Sunday, May 31, 2009

தமிழ் வலையுலகில் முதல்முறையாக நேரடி ஒலிபரப்பு : செந்தழல் ரவி

இந்திய நேரம் 10:30 மணியில் இருந்து நேரடி ஒளி / ஒலிபரப்பை நேரடியாக கண்டு மகிழ இந்த சுட்டியை க்ளிக்கவும்...அங்கே உரையாடல் வசதியும் உண்டு, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு முடிந்தால் பதிலும் சொல்வேன்...

Thursday, May 28, 2009

இது என்ன அநியாயம் ????பாருங்க இந்த படத்தை...இதில் மத்திய ரெண்டு கேபினெட், ஒரு மாநில உள்ளாட்சி அமைச்சர்கள் இருக்காங்க...அதுவும் இல்லாம ஒரு முதல் அமைச்சரும் இருக்கார்...கண்டுபிடிங்க பார்ப்போம் ? அடிங்...என்று சொல்லவேண்டாம்...

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லனும்...அழகிரிக்கு இந்தியும் தெரியாது, இங்கிலீசும் தெரியாது, அவரை எப்படி கேபினெட்டுல வெச்சுக்கறதுன்னு கேட்டானாம் ஒரு குடுமி...ஐ மீன் சிங்...இது என்ன அநியாயம் ?

ஒரு தமிழனாக எனக்கு வந்த எரிச்சலில் சொன்னென்...அப்ப லல்லுவுக்கு இந்தி மட்டும்தானே தெரியும் ? தமிழ் தெரியாத இவர் எப்படி போன கேபினட்ல தமிழ்நாட்டுக்கு மந்திரியா இருந்தார் ? (மத்திய ரயில்வே அமைச்சர்னா தமிழ்நாட்டுக்கும் தானே ? )

என்ன அநியாயம், இந்த சாரு இவ்ளோ நாள் கெனத்துல போட்ட கல்லுமாதிரி இருந்துட்டு, இப்ப கொடுத்த காசுக்கு மேல கூவுறமாதிரி ஒரு பதிவு போட்டிருககாரு..
..சாருவின், ஜெமோவின் கள்ள மவுனங்களை டவுசர் கிழித்த தமிழ்நதியின் பதிவு பார்த்துட்டீங்கதானே ? இல்லைன்னா இந்தாங்க லிங்க்...!!!லக்கிலுக்குக்கு பொண்ணு பொறந்திருக்கு...வாழ்த்துக்கள்...தொலைபேசியில் அழைக்கமுடியாத சூழலில் ஒரு பதிவை போட்டு வாழ்த்திக்கறேன்...என்ன அநியாயம், இந்த ஆளு கல்யாணம் ஆனவர்னு கூட தெரியாம பலபேர் இருந்திருக்காங்க...ஒருவேளை இவர் சுண்டக்கஞ்சியும், பட்டை சரக்கும் டெய்லி அடிப்பாரு என்று தெரியாதவங்களும் உண்டோ ? பத்த வெச்சியே பரட்டை..

டீச்சரின் பூனை செத்துப்போச்சாம்...வருத்தங்கள்...அவரும் கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார்...சாரி டீச்சர்...

என்ன அநியாயம் ? இந்த இலங்கையில இத்தனை மக்கள் செத்ததுக்கும் ஒரு சுவரொட்டி ஒட்டுங்கடே...என்னது, பஜன பாடனுமா ? கடவுளை தேடனுமா ? சரி சரி, நீங்க உங்க வேலையை பாருங்க...

Tuesday, May 26, 2009

ஆடும் கூத்து / திரை விமர்சனம்அழகான ஒரு கிராமம், அதில் நவ்யா நாயர், மற்றும் சில சம்பவங்களோடு படம் ஆரம்பிக்கும்போது, அட...ஏதோ இருக்கே...என்று ஒரு சுகமான அனுபவத்துக்கு தயாராகி, நிமிர்ந்து உட்கார்ந்தீர்கள் என்றால்...

அரதப்பழசான ஸ்ட்ரியோ டைப் அரைத்த மாவை மீண்டும் அரைத்து, குழப்பி, நொந்து, நோகடித்து, உங்களை சீட்டுக்கு அடியில் உட்காரவைத்துவிடுவார்கள்...

போராளியாக / திரை இயக்குனராக நடித்துள்ளார் சேரன்...ஒரு போராளி என்பவர் பதினைந்து நாள் தாடியோடிருக்கவேண்டும் என்ற தமிழ் சினிமா விதியை தவறாமல் காத்துள்ளார்..மேக்கம் சற்றும் இல்லாத முகம், வயதை கூட்டிக்காட்டுகிறது...அட்லீஸ்ட் குளித்து முகம் கழுவக்கூட நேரமில்லாமல் நடித்துகொடுத்துள்ளார். படத்தில் தெரிகிறது...

எடிட்டர் தவச தானியத்துக்கு பணியாற்றியிருப்பார் போல...ஆங்காங்கே தேவை இல்லாத ப்ளாஷ் பேக், எங்கே கட்டிங் எங்கே ஒட்டிங் என்று புரியாத மொக்கையான எடிட்டிங். இவரது எடிட்டிங் கருவிகள் மீது கொத்து குண்டுகள் போட்டு அழிக்கவேண்டும்..

இசை என்று எதாவது இருக்கிறதா என்று தேடினேன், இல்லை, அதனால் அதுபற்றி வேண்டாம்...!!

இந்த படத்துக்கு பிரகாஷ் ராஜ் எதுக்கு ? சன் டிவி மேகலா நெடுந்தொடரில் வரும் மேகலா அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் மொக்கை நடிகர் போதாதா ? கண்ட்ரி புரூட்ஸ்..

நவ்யா நாயரின் மாமா மகன் கிப்டாக தரும் ஒரு வளையல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது...அதில் இருந்து வரும் ஒரு ஒளி படம் போல நவ்யா நாயரின் கண்களுக்கு தெரிய, அதை வைத்து கதை (??) நகர்கிறது...

அந்த கிராபிக்ஸ் காட்சிகளை செய்த சாப்ட்வேர் எஞ்சினீயருக்கு சம்பள பாக்கி போல...அல்லது ஏதாவது அரைகுறை இன்ஸ்ட்யூட்டில் கிராபிக்ஸ் பழகிவரும் மாணவராக இருக்கக்கூடும்...கிராபிக்ஸ் காட்சிகளில் அவ்வளவு முதிர்ச்சி (டேய் டேய்...)

எழுபத்தைந்துகளில் நடப்பதாக காட்டப்படும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை இயக்குனரும், ஆர்ட் டைரக்டரும்..ஆங்காங்கே ப்ளாக்கன் ஒயிட் நிறத்தை படத்தில் தூவிவிட்டுள்ளார்கள்...அதன் மூலம் நாம் அது ப்ளாஷ் பேக் என்று புரிந்துகொள்ளவேண்டுமாம்...அய்யோ...சோதிக்கறாங்கப்பா...

ஏதோ ஒரு ஜமீந்தாரால் பாதிக்கப்பட்டு மொட்டையடிக்கப்பட்ட ஒரு கூத்தாடி இளம்பெண் பாத்திரத்தையும் நவ்யா நாயரே செய்துள்ளார்...அட்டுத்தனமாக உள்ளது...

ஜமீந்தார் மகனாக வந்து, திரைப்படம் எடுக்கும் முயற்சியை தடுத்து, அதன் பின் போராளியாக மாறிய சேரன் கையால் துப்பாக்கி குண்டு பட்டு சாகும் பாத்திரத்தில் சீமான்...மொத்தம் ரெண்டே சீன் இவருக்கு...சாப்பாடும் சிகரெட் பாக்கெட்டும் வாங்கிதந்திருப்பார்கள் போல...எளிமையாக நடித்துவிட்டுப்போகிறார்...

எவ்வளவோ நல்ல படங்களை கொடுத்த மற்றும் நடித்த பாண்டியராஜனை முழுமையாக வீணடித்துளார்கள்...அவருக்கு குடிகாரன் வேடம்...மொத்தம் மூன்று சீன்...கண்கள் சிவக்க மூன்று நாள் தாடியுடன் மாமனார் வீடு எதிரில் வந்து குடிப்பதற்கு பணம் கேட்கிறார். ஒரு முறை ஐந்தாயிரம் கொடுத்து அனுப்புகிறார்கள்...தயாரிப்பாளரும் அவ்வளவுதான் கொடுத்தாரா என்பதை அவர்தான் சொல்லவேண்டும்...

