Wednesday, August 29, 2007

தேன்கூடு திரட்டியின் சவ அடக்கத்துக்கு வருகைதாருங்கள்...

சாகரன் என்ற லட்சிய மனிதரின் லட்சியக்கனவு இந்த தேன் கூடு திரட்டி....இன்றைக்கு வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தெரிகிறது....

மலேசிய போலி டோண்டுவின் எல்லா கருமம் புடிச்ச பதிவுகளையும் திரட்டும் தேன்கூடை விட கேவலமான செயல்கள், நிர்வாகி என்று யாராவது இருக்கிறார்களா அல்லது செத்து சுண்ணாம்பாகிவிட்டார்களா என்று நினைக்கத்தோன்றுகிறது...அதனால் தேன்கூட்டுக்கு நான் சவ அடக்க நிகழ்ச்சி வைத்திருக்கிறேன்...வாருங்கள் எல்லோரும்...

நிகழ்ச்சி நிரல் : தேன்கூடு சவ அடக்கம்
எத்தனை மணிக்கு : இன்று இரவு அமெரிக்க நேரம் 12:00 மணி
இடம் : இணையம்
பங்கேற்பாளர்கள் : தமிழ்வலைப்பதிவர்கள்..

சவ அடக்கத்தில் டான்ஸ் ஆட மலேசியா மற்றும் அமீரகத்தில் இருந்து போலி மற்றும் போலியின் அல்லக்கை ஒன்றும் வரவழைக்கபடுகிறது...சிங்கையில் இருந்து ஒரு மூத்த பதிவரும் வந்து டான்ஸ் ஆடலாம் என்று தெரிகிறது...வந்திருங்க...

Monday, August 20, 2007

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

நட்சத்திரமாக நிற்கும் கோவி.கண்ணனை வாழ்த்த முடியல. அனானி ஆப்சன் எடுத்துட்டார் போல..சரி அது இல்லை பிரச்சினை..

அவர் போட்டிருக்க படம் தான் பிரச்சினை...

கரகாட்டகாரன் படத்தில் சுந்தரமூர்த்தி, அக்கா, உனக்காக ஏழு வருசம் ஜெயில்ல இருந்தேன்க்கா என்று வடிவுக்கரசியிடம் டயலாக் பேசும்போது ஒரு முகபாவனை காட்டுவார்...அந்த மாதிரி உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியல்ல...வேற ஒரு நல்ல போட்டோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

பி.கு: ச்ச்ச்சும்மா, மொக்கை...
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

நட்சத்திரமாக நிற்கும் கோவி.கண்ணனை வாழ்த்த முடியல. அனானி ஆப்சன் எடுத்துட்டார் போல..சரி அது இல்லை பிரச்சினை..

அவர் போட்டிருக்க படம் தான் பிரச்சினை...

கரகாட்டகாரன் படத்தில் சுந்தரமூர்த்தி, அக்கா, உனக்காக ஏழு வருசம் ஜெயில்ல இருந்தேன்க்கா என்று வடிவுக்கரசியிடம் டயலாக் பேசும்போது ஒரு முகபாவனை காட்டுவார்...அந்த மாதிரி உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியல்ல...வேற ஒரு நல்ல போட்டோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

பி.கு: ச்ச்ச்சும்மா, மொக்கை...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Saturday, August 11, 2007

மாலன் அவர்களுக்கு பகிரங்க கடிதம்...!!!!

இந்த கடிதம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாலன் அவர்களுக்கு எழுதப்பட்டது...நுண் அரசியல் என்ற வார்த்தையை முன் பின் கேள்விப்பட்டவன் இல்லை இந்த செந்தழல் ரவி...நீங்கள் பட்டறையில் பேசியதை கண்டு பொன்ஸ் எழுதியதை பார்த்தவுடன் தான் தமிழில் அப்படிப்பட்ட ஒரு வார்த்தை இருப்பதே தெரியும்..இருந்தாலும் இந்த பதிவில் நான் கும்மி அடிக்க எடுத்துக்கொண்ட விஷயம் இது தான்...!!!

எதுக்கெடுத்தாலும் பாலகுமாரனுக்கு பகிரங்க கடிதம், பாமரன் பாயா சாப்பிட்டது ஏன்,பத்ரி பக்கோடா சாப்பிட்டாரா, மாலன் மசிந்துகொடுப்பாரா, ஜெயமோகன் ஜம்ப் அடித்தாரா என்று பிரபலமானவர்களை பிடித்து வம்பிழுப்பது பதிவர்களுக்கு வழக்கமாக போய்விட்டது...

நாம அடிக்கிறது கும்மியும் போடுறது மொக்கையும்...இதுல மார்க்கிசியமும் இராம் பொண்ணு கே.எப்.சியில சிக்கன் துன்றதும் - தேவையா நமக்கு...

வெளியுலகில் பிரபலமானவர்கள் AACH என்று தும்மினால் அறுநூறு அர்த்தம் கண்டுபிடித்து குமுற குமுற கும்முவதும் புதிய ட்ரெண்டாக மாறி ஒரு மாதமாகிறது...

