Monday, May 21, 2007

அடிச்சாம்பாரு அடி...மரண அடி...!!!!

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )


சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல்(Spell ERR) படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

தலைப்புக்கு காரணம் ஒன்னுமில்லைங்னா...எங்க அலுவலக ப்ராக்ஸி / பயர்வால் / வாட்டர் வால் / அனுமார் வாலையும் தாண்டி எனக்கு படம் தெரியுது...இதுக்காகவே இந்த ஹிஸ்டீரியா..ஸ்ஸ்...ஹிப்பலாக் அண்ணாச்சிக்கு ஒரு தாங்ஸு...!!!!

விளம்பரம் வேனும்னா நாங்க பதிவு போட்டுருப்பம்ல...எதுக்கு செல்லம் ஊரெல்லாம் டார்ச்சர் குடுத்தியாம்...சரி விடு...இந்தா போட்டுட்டம்ல விளம்பரம்....

எழுத்தாளர் சுஜாதாவின் உண்மை முகம் !!!!!

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கேள்விபதில் பகுதியில் எழுத்தாளர் சுஜாதாவின் உண்மை முகம் வெளிப்பட்டதாக திருப்பூர் கார்மேகராஜா தெரிவித்திருந்தார்...

நானும் சொல்கிறேன்...இங்கே பாருங்க...இதுதான் எழுத்தாளர் சுஜாதாவின் உண்மை முகம்...!!!
வர்ட்ட்டா...(வீட்ல கொசு தொல்லை சாஸ்தி )

Monday, May 14, 2007

டேக் கேர் தயாநிதி மாறன்...

அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தலில் ஏற்ப்பட்ட சறுக்கல்கள் காரணமாக இந்தியாவின் இளம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்...

கம்புயூட்டர் கூலி வேலை செய்யும் என்னைப்போன்றவர்களுக்கு இது இழப்புத்தான்...மேலே படியுங்களேன்..

* இரண்டு ஆண்டுகளில் முப்பது மில்லியன் டாலர் மதிப்புள்ள தகவல் தொழில்நுட்ப பிஸினஸை இந்தியாவை நோக்கி படையெடுக்க வைத்துள்ளார்...இதற்கு இவரது காண்டாக்ட்ஸ் மற்றும் அப்ரோச் கண்டிப்பாக உதவி செய்துள்ளது...

* ஐபிஎம், மைக்ரோசாப்ட், நோக்கியா, மோட்டரோலா ஆகிய நிறுவனங்களின் இன்வெஸ்ட்மெண்ட் க்ரீன்பெல்ட்டில் இந்தியாவையும் தமிழகத்தையும் இடம்பெறச்செய்து 20 லட்சம் தகவல் தொழில்நுட்ப பணியிடங்களை இரண்டு ஆண்டுகளில் உருவாக்கியுள்ளார்...

* டெல்லியில் முகாமிட்டு, தொழிலதிபர்களை அடிக்கடி சந்தித்து தமிழகத்தில் தொழில்களை தொடங்குமாறு கோரிக்கை வைப்பது இவரது வாடிக்கை...அப்படி இவரது முயற்சியால் தமிழகத்தில் தொழில் தொடங்கிய மிகப்பெரும் நிறுவனங்களின் (நோக்கியா / மோட்டரோலா / டெக்ஸாஸ் இண்ஸ்ட்ருமண்ட்ஸ் / ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ்) உட்பட எண்ணிக்கை 20க்கும் மேல்...இதன் மூலம் வரும் இரண்டு ஆண்டுகளில் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்...

* இவரது மனதில் உருவான ஒன் இண்டியா திட்டம் வடநாடுகளில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது...நாட்டின் எந்த மூலையில் இருந்தும் ஒருவர் ஒரு ரூபாயில் தொலைபேசியில் இன்னொருவரை அழைக்கலாம் என்பது என்ன எளிமையான திட்டமா...அதை சாதித்திருக்கிறார் இந்த இளைஞர்...

* தொலைபேசி அழைப்புகளின் விலைகள் ஸ்லாஷ் செய்யப்பட்டது இவரது முயற்சியினால்...தபால் துறையில் தகவல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது இவரது முயற்சியினால்...சிங்கப்பூருக்கு கடல்வழி ப்ராட்பேண்ட் இணைப்பு..

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...வாழ்த்துக்களும் நன்றிகளும் இதற்கு எல்லாம்..

விரைந்து குடும்ப சண்டை தீர்ந்து, மீண்டும் நீங்கள் அமைச்சராகும் நிலை உருவானால் மகிழ்வேன்...!!!#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, May 10, 2007

அட்டாக் பாண்டியன்....

மதுரை சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

http://www.sanmargroup.com/Newsmain/Matrix/June2001/kattpix1.jpg


இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஈவிரக்கம் இல்லாத ரவுடிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்...துணைபோனவர்களும் தூண்டிவிட்டவர்களும் அதைவிட கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பதை இந்த பதிவில் பதிவு செய்கிறேன்...

பதிவுக்கு காரணம் ? : அரசியல் வன்முறையும் , உயிரிழப்புகளும் எங்கே நடந்தாலும், எந்த கட்சியால் நடந்தாலும் அதை வன்மையாக கண்டிக்கிறேன்...இதற்கு ஆரிய / திராவிட குஞ்சாகத்தான் இருக்கவேண்டுமா என்ன ? இந்த வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டுபவர்களும் இருப்பது சலிப்பை தருகிறது...

