Monday, December 27, 2010

அண்ணன் உண்மை(த்)தமிழனுக்கு கடிதம்..

அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு..

நான் தங்களின் 'மீண்டும் போலிப்பிரச்சனை ! தாங்கலைடா சாமி. முருகா. ஏன் இந்த சோதனை' என்ற புலம்பல் பதிவு பார்த்தேன். அண்ணே இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ? தாங்கள் குறிப்பிட்ட உஜிலாதேவி என்ற தளத்தில் எந்தவிதமான ஆபாச மேட்டர்களோ, அட்லீஸ்ட் அனுஷ்கா படங்களோ கூட இல்லாமல் வெறும் வெத்துவேட்டாக உள்ளதே ? இதை போய் எப்படி நீங்கள் போலிப்பதிவு என்று சொல்லலாம் ? அல்லது நார்த் இண்டியன் வாசனை வீசும் இந்த பெயரிலேயே அனைவரும் கிக் ஆகிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? தமிழன் அவ்வளவு காய்ந்து போயா கிடக்கிறான் ?

மேலும் உண்மைத்தமிழன் என்ற பெயரை நீங்கள் பேடட்ண்ட் / இண்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி போல கருதுவது எந்த விதத்தில் நியாயம் ? அல்லது தாங்கள் மட்டும் தான் உண்மைத்தமிழன் மற்ற தமிழன் எல்லாம் பொய்த்தமிழன் என்பது போல கருதுகிறீர்களா ? உங்களுக்காக த் என்ற எழுத்தை கஷ்டப்பட்டு மாற்றி தனித்து தெரியும்படி உண்மை தமிழன் என்று தெளிவாக உள்ளதே ?

அதுவும் அந்த உண்மை தமிழனும் ஆன்மீகம் சோதிடம் ராமாயண ஆய்வு, மகாபாரத ஆய்வு (பெரிய சயிண்டிஸ்டா வருவார் பாருங்க) போன்ற ஆத்திக அயிட்டங்களை தானே பிரித்து மேய்கிறார் ?

தாங்கள் குறிப்பிட்ட ஜாக்கி சேகர் ஜாண்டிவெஜ் அண்டு நாண்டிவெஜ் பதிவில் அவர் என்ன ஆபாச பின்னூட்டமா போட்டிருக்கிறார் ? இன்னும் நூறு நாட்களில் சென்னை சரிசெய்யபடும். பகவானுக்கே வெளிச்சம். என்று எழுதிவிட்டு தன்னுடைய பதிவின் சுட்டி ஒன்றை கொடுத்துவிட்டு போய்விட்டார். அதை இவ்வளவு பெரிதுபடுத்துவது முறையா ? நீதியா ? இது தான் தாங்கள் சூட்டிக்கொண்ட உண்மைத்தமிழன் (234345345345345345) என்ற பெயருக்கு அழகா ?

பல ஸ்க்ரீன் ஷாட்டுகளை எடுத்து நீளமாக (ஏற்கனவே உங்கள் பதிவுகள் புத்தகம் அளவுக்கு இருக்கிறது, உலாவியில் லோட் ஆக அரை மணி நேரம் ஆகிறது என்ற புகார் உள்ளது) பதிவு போட்ட நீங்கள், திரு உஜாலாதேவி அலைஸ் உண்மை(த் மிஸ்ஸிங்)தமிழன் தன்னுடைய அலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளாரே ? ஒரு போன் செய்து கேட்டிருக்கலாமே ?

போகிற போக்கைப்பார்த்தால் கடிதத்தில் தங்கள் உண்மையுள்ள என்று எழுதுபவர்கள் இங்கிதம் தெரியாமல் தங்கள் பெயரின் முதல் வார்த்தையை உபயோகப்படுத்திய போலிகள் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே ? ஒரு கற்பனைக்காக வைத்துக்கொள்வோம், இது குறித்து தாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துவிடுகிறார்கள். உண்மை என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறவர்கள் எல்லாம் போலிகள் என்று. அய்யகோ. நினைத்துபார்க்கவே கொடூரமாக உள்ளதே ! (கர்ணகடூரம் என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன். கர்ணன் என்பது சிவாஜி படம், மகாபாரத கேரக்டர். யாராவது சண்டைக்கு வந்திடப்போகிறார்கள்)