நவ்யா நாயரிடம் படம் ஆட்டோகிராப் மாதிரி வரும், அவார்டு வரும் என்று கொஞ்சம் அமவுண்டும் தேத்திவிட்டார்கள் போலிருக்கிறது...கொறைச்சு மலையாள வாசம் வீசுந்து...படத்தில் அங்கிங்கெனாதபடி மலையாள வாசனை...

தேவையில்லாமல் ஒரு தமிழாசிரியரை படத்தில் நுழைத்து, முதிர் கண்ணனான அவர் நவ்யாவிடம் காதலை சொல்வது போலவும், மறுக்கப்படுதல் போலவும், கிண்டல் செய்யப்படுதல் போலவும் காட்டி, தமிழாசிரியர் குலத்துக்கு மிகப்பெரிய வன்முறையை செய்துள்ளார்கள்...

இந்த மொக்கை படத்தை க்ளைமாக்ஸ் வரை பார்த்து முழுமையாக விமர்சனம் எழுதும் அளவுக்கு பொறுமை இருந்திருந்தால் நான் வலைப்பதிவு எழுத வந்திருக்கமாட்டேனே ?

ஆடும் கூத்து, அறுவையான படம்...

Monday, May 25, 2009

கர்ப்பிணிகளை வெளியேற்றுகிறதா இன்போசிஸ் ???தாய்மை என்பது அற்புதமான உணர்வு. இதை நான் சொல்லி வாசகர்களுக்கு தெரியவேண்டியதில்லை...

சிடுமூஞ்சு ஆட்டோக்காரர்களில் இருந்து, எரிந்து விழும் பேருந்து நடத்துனர் வரை கர்ப்பிணிகளை மரியாதையுடன் நடந்ததுவதை தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன்...

ஆனால் மெத்தப்படித்த பொறியியலாளர்கள், மனிதவளத்துறையினர் நடந்துகொண்டுள்ள விதம் மிக அநாகரீகமானது..

இந்தியாவின் மிக சிறந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் இன்போசிஸ் நிறுவனம்தான் இந்த கொடுமையை செய்துள்ளது...

தன்னுடைய அலுவலகத்தில் பணியாற்றும் கர்ப்பிணிகளை அழைத்து, தானாகவே நிறுவனத்தை விட்டு விலகிவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது...

பொதுவாக இன்போசிஸ் நிறுவனம், நாயை விட கேவலமாக உழைக்கச்சொல்வதாக ஒரு பேச்சு உண்டு.

இந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி அந்த கூற்றுக்கு வலுசேர்க்கிறது...

இந்த பொருளாதார சூழ்நிலையில் கர்ப்பிணிகளால் முழுமையாக பணிபுரிய முடியாது என்று கருதுகிறதா இன்போஸிஸ் நிறுவனம் ??

விவரம் தெரிந்தவர்கள் தான் விளக்கவேண்டும்...

Monday, May 18, 2009

பொய்யர்களும் போலி டாக்டர்களும்...பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்று சொல்கிறது ஒரு குடுமி பழமொழி. பொய் சொன்னால் வாயில் புழு வைக்கும் என்று சின்ன வயதில் மிரட்டப்பட்டு, ரொம்ப நாளைக்கு பொய் சொல்லாமல் இருந்தேன்..பொய்யை பற்றி வேறு சில சொல்லாடல்கள், கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கு என்பனபோன்றவை இப்போது நியாபகம் வருகின்றன...

ஆனால் ஒன்று...இதுபோன்ற பொய்களை சந்தோஷமாக பரப்புபவர்களை கண்டுகொள்வதன் மூலம் தமிழின துரோகிகளை எளிதாக அடையாளம் காணலாம். காலையில் இட்லிவடை சாப்பிட்டேன். முந்தைய வரிக்கும் அடுத்த வரிக்கும் சம்பந்தம் உண்டு..

**************

கடந்த டிசம்பர் 15, பெங்களூரில் என்னுடைய மனைவிக்கு சுகப்பிரசவம்.
மூன்று நாளில் டிஸ்சார்ஜ் என்றார்கள். பூப்போல கைகளில் தவழ்ந்த அழகான பெண் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, கொஞ்சிக்கொண்டு, அவள் அழுவதை ரசித்துக்கொண்டு, அவளின் மெல்லிய ரோஜாப்பூ பாதங்களை வருடிக்கொண்டு, அந்த மூன்று நாட்கள் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை...

என்னுடைய நிறுவனம், என் மனைவிக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தது. கேஷ் ப்ரீ அட்மிஷன் மற்றும் டெலிவரி என்றார்கள். மூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் அன்று டிஸ்சார்ஜ் சம்மரி ஷீட் தயாரித்தார்கள். இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பவேண்டிய விண்ணப்பங்களில் கையொப்பம் பெற்றார்கள். ஏதோ கொஞ்சம் மருந்து வாங்கியமைக்கு வெறும் 200 ரூபாய் மட்டும் கட்டச்சொன்னார்கள்...

மனைவியும் கிட்டத்தட்ட தானே எழுந்து எல்லா வேலைகளையும் செய்யும் அளவுக்கு தேறியிருந்தார். அனைத்து பொருட்களையும் சேகரித்துக்கொண்டு, மருத்துவரின் இறுதி சோதனைக்காக காத்திருந்தோம்.

மருத்துவர் வந்தார், அப்படி இப்படி பார்த்தார்.

பேபி லைட்டா யெல்லோயிஷ்ஷா இருக்கு. லைட்டா ஜாண்டிஸ் இருக்கு. இன்னோரு நாள் இருக்கனும் என்றார்...

தூக்கிவாரிப்போட்டது..

ஜாண்டிஸா ? நானும் மனைவியும் ஒரு சேர அதிர்ந்தோம்...பெரிய ஆர்ப்பாட்டம் செய்தாள் மனைவி...

அய்யோ, எனக்கு சின்ன வயசுல ஜாண்டிஸ் வந்திருக்குங்க...என்னோட குழந்தைக்கும் வந்திருச்சா ? என்று கண் கலங்க ஆரம்பித்தாள்..

டாக்டர் ரொம்ப கூலாக சொன்னார்..

ஒன்னும் பதட்டப்படத்தேவையில்லை...எல்லா குழந்தைகளுக்கும் வருவதுதான்...

வீ ஹேவ் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் பார் பேபி ஜாண்டிஸ்...

சிஸ்டர், இன்னைக்கு இவங்க ஸ்டே பண்றாங்க...பேபி ஜாண்டிஸ் ரிமூவ் பண்ற மெஷினுக்கு அடியில குழந்தையை நைட் புல்லா வைங்க...மார்னிங் செக் பண்ணிட்டு, அப்புறமா டிஸ்சார்ஜ் பண்ணலாம்...

ஐந்து நிமிட யோசனைக்குபின் எனக்கு புரிந்துபோனது..

இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நார்மல் டெலிவரிக்கு நான்கு நாட்கள் வரை படுக்கை வசதி மற்றும் மருத்துவர் பார்வையிடல் வசதியை தருகிறார்கள்..

பேஷண்ட் சொந்தமாக பணம் கட்டுபவர் என்றால் 3 நாளில் டிஸ்சார்ஜ். இன்ஸூரன்ஸ் கம்பெனி பணம் கட்டுகிறது என்றால் 4 நாளில் டிஸ்சார்ஜ். கடைசி நாளைக்கு இந்த பேபி ஜாண்டிஸ் உடான்ஸ்...

ஒரு தொட்டில், அதன் மேலும் ரெண்டு பவர்புல் ட்யூப் லைட். அதன் கீழ் வெறும் உடம்புடன் குழந்தையை படுக்கவைக்கவேண்டுமாம்..

தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துவிட்டுப்போனாள் தாதி...

குழந்தையை வெறும் உடம்புடன் ட்யூப் லைட்க்கு அடியில் படுக்கவைப்பதை பார்க்க எனக்கும் சரி, என் மனைவிக்கும் சரி, சம்மதமில்லை...

மனைவியிடம் இந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி விவகாரத்தை விளக்கி, சாந்தப்படுத்தினேன்.

தாதி அந்தப்பக்கம் விலகியதும் குழந்தையை அந்த தொட்டியில் இருந்து எடுத்து மனைவியிடம் கொடுத்துவிட்டேன்...

காலை மருத்துவர் வரும் நேரத்துக்கு பத்து நிமிடத்துக்கு முன் மீண்டும் பாப்பாவை அந்த ஜாண்டிஸ் ரிமூவிங் டியூபு லைட் தொட்டியில் போட்டேன்...

டாக்டர் வந்தார். குழந்தையை பரிசோதித்துவிட்டு..

யூ சீ...ஜாண்டிஸ் சுத்தமா போயிருச்சி...யூ கேன் கோ டுடே...என்றார்...

