பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்று சொல்கிறது ஒரு குடுமி பழமொழி. பொய் சொன்னால் வாயில் புழு வைக்கும் என்று சின்ன வயதில் மிரட்டப்பட்டு, ரொம்ப நாளைக்கு பொய் சொல்லாமல் இருந்தேன்..பொய்யை பற்றி வேறு சில சொல்லாடல்கள், கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கு என்பனபோன்றவை இப்போது நியாபகம் வருகின்றன...
ஆனால் ஒன்று...இதுபோன்ற பொய்களை சந்தோஷமாக பரப்புபவர்களை கண்டுகொள்வதன் மூலம் தமிழின துரோகிகளை எளிதாக அடையாளம் காணலாம். காலையில் இட்லிவடை சாப்பிட்டேன். முந்தைய வரிக்கும் அடுத்த வரிக்கும் சம்பந்தம் உண்டு..
**************
கடந்த டிசம்பர் 15, பெங்களூரில் என்னுடைய மனைவிக்கு சுகப்பிரசவம்.
மூன்று நாளில் டிஸ்சார்ஜ் என்றார்கள். பூப்போல கைகளில் தவழ்ந்த அழகான பெண் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, கொஞ்சிக்கொண்டு, அவள் அழுவதை ரசித்துக்கொண்டு, அவளின் மெல்லிய ரோஜாப்பூ பாதங்களை வருடிக்கொண்டு, அந்த மூன்று நாட்கள் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை...
என்னுடைய நிறுவனம், என் மனைவிக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தது. கேஷ் ப்ரீ அட்மிஷன் மற்றும் டெலிவரி என்றார்கள். மூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் அன்று டிஸ்சார்ஜ் சம்மரி ஷீட் தயாரித்தார்கள். இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பவேண்டிய விண்ணப்பங்களில் கையொப்பம் பெற்றார்கள். ஏதோ கொஞ்சம் மருந்து வாங்கியமைக்கு வெறும் 200 ரூபாய் மட்டும் கட்டச்சொன்னார்கள்...
மனைவியும் கிட்டத்தட்ட தானே எழுந்து எல்லா வேலைகளையும் செய்யும் அளவுக்கு தேறியிருந்தார். அனைத்து பொருட்களையும் சேகரித்துக்கொண்டு, மருத்துவரின் இறுதி சோதனைக்காக காத்திருந்தோம்.
மருத்துவர் வந்தார், அப்படி இப்படி பார்த்தார்.
பேபி லைட்டா யெல்லோயிஷ்ஷா இருக்கு. லைட்டா ஜாண்டிஸ் இருக்கு. இன்னோரு நாள் இருக்கனும் என்றார்...
தூக்கிவாரிப்போட்டது..
ஜாண்டிஸா ? நானும் மனைவியும் ஒரு சேர அதிர்ந்தோம்...பெரிய ஆர்ப்பாட்டம் செய்தாள் மனைவி...
அய்யோ, எனக்கு சின்ன வயசுல ஜாண்டிஸ் வந்திருக்குங்க...என்னோட குழந்தைக்கும் வந்திருச்சா ? என்று கண் கலங்க ஆரம்பித்தாள்..
டாக்டர் ரொம்ப கூலாக சொன்னார்..
ஒன்னும் பதட்டப்படத்தேவையில்லை...எல்லா குழந்தைகளுக்கும் வருவதுதான்...
வீ ஹேவ் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் பார் பேபி ஜாண்டிஸ்...
சிஸ்டர், இன்னைக்கு இவங்க ஸ்டே பண்றாங்க...பேபி ஜாண்டிஸ் ரிமூவ் பண்ற மெஷினுக்கு அடியில குழந்தையை நைட் புல்லா வைங்க...மார்னிங் செக் பண்ணிட்டு, அப்புறமா டிஸ்சார்ஜ் பண்ணலாம்...
ஐந்து நிமிட யோசனைக்குபின் எனக்கு புரிந்துபோனது..
இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நார்மல் டெலிவரிக்கு நான்கு நாட்கள் வரை படுக்கை வசதி மற்றும் மருத்துவர் பார்வையிடல் வசதியை தருகிறார்கள்..
பேஷண்ட் சொந்தமாக பணம் கட்டுபவர் என்றால் 3 நாளில் டிஸ்சார்ஜ். இன்ஸூரன்ஸ் கம்பெனி பணம் கட்டுகிறது என்றால் 4 நாளில் டிஸ்சார்ஜ். கடைசி நாளைக்கு இந்த பேபி ஜாண்டிஸ் உடான்ஸ்...
ஒரு தொட்டில், அதன் மேலும் ரெண்டு பவர்புல் ட்யூப் லைட். அதன் கீழ் வெறும் உடம்புடன் குழந்தையை படுக்கவைக்கவேண்டுமாம்..
தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துவிட்டுப்போனாள் தாதி...
குழந்தையை வெறும் உடம்புடன் ட்யூப் லைட்க்கு அடியில் படுக்கவைப்பதை பார்க்க எனக்கும் சரி, என் மனைவிக்கும் சரி, சம்மதமில்லை...
மனைவியிடம் இந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி விவகாரத்தை விளக்கி, சாந்தப்படுத்தினேன்.
தாதி அந்தப்பக்கம் விலகியதும் குழந்தையை அந்த தொட்டியில் இருந்து எடுத்து மனைவியிடம் கொடுத்துவிட்டேன்...
காலை மருத்துவர் வரும் நேரத்துக்கு பத்து நிமிடத்துக்கு முன் மீண்டும் பாப்பாவை அந்த ஜாண்டிஸ் ரிமூவிங் டியூபு லைட் தொட்டியில் போட்டேன்...
டாக்டர் வந்தார். குழந்தையை பரிசோதித்துவிட்டு..
யூ சீ...ஜாண்டிஸ் சுத்தமா போயிருச்சி...யூ கேன் கோ டுடே...என்றார்...
நான் மனைவியை பார்க்க, அவளுடை மர்மச்சிரிப்புக்கு எனக்கு மட்டும்தானே அர்த்தம் தெரியும் ?
டிஸ்சார்ஜ் சம்மரியை நோட்டம் விட்டபோது, ஜாண்டிஸுக்கு மெஷின் வைத்த வகையில் மூன்றாயிரம் ரூபாய், நாலாவது நாள் படுக்கை நான்காயிரம் ரூபாய், மருத்துவர் பார்வையிட்ட வகையில் 2000 ரூபாய் என்று சப் டோட்டல் போட்டிருந்ததை அவளிடம் காட்டியிருந்தேனே ??
*******************
சமீபத்தில் நன்பருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது...பத்து நாள் விடுமுறைக்குப்பின் ஸ்கைப்பில் வந்தார்...
நானும் மனைவியும் வாழ்த்துக்களை பரிமாறினோம்...
அப்போது அவர் சொன்னார்...நார்மல் டெலிவரிதாங்க...குழந்தைக்கு லாஸ்ட் டே லைட்டா ஜாண்டிஸ் வந்திருச்சு...அதனால கொஞ்சம் கஷ்டமாயிருச்சுங்க...
நான் "தெவிடியா பசங்க", காசுக்கு பீ கூட திம்பானுங்க...என்று ரொம்ப நாளைக்கு பிறகு கொஞ்சம் கோபப்பட்டேன்...
*******************
இதே போல் இன்னோரு மோசடி, கர்ப்பப்பை ரீமூவல் ஆப்பரேஷன்...
மாதவிடாய் நின்றபின் கர்ப்பப்பையை ரிமூவ் செய்வது உடல் நலனுக்கு நல்லது என்று என்னுடைய மாமியார் 25 ஆயிரம் செலவில் இப்போது செய்துள்ளார்கள். இது ஒரு மாபெரும் மோசடி..இந்த மோசடிகளை பத்திரிக்கை நன்பர்கள் அம்பலப்படுத்தவேண்டும்..
*********************