இம்புட்டு சட்டம் பேசும் நீங்கள் உண்மை(த் இல்லை)தமிழன் அவர்களை போலி என்று எப்படி சொல்லப்போச்சு ? அவர் வருங்காலத்தில் கன்னாபின்னாவென பிரபல பதிவர் ஆகியபிறகு, பழைய போலி மேட்டர் எல்லாம் எடுத்து படித்துவிட்டு, தன்னை போலியோடு ஒப்பிட்டு இவ்வளவு அவமானப்படுத்தியிருக்கிறாரே இந்த உண்மை(த் இருக்கு)தமிழன் என்று வருந்தினால் நீங்கள் எப்படி அவரை ஆற்றுப்படுத்தப்போகிறீர்கள் ?நீங்கள் இப்போது போட்டுள்ள பதிவு, தேவை-இல்லாத-சுய-இரக்க-மேனியா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் செய்யும் செயல். அருகாமையில் உள்ள ஆங்கில மருத்துவ கெமிஸ்டிடம் தன்னம்பிக்கை-டானிக்-மிக்ஸிங்லெஸ் கொஞ்சம் வாங்கி ராவாக உள்ளெ விடவும். உங்கள் வயசுக்கு தகுந்தது போல அஞ்சலிதேவியின் கவர்ச்சி படம் ஒன்றை இட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும்.

போட்டோவில் புளிமூட்டை போல போஸ் கொடுக்கும் அந்த நபர், பார்ப்பதற்கு பச்சப்புள்ளை போல இருக்கிறார். அவரை போய் நீங்கள் எப்படி போலி என்று சொல்லப்போச்சு ? ஆகவே உங்கள் தவறை நினைத்து அப்பன் முருகனிடமும் உண்மை தமிழனிடமும் மன்னிப்பு கேட்டு பகிரங்க பதிவு வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவன்,
தங்கள் உண்மை(?) யுள்ள
செந்தழல் ரவி

பிற்சேர்க்கை:

உண்மையான உண்மைத்தமிழன் இளையராஜா பிடிக்கும் அந்த படம் பிடிக்கும் என்று போட்டிருப்பது போல உண்மை தமிழனும் போட்டிருப்பது கூட தவறு என்று சொல்லியிருக்கிறார் அண்ணன். இது என்ன காமெடி ? ரசனை இரண்டு பேருக்கும் ஒன்றாக இருக்கக்கூடாதா ?

மேலும் பரிதாபப்பட்ட அந்த ஜீவன் உண்மையாரின் பதிவில் வந்த அய்யா நான் என் பெயரையே மாற்றிக்கொள்கிறேன் என்று சொல்லிய இந்த பின்னூட்டம் :


உண்மை தமிழன் said...

பாஸ் மன்னிச்சுருங்க உங்கள் பெயர் உண்மை தமிழன் என்று எனக்கு தெரியாது மன்னிச்சுருங்க எனக்கு இந்த பெயர் பிடிச்சிருந்து அதனால் வச்சேன் இப்போதான் ஜாக்கி அண்ணன் ப்ளாக் பார்த்தேன் அதுல உங்க கமெண்ட் இருந்து அதனால் உங்கள் ப்ளாக்பக்கம் வந்தேன் மீண்டும் மன்னிச்சுருங்க உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் மாத்தி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்

இதையும் படிச்சி பாருங்க ( ஒரு பதிவின் சுட்டியை கொடுத்துள்ளார். இவரின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை )

Read more: http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_1410.html#ixzz19NscPgbo

44 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஓ.. இப்படியெல்லாம் பண்ணலாமா.!!!!

ஹி..ஹி

தகவலுக்கு நன்றி....

Unknown said...

நல்ல செய்தியை முதலில் தெரியப்படுத்திய உங்களுக்கு மிகவும் நன்றிகள். நான் கேட்காமலேயே எனக்கு வாக்களித்து முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக மிக நன்றிகள். இந்த வெற்றி எனக்கானதல்ல. பீச்சாங்கை கவிதைக்கானது மிக மிக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விடிவுக்கு பாடுபட நாங்களும் இருக்கிறோம் எனும் மனிதநேயமுள்ளவர்களின் வெளிப்பாடு! அடுத்தகட்ட தேர்விலும் பீச்சாங்கை க்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு அணைத்து நண்பர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...நன்றி!