நான் மனைவியை பார்க்க, அவளுடை மர்மச்சிரிப்புக்கு எனக்கு மட்டும்தானே அர்த்தம் தெரியும் ?

டிஸ்சார்ஜ் சம்மரியை நோட்டம் விட்டபோது, ஜாண்டிஸுக்கு மெஷின் வைத்த வகையில் மூன்றாயிரம் ரூபாய், நாலாவது நாள் படுக்கை நான்காயிரம் ரூபாய், மருத்துவர் பார்வையிட்ட வகையில் 2000 ரூபாய் என்று சப் டோட்டல் போட்டிருந்ததை அவளிடம் காட்டியிருந்தேனே ??

*******************

சமீபத்தில் நன்பருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது...பத்து நாள் விடுமுறைக்குப்பின் ஸ்கைப்பில் வந்தார்...

நானும் மனைவியும் வாழ்த்துக்களை பரிமாறினோம்...

அப்போது அவர் சொன்னார்...நார்மல் டெலிவரிதாங்க...குழந்தைக்கு லாஸ்ட் டே லைட்டா ஜாண்டிஸ் வந்திருச்சு...அதனால கொஞ்சம் கஷ்டமாயிருச்சுங்க...

நான் "தெவிடியா பசங்க", காசுக்கு பீ கூட திம்பானுங்க...என்று ரொம்ப நாளைக்கு பிறகு கொஞ்சம் கோபப்பட்டேன்...

*******************

இதே போல் இன்னோரு மோசடி, கர்ப்பப்பை ரீமூவல் ஆப்பரேஷன்...

மாதவிடாய் நின்றபின் கர்ப்பப்பையை ரிமூவ் செய்வது உடல் நலனுக்கு நல்லது என்று என்னுடைய மாமியார் 25 ஆயிரம் செலவில் இப்போது செய்துள்ளார்கள். இது ஒரு மாபெரும் மோசடி..இந்த மோசடிகளை பத்திரிக்கை நன்பர்கள் அம்பலப்படுத்தவேண்டும்..

*********************

சிலவேளைகளில் அமைதிகாக்க விரும்புகிறேன்...சிலவேளைகளில் அமைதிகாக்க விரும்புகிறேன்...என்னால் பார்க்கமுடியவில்லை...என்னால் உணரமுடியவில்லை...என்னால் கேட்கவும்கூட முடியவில்லை...

தொலைவில் ஏதோ தெரிகிறது, ஆனால் அருகில் தெரியாமல் இருக்கிறது...குழப்பமாகவும் சில சமயம் மிகவும் தெளிவாகவும் இருக்கிறது...இருப்பு சார்ந்த இயக்கம்..இயங்காமல் நிற்கவும் முடியாது...

அதனால் இயங்கிக்கொண்டுதானிருக்கவேண்ண்டும்...

எதிர்கொள்வது கடினம்தான், ஆனால் வேறு வாய்ப்புகள் இல்லை...

ஏதோ சொல்ல நினைக்கிறேன்...முடியவில்லை...முடித்துக்கொள்கிறேன்...

Sunday, May 17, 2009

பிணந்தின்னிகள்...இங்கே பரபரப்பு ஓய்ந்துவிட்டது. தின்ற பிரியாணி செரித்துவிட்டது. அங்கே ஈழத்தில் மக்கள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டு, பிடிக்கப்படுகிறார்கள்.

ஒரு தலைமுறையை ஏற்கனவே ஊனப்படுத்திவிட்டார்கள். இன்னும் எஞ்சியுள்ளவர்களை கொல்லவோ, ஊனப்படுத்தவோ வெறியோடு நிற்கிறார்கள்.

மனது பதைபதைக்கிறது. ஈழ போராட்டம் இனி இணையப்போராளிகளான பி ராயகரனும் சீரி ரங்கனும் நடத்துவதுதானா ?


*********************

சுகந்திர போராட்ட வீரர் ஜே.கே.ரித்திஷ், ஏழைபங்காளர் கேசி பழனிச்சாமி, பழுந்த காந்தியவாதி அழகிரியண்ணன் என்று பல காளைகள் தோள் தினவெடுத்து காத்திருக்கின்றன. வேண்டும் கேபினெட்டுகள்...

விஜயகாந்த் வீணாய்ப்போன தமிழக அரசியல் சாபம். ஸ்பாய்லர். பாட்டாளிகளின் நிலை இனி தெரியவில்லை. வைகோவும் தோல்வி. திருமா என்ன குரல் எழுப்புவார் என்று தெரியவில்லை...

இதோ தலைவர் கிளம்பிவிட்டார். இந்தமுறை குறைந்தபட்சம் ஆறு கேபினெட். தகவல் தொழில்நுட்பம், ரயில்வே..பிரதமர் பதவியை தவிர அனைத்தையும் கேட்டுபார்க்கலாம்....

கடைசி நேரத்தில் ராஜகண்ணப்பன் கண்ணில் மண்ணை தூவிவிட்டார் சிவகங்கை சீமான். ஜெயிச்சுட்டாராமே ? நம்பவே முடியவில்லை. இளங்ஙோவன் மகனோ எதிர்கட்சி வெற்றி வேட்பாளரின் கையை முறுக்கி அடிக்கிறார். கதர்சட்டைகளும் நல்லவர்கள் தான் போலிருக்கிறது..

இணையத்தில் என்ன சொல்லியும் அதிமுக ஜெயிக்கலியே ? ஒருவேளை இனிவரும் காலத்தில் தமிழகத்தில் எல்லோரும் இணையத்தை பார்வையிடும் வகையில் மாறன் பேமிலி இண்டர்நெட் பிஸினஸ் செய்தால் ஒருவேளை சாத்தியம்..

வாழ்த்துக்கள் லக்கி, சஞ்ஜெய், அபி அப்பா, உடன்பிறப்பு.

***************

Wednesday, May 13, 2009

அரசியல் for Dummies...அரசியலில் குதிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது இயல்புதான். அரசியல் என்றால் மக்களுக்கு சேவை செய்வது என்று நீங்கள் நினைத்திருந்தீர்கள் என்றால், மேற்க்கொண்டு படிக்காமல் எஸ்கேப் ஆகுங்கள். அதுதான் சால சிறந்தது...

எப்படி சினிமாக்காரர்கள், சினிமா எனது தொழில், என்று முழங்குகிறார்களோ, அரசியலும் ஒரு தொழில். அதில் சேவை என்ற பேச்சுக்கே இடமில்லை.

அரசியல் என்றால் என்ன என்ற அடிப்படையை முதலில் தெரிந்துகொள்ளாம். அரசியல் என்றால் பிழைப்பு. பெட்டிக்கடை வைத்தல், ஹோட்டல் நடத்துதல், கோழிப்பண்ணை வைத்தல் மாதிரி அரசியலும் ஒரு தொழில். ஒரு சிலர், இருக்கும் சொத்தை காத்துக்கொள்ள அரசியலில் திடீர் குதியல் போடுவார்கள். அவர்களுக்கானது அல்ல இந்த பதிவு, ஊர் சுற்றித்திரியும் வெட்டிப்பயல், வெறும்பயல்களுக்கானது...

இப்போதெல்லாம் அரசு வேலைகள் அருகிவிட்டன...அதனால அதுக்கும் போவ முடியாது...கம்பியூட்டரும் படிக்கல...படிச்ச பி.ஏவில் பதினைந்து அரியர்..

மிலிட்டரிக்கோ, போலீசுக்கோ போகும் அளவுக்கு உடல் தகுதியில்லை. சொந்தமாக பெரிய அளவில் நிலமோ, வாடகை வருமானம் வரும் அளவுக்கு ரெண்டு மூனு வீடோ இல்லை...கடனை உடனை வாங்கி செய்த ஒன்றிரண்டு பிஸினசும் புஸ்ஸாகிவிட்டது...சிகரெட்டுக்கு கூட நாடார் கடையில் கடன்...இதுதான் இப்போதைக்கு உங்கள் நிலை என்றால், உங்களுக்காகவே எழுதப்பட்ட கட்டுரை இது...

சார்...நீங்க அரசியல்ல குதிச்சு அமைச்சர் ஆக முழு தகுதியும் உங்ககிட்ட இருக்கு...என்ன சார் போடறேன்னு பாக்குறீங்களா ? வருங்கால வட்டம், மாவட்டம், அமைச்சர்யா நீ..சாரி நீங்க...இப்பவே கொடுக்கவேண்டாமா மரியாதை ? ஓக்கே இப்ப அரசியல் அரிச்சுவடியை படிக்கலாம் வாங்க..

