..அவ கைல எம்பொஞ்சாதி நூத்தம்பது ரூவா குட்திருந்தாளாம். சரக்கடிக்க காசு குடுறீன்னா, அவகிட்ட போய் வாங்கிகோன்னா...அப்பால அவள தேடனா, அவ புருசனுக்கு ஜபுரு காட்டிட்டு இங்க வந்து ஒரு வாரமாச்சாமே..அதான் இந்த ஏரியாவுல தெம்புடுவாளானான்னி பாக்க வந்தேன்.

கோயிந்து:- கடைசியா எப்ப சரக்கடிச்சீங்க? ஒரு முழு மக்கு சுண்டக்கஞ்சிய காஞ்ச மாடு கம்புல ஊந்த மாதிரி நாட்டறீங்க?

இன்னா ஒரு வாரம் ஆச்சு, **நட்டாம்பட்டி(TM) சரக்கு அடிச்சு....அதுல பாரு கோயிந்து, நீயும் க்வாட்டர் பாட்டுல கொத்துக்கொத்தா குடிச்சுத்தான் க்வாட்டர் கோயிந்தன்னு நல்ல பேரு வாங்கியிருக்க நம்ம ஏரியாவுல. ஆனா எனக்கு சரக்கு சல்லீசா கிடைக்க மாட்டேங்குதே.உம்பொஞ்சாதி எங்க சிறுவாடு வச்சிருக்கான்னு உனுக்கு தெரியுது.எம்பொண்டாட்டி எங்க வக்கிறான்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள முன்னாடி அடிச்ச மப்பும் எறங்கிடுது...

கோயிந்து: உங்க ஏரியா களவானிங்களை பத்தி நீங்க இன்னா சொல்றீங்க?

இவனுக்களுக்கு சுத்தமா வேலை வெட்டி கிடையாது..எவ கழுத்துல தாலிச்செயின் பெருசா இருக்கோ அவளுங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இழுத்துனு ஓடி தாலிச்செயினை ஆட்டையப்போட்டு குடிச்சு கும்மாளமடிக்கறானுங்க..ஏழாவது படிக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கான் ஒரு களவானிப்பய..கொடியில காயற துனியை எல்லாம் எடுத்து வித்து குடிச்சிடுறானுங்க..என்னோட அண்ட்ராயரை தள்ளிக்கினு பூட்டானுங்க நாதாரிங்க..

அனானி கொலசாமி : நீங்க அண்ட்ராயர் கடைல வாங்கினீங்களா இல்ல சுட்டுக்கினு வந்தீங்களா ?

டாய், இன்னா டபாய்க்கற. அது என்னோட மாமனார் ஊட்ல இருந்து சீதனமா வாங்கியாந்தது...

ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு:-

கோயிந்து: அவன விட்டுத்தள்ளுங்க. நேத்து நொச்சிக்குப்பம் டாஸ்மாக்ல ஏதோ பிரச்சனை பண்ணீங்களாமே ? இன்னா ?

அது வந்து கோயிந்து, (விவேக் ஸ்டைலில் படிக்கவும்), நானா எந்த பிரச்சினையயும் தேடிப்போறதில்ல. ஏதாவது பிரச்சினை வந்தாக்க, சொல்லி அடிப்பேன். நான் வாங்கினது மானிட்டர் குவாட்டர். அதுக்கு அறுவது ரூபா குடுத்தேன். அம்பத்தி எட்டுரூவா போவ மீதிய அவன் குடுக்கனும் இல்ல ? கேட்டா நாதாரி சில்லற இல்லன்னுது..நான் வாங்குற சைட்டிஸ்ஸே அம்பது பைசா ஊறுகா மட்டைதான் தான்..மீதி ஒரு ரூவா வாட்டர் பாக்கெட், அம்பது பைசா ப்ளாஸ்டிக் டம்ளர். அதான்...புடிச்சேன்...சட்டைய...வாயில வச்சிருந்த ப்ளேடை நாலு துண்டா கடிச்சு புளிச்சுன்னு துப்பினேன் மூஞ்சியில...கொய கொயன்னு ஆயிருச்சு...

அனானி கொலசாமி: போதும் போதும் நிறுத்துங்க...நோ வன்முறை...

கோயிந்து: திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில்ல ஏதோ தகறாறு செஞ்சீங்களாமே ?

அதா, அது ஒன்னுமில்ல....ங்கொய்யால, நான் குச்சுட்டு நாக்கு வறண்டு கடந்தேன்...தேங்காய ஒடச்சு தண்ணிய கீழ ஊத்தனான்...நாஞ்சொன்னேன், டேய் அயிறு, கீய ஊத்தறத அப்படியே என் வாயில ஊத்துடான்னு....அந்தாளு அபிஷ்டுன்னு திட்டுட்டு போனான்...அதான், தேங்கா மூடிய எடுத்து மண்டைய தொறந்துட்டேன்...

கோயிந்து: அய்ய...அப்புறம் தேங்காதண்ணி கிடைச்சுதா இல்லையா ?

அனானி கொலசாமி : டேய் நீங்க ரெண்டுபேரும் உருப்படமாட்டீங்க..

கொலைசாமி குழுவினர் : if you dont have a place to kummi, just create it rather then searching for it.

மசாலா படம் ஒன்று...!!!! (A)

அருமையான மசாலா படம் இது..பொதுவா நான் இப்படிப்பட்ட படங்களை போடக்கூடாதுதான்..இருந்தாலும் சிம்பு நயன் படம் போட்டபிறகு எதிர்பார்ப்பு அதிகமாயிருச்சின்னா அது மிகையில்லை....மசாலா படம் போட்டாச்சு...