சி.பி.செந்தில்குமார் said...

உண்மைத்தமிழன் ,நீங்க 2 பேருமே எனக்கு நண்பர்கள்,என்ன கமெண்ட் போடறதுன்னே தெரியல

ஜோதிஜி said...

ரவி தமிழ்மணத்தில் என்னுடைய மூன்று தலைப்புகளும் இரண்டாம் கட்ட தேர்வுக்கு வந்துள்ளது.

உங்கள் அக்கறைக்கும் தெரியப்படுத்திய விதத்திற்கும் என் நன்றிங்க.

guna said...

100% correct article

ரஹீம் கஸ்ஸாலி said...

அதான....

ramalingam said...

சரியாகச் சொன்னீர்கள். முதலில் டோண்டு, உண்மைத் தமிழன் போன்றவர்கள் தங்கள் லெவலைப் புரிந்து கொள்ள வேண்டும். இம்சைடா சாமி.

ரவி said...

சிபி செந்தில்குமார், நட்புக்காக கொள்கையா கொள்கைக்காக நட்பா ? பட்டாப்பட்டி த் மிஸ்ஸிங் உண்மைத்தமிழனின் நட்பாக இருந்தால் அவர் என்ன தீர்ப்பு சொல்லவேண்டும் ?

ரவி said...

வருகைக்கு நன்றி குணா.

கோமதி அரசு said...

ரவி,உங்களுக்கு மிகவும் நன்றி.

நான் அனுப்பிய மூன்று பதிவும் முதல் சுற்றில் தேர்வானது உங்களால் தெரிந்துக் கொண்டேன்.

நன்றி நன்றி.

ரவி said...

தற்போது தமிழன் என்று பெயரை மாற்றிவைத்துவிட்ட உண்மை(த் இல்லாத) தமிழன் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

உண்மைத்தமிழன் said...

நான் என்ன வேணும்னா இந்தப் பதிவைப் போட்டேன்..!

பின்னூட்டம் சாதாரணமாக இருந்தாலும், நான்தான் போடுகிறேன் என்றல்லவா அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்..?

இந்தக் குழப்பத்தை தெளிவுபடுத்துவதற்காகத்தான் போட்டேன்..! நான் செய்ததில் எந்தத் தவறுமில்லை..!

அவருடைய புரொபைல் தகவல்கள் நிச்சயமாக என்னுடையதை பார்த்துதான் எழுதப்பட்டிருக்கிறது என்பதில் நான் இன்னமும் உறுதியாக இருக்கிறேன். ஏதோ ஒரு பிரிவில் யதேச்சையாக ஒன்றாக இருக்கலாம். ஆனால் மூன்றுமே இருப்பது என்பது திட்டமிட்டச் செயலாகத்தான் இருக்கும்.

வினவு said...

ரவி, ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல வாதத்தை எடுத்து வைக்கிறீர்கள், வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்! மற்றபடி உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான அப்பாவிதானே? அவரை கொஞ்சம் மென்மையாக வாங்கியிருக்கலாமே?

ரவி said...

வினவு, நான் கொலைவெறியோடு எழுதிய பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் போடாமல் இந்த மொக்கைப்பதிவுக்கு தாங்கள் பின்னூட்டம் போட்ட அரசியலை நினைத்து சூம்பிய மாங்கொட்டை போல வெம்புகிறேன்

Rajan said...

//நான் இன்னமும் உறுதியாக இருக்கிறேன். //

சரி சரி வுடுங்கண்ணே! நானே நேத்து போட்டுடலாம்னு யோசிச்சேன்! அதுக்குள்ள ரவி முந்திகிட்டாரு! நீங்க லக்கி! நான் இன்னும் தூர்வாரி இருப்பேன்! ஆனா சும்மா சொல்லக் கூடாது வலையுலக் சுனா சாமீ ஆயிட்டு வரீங்க!

Rajan said...