இந்த கட்டுரை, ஏற்கனவே அரசியல் பாதையில் பயணிப்பவர்களுக்கானது அல்ல. அதை "வெற்றிகரமான அரசியல்வாதியாவது எப்படி" என்ற எனது வருங்கால கட்டுரை விளக்கும்...இது ஜஸ்ட் லைக் தட் குதிக்க மட்டுமே...

இந்த கட்டுரையில் முக்கியமாக நான் சொல்லவருவது, உங்களது அரசியல் பாதையின் வெற்றி என்ன, தோல்வி என்ன என்பதை நீங்கள் வரையறுத்துக்கொள்ளவேண்டியது முக்கியம்...அதை சொல்வது இந்த கட்டுரை...

உங்கள் அரசியல் பாதையின் வெற்றியாக நீங்கள் நினைப்பது, பதவியா, பணமா என்பதை பொறுத்தே இந்த வரையறையின் முடிவு அமையும்..பதவி மட்டும் போதும், பணம் வேண்டாம் என்றால், உங்களை லூசு என்பேன்...

பணம் இல்லாமல் பதவி இல்லை...பதவி இல்லாமல் பணம் இல்லை...இரண்டும் செம்புலப்பெயல்நீர் போல கலந்தவை...என்ன புரியலியா...க்வாட்டரும் வாட்டரும் போல கலந்தவை...

ஒரு மத்திய அல்லது மாநில அமைச்சராக ஆவது உங்கள் லட்சியம் என்றால் அதற்கான ப்ராபபிளிட்டி மிகவும் குறைவு, போட்டி மிக அதிகம்.

இன்னோரு விஷயம், கொஞ்சம் எளிமையான டார்கெட்டை வைத்துக்கொள்வது மிக முக்கியம்.

ஒரு ஒன்றியச்செயலாளர் பதவி அல்லது மாவட்ட கவுன்சிலர் பதவியை குறிவைத்து நகர்ந்தால் உண்மையில் அதனை அடைவது மிக எளிது.

அப்படியே அடைய முடியவில்லை...ஒரு பதவியும் கிடைக்கவில்லை என்றாலும், மினிமம் கேரண்டியாக, வெட்டிப்பயல் வெறும்பயல் என்று ஊராரால் தூற்றப்பட்ட நீங்கள், ஒரு புறம்போக்கு நில ஹைவேஸ் மோட்டல் முதலாளியாகவோ, அல்லது ஒரு ட்ராவல்ஸ் ஓனராகவே உட்கார்ந்துவிடலாம்...

கொஞ்சம் அதிஷ்டமும் பேச்சுத்திறமையும் இருந்தால் கிரானைட் அதிபராகவோ அல்லது பெரும் இம்போர்ட் எக்ஸ்போர்ட் வியாபார காந்தமாகவோ மாறலாம்...

சரி மேட்டருக்கு வருவோம்...மேல படிங்க...யோவ்..கீழ படிய்யா...முதல் வரியில இருந்து படிக்கறான் பாரு...சாரி...சார்...கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்...உங்களோட எட்டாவது பெயில் கல்வித்தகுதிக்கு இந்த அளவுதான் நான் எதிர்பார்க்கமுடியும் என்றாலும், அரசியலில் படிப்பு ஒரு மேட்டரே இல்லை...படிப்பு குறைய குறைய பதவி உயரும்...

ஜாதியா, கட்சியா, மன்றமா ?

ஜாதி அரசியல் அரிச்சுவடி

"கல்வியா செல்வமா வீரமா" என்ற சரஸ்வதி சபதம் படத்தில் வரும் கணீர் பாடல் உங்கள் நினைவுக்கு வந்தால் அதை தூக்கி போடுங்கள்...முதலில் நீங்கள் கையில் எடுக்கப்போவது எந்த வகையான அரசியல் என்பதை தீர்மானிக்கவேண்டும்...

உங்கள் ஏரியாவில் உங்கள் சாதி மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களா ? அப்போ ஜாதி அரசியல் எளிமையாக ஒர்க் அவுட் ஆகும்...

எளிமையாக எடுத்துக்காட்டுகளுடன் சொன்னால், விழுப்புரம் திண்டிவனம் ஏரியாவா, நீங்கள் வன்னியர் சாதியை சேர்த்தவர் என்றால் நீங்கள் பயணிக்கவேண்டிய திசை, வன்னியர் சாதி அரசியல்...மதுரை, தேனியை சேர்ந்தவரா ? தேவர் அரசியலுங்க...கோவை, ஈரோடு...அட நம்ம கவுண்டர் அரசியல்...வேலூரா, அப்படீன்னா இருக்கவே இருக்கு முதலியார் அரசியல்...

இன்னோரு விஷயத்தையும் நல்லா புரிஞ்சுக்கோங்க...வன்னியர் ஜாதி அரசியல் மதுரையில எடுபடாது.....தேவர் அரசியல் விழுப்புரத்துல எடுபடாது...அதனால எந்தவித காண்ட்ரடிக்சனும் வராம உங்க அரசியல் பாதையை தீர்மானிக்க இது ரொம்ப முக்கியம்...

இதுபற்றி வரும் அத்தியாயங்களில் விரிவாக பேசலாம்...இந்த கட்டுரை வெறும் ஸ்னாப்ஷாட் மட்டும்தானுங்க...

கட்சி அரசியல் அரிச்சுவடி

திமுக, அதிமுக போன்ற பெரும் கட்சிகளில் ஏற்கனவே கிளை, இணை, துணை என்று எக்ஸ்டென்ஷன் போட்டு பதவிகளை பிரித்துவிட்டிருப்பார்கள். அடிப்படை உறுப்பினர் அட்டைக்கே ஆறு வருடம் ஆகும்...

காங்கிரஸ்,பாமக, மதிமுக,வி.சி என்று அத்தனை கட்சிகளிலும் இந்த நிலைதான்...இதிலும் சில கான்ப்ளிக்ட்ஸ் இருக்கும்...இதிலும் எண்டர் ஆவது ரொம்ப குஷ்டம்....சாரி கஷ்டம்...

ஒரு உதாரணம் சொல்லப்போனால் திமுக வெயிட்டாக இருக்கும் மதுரையில் பாட்டாளி மக்கள் கட்சியிலோ அல்லது மதிமுகவிலோ இருத்தலின் இல்லாமை நன்று...

அங்கே உங்களுக்கு பெரிய அரசியல் எதிர்காலம் இருக்காது...கொஞ்சம் அசந்தால் கழுத்தில் அரிவாள் வெட்டு கூட கிடைக்கும்...அதனால் நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டியது விஜயகாந்த் கட்சியோ, அல்லது சரத்குமார் கட்சியோ...

கையில் கொஞ்சம் டப்பு தேத்தி, மேலுக்கு கொஞ்சம் கடனை உடனை வாங்கி மாவட்டம் வட்டத்தை பார்த்து ஒரு கிளை இணை செயலாளர் பதவியை வாங்கிவிடுவது நலம் பயக்கும். அதுவும் கிடைக்கலியா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், கார்த்திக் கட்சி, லட்சிய திமுக என்று எதாவது ஒரு கம்பெனியில் ஒரு பதவியை அமவுண்டை வெட்டி பெறுதல் முதல் பணி.

கொஞ்சம் நாள் ஆனாலும், சில பலரை சரிக்கட்டி, அமவுண்டு தட்டி, இந்த பதவியை புடிச்சுட்டீங்க என்றால் விசிட்டிங் கார்டு போட்டுடலாம். நாலு நன்பர்களை இணைத்து, வீட்டை ஒட்டி கட்சி அலுவலகம், கட்சி தலைமையின் ப்ளக்ஸ் பேனர் என்று அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்தீர்கள் என்றால் மற்ற பெரிய, சிறு, குறு கட்சிகளிடம் இருந்து அழைப்பு வரும்...இது தான் உங்கள் எண்ட்ரி பாய்ண்ட்.

கப்பென்று அங்கே தாவி ஒரு கிளை, இணை செயலாளர் போன்ற கட்சி பதவியை பிடிப்பது உங்கள் அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல். மேல் விவரங்களை பின்னால் பார்க்கலாம்...

இந்த கட்சி அரசியலில் உள்ள ட்ராபேக், உங்களிடம் கொஞ்சம் அமவுண்ட் இருக்கவேண்டும், அல்லது அங்கே வாங்கி இங்கே மாற்றி ரொட்டேஷன் செய்யும் திறமையாவது இருக்கவேண்டும். இல்லை என்றால் இந்த வகை அரசியலில் உங்களால் ஆரம்ப முதலீடு செய்வது கடினம்.

