Monday, December 27, 2010

அண்ணன் உண்மை(த்)தமிழனுக்கு கடிதம்..

அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு..

நான் தங்களின் 'மீண்டும் போலிப்பிரச்சனை ! தாங்கலைடா சாமி. முருகா. ஏன் இந்த சோதனை' என்ற புலம்பல் பதிவு பார்த்தேன். அண்ணே இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ? தாங்கள் குறிப்பிட்ட உஜிலாதேவி என்ற தளத்தில் எந்தவிதமான ஆபாச மேட்டர்களோ, அட்லீஸ்ட் அனுஷ்கா படங்களோ கூட இல்லாமல் வெறும் வெத்துவேட்டாக உள்ளதே ? இதை போய் எப்படி நீங்கள் போலிப்பதிவு என்று சொல்லலாம் ? அல்லது நார்த் இண்டியன் வாசனை வீசும் இந்த பெயரிலேயே அனைவரும் கிக் ஆகிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? தமிழன் அவ்வளவு காய்ந்து போயா கிடக்கிறான் ?

மேலும் உண்மைத்தமிழன் என்ற பெயரை நீங்கள் பேடட்ண்ட் / இண்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி போல கருதுவது எந்த விதத்தில் நியாயம் ? அல்லது தாங்கள் மட்டும் தான் உண்மைத்தமிழன் மற்ற தமிழன் எல்லாம் பொய்த்தமிழன் என்பது போல கருதுகிறீர்களா ? உங்களுக்காக த் என்ற எழுத்தை கஷ்டப்பட்டு மாற்றி தனித்து தெரியும்படி உண்மை தமிழன் என்று தெளிவாக உள்ளதே ?

அதுவும் அந்த உண்மை தமிழனும் ஆன்மீகம் சோதிடம் ராமாயண ஆய்வு, மகாபாரத ஆய்வு (பெரிய சயிண்டிஸ்டா வருவார் பாருங்க) போன்ற ஆத்திக அயிட்டங்களை தானே பிரித்து மேய்கிறார் ?

தாங்கள் குறிப்பிட்ட ஜாக்கி சேகர் ஜாண்டிவெஜ் அண்டு நாண்டிவெஜ் பதிவில் அவர் என்ன ஆபாச பின்னூட்டமா போட்டிருக்கிறார் ? இன்னும் நூறு நாட்களில் சென்னை சரிசெய்யபடும். பகவானுக்கே வெளிச்சம். என்று எழுதிவிட்டு தன்னுடைய பதிவின் சுட்டி ஒன்றை கொடுத்துவிட்டு போய்விட்டார். அதை இவ்வளவு பெரிதுபடுத்துவது முறையா ? நீதியா ? இது தான் தாங்கள் சூட்டிக்கொண்ட உண்மைத்தமிழன் (234345345345345345) என்ற பெயருக்கு அழகா ?

பல ஸ்க்ரீன் ஷாட்டுகளை எடுத்து நீளமாக (ஏற்கனவே உங்கள் பதிவுகள் புத்தகம் அளவுக்கு இருக்கிறது, உலாவியில் லோட் ஆக அரை மணி நேரம் ஆகிறது என்ற புகார் உள்ளது) பதிவு போட்ட நீங்கள், திரு உஜாலாதேவி அலைஸ் உண்மை(த் மிஸ்ஸிங்)தமிழன் தன்னுடைய அலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளாரே ? ஒரு போன் செய்து கேட்டிருக்கலாமே ?