//நான் என்ன வேணும்னா இந்தப் பதிவைப் போட்டேன்..!//


யோவ் எதுக்குய்யா எல்லாரும் இப்பிடி கோரஸா சிரிக்கறீங்க! அண்ணன் என்ன லொல்லு சபாவ நடத்தறார்! நீங்க சொல்லுங்கண்ணே!

Rajan said...

//ஆனால் மூன்றுமே இருப்பது என்பது திட்டமிட்டச் செயலாகத்தான் இருக்கும்.//


இப்ப நாங்க சொல்றோம்! அப்பனே முருகா,சண்முகா,ஞான பண்டிதா!!

Rajan said...

//உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான அப்பாவிதானே?//

அவுரு கெட்டவர்! அத அவரே கீழ உளுந்த ரேடியோ பொட்டி கணக்கா நேத்தைக்கு டுவீட்டர்ல பலதடவ சொல்லிட்டு இருந்தாரு!

Rajan said...

//அவரை கொஞ்சம் மென்மையாக வாங்கியிருக்கலாமே?//

பாலிடிக்ஸ் ஆஃப் இண்டியன் அக்ரிகல்ச்சர் டுவேர்ட்ஸ் தி சேக்ஸ் பியர் டோல்ட் ஜேம்ஸ் பாண்ட் நாட் நாட் செவன்!

வினவு said...

ரவி, உங்கள் 'கொலைவெறிப்' பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டமிடாததற்கு மன்னிக்க. மற்றபடி ஒரு அன்பில் ஒரு பின்னூட்டம் போட்டதையே அரசியல் என்றால் எப்படி?

உமர் | Umar said...

பட்டாபட்டி.... said...
//ஓ.. இப்படியெல்லாம் பண்ணலாமா.!!!!

ஹி..ஹி

தகவலுக்கு நன்றி...//

பட்டா, உங்க பேருக்கு நடுவுல 'ப்' சேர்த்து பட்டாப்பட்டி அப்படின்னு ஒரு ப்ரோபைல் க்ரியேட் பண்ணிரலாமா?

:-)

பொன் மாலை பொழுது said...
This comment has been removed by the author.
பொன் மாலை பொழுது said...

// உங்கள் வயசுக்கு தகுந்தது போல அஞ்சலிதேவியின் கவர்ச்சி படம் ஒன்றை இட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும்.//

ஐயோ அது அஞ்சலி தேவி இல்ல.
G. வரலட்சுமி ! உடனே என் வயசு பற்றி..... வேண்டாம்.

உண்மைத்தமிழன் said...

[[[வினவு said...
உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான அப்பாவிதானே? அவரை கொஞ்சம் மென்மையாக வாங்கியிருக்கலாமே?]]]

திஸ் இஸ் வினவு..? ம்.. என்னை எல்லாருமா சேர்ந்து அப்பாவி, நல்லவன், ரொம்ப நல்லவன்.. வெள்ளந்தி.. அப்படி, இப்படீன்னு சொல்லி மூலைக்குத் தள்ளுறாங்க..

நானும் பார்க்கிற இடத்துல எல்லாம் என்னோட கெரகத்தைப் பத்தியெல்லாம் எடுத்துச் சொல்லியும் இவங்களுக்குப் புரிய மாட்டேங்குது..

இனிமே நம்ம லைனை மாத்த வேண்டியதுதான்.. அப்பத்தான் நம்மையும் ரவுடின்னு நம்புவாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
உண்மைத்தமிழன், நீங்க.. 2 பேருமே எனக்கு நண்பர்கள், என்ன கமெண்ட் போடறதுன்னே தெரியல.]]]

நண்பேன்டா..! உன்னை மாதிரிதான் இருக்கோணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ramalingam said...
சரியாகச் சொன்னீர்கள். முதலில் டோண்டு, உண்மைத் தமிழன் போன்றவர்கள் தங்கள் லெவலைப் புரிந்து கொள்ள வேண்டும். இம்சைடா சாமி.]]]

ராமலிங்கம் ஸார்..

நான்தான் "உண்மைத்தமிழன்" என்ற பெயருக்கேற்ற வாதத்தை நான் எனது பதிவில் வைக்கவில்லை.