மன்ற அரசியல் அரிச்சுவடி

ரஜினி மன்ற பதிவெண் தருவதை நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு. அவர்களும் தலைவர் இப்போ அரசியலுக்கு வருவார், அப்போ வருவார், வாய்ஸ் தந்துட்டார், கிளம்பிட்டார் என்று இழவு காத்த குயிலாக கிடந்தும், ரஜினிகாந்த் இவர்களை சீண்டக்கூட இல்லை. கல்யாண மண்டப்பத்தில் அவ்வப்போது மிக்ஸர் பிஸ்கெட் தருவதோடு சரி.

அவர்களும், தலைவர் எந்திரனுக்கு அப்புறம் வந்திருவார், அப்போ உங்களுக்கு தான் ஆதரவு தருவார், இப்போதைக்கு எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று பெரிய கட்சிகளிடம் அமவுண்டு தேத்தி புள்ள குட்டிகளை படிக்கவைக்கிறார்கள்...சில முக்கியஸ்தர்கள் கொஞ்சம் வெற்றிகரமாக அரசு புறம்போக்கு நிலங்களை கூட வளைத்து டீக்கடை, சைக்கிள் கடை நடத்தி பிழைப்பை ஓட்டுகிறார்கள்..

இந்த வகை அரசியல்தான் எந்தவித இன்வெஸ்ட்மெண்ட்டும் தேவை இல்லாத அரசியல். மிக எளிதாக உங்களை உள்ளே நுழைத்துக்கொள்ள வாகான இடம் இது...மேலும் உங்களுக்கு நிறைய ஆப்ஷன்களையும் விட்டுவைத்திருக்கும் இடம் இதுதான்...

இன்றைக்கு ரஜினி மன்றத்திலோ, விஜயகாந்தும், சரத் குமாரும் ஏற்கனவே கட்சி ஆரம்பித்து நடத்துவதாலோ, அங்கே நுழையமுடியாது என்றாலும், 2016ல் மகனை முதல்வர் ஆக்கிவிடலாம் என்று நைட் ட்ரீம் கொண்டிருக்கும் எஸ்.ஏ சந்திரசேகரின் மகன் இளைய தளபதி விஜய் மன்றத்திலோ, தல அஜீத், புரட்சி தளபதி விஷால், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு, சூப்பர் ஸ்டார் மருமகன் தனுஷ் என்று ஏராளமான ஆப்ஷன்கள்.

ஒரு படத்துக்கு ஹீரோவாக மேக்கப் போட்டுவிட்டாலே அடுத்தது நாற்காலிதான் என்று ஒவ்வொரு ஹீரோவும் நினைக்கும் காலம் இது. உங்கள் ஊரில் குறிப்பிட்ட நடிகருக்கு மன்றம் இல்லையா ? நீங்கள் ஆரம்பிக்கிறீர்கள்.

ஜே.கே.ரித்திஷ், பரத், சூர்யா, ஆர்யாவாக இருந்தாலும் பரவாயில்லை. அல்லது தயாரிப்பில் இருக்கும் படத்தில் நடிக்கும் இளம் ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை...

நாலைந்து நன்பர்களை சேர்த்து, பர்மனெண்டாக இருக்கும்படி எட்டுக்கு எட்டு தகர போர்டில் தலைவரின் படத்தை வரைந்து, .கீழே உங்கள் போட்டோவோடு, உங்கள் நன்பர்களின் போட்டோவும் சேர்த்து, உங்கள் பெயர், உங்கள் நன்பர்கள் பெயர் என்று அனைத்தையும் இணைத்து ஊரில் பஸ்டாண்டுக்கு பக்கத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வைக்கவும்...

அந்த போர்டில், தலைவா, நீ சூரியன், செவ்வாய்...புதன்....நீ ஆஸ்கர் நாயகன்...கிராமி அவர்டு நாயகன்...என்று எந்த கருமத்தையாவது எழுதி, வாழ்த்துக்கள்...அல்லது, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று முடித்துவைக்கவும்...

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம், உங்கள் பெயரும் உங்கள் படிப்பும்...

நீங்கள் வைத்திருப்பது அப்பாவின் டி.வி.எஸ் பிப்டியாக இருந்தாலும் புல்லட் குமார் என்று வைக்கவேண்டும். கராத்தே க்ளாஸில் சேர்ந்து ரெண்டு நாள் ஊ.ஆ.என்று அடி தொண்டையில் கத்தி முன்னும் பின்னும் கையை நீட்டி ஆட்டி இருந்தீர்கள் என்றால் அதைவிட சூப்பர் தகுதி வேறில்லை...இன்னுமா புரியல...கராத்தே சுரேசுய்யா நீ...கராத்தே சுரேஷ் B.A என்று போட்டால் அற்புதமாக இருக்கும்...

அரியர்ஸ் என்றால் என்னவென்றே நாட்டில் முக்காவாசி பேருக்கு தெரியாது என்பது மிகப்பெரிய அட்வாண்டேஜ். B.A B.L என்று போட்டுக்கொண்டால், எல்லோரும் உங்களை வக்கீல் என்று கூட நினைப்பார்கள். யார் வந்து வெரிபை செய்யப்போகிறார்கள் ?

இதன் அடுத்த கட்டம் உங்கள் பெயர் அனைவர் மனதிலும் பதிய நீங்கள் எடுக்கும் நடவடிக்கை...

நாடார் கடையில் சிகரெட் வாங்கிவிட்டு, புல்லட் குமார் அக்கவுண்டுல எழுதிக்க என்று கெத்தாக, கடையில் தக்காளி வாங்க காத்திருக்கும் லேடீஸ் காதில் விழும்படி சொல்லிவிட்டு வருவது மிக முக்கியம்...

அடுத்த கட்டுரையில் சில பல ஐடியாக்களை கொடுத்து உங்களை அரசியல்வாதியாக்கிவிடுவேன் என்றாலும், ஒரு சின்ன ஐடியா ஸ்னிப்பெட்டுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன்...

தலைவர் பிறந்தநாள் வரும்போது, நூறு நாற்பது பக்க நோட்டும், அதே அளவில் ரெணால்ஸ் பேனாவும் வாங்கி வைத்துக்கொள்ளவும். கொஞ்சம் திறந்த இடமாக பார்த்து ஒரு பந்தல் போட்டு, இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா என்று ப்ளக்ஸ் போர்டு வைக்கவும். 200 நோட்டீஸ் அடித்து ஏரியாவில் வழங்கவும்...ஒரு போட்டோகிராபரை ஏற்பாடு செய்யவும்...ஏரியாவில் முக்கியமாக உள்ள பிரமுகரை நன்பர்கள் புடைசூழ சென்று அழைக்கவும்...அவரது பெயரும் நோட்டீஸில் இருப்பது முக்கியம்...

குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் கூடியதும், அங்கே வந்திருக்கும் குழந்தைகள், தாய்மார்கள், டாஸ்மாக்குக்கு போகும் வழியில் கூட்டத்தை எட்டிப்பார்த்தவர் என்று அனைவருக்கும் நோட்டு,பேனா கொடுக்கவும்...அதனை புகைப்படமும் எடுக்கவும்...கொஞ்சம்போல அமவுண்டு தேறினால் அதனை லோக்கல் நியூஸ் பேப்பரிலும் வெளியிடலாம்..

மொத்த பட்ஜெட் என்ன பார்க்கலாமா ? நோட்டு பேனா ரூ 500, பந்தல் 2000, ப்ளக்ஸ், நோட்டீஸ் 2000, போட்டோகிராப் 500, பசங்களுக்கு நைட்டு சரக்கு, சைடிஷ், தம்மு ரூ 500. ஆக ரூ 5500. இந்த சின்ன இன்வெஸ்ட்மெண்ட் வருங்காலத்தில் நீங்கள் 5000 கோடி சேர்க்க உதவும். என்ன நம்ப முடியலையா ? அடுத்த கட்டுரையில் விரிவாக காணலாம்...

Monday, May 11, 2009

பிரபல பதிவருக்கு அட்வைஸ் மழை...!!!ஆறுமாதம் வரை தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் தராமல் இருப்பது சால சிறந்தது..நான்கு மாதத்தில் இட்லி ஊட்டுவது, சோறு ஊட்டுவது எல்லாம் வேண்டாம்.

குழந்தையின் வயிறு ஆறுமாதம் வரை தாய்ப்பாலை தவிர மற்றவற்றை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளாது.

கண்டதை குழந்தைக்கு கொடுக்கும்போதுதான் வயிற்றுவலி, கேஸ்டிக் போன்ற தொந்ததவுகள் வருகிறது.

தாயிடம் சரியாக தாய்ப்பால் இல்லை, குழந்தை எப்போதும் பசிக்கு அழுகிறது என்றால் மட்டுமே மருத்துவரை கலந்து ஆலோசித்து, வேறு உணவுகள் < பார்முலா, ரைஸ் செரலாக்> போன்றவை தரலாம்.