போகிற போக்கைப்பார்த்தால் கடிதத்தில் தங்கள் உண்மையுள்ள என்று எழுதுபவர்கள் இங்கிதம் தெரியாமல் தங்கள் பெயரின் முதல் வார்த்தையை உபயோகப்படுத்திய போலிகள் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே ? ஒரு கற்பனைக்காக வைத்துக்கொள்வோம், இது குறித்து தாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துவிடுகிறார்கள். உண்மை என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறவர்கள் எல்லாம் போலிகள் என்று. அய்யகோ. நினைத்துபார்க்கவே கொடூரமாக உள்ளதே ! (கர்ணகடூரம் என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன். கர்ணன் என்பது சிவாஜி படம், மகாபாரத கேரக்டர். யாராவது சண்டைக்கு வந்திடப்போகிறார்கள்)

இம்புட்டு சட்டம் பேசும் நீங்கள் உண்மை(த் இல்லை)தமிழன் அவர்களை போலி என்று எப்படி சொல்லப்போச்சு ? அவர் வருங்காலத்தில் கன்னாபின்னாவென பிரபல பதிவர் ஆகியபிறகு, பழைய போலி மேட்டர் எல்லாம் எடுத்து படித்துவிட்டு, தன்னை போலியோடு ஒப்பிட்டு இவ்வளவு அவமானப்படுத்தியிருக்கிறாரே இந்த உண்மை(த் இருக்கு)தமிழன் என்று வருந்தினால் நீங்கள் எப்படி அவரை ஆற்றுப்படுத்தப்போகிறீர்கள் ?நீங்கள் இப்போது போட்டுள்ள பதிவு, தேவை-இல்லாத-சுய-இரக்க-மேனியா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் செய்யும் செயல். அருகாமையில் உள்ள ஆங்கில மருத்துவ கெமிஸ்டிடம் தன்னம்பிக்கை-டானிக்-மிக்ஸிங்லெஸ் கொஞ்சம் வாங்கி ராவாக உள்ளெ விடவும். உங்கள் வயசுக்கு தகுந்தது போல அஞ்சலிதேவியின் கவர்ச்சி படம் ஒன்றை இட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும்.

போட்டோவில் புளிமூட்டை போல போஸ் கொடுக்கும் அந்த நபர், பார்ப்பதற்கு பச்சப்புள்ளை போல இருக்கிறார். அவரை போய் நீங்கள் எப்படி போலி என்று சொல்லப்போச்சு ? ஆகவே உங்கள் தவறை நினைத்து அப்பன் முருகனிடமும் உண்மை தமிழனிடமும் மன்னிப்பு கேட்டு பகிரங்க பதிவு வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவன்,
தங்கள் உண்மை(?) யுள்ள
செந்தழல் ரவி

பிற்சேர்க்கை:

உண்மையான உண்மைத்தமிழன் இளையராஜா பிடிக்கும் அந்த படம் பிடிக்கும் என்று போட்டிருப்பது போல உண்மை தமிழனும் போட்டிருப்பது கூட தவறு என்று சொல்லியிருக்கிறார் அண்ணன். இது என்ன காமெடி ? ரசனை இரண்டு பேருக்கும் ஒன்றாக இருக்கக்கூடாதா ?

மேலும் பரிதாபப்பட்ட அந்த ஜீவன் உண்மையாரின் பதிவில் வந்த அய்யா நான் என் பெயரையே மாற்றிக்கொள்கிறேன் என்று சொல்லிய இந்த பின்னூட்டம் :


உண்மை தமிழன் said...

பாஸ் மன்னிச்சுருங்க உங்கள் பெயர் உண்மை தமிழன் என்று எனக்கு தெரியாது மன்னிச்சுருங்க எனக்கு இந்த பெயர் பிடிச்சிருந்து அதனால் வச்சேன் இப்போதான் ஜாக்கி அண்ணன் ப்ளாக் பார்த்தேன் அதுல உங்க கமெண்ட் இருந்து அதனால் உங்கள் ப்ளாக்பக்கம் வந்தேன் மீண்டும் மன்னிச்சுருங்க உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் மாத்தி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்

இதையும் படிச்சி பாருங்க ( ஒரு பதிவின் சுட்டியை கொடுத்துள்ளார். இவரின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை )

Read more: http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_1410.html#ixzz19NscPgbo