அந்த புரொபைலில் இருக்கும் விருப்பப் பட்டியலில் இருக்கும் உள் அரசியலையும், பின்னூட்டக் குழப்பங்களை பற்றித்தான் சொல்லியிருக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
சிபி செந்தில்குமார், நட்புக்காக கொள்கையா கொள்கைக்காக நட்பா ? பட்டாப்பட்டி த் மிஸ்ஸிங் உண்மைத்தமிழனின் நட்பாக இருந்தால் அவர் என்ன தீர்ப்பு சொல்ல வேண்டும்?]]]

சிபிசி இதுக்கெல்லாம் பயப்பட மாட்டார்.. கொள்கைக்காகத்தான் நட்பு என்றால் இங்கே ஒரு பய எழுத முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
தற்போது தமிழன் என்று பெயரை மாற்றி வைத்துவிட்ட உண்மை(த் இல்லாத) தமிழன் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.]]]

இன்னொரு தமிழன் இருக்காரே.. அவருக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
வினவு, நான் கொலை வெறியோடு எழுதிய பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் போடாமல் இந்த மொக்கைப் பதிவுக்கு தாங்கள் பின்னூட்டம் போட்ட அரசியலை நினைத்து சூம்பிய மாங்கொட்டை போல வெம்புகிறேன்.]]]

ஹா.. ஹா.. சூப்பர் கமெண்ட்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜன் said...

//நான் இன்னமும் உறுதியாக இருக்கிறேன்.//

சரி சரி வுடுங்கண்ணே! நானே நேத்து போட்டுடலாம்னு யோசிச்சேன்! அதுக்குள்ள ரவி முந்திகிட்டாரு! நீங்க லக்கி! நான் இன்னும் தூர்வாரி இருப்பேன்! ஆனா சும்மா சொல்லக் கூடாது வலையுலக் சுனா சாமீ ஆயிட்டு வரீங்க!]]]

சுப்ரமணிய சுவாமியிலும் சரவணன் இருக்கானே..!!!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜன் said...

//நான் என்ன வேணும்னா இந்தப் பதிவைப் போட்டேன்..!//

யோவ் எதுக்குய்யா எல்லாரும் இப்பிடி கோரஸா சிரிக்கறீங்க! அண்ணன் என்ன லொல்லு சபாவ நடத்தறார்! நீங்க சொல்லுங்கண்ணே!]]]

நான் என்ன காமெடி பஜாரா நடத்துறேன் எடுத்துக் கொடுக்குறதுக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜன் said...

//ஆனால் மூன்றுமே இருப்பது என்பது திட்டமிட்டச் செயலாகத்தான் இருக்கும்.//

இப்ப நாங்க சொல்றோம்! அப்பனே முருகா, சண்முகா, ஞான பண்டிதா!!]]]

கர்ணன், இளையராஜா, அர்த்தமுள்ள இந்து மதம்.. இந்த மூன்றும் இது போலவே ஒன்றாகவே யோசிக்காமலேயே வந்துவிடுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜன் said...

//உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான அப்பாவிதானே?//

அவுரு கெட்டவர்! அத அவரே கீழ உளுந்த ரேடியோ பொட்டி கணக்கா நேத்தைக்கு டுவீட்டர்ல பல தடவ சொல்லிட்டு இருந்தாரு!]]]

ம்.. இதுக்குத்தான் உன்னை மாதிரி லவுடு ஸ்பீக்கர் வேணும்கிறது.. இதை அப்பப்ப நான் இல்லாத இடத்துலேயும் எடுத்து விடணும்.. என்ன சரியா..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜன் said...

//அவரை கொஞ்சம் மென்மையாக வாங்கியிருக்கலாமே?//

பாலிடிக்ஸ் ஆஃப் இண்டியன் அக்ரிகல்ச்சர் டுவேர்ட்ஸ் தி சேக்ஸ்பியர் டோல்ட் ஜேம்ஸ் பாண்ட் நாட் நாட் செவன்!]]]

ஹி.. ஹி.. ஒண்ணுமே பிரியலே..!

உண்மைத்தமிழன் said...

[[[வினவு said...
ரவி, உங்கள் 'கொலைவெறிப்' பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.]]]

"இருக்கிறேன்" அல்ல நண்பர்களே.. "இருக்கிறோம்" என்பதுதான் மிகச் சரியானது..!