**
**

**


ப்ளீஸ், ஆட்டோ அனுப்பாதீங்க...அது என்ன (A) ன்னு கேக்குறீங்களா ? அனைவரும் பாக்கலாம் என்ற சிம்பல் அது...

சிந்தாநதி தந்த சிக்கன் மசாலாக்கள் பிற்சேர்க்கை

Wednesday, February 21, 2007

***க.மு.க*** கழுதையின் மூஞ்சியில் கரி

நன்பர் கொசப்பேட்டை கொலசாமி கடந்த 2000 ஆண்டு ஒரு பதிவு போட்டிருந்தார். அதை கண்டு கடுமையான கொலைவெறியும் ஆத்திரமும் அடைந்தேன். நான் அவர் ஜல்லி மட்டும் தான் அடிப்பார் என்று நினைத்திருந்தேன்..ஆனால்

கடுமையான பல்லியும் அடித்திருந்தார்.

இனிமேலாவது இப்படி செய்யமாட்டார் என்று நம்பி இந்த பதிவை கும்மிகளிடம் கொடுக்கிறேன்.

நான் ஏழாவது மூன்று முறை பெயிலாகி படித்ததில் இருந்து இப்படித்தான் கண்ட இடத்தில் செலக்ட்டிவ் அம்னீஷியாவுடன் வாந்தி எடுத்து வருகிறேன்.

ஒரு பழமொழியில் சொல்வது போல i cant keep my mouth shut, becos its shit.

இதில் shit = ஆயி என்று வைத்துக்கொண்டால் மிக கேவலமான அர்த்தம் வந்து தொலைகிறது. இந்த கருமத்தையும் பார்த்து தொலையுங்கல். ( நான் அப்படித்தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதுவேண், கண்டுக்கப்ப்ப்ப்ப்ப்டாஅது)
வர்ட்ட்டா...!!!

Wednesday, February 14, 2007

சொல்லுங்க ஒரு கருத்து !!! வெல்லுங்க பரிசு !!!

நம்ம சிந்தா நதி ஒரு போட்டி வெச்சுருக்காரு மக்களே...!!! ஆட்டையில் இறங்கி ஒரு கருத்தை தெளிங்க...யாரு கண்டா, அது பரிசை வெல்லும் கருத்தா கூட இருக்கலாம்...

"காதலர் தினம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பல இடங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. நீங்களும் அந்த விவாதத்தில் ஏற்கனவே பங்கேற்றிருப்பீர்கள். ஆனாலும் காதலர் தினத்திலேயே நடக்கும் இந்த பட்டி மன்றத்தில் கலந்து கொண்டு நீங்கள் விவாதிப்பது ஒரு சுவையான நிகழ்வாக இருக்கக் கூடும்.

காதலர் தினம் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார யுக்தி என்பது உட்பட, காதலுக்கும் காதலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் தேவையா என்பது வரை விவாதங்கள் நடந்து வந்தாலும் காதலர் தினம் என்னவோ களை கட்டித்தான் வருகிறது."


வெற்றிக்கு வாழ்த்துக்கள்...அருமையான புத்தகங்கள் வீடு தேடி வரப்போகுதாமே...(அய்யய்யோ, பரிசு மேட்டரை லீக்கவுட் செஞ்சுட்டனே ? )

மேலும் படிக்க

Tuesday, February 13, 2007

காதலர் தினம்: என்ன உடை- என்ன அர்த்தம்

எல்லோருக்கும் தெரியாதுல்லையா...அதான் அப்படியே ஒரு போஸ்டிங்..சிவசேனா மன்னிக்கவும்.

நீலம் : நான் சும்மாத்தானிருக்கேன், ப்ரீரீ

பச்சை : நான் எனக்கான ஜீவனுக்காக காத்திருக்கேன்

ஆரஞ்சு : இன்னைக்கு என்னோட லவ்வை சொல்லப்போறேன்

பிங்க் : என்னவன் / என்னவள் சொல்லிய காதலை ஏத்துக்கிட்டேன்

வெள்ளை : ஏற்கனவே நான் புக்காகிட்டேன்.

மஞ்சள் : முறிந்த காதல் என்னோடது..

க்ரே : இதிலெல்லாம் எனக்கு இண்டரஸ்ட் இல்லை

சிகப்பு : ஆளை விடுப்பா !!!!

Tuesday, February 06, 2007

ஹாட் பிக்சர் : நயன்தாரா - சிம்பு ( A )

இது ஒரு அடல்ஸ் பதிவு, குழந்தைகள் பார்த்து தொலைக்க வேண்டாம்...

சிம்பு, நயன் : சாதாரண படம் :


பப்படம்:வக்கிர எண்ணம் படைத்த சிம்பு, நயன்தாரா நல்லா இருக்கறது புடிக்காமே இப்படிப்பட்ட படங்களை வெளியிடுது. இது சாதாரண ஹியூமன் எதிக்ஸுக்கு முரணானது. இது போன்ற அரை லூசை அதன் அப்பன் கரடிக்குட்டி வளர்ப்பது , அதுவும் "நீதான் வருங்கால சூப்பர் ஸ்டார்" என்று வளர்ப்பது கேவலத்திலும் கேவலம்.விஜய டீ.ஆர், எழு,வீசு அருவாளை.

டிஸ்கி: இந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் இ-மெயிலில் வந்த அனானிமஸ் அனுப்பியது :))) ஆகவே என் மீது எந்த வழக்கும் போடவேண்டாம், ஹி ஹி !!!