Saturday, August 11, 2007

பதிவர் பட்டறை பற்றி பதிவு போட தடை !!!

பதிவர் பட்டறை நடந்தாலும் நடந்தது...அதன் தாக்கம் பதிவர்களிடம் ஒரு வாரமாகியும் இன்னும் போகவில்லை போல தெரிகிறது...ஓசை செல்லா ஒரு நாளைக்கு நாலு பதிவு பதிவர் பட்டறையை பற்றி போட்டு தொலைக்கிறார்...எல்லாமே ஜூடான இடுகையில் வருகிறது...இன்று கூட புதிய பதிவர் பட்டறை பதிவுகளை காணமுடிகிறது...அதனால் அ.மு.க கொலைவெறி அணி சார்பாக - இனி பதிவர் பட்டறை சம்பந்தமாக பதிவிடுவதோ, அதில் மாலம் இப்படி இருமினார், அப்படி தும்மினார் என்று கும்முவதோ கட்டாயம் தடைசெய்யப்படுகிறது...அப்படியே நீங்கள் பதிவர் பட்டறை பற்றி பதிவு போட்டேயாக வேண்டும் என்று கை விரல்களில் அரிப்பெடுத்தால்...நமீதா, பாவனா, சினேகா என்று வெளியே கவர்ச்சியாக தலைப்பு வைத்துவிட்டு, உள்ளே பதிவர் பட்டறையில் பொன்ஸின் தொலைந்துபோன எலிக்குட்டியின் வால் என்னிடம் தான் இருக்கிறது, வினையூக்கி வலதுபுறம் உட்கார்ந்திருந்தபோது நான் இடதுபுறம் உட்கார்ந்திருந்த படம், தமிழியை உடற்பயிற்சி செய்யுமாறு கேட்டபோது வெள்ளந்தியாக சிரித்தார் என்று பதிவிட்டுக்கொள்ளுக்கள்...சில நாட்களாக பதிவர் பட்டறை என்றாலே என்னுடைய முகம் பேஸ்த் அடித்தமாதிரி ஆகி, பாலபாரதி தயிர்சாதம் வழித்ததும், தீவிர திராவிட பதிவர்கள் ஊறுகாயை தொட்டுக்கொண்டு தயிற்சோற்றை விரல்நக்கி தின்றதும், வ.வா சங்கத்தினர் எனக்கு டி.ஷர்ட் வாங்கிவராத துரோகமும் நியாபகம் வந்து பி.பி ஏறி தொலைக்கிறது...கண்ஸிடர் பண்ணுங்க ப்ளீஸ்........!!!!

7 comments:

உண்மைத்தமிழன் said...

தம்பி..

நான் ஒருத்தன் இருக்கேன்றதையே இங்க எல்லாரும் மறந்துட்டீகளேப்பா..

ஆபீஸ்ல ஆணி பிடுங்குற வேலை ஆளை கொல்லுது.. அதுனால நேரம் கிடைக்கிறப்பல்லாம் கொஞ்சம் கொஞ்சமா டைப் செஞ்சு வைச்சிருக்கேன்.. லன்ச் பிரேக் வரைக்கும் வந்துட்டேன் சாமி. அதுவே 13 பக்கம் வந்திருச்சு..

இன்னும் மிச்சத்தையும் எழுதணும்.. அது வரும் இஇன்னொரு 13 பக்கம்.. அடுத்த வாரம் போடலாம்னு இருக்கேன்.. போடுறதுக்கு முன்னாடி உனக்கு போன் பண்றேன்.. ஒரு நாலு நாளைக்கு லீவு எடுத்துக்கின்னு தாய்லாந்து போயிட்டு வந்திரு..

என்ன சரியா?

லக்கிலுக் said...

வரும் செப்டம்பர் 20 அ.மு.க. பிறந்தநாள் என்பதை மறவாதீர்!

- யெஸ்.பாலபாரதி said...

//பாலபாரதி தயிர்சாதம் வழித்ததும்//

இதை நியாபத்துக்கு கொண்டு வந்தாலே.. பி.பி எகுறுதா..? அப்ப என் நிலை! :(

சங்குதான் எனக்கு!

கதிர் said...

:)))))

We The People said...

:)

இம்சை தாங்க முடியாம இருந்தது! எப்படியோ நீங்க புண்ணியம் கட்டிக்கிட்டீங்க!

TBCD said...

தடைய மீறி பதிந்ததிற்கு...உங்களை கைது செய்கின்றோம்..அதுக்கு தண்டனை...4 நல்ல பதிவு எழுதனும்..அதுக்கு 14 வருடம்...அவகாசம் தருவோம்...

கோவை ராஜா said...

சம்மந்தமில்லே . . .
DR. Vijay., DR. Shankar !!!, so many things happening! why u all still talking abt பதிவர் பட்டறை .... ம் ம் ம்