Tuesday, August 25, 2009

நமது கணினியை உளவு பார்க்கிறதா இட்லிவடை வலைப்பதிவு ?

நான் இப்போதெல்லாம் கூகிள் க்ரோம் உபயோகப்படுத்துகிறேன். காரணம், கூகிள் க்ரோமின் செக்யூரிட்டி எனக்கு பிடித்திருக்கிறது.

இட்லிவடை பதிவை திறந்தால் இட்லிவடை பல குக்கிகளையும், அன்னியலோகம் டாட் காம் என்ற இணைய தளத்தில் இரண்டு குக்கிகளையும் என்னுடைய கணினியில் நிறுவுகின்றது.

குக்கிகள் என்றால் என்ன ? குக்கி என்பது ஒரு உளவாளி போன்றவர். நமது கணியில் அமர்ந்துகொண்டு தகவல்களை வெளி ஆட்களுக்கு தருபவர் இந்த குக்கி.

குக்கி பற்றி திண்ணையில் குமாரபாரதி அவர்கள் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையில் :

வலைப் பட்சணங்கள்

பிறிதொரு வகை ஊடுருவல், வலையில் உலவும் பொழுது நடைபெறுகிறது. பல வகை பட்சணங்களை - குக்கிகளை கணினியில் (C:WindowCookies) விதைக்கின்றன. பல குக்கிகள் வலைத்தொடரபுகளை விரைவில் ஏற்படுத்தத் துணைபுரிகின்றன. இன்னும் குறிப்பாகக் கூறினால் குக்கிகள் இல்லாமல் சில தளங்களுடன் ஊடாட முடியாது. குக்கிகளை ஏற்றுக் கொள்ளவும் என்ற கட்டளையை Tools>>Internet Options >>Advanced ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் சில வகைக் குக்கிகள் கணினியில் உட்கார்ந்து கொண்டு பல தகவல்களை வெளியேற்று கின்றன.எங்கள் வாழ்வு முறைகள் வாங்கும் பொருட்கள் போன்றவற்றை சந்தைப் படுத்துகை ஆராய்ச்சிகளுக்காக சேகரித்து அனுப்புகின்றன. இவை மிக நாசூக்காகவே இயங்குவன. உலக வலைத்தளத்தில் எனது நடவடிக்கைகளை ஆராய்ந்து இவர்கள் சந்தை கட்ட முனைந்தால் .. .


திண்ணை கட்டுரையின் முழு உரல் > http://www.thinnai.com/?module=displaystory&story_id=40106021&format=html

திண்ணை கட்டுரையின் சுட்டி

குக்கி பற்றிய விக்கி பக்கம். குக்கி விக்கி.இட்லிவடை இன்ஸ்டால் செய்த இட்லிவடை தளத்தின் குக்கிகள்.
இட்லிவடை இன்ஸ்டால் செய்த அன்னியலோகம் தளத்தின் குக்கிகள்.


குக்கிகள் மூலமாக நாம் ப்ரவுஸ் செய்த தளங்கள், நமது புரொபைல், நமது தனிப்பட்ட தகவல்களை திருடமுடியும். நமது அலுவலகம் எது, நமது நாடு என்ன, நாம் ப்ரவுஸ் செய்யும் கணினி என்ன என்பது வரை திருட முடியும் என்று ஒரு தளத்தில் படித்தேன்.

இட்லிவரை தான் மட்டும் வரவில்லை, அன்னியலோகம் தளத்து நன்பரையும் என்னுடைய கணினி பெட்டிக்குள் நுழைத்துவிட்டார். ஒரு வீட்டுக்குள் சொல்லாமல் நுழைவது ட்ரெஸ்பாஸிங். நீங்கள் என்னுடைய வீட்டுக்குள் சொல்லாமல் ஏன் நுழைந்தீர்கள் ?

நான் தினமும் பார்வையிடும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் செய்யாத ஒரு வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் ? உங்களது உண்மையான நோக்கம் என்ன ?

அடியேன் கேட்பது இதுதான். தொழில் நுட்பம் அறியாத பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை ஏன் இப்படி உளவு பார்க்கிறீர்கள் ? நேர்மையான பதிலை இட்லிவடை குழுவினரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