அதனால் இப்படி எல்லாரும் ஆளுக்கொரு கடிதம் எழுதும்போது நான் மட்டும் சும்மா இருந்தால் இந்த ஆண்டு இறுதியில் சர்வேசன் வைக்கப்போ"கும்" சிறந்த கும்மி பதிவர் யார் என்ற சர்வேயில் லக்கி, பொட்டீக்கடை,வரவணை,பாலபாரதி, அபி அப்பா, குசும்பன், லாஸ்ட் பட் நாட் லாஸ்ட் மிஸ்டர் ஓசை செல்லா போன்ற மெகா கும்மி பதிவர்களிடம் தோல்வியுற்று மண்ணை கவ்வவேண்டியிருக்கும்...ஐக்கான் கிடைக்காது...அதனை வலைப்பதிவிலும் போட்டுக்கொள்ள முடியாது...

அதனால் ப்ளீஸ்...நானும் மிஸ்டர் மாலனை வெச்சு ஒரு கும்மி அடிச்சிக்கிறேனே...

மிஸ்டர் மாலன்...நீங்க ஆயிரம் இருந்தாலும் இப்படி செய்திருக்க கூடாது...எப்படி ? நீங்க சமீபத்துல எழுதுன பதிவுல அங்க இங்க ஸ்பேஸ் வெக்காம நீளமா அடிச்சுட்டீங்க...அலைன்மெண்டும் சரியா இல்லை...அதனால அங்கே அங்கே கொஞ்சம் கேப் விட்டீங்கன்னா ரீடபிளிட்டி நல்லா இருக்கும்னேன்...!!!

காணாமே பூட்ட மொவமூதி எல்லாம் வந்து கொலைக்க ஆரம்பிச்ச பிறகு நமக்கு என்ன வேல இங்க..

வர்ட்டுங்களா...

பதிவர் பட்டறை பற்றி பதிவு போட தடை !!!

பதிவர் பட்டறை நடந்தாலும் நடந்தது...அதன் தாக்கம் பதிவர்களிடம் ஒரு வாரமாகியும் இன்னும் போகவில்லை போல தெரிகிறது...ஓசை செல்லா ஒரு நாளைக்கு நாலு பதிவு பதிவர் பட்டறையை பற்றி போட்டு தொலைக்கிறார்...எல்லாமே ஜூடான இடுகையில் வருகிறது...இன்று கூட புதிய பதிவர் பட்டறை பதிவுகளை காணமுடிகிறது...அதனால் அ.மு.க கொலைவெறி அணி சார்பாக - இனி பதிவர் பட்டறை சம்பந்தமாக பதிவிடுவதோ, அதில் மாலம் இப்படி இருமினார், அப்படி தும்மினார் என்று கும்முவதோ கட்டாயம் தடைசெய்யப்படுகிறது...அப்படியே நீங்கள் பதிவர் பட்டறை பற்றி பதிவு போட்டேயாக வேண்டும் என்று கை விரல்களில் அரிப்பெடுத்தால்...நமீதா, பாவனா, சினேகா என்று வெளியே கவர்ச்சியாக தலைப்பு வைத்துவிட்டு, உள்ளே பதிவர் பட்டறையில் பொன்ஸின் தொலைந்துபோன எலிக்குட்டியின் வால் என்னிடம் தான் இருக்கிறது, வினையூக்கி வலதுபுறம் உட்கார்ந்திருந்தபோது நான் இடதுபுறம் உட்கார்ந்திருந்த படம், தமிழியை உடற்பயிற்சி செய்யுமாறு கேட்டபோது வெள்ளந்தியாக சிரித்தார் என்று பதிவிட்டுக்கொள்ளுக்கள்...சில நாட்களாக பதிவர் பட்டறை என்றாலே என்னுடைய முகம் பேஸ்த் அடித்தமாதிரி ஆகி, பாலபாரதி தயிர்சாதம் வழித்ததும், தீவிர திராவிட பதிவர்கள் ஊறுகாயை தொட்டுக்கொண்டு தயிற்சோற்றை விரல்நக்கி தின்றதும், வ.வா சங்கத்தினர் எனக்கு டி.ஷர்ட் வாங்கிவராத துரோகமும் நியாபகம் வந்து பி.பி ஏறி தொலைக்கிறது...கண்ஸிடர் பண்ணுங்க ப்ளீஸ்........!!!!

Thursday, August 09, 2007

நான் உன்னை காதலிக்கிறேன்...

ஹோட்டலில் உணவு மேஜையில்...மெல்லிய விளக்கொளியில்...காதலன்...காதலியிடம்...காதலன்..: அன்பே...நான் உன்னை காதலிக்கிறேன்...என் காதலை ஏற்றுக்கொள்வாயா ?காதலி : ப்ளீஸ்...நான் உங்களை என்னோட நல்ல ப்ரெண்டாத்தான் நினைக்கிறேன்...நான் உங்களை காதலிக்க எல்லாம் முடியாது...காதலன்: ப்ளீஸ்...உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறேன்...காதலி: முடியாது...இல்லை...என்னால் முடியாது...காதலன்: நாம் பழகிய நாட்களை நினைத்துப்பார்...நான் இல்லாமல் இருக்க முடியுமா உன்னால் ? என் காதலை ஏற்றுக்கொள்ளேன்..காதலி: முடியாது முடியாது முடியாது...!!!!!!!ஹோட்டல் வெயிட்டர்: சார் பில் போட்டுடலாமா ?காதலன்: ரெண்டு தனி பில் போடுங்க...காதலி: ஓக்கே உங்க காதலை ஏத்துக்கறேன்...!!! ஐ.லவ்.யு டூ...