குழந்தை தாய்ப்பால் குடித்து முடிந்தவுடன் தோளில் வைத்து நங்கு நங்கு என்று முதுகில் மென்மையான ரெண்டு வைக்கவும். நல்லதொரு ஏப்பம் விடும். இது குழந்தைக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படாமல் இருக்க உதவும்.

குழந்தைக்கு டிஸ்போஸபிள் டைப்பர்ஸ் வாங்கி உபயோகப்படுத்தலாம்...அப்படி விருப்பம் இல்லை வேட்டித்துணியை கிழித்து பயன்படுத்தலாம்.

குழந்தை மூச்சா, ஆயி போனவுடன், சூடான நீரில் துணியை நனைத்து மென்மையாக துடைக்கவேண்டும்...

தாயின் உடல்நலனை காப்பது மிக முக்கியம். குழந்தை பிறக்கும்வரை கால்சியம், இரும்பு சத்து மாத்திரைகளை கட்டாயப்படுத்தியாவது தந்திருப்பீர்கள்..

குழந்தை பிறந்தவுடன், அந்த மாத்திரைகளின் மேல் அவர்களுக்கு எரிச்சலும் டென்ஷனும் இருக்கும்...கண்டிப்பாக அவைகளை வெறுப்பார்கள்..

ஆனால் அவைகளை மருத்துவர் நிறுத்த சொல்லும்வரை கண்டிப்பாக உட்கொள்ளவேண்டும்.

அதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது, என்பதை பொறுமையாக புரியவைக்கவேண்டும்...

பெண்கள் குழந்தை பிறந்தவுடன், சிறிய மன அழுத்ததுக்கு உள்ளாவார்கள் என்று நினைக்கிறேன்...

அவர்களின் மீது எரிந்து விழாமல், மென்மையாக போக்கை கடைபிடிக்கவேண்டும். உளவியல் ரீதியாக புரிந்துகொள்ளவேண்டும்...

குழந்தை தொடர்ந்து இடைவிடாமல் அழும் நிலை உருவாகலாம். அந்த நேரத்தில் குடலேற்றம், உரம் விழுதல் போன்ற பாட்டி காலத்து ட்ரீட்மெண்டுகளை மட்டுமே நம்பியிராமல், மருத்துவரை கலந்து ஆலோசித்தல் நலம்...

குழந்தையை கொஞ்ச வருபவர்கள் வாயை கொஞ்சம் அடக்கி வைத்தல் நலம். எடுத்தெறிந்து பேசுவது போல அல்லாமல், குழந்தைக்கு இன்பெக்ஷன் வரும், அதனால் முத்தம் கொடுக்க வேண்டாம் என்று டாக்டர் சொல்லி இருக்கார் என்று பயமுறுத்தவும்...

முந்தைய காலகட்டத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தன, அதற்கு காரணம் நமது உணவு பழக்கம், மாசுபடாத காற்று...

ஆனால் இப்போது உள்ள குழந்தைகளுக்கு உடனே நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் குழந்தையை பார்வையிட வருபவர்களிடம் ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருக்கவும்...

நேரடியாக சொல்லிவிடுங்கள். குழந்தையை மூன்று மாதம் வரை அம்மாவை தவிர வேறு யாரும் தொடவேண்டாம் என்று மருத்துவர் சொல்லியிருக்காரு என்று உடான்ஸ் விட்டாலும் பரவாயில்லை...

குழந்தையை தூக்க தெரியாதவர்கள் தூக்கி, உடல்நலம் பாதிக்கப்படுவதும் உண்டு.

என்னால் முடிந்த அளவு சொல்லியிருக்கேன். மீதியை பின்னூட்டத்தில் அனுபவப்பட்டவர்கள் சொல்லுவார்கள், பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..!!!

Sunday, May 10, 2009

இண்டர்நெட்டு அழியப்போவுது, எல்லாரும் உள்ளபோவப்போறீங்க : சக்கரை சுரேசுதுள்ளி திரிந்த காலம் படத்தில் அருண்குமார், தாமு அண்ட் கோ ஒரு குட்டிசுவரில் உட்கார்ந்திருக்கும்...

அப்போது அங்கே வரும் காமெடியன் ஒருவரிடம் வலிய வம்பு வைத்து, வாங்கி கட்டிக்கொள்வார்கள்...

அந்த லூசு, இவர்கள் மானத்தை வாங்கிவிடும்...

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நன்பர்கள் மாட்டிக்கொண்டு திண்டாடும் காட்சியை இப்போது பார்க்கிறேன்...பக்கத்து வீட்டு டாமியும் ஏமியும்.

இவங்க வீட்டு டாமி ரெண்டு நாளா ஆயி போவலை. பிரபல / புதிய பதிவர்கள் யாராவது காரணமா இருப்பாங்களோ ?

லக்கியார் சக்கரையை சாறு பிழிந்த காரணம் படித்தவர்களின் ஓட்டை சரத் பாபு பிரித்து தொலைவாரோ என்பது தான்...(expected ஜெயிக்கிற வித்தியாசம் ஐந்தாயிரம் ஆறாயிரம் என்பதே காரணம்)..

ஆனால் இந்த சக்கரைக்கோ, டெக்னிக்கலாவும் ஒரு மண்ணும் தெரியல...எத்திக்ஸும் இல்ல...

அதிஷாவும் லக்கியும் செய்த நேர்மையான விமர்சனத்தை தாங்கிக்கொள்ளமுடியாமல், வடிவேலுமாதிரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று ஒரே அழுகாச்சி...

அவரது பதிவுவுக்கு பின்னூட்டம் போட்ட டோண்டு ராகவனை மச்சான் என்று அழைக்கிறார். அந்த அளவுக்கு பல ஹிஸ்டரி தெரிந்தவர்...

டோண்டு சார், எங்கே பிராமணன் எங்கே பிராமணன் என்று தேடிக்கொண்டுள்ளார்..யாராவது தேடி தந்தால் பரவாயில்லை...

இன்றைக்கு சக்கரையை நான் பாகாக குழம்பு வைத்துவிட்டேன்..(நன்றி குசும்பன்).

அப்படியே நானும் குட்டி சுவரில் ஏறிவிட்டேன்...

என்ன நடக்கப்போவுதோ ????

புலிகள்..அல்லது புலிகளின் உறவினர்களாம்...கருணா கண்டுபிடித்தார்...இன்றைக்கு போர்ப்பகுதிகளில் சிக்கியுள்ள / எஞ்சியுள்ள தமிழர்கள், ஒன்று விடுதலை புலிகள், அல்லது அவர்களின் உறவினர்கள் என்ற வரலாற்று உண்மையை கருணா அம்மான் கண்டுபிடித்துள்ளார்...

வடக்கு / கிழக்கு அரசியல், துரோகம், பதவி, பணம், குழிபறிப்பு என்று எல்லா கந்தாயங்களையும் விட்டுவிடுவோம்...அவற்றிற்கு அதற்கு தகுந்த நியாயங்கள் அநியாயங்கள் இருக்கலாம், அதை பற்றி பேசும் அளவுக்கு எனக்கு முதிர்ச்சியில்லாமல் கூட இருக்கலாம்..

ஆனால், எஞ்சியுள்ள சிவிலியன்களை முற்றுமுழுதாக கொன்றொழித்துவிட, சிங்கள பேரினவாதத்திற்கு கிடைக்கும் க்ரீன் சிக்னல் இந்த கருத்து அல்லது பரப்புரை.

இதனை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அங்கே ஈழத்தில் சிங்கள பேரினவாத கொலைவெறிப்படை, தன்னுடைய அத்தனை பேரழிவு ஆயுதங்களையும் மக்கள் மீது பிரயோகிப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் கொத்துக்கொத்தாக மடிவதாகவும் தகவல் கிடைக்கிறது.

இதற்குமேல் எதுவும் எழுத மனம் வரவில்லை. வரலாறு உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறது, உண்மையும் சத்தியமும் அவற்றுக்குரியதான வேலையை காலம்தாழ்த்தியாவது செய்யும்.

Friday, May 08, 2009

அது போன தேர்தல், நாஞ்சொல்றது இந்த தேர்தல்கலைஞர் >> ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தேர்தலுக்கு அப்புறம் பாத்துக்கலாம்..

Thursday, May 07, 2009

வினவை நோக்கி வினவுகிறேன். பதில் சொல்லுங்கள் !!!
வினவு பக்கம் பக்கமாக நீட்டி முழக்கி, ஏன் அ.இ.அ.தி.மு.கவுக்கு வாய்ப்போ, வாக்கோ தரக்கூடாது என்று எழுதியுள்ளார்.