Sunday, August 09, 2009

இலங்கை பாஸ்போர்ட் ? விசா கிடையாது : இந்தியன் எம்பஸி


ஆகஸ்ட் 09 2009 : கடந்த ஏழு ஆண்டுகளாக நார்வேயில் வசித்துவரும் இலங்கையை சேர்ந்த தமிழர் செல்வராசா. இவர் நார்வேயில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ஒவ்வொரு ஆண்டும், நார்வேயின் குளிர்காலத்தில் தமிழகத்தில் பயணம் செய்து, திருத்தலங்களை தரிசனம் செய்வது வழக்கம். குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது, சரவணா ஸ்டோர்ஸ், பழனி முருகன், திருப்பதி , திருவண்ணாமலை போன்ற தலங்களை தரிசிப்பதுடன், பெரிய அளவில் தன்னுடைய நிறுவனத்துக்கு தேவையான பொருட்களையும் கொள்முதல் செய்வார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக சுற்றுப்பயணத்துக்கான விசாவை வழங்கி வந்த இந்தியன் எம்பஸி, இந்தமுறை இந்திய விசா தர மறுத்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், இந்திய எம்பசி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சிகப்பு நிற பாஸ்போர்ட், அதாவது நார்வேஜியன் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே இந்திய விசா தரமுடியும், இலங்கை பாஸ்போட்டுக்கு இந்திய விசா தர முடியாது என்று மறுத்துள்ளனர்.

எந்தவிதமான குற்றப்பின்னணி அற்றவரான செல்வராசா, எழுபது வயதுக்கு மேல் கடந்தவர். தனக்கு ஒரு சீனியர் சிட்டிஸன் என்ற வகையிலாவது இந்தியா செல்ல விசா வழங்கவேண்டும் என்று கோரியபோது, ஓஸ்லோ இந்திய எம்பஸி அதிகாரிகள் எந்த விதத்திலும் மனமிரங்கவில்லையாம்...

தமிழர்கள் இந்தியாவுக்கு வரும்போது, இந்திய சுற்றுலாத்துறையில் இருந்து, விமான துறையில் இருந்து, அவர் தங்கும் ஹோட்டல், அவர் வழக்கமாக வாங்கும் பழனி பஞ்சாமிர்த கடைக்காரரில் இருந்து அனைவருக்கும் லாபமே, எந்த விதத்திலும் நட்டமில்லை.

இது நார்வே எம்பஸியில் மட்டுமா, அல்லது மற்ற அனைத்து எம்பஸிகளிலும் இதே நிலையா, இந்திய வெளியுறவுத்துறை ஏதேனும் குறிப்பிட்ட வகையிலான வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளதா, இலங்கை கடவுச்சீட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ?

அப்படி வழிகாட்டும் நெறிமுறைகள் ஏற்கனவே இருந்தால் கடந்த ஐந்தாண்டுகளாக எப்படி அனுமதி வழங்கப்பட்டது ? இதுபோன்ற 'திடீர்' வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியுறவுத்துறைக்கும், இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் தெரிந்துதான் உருவாக்கப்படுகிறதா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன...

தகவல் தொழில்நுட்பம் பரவலாகிவிட்ட இந்த நாட்களில், அரசு துறையிலும், அமைச்சகத்தில் இருந்தும் வலைப்பதிவுகளை பார்வையிடுவதாக செய்திகள் வந்துள்ளவேளையில் இதனை வலைப்பதிவு முலம் வெளியிடுகிறேன்..

இந்த பதிவை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆ.ராசா போன்ற வலைப்பதிவு செய்யும் தமிழக அரசுத்துறையினருக்கும் அனுப்புகிறேன், மேலும் ஆங்கிலத்தில் எழுதி, இந்திய எக்ஸ்டர்னல் அபையர்ஸ் மினிஸ்டரிக்கும் அனுப்புகிறேன்..அதனால் உங்கள் மறுமொழிகளில் வேறெதுவும் விவரங்கள் இருந்தால் தெரிவியுங்கள்...இணைத்துக்கொள்கிறேன்...

தமிழக புலனாய்வு பத்திரிகைகள் தொடர்புகொண்டால், மேல்விவரங்களையும் தெரிவிக்கிறேன்.

Monday, August 03, 2009

எங்கே தியாகி எங்கே தியாகி ? 5+

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்க்ககூடாத இடுகை

இந்த பதிவில் எங்கோ ஒளிந்திருக்கும் தியாகியை கண்டுபிடியுங்கள். அவரது அரும் சாதனைகளை பட்டியலிட இப்போது எனக்கு நேரமில்லை. முந்தைய ராக்கி ஷாவந்த் இடுகைக்கு முக்காடு போட்டு வந்து பார்த்தவர்கள் (ஆயிரம் பேருக்கு மேல்) இந்த இடுகையையும் பார்த்து விட்டு, பின்னூட்டத்தில் ஏதாவது ஜொள்ளிவிட்டு மன்னிக்க சொல்லிவிட்டு போகவும்.ஆனா இந்த ஆட்டத்துல எதாவது மேட்ச் பிக்ஸிங் இருக்குமோ என்பது கொஞ்சம் சந்தேகமாக உள்ளது. ஏய் உனக்கு ஏண்டா வயித்தெரிச்சல் (ரசிகையர் மன்றம்)