[[[மற்றபடி ஒரு அன்பில் ஒரு பின்னூட்டம் போட்டதையே அரசியல் என்றால் எப்படி?]]]

என் மீதான உங்களது அன்பில் நானும் திளைக்கிறேன் தோழர்களே..!

உண்மைத்தமிழன் said...

[[கக்கு - மாணிக்கம் said...

// உங்கள் வயசுக்கு தகுந்தது போல அஞ்சலிதேவியின் கவர்ச்சி படம் ஒன்றை இட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும்.//

ஐயோ அது அஞ்சலிதேவி இல்ல.
G. வரலட்சுமி ! உடனே என் வயசு பற்றி..... வேண்டாம்.]]]

கக்கு மாணிக்கம்.. உடனேயே கண் டாக்டரிடம் சென்று கண்களை பரிசோதனை செய்யவும்..!

வருண் said...

இப்போ உண்மைத் தமிழன்(14270788164745573644) னு ஒரு ஐ டி யோட எவனாவது வந்தாலும் ப்ளாகர் அல்லவ் செய்யுமா? :)

வருண் said...

***உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான அப்பாவிதானே?***

வினவு எப்படி ஒரு வினையமான கூட்டமா? :)))

அப்பாவியோ இல்லையோ, அவர் ஒரு தரமான பதிவர்தான்.

ஏன் இப்படி லந்தக்கொடுக்குறீங்க?

அவர் ப்ளாக் ஒரு முறை முடக்கப்பட்டதுனு நெனைக்கிறேன். ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்க போல. அதான் கொஞ்சம் ஓவெர் ரியாக்ட் செய்றார்னு நெனைக்கிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...
இப்போ உண்மைத்தமிழன்(14270788164745573644)னு ஒரு ஐ.டி.யோட எவனாவது வந்தாலும் ப்ளாகர் அல்லவ் செய்யுமா?:)]]]

அதர் ஆப்ஷனில் இது போன்று டைப் செய்து லின்க்கை எனது தளத்துடன் இணைக்கலாம்..!

ஆனால் புது ஐ.டி. கிரியேட் செய்ய முடியுமா என்று தெரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

***உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான அப்பாவிதானே?***

வினவு எப்படி ஒரு வினையமான கூட்டமா? :))) அப்பாவியோ இல்லையோ, அவர் ஒரு தரமான பதிவர்தான்.]]]

தங்களுடைய கருத்துக்கு நன்றி வருண்..!

[[[அவர் ப்ளாக் ஒரு முறை முடக்கப்பட்டதுனு நெனைக்கிறேன். ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்க போல. அதான் கொஞ்சம் ஓவெர் ரியாக்ட் செய்றார்னு நெனைக்கிறேன்.]]]

ஓவர் ரியாக்ட் இல்லை.. வருமுன் உரைப்பது என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

நான் இந்தப் பதிவைப் போட்ட பின்புதான் அவர் பெயரை மாற்றியுள்ளார் என்பதை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்..!

Suni said...

தகவலுக்கு மிக்க நன்றிங்க

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

வருண் said...

***ஓவர் ரியாக்ட் இல்லை.. வருமுன் உரைப்பது என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

நான் இந்தப் பதிவைப் போட்ட பின்புதான் அவர் பெயரை மாற்றியுள்ளார் என்பதை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்..!

Tuesday, 28 December, 2010***

இல்லங்க, இவரைப்போல எல்லாரும் இருக்கனும்னு இல்லையே. ஒரு சிலர் "sadistic" ஆ இருப்பாங்க. நீங்க கவனமாக இருப்பதால் ரொம்ப பிரச்சினையை கிளப்புவாங்க! கண்டுக்காமப் போறதுதான் நல்லது. உங்க ஐ டி வித் உங்க ஃபோட்டோ மட்டும்தான் ஒரிஜினல்னு ப்ளாக்ர்கள் புரிஞ்சிக்கனும்னு நெனைக்கிறேன். :)

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Anonymous said...

>>> இந்த ஊர்ல என்ன ஒரே வெட்டு குத்தா இருக்கு.. ஆத்தாடி...வேற ஸ்டாப்ல எறங்கிட்டனா????????