வழமைபோல திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் அதை மேற்கோள் காட்டி, அய்யோ போடாதீங்க, போடாதீங்க என்கிறார்கள்..அ.தி.முகவுக்கு வாக்குகளைத்தான்..

இப்போது தி.மு.கவின் நிலை பரிதாபம். தங்களுக்கு வாக்கு கேட்பதைவிடுத்து, அடுத்த கட்சிக்கு வாக்கு போடாதீங்க என்று புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்..

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரை விலைக்கு வாங்க முயல்கிறார்கள்...தோல்வி பயம்...அட ஜே.கே ரித்திஷ்க்கு தேர்தல் சீட்டு கொடுக்கும்போதே தெரியவில்லையா ? திராவிட முன்னேற்க்கழகத்தின் தலைமையின் மதியற்ற நிலை ?

வினவுக்கு மிக எளிமையான கேள்வியை முன்வைக்கிறேன்...
நான் திருந்திவிட்டேன்...ஈழம் தான் தமிழகத்தின் தேர்தல் பிரச்சினை, என்று ஊர் ஊராக முழங்குகிறார் ஜெ.

சிட்டிகளில் மட்டும் சுற்றிக்கொண்டிருந்த ஈழப்பிரச்சினையை, இன்றைக்கு தமிழகத்தின் மூலை முடுக்குக்கு எல்லாம் எடுத்துச்சென்றுவிட்டார்...

முதல்வர் கலைஞர் அவர்களோ, ஈழப்பிரச்சினையை கிண்டலாக அணுக ஆரம்பித்துவிட்டார்.,,

அவரது பேட்டியில்

கேள்வி> அய்யா, நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபிறகும் குண்டுவிழுகிறதே ?

பதில்> மழைவிட்டாலும் தூவானம் விடலை போலிக்கு...

கேள்வி> ஈழப்பிரச்சினை தேர்தல் பிரச்சனையா ?

பதில்> வாங்க காப்பி சாப்பிட போலாம்.

இதனை அட்டகாசமாக சிரித்து சொன்னார்...

இது ஒரு பொறுப்பான முதல்வரின் பதிலா ? இவரை தமிழின தலைவர் என்று வணங்கிய, வாழ்த்திய, நம்பிய உணர்வாளர்களின் முகத்தில் இப்படியா உமிழ்வது ?

ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினையை தேர்தல் பிரச்சனையாக்கி டி.ஆர்.எஸ் வெற்றி பெற்றது. ஆனால் மக்களை ஏமாற்றிய பின், தோல்வி. இனி ஒவ்வொரு தேர்தலிலும் தெலுங்கானா பிரச்சினை இல்லாமல் ஆந்திர அரசியல் இல்லை.

ஆந்திராவில் தெலுங்கானா கண்டிப்பாக உருவாகும்...

அந்த நிலை தமிழகத்தில் வந்தால் மட்டுமே, தமிழ் ஈழம் உருவாகும், அந்த மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று எவ்வளவு வருந்தியிருப்பேன்...

அந்த நிலை இன்று ஜெயலலிதாவால் உருவாகியுள்ளது.

தமிழ் ஈழப்பிரச்சினை, இன்று தேர்தல் பிரச்சினை...தமிழகத்தின் அனைத்து அரசியல் சக்கரங்களும் அதில் சுழலுது.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்...நடந்துவிட்டது...

அதனால், நீங்கள் போட்டும் பட்டியல் இனிமேல் உணர்வாளர்களிடம் எடுபடாது...

நடந்தது நடந்ததாக இருக்கட்டும்..இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்..!!!

நம்பிக்கையோடு !!!!
நம்பிக்கையோடு !!!!
நம்பிக்கையோடு !!!!

Wednesday, May 06, 2009

செய்தி பிரிவில் இருப்போர் கவனத்துக்கு

செய்தி பிரிவில் செய்தி போடுபவர்கள் கவனத்துக்கு...ஈழ செய்திகளை மட்டும் போடாமல் மற்ற செய்திகளையும் போடுங்கப்பா...இலங்கைக்கு மட்டும் நடத்தப்படும் திரட்டி மாதிரி தெரியுது அப்போ அப்போ...

சரத்பாபு சத்திய தோல்வி...கலக்காத அலசல்.தென்சென்னையில் சரத்பாபு சுயேச்சையாக நிற்கிறார். மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படம் வந்ததில் இருந்து, தேர்தலுக்கு தேர்தல் ஐ.ஐ.எம்மில் இருந்து ரெண்டுமூனு பேர் கிளம்பி வந்துடறானுங்க..ஜனகனமன..ஜனங்களை நினை...அப்படீன்ற பாட்டை ஹம் பண்ணிக்கிட்டு..

அதுலயும், கவர்மெண்ட் காலேஜுல படிச்சவன் அரசியலுக்கு வந்தா குமுதம் ஆனந்தவிகடன் கண்டுக்கமாட்டாங்க. அதுல எல்லாம் பேட்டி வரனும்னா நீங்க ஐ.ஐ.எம்ல இருந்து தான் வரோனும்...

கொஞ்சம் அழகா இருக்க கிராமத்து பொண்ணுகக்கிட்ட ஏ..நீ ஹீரோயின் மாதிரி இருக்க என்று கோடம்பாக்கத்து கனவை விதைப்பதுபோல இந்த ஆள்கிட்டயும் யாராவது ஜொள்ளீயிருப்பாங்க போல...

அவன் அவன் ஓட்டுக்கு எட்டாயிரம் கொடுக்கராய்ங்களாம். அந்த பண பலம் கூட்டணி பலம் அதிகார பலத்துக்கு இடையில் எப்படி ஜெயிப்பது என்று கூட கணக்கு போடத்தெரியாத இந்த இளைஞர், எப்படி எம்பி ஆகி எம்பி எம்பி குதிச்சு பாராளுமன்றம் போகமுடியும் ?

இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை முக்கியமாக நிக்குது. இவருக்கு அதை பற்றி எதாகிலும் தெரியுமா ?

தனி ஒரு எம்பிக்கு தேர்தல் நிதி ஒரு கோடியோ ஒன்னரை கோடியோ தராய்ங்க. ஆனா வருடத்துக்கு ஏழு கோடி டர்ண் ஓவர் செய்யும் இந்த புட் கிங், அதை விட நிறைய பணத்தை மக்களுக்கு செலவு செய்யலாமே ?

பாராளுமன்றத்துல எல்லாரும் கெழவங்களா இருப்பாய்ங்க. காத்து பிரியுவாங்க. ஒரே கப்படிக்கும். பெசாம பொழப்பை பார்த்துக்கிட்டு போங்க தம்பி. இங்கிலீசுல நீங்க கொடுத்திருக்க தேர்தல் அறிக்கையை படிச்சுட்டு, ஹிண்டு பேப்பர் படிக்கற முன்னூத்து சொச்சம் பேர் போடற ஓட்டு வாங்கி தோக்கறதை விட்டுட்டு, அந்த நேரத்துல இன்னும் நாலுபேருக்கு உதவி செய்யுங்க. இன்னும் கொஞ்சம் பேருக்கு வேலை கொடுங்க. அவங்க குடும்பமாவது நல்லா இருக்கும்...

புத்தியா பொழைங்கடே...

காங்கிரசுக்கு கருமாதி செய்யும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள்என்ன இருந்தாலும் பழைய பழக்கத்தை விடமுடியுமா ? மூட நம்பிக்கை தான்..இருந்தாலும் டெத்துப்போனவங்க ஆன்மா ஷாந்தியாவ கருமாதி செய்யனுமாமே ? அதனால காங்கிரசுக்கு பதினாறாம் நாள் காரியம் செய்யபோறோம். எப்படி ஷெய்யறதுன்னு எனக்கு தெரியாது...அதனால வரூன் கொயல்விழியை கேக்கலாம் என்று இருக்கேன்ன்..

போனியாகாத சோனியா மேனியா... வந்தியா போனியா..
பதிவு எழுதலாம்னு நினைச்சேன். ஆனா கூகிள் இமேஜஸ்ல சோனியான்னு தேடினப்ப...சாரி..அப்புறம் வரேன்...எங்க கிளம்பிட்டீங்க ? கூகிளுக்கா ?

சீமான் முட்டாள் என்கிறது ஒரு ஸ்ப்லிட் பர்சனாலிட்டி அறிவாளி.சீமானை முட்டாள் என்கிறார் ஒரு ஸ்பிலிட் பர்சனாலிட்டி. அதான், ஒரே வலைப்பதிவில் ஆம்பள பேர்ல கொஞ்ச நாளும், பொம்பள பேர்ல கொஞ்ச நாளும் எழுதும் கைபர் போலன் பதிவர்தான்..

இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீர் என்று அவர் பொங்கி எழுந்த காரணம், சீமான் ஜெயலலிதாவை வாழ்த்தி பேசியதாம்...

அமெரிக்க, அவுஸ்திரேலிய, நோர்வே, பிரான்ஸ் தமிழ் சங்கங்கள் கூடத்தான் ஜெயலலிதாவை வாழ்த்துகின்றன. அவர்கள் அனைவரும் முட்டாள்களா ?

அப்போ யார் அறிவாளி ? கலைஞரா ? சோனியாவா ? காங்கிரஸ் தமிழ்நாட்டில் வாங்கப்போகும் சீட்டுகள் சொல்லும் அதை..இன்றைக்கு திமுக காரங்களே நம்பிக்கை இல்லாம இருக்காங்க...ஒரு ஓட்டுக்கு எங்க ஊர்ல அஞ்சாயிரம் தராங்களாம்...காசா வேண்டாம்னா நோக்கியா மொபைல் போன் கையில வருதாம்யா...

தேர்தல்ல ஜெயிக்க தலை கீழ நின்னுக்கிட்டிருக்காங்க...காரணம் ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழனுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு வாக்கப்பட்டது...

ஈழத்தமிழர் விவகாரத்தில் உணர்வோடு, யாருக்கும் அஞ்சாமல் குரல்கொடுத்த சீமான் உங்களுக்கு முட்டாளாக தெரிகிறார். ஆமாம், நாங்கள் எல்லோரும் முட்டாள்கள் தான்...உங்களை போன்ற சாக்கடைப்புழுக்களை இன்னும் விட்டுவைத்திருக்கிறோமே ?

ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!!!

Sunday, May 03, 2009

கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வருபவர்களின் மூஞ்சில் பீச்சாங்கையை வைக்கவேண்டும்..
கடந்த தேர்தலில் மயிலாடுதுறையை துபாய் ஆக மாற்றுவேன் என்ற வாக்குறுதியோடு ஓட்டு வாங்கி, பெட்ரோலியத்துறை அமைச்சராக கடைசிவரை இருந்து, கடைசியில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் வடகிழக்கு மாநில அபிவிருத்தி துறை அமைச்சராக இருந்து ரிட்டையர் ஆகி, இப்போது மீண்டும் வாக்கு கேட்டு வந்துள்ளார் மணிசங்கர அய்யர்...

மயிலாடுதுறை துபாய் ஆக மாறிவிட்டதா ? எங்கே தோண்டினாலும் பெட்ரோல் வருகிறதா ? அல்லது துபாயில் விற்கும் விலைக்கே பெட்ரோல் விற்கிறதா ?ஷெல் பெட்ரோல் நிறுவனம் எடுத்த ரகசிய சர்வே முடிவு கசிந்தது. இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது என்பது தான்...

நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள், நீங்கள் வாகனம் வைத்திருப்பவர் என்றால் தெரியும். ஒரு பெட்ரோல் பங்கில் போட்டால் 60 கி.மீ தரும் வாகனம், இன்னொரு பெட்ரோல் பங்கில் போட்டால் 50 தரும். ஷெல் பங்கில் போட்டால் 70 கி.மீ தரும். ஆனால் ஷெல்லில் பெட்ரோல் விலை அதிகம்.

ஒவ்வொரு பெட்ரோல் பங்கு உரிமையாளரும் விரைவில் கோடீஸ்வரர் ஆகிறார்கள். அல்லது கோடீஸ்வர்கள் மட்டுமே பெட்ரோல் பங்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். இராணுவத்தில் இறந்தவர்களின் மனைவிக்கு லைசென்ஸ் என்பார்கள். அதை இப்படி கொடுத்து அப்படி பணம் கொடுத்து பிடுங்கிவிடுவார்கள்.

எத்தனை எத்தனை மோசடிகளடா !!!

கடைசியாக, மயிலாடுதுறை துபாய் ஆக மாறிவிட்டிருந்தால் - இந்த ஐந்து ஆண்டுகளில், துபாயில் வசிக்கும் உடன்பிறப்புகளும் கதர் சட்டைகளும் இங்கேயே வந்து குழாய் அடைத்து ஆணி பிடுங்கவேண்டியது தானே ? ஏன் இன்னும் துபாயிலேயே இருக்கிறார்கள் ?

அடுத்து பஞ்சாயத்து ராஜ் மேட்டர். எத்தனை பஞ்சாயத்துக்களுக்கு மத்திய அரசின் நேரடி உதவி பணம் வந்துள்ளது தமிழகத்தில் ? ஆனால் காங்கிரஸ் அரசாளும் ஆந்திராவில் ? டெல்லியில் ? அய்யா சொல்லுங்கப்பா...தெரியாமத்தான் கேக்குறேன்...

அடுத்து வடகிழக்கு மாநிலங்கள்...

வடகிழக்கு மாநில அபிவிருத்தி துறை அமைச்சராம். அங்கே ஒரு இளம்பெண் கடந்த ஐந்து ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கிறாராமே ? குழாய் மூலம் வலுக்கட்டாயமாக உணவு செலுத்தப்படுகிறதாமே ? அது இவருக்கு தெரியுமா ?

அங்கே நிற்கும் ராணுவத்தை வெளியேற சொல்லி இளம் பெண்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினார்களே ? அது இவருக்கு தெரியுமா ?

நாகா இன பழங்குடியினரோடு நடந்த பேச்சுவார்த்தை வெற்றியா ? அதை பற்றி எந்த தகவலாவது இவருக்கு தெரியுமா ? ஏன் அதுபற்றி மீடியாக்களில் மூச்சு விடுவதில்லை ?

நாடு சுகந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை வசதி, இருப்பிட வசதியின்றி வாழும் பெரும்பான்மை வடகிழக்கு மாநில மக்களுக்கு என்றுதான் விடிவு ?

நாடு சுகந்திரம் அடைந்து பெரும்பாலான ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிடம் அடகு வைத்தது தான் காங்கிரஸ் கட்சி கடைசீ..சீ..சீ..யாக செய்த சாதனை..

தானே எந்த முடிவும் எடுக்க முடியாமல் பத்து ஜன்பத் இல்லத்தை நோக்கியே காலத்தை கழித்துவிட்ட கொஞ்சம் கூட த்ராணியே இல்லாத பிரதமர்...

பிரதமரும் ப.சிதம்பரமும் நாட்டின் இணையில்லா பொருளாதார நிபுணர்களாம். இரண்டு லட்சம் விவசாயிகளை மட்டும் தான் தற்கொலை செய்துகொள்ளவிட்டோம், மற்றவர்களை காப்பாற்றிவிட்டோம் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்..

இவர்களின் விவசாய கடன் உதவி திட்டத்தால் பயன் அடைந்தது சிறு, குறு விவசாயிகள் அல்ல..பெரு முதலாளிகளே...என்னுடைய சொந்த ஊரில் ஐம்பது கோடி ரூபாய் சொத்து உடைய ஒரு விவசாயிக்கு மூன்று லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பார்த்துக்கொள்ளுங்கள் இந்த கடன் தள்ளுபடியின் லட்சணத்தை ?

கடைசியாக தொடங்கிய இடத்துக்கு வருகிறேன், ஒருவர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் தான் அந்த பொறுப்பில் இருந்து அவரை மாற்றுவோம் ?

ஏன் கடைசி நேரத்தில் இவரது பெட்ரோலிய துறை பிடுங்கப்பட்டு முரளி தியோரா அந்த இடத்துக்கு வந்தார் ?

ஈழத்துக்கு, ஈழ தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்த காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுபோட தமிழர்கள் யாரும் தயாரில்லை என்பது வெள்ளிடைமலை. ஆனால் ஈழம் மட்டுமல்ல, இந்த ஐ.மு கூட்டணி அரசு எல்லா விதங்களிலும் தோல்வி அடைந்த ஒரு அரசு.

நாலு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, உண்ணாவிரத நிறைவு நாள் அன்று, இனி காங்கிரஸ் கட்சியோடு எந்த காலத்திலும் கூட்டணி என்பதே இல்லை என்று முழங்கிய (??) திருமா, அதே காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து ஓட்டு கேட்டு நிற்கிறார்.

மணிசங்கர் அய்யர் மட்டுமல்ல, ப.சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு மற்றும் தி.மு.க கூட்டணியில் உள்ள அனைவரும் தோற்கவேண்டும்.

கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வருபவர்களின் மூஞ்சில் பீச்சாங்கையை வைக்கவேண்டும்..