தலைப்பு ? : ரவுடிகளுக்கு தலைமை தாங்கியவர் பெயர்...

படம் ? : கூகிளிட்டதில் கிடைத்தது..

பின்னூட்டம் ? : உடனே ரிலீஸ் பண்ண முடியாது...#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Friday, May 04, 2007

எங்க ஆயா வீட்டிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்

ஏற்கனவே "அஞ்சரை பெட்டியிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்" என்று விவரமான கட்டுரையொன்றை எழுதியிருந்தோம்.
பாசிசப்புலிகளின் உலகளாவிய அடாவடிகளை இனங்கண்டு அவற்றை வேரோடு களைய அனைவரையும் அணிதிரளும் வண்ணம் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
அதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதற்கப்பால் எம்மை நையாண்டி வேறு செய்தார்கள்.இப்போது பார்த்தீர்களா புலிகளின் வேலையை? இப்போதாவது நம்புகிறீர்களா நாம் முன்பு சொன்னதை?

அப்படி என்னதான் செய்தார்கள் புலிகள்?

எங்க ஆயா அண்மையில் நண்டுக்குழம்பு வைத்தது...வழமையாக கிராமத்தில் நிலத்தில் இருந்து பிடித்த நண்டுகள் அல்ல...ரிலையன்ஸ் ப்ரஸ் கடையில் இருந்து வாங்கிய கடல் நண்டு...அந்த நண்டுகளை வைப்பதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய கடையிலேயே கடலை உருவாக்கி வைத்திருந்தது தெரியுமா..

Ok Lets Not Get In to that.

பாசிச புலிகள் என்ன செய்தார்கள் தெரியுமா ? அந்த நண்டுக்குழம்பை பின்கட்டு வழியாக வந்து ஆட்டையை போட்டுச்சென்றுவிட்டார்கள்....முற்றத்தில் ஆயாவுக்கு வெற்றிலைப்பாக்கு இடித்துக்கொண்டிருந்த நாங்கள் உள்ளே சென்று பார்த்தபோது குழம்பு இல்லாமல் வெறுமனே சோற்று குண்டான் மட்டும் இருந்தது...

இதை எப்படி சாதித்தார்கள் புலிகள் ?

எங்க ஆயா பொக்கை வாயை போட்டுக்கொண்டு மரகதம் அக்கா பொட்டிக்கடையில் மொளகாத்தூள் வாங்கும்போது அங்கிருந்த இத்துப்போன கிழவனிடம் இதை உளறி வைத்துள்ளது...அந்த கிழவன் எதிர்த்தாப்புல சீட்டாட போகும்போது அங்க நின்றுகொண்டிருந்த மயூரனிடம் இதை உளற, அவன் தன்னுடைய பாசிச கூலீப்படையை அனுப்பி இதை சாதித்துவிட்டான்....

இதை முறியடிக்க எங்கள் (மூத்திர சந்தில் நின்றுகொண்டிருக்கும்) தலைவன் கருணாவின் உதவியுடன், தோட்டத்தில் வேலி அடைப்போம்...

"தூரம் அதிகமில்லை -துயரம்
வழியிலில்லை"
_____________
"வாருங்கள் வீரர்களே -ஒன்றாய்ச்
சேருங்கள் தோழர்களே"

நண்டுகொழம்பு வேண்டி
-விருமாண்டி-

கண்ட கண்ட குழுமங்களில் இணையும்போது

இது எல்லோருக்குமான ஒரு எச்சரிக்கை பதிவு....தமிழ் இணைய உலகில் பல குழுமங்கள் உண்டு...சில சமயம் அவை கூகுள் குழுமங்களாகவும், சில சமயம் அவை தனித்த வெப்சைட்டுகளாகவும் உள்ளது...

கூகுள் அல்லாத குழுமங்களில் இணையும்போது நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், உங்கள் பொதுவான கடவுச்சொல்லை ( Password) அதிலும் உபயோகிக்காதீர்கள்...

பொதுவாக சோம்பேறிகளாகிய நாம், எல்லாவற்றிற்கும் போடுறா போடு என்று ஒரே பாஸ்வேர்டை வைத்திருப்போம்...

அதுபோல உங்கள் மின்னஞ்சல் பாஸ்வேர்டையே அந்த குழுமங்களுக்கும் கொடுத்திருந்தால் ஆப்பு தான்.....இல்லை என்றால் அந்த குழுக்களின் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் உங்கள் மின்னஞ்சலில் புகுந்து விளையாடுவது சகஜமானதாகிவிடும்...

ஏதோ ஊதுற சங்கை ஊதியாச்சு...இதுக்குமேல நீங்களாச்சு, உங்கள் குழுமங்களாச்சு...!!!

ஜாவா - 1 - 2 வருட எக்ஸ்பீரியன்ஸ்

நிறுவனம் SAKA solutions:

1 to 2 years programming experience in Java applying key J2EE Technologies. Should have sufficient experience using a leading relational DB using JDBC. Exposure to design and modelling using UML is an advantage. Java developer certification is a plus.
 
எங்கே அனுப்பனும் jobs@sakasolutions.com
 
தொடர்புக்கு Ph:22320958 / 32954630 Chennai
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################