Monday, May 25, 2009

கர்ப்பிணிகளை வெளியேற்றுகிறதா இன்போசிஸ் ???தாய்மை என்பது அற்புதமான உணர்வு. இதை நான் சொல்லி வாசகர்களுக்கு தெரியவேண்டியதில்லை...

சிடுமூஞ்சு ஆட்டோக்காரர்களில் இருந்து, எரிந்து விழும் பேருந்து நடத்துனர் வரை கர்ப்பிணிகளை மரியாதையுடன் நடந்ததுவதை தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன்...

ஆனால் மெத்தப்படித்த பொறியியலாளர்கள், மனிதவளத்துறையினர் நடந்துகொண்டுள்ள விதம் மிக அநாகரீகமானது..

இந்தியாவின் மிக சிறந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் இன்போசிஸ் நிறுவனம்தான் இந்த கொடுமையை செய்துள்ளது...

தன்னுடைய அலுவலகத்தில் பணியாற்றும் கர்ப்பிணிகளை அழைத்து, தானாகவே நிறுவனத்தை விட்டு விலகிவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது...

பொதுவாக இன்போசிஸ் நிறுவனம், நாயை விட கேவலமாக உழைக்கச்சொல்வதாக ஒரு பேச்சு உண்டு.

இந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி அந்த கூற்றுக்கு வலுசேர்க்கிறது...

இந்த பொருளாதார சூழ்நிலையில் கர்ப்பிணிகளால் முழுமையாக பணிபுரிய முடியாது என்று கருதுகிறதா இன்போஸிஸ் நிறுவனம் ??

விவரம் தெரிந்தவர்கள் தான் விளக்கவேண்டும்...

25 comments:

thiru said...

ரவி,

இந்த தகவல் அதிர்ச்சிகரமானது.

தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கையில் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்தும் போது சில உத்தரவுகளை வாய்மொழியாக பிறப்பிக்கின்றன. இந்தியாவில் திருப்பூர், சூரத் போன்ற பகுதிகளிலும் நடக்கலாம்.

அதிர்ச்சிகரமான அந்த உத்தரவுகள் சட்டங்களுக்கு எதிரானவை. அவை;

-பணிக்காலத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
-கற்பம் தரிக்கக் கூடாது.
-கற்பமாக இருந்தால் வேலையிலிருந்து வெளியேற்றம்.

மென்பொருள் துறையில் வேலை மற்றும் வேலையிடம் சம்பந்தமான பிரச்சனைகள் நிறைய இருந்தும் அவ்வளவாக வெளிவருவதில்லை.

இவற்றிற்கு எதிரான நடவடிக்கைகள் எதாவது நடைபெறுகின்றனவா?

Tech Shankar said...

இவ்வளவு ஏன் - உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு என்ன கட்டுப்பாடு விதிச்சாங்க என்றே தெரியவில்லை.

எந்திரன் ரிலீஸ் வரை ஷங்கர் சொன்னதை கேக்கணும்னு கட்டுப்பாடு விதிச்சிருப்பாங்களோ!

அவங்களுக்கு இப்பவே எக்கச்சக்க வயசாச்சு. பெண்ணாய் பிறந்தால் இதே நிலைதானா?

ரவி said...

இவற்றிற்கு எதிரான நடவடிக்கைகள் எதாவது நடைபெறுகின்றனவா?

.......

ஒரு மண்ணும் கிடையாது...அதுவும் தகவல் தொழில்நுட்ப துறை ஹெச் ஆர்களுக்கு / கவிதா போன்றவர்கள் விதிவிலக்கு / வானத்தில் இருந்து குதித்ததை போன்ற ஒரு எண்ணம்.

அவர்கள் பார்த்து போடும் பிச்சைதான் நமது வேலை...

பொதுவாக அவர்கள் நடந்துகொள்ளும் முறை மிக கொடுமையானது.

இந்த அறிவிப்பு பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறை, விடுபட்டுவிடக்கூடாதே என்று பதிவு செய்கிறேன்...

பொதுவாக பெண்கள் அல்லது தகவல் தொழில்நுட்ப துறையினர் இதனை வெளியில் சொல்வதில்லை...

பி.எப், எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிபிக்கேட், மேலும் நமது புதிய நிறுவணத்தை கண்டறிந்து அந்த கம்பெனி ஹெச் ஆருக்கு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் அனுப்பி நம்மை வேலையை விட்டு தூக்குவது, பழைய கம்பெனி வெரிபிக்கேஷன் செய்யும்போது வேண்டும் என்றே சொதப்புவது போன்ற பல அஸ்திரங்களை வைத்து மிரட்டுவார்கள்

ரவி said...

\\\\அவங்களுக்கு இப்பவே எக்கச்சக்க வயசாச்சு. பெண்ணாய் பிறந்தால் இதே நிலைதானா?\\\

ஆண்களுக்கும் லே ஆப் போன்ற பல்வேறு சங்கடங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்

நர்சிம் said...

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. இன்றிருக்கும் நிலையில் யாரும் ‘போரோடுவோம்’ குரலை எழுப்புவதில்லை என்றே தெரிகிறது.

Anonymous said...

Its a tough call, if this step can save 100 other jobs...?

லக்கிலுக் said...

:-(

கொடுமையாக இருக்கிறது!

thiru said...

ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதா? நம்மால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

தனிமடலில் குறிப்பிடுங்கள்! நன்றி.

Anonymous said...

Tough times require tough actions to survive. From having such a facility -
"Infosys has built a “satellite office” in Bangalore for pregnant women and young mothers to spare them the daily commute on bad roads to the main office located on the outskirts of the city."

times are bad.

http://www.scribd.com/doc/43647/SG-KE-CNN-IBN-Bangalore-IT-Runs-on-WoManpower

http://www.nasscom.in/Nasscom/templates/NormalPage.aspx?id=51230

Were the above just PR exercises?

ரவி said...

இன்றிருக்கும் நிலையில் யாரும் ‘போரோடுவோம்’ குரலை எழுப்புவதில்லை என்றே தெரிகிறது.


ஆமாம்...தமிழனின் போராட்ட குணம் முனை மழுங்கி ரொம்ப நாளாச்சு...

Anonymous said...

ஆமாம்...தமிழனின் போராட்ட குணம் முனை மழுங்கி ரொம்ப நாளாச்சு...

-- is it happening only in Infy Chennai offices or across all centers?

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களுடன் ஒன்று சேருங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இணைத்து அதிக வாக்கு பெறுங்கள்

ரவி said...

முழுமையாக தெரியவில்லை நன்பரே

milagaipodi said...

if you are not 100% sure why blog this ? the people who are reading this will not take home the point that you have posted it without any factual support.... these people will tell others and this is how rumours spread.... pls remove the post or support it with data

ரவி said...

மிளகாய்பொடீ

நீங்க யார் என்ன என்று தெரியாது. நீங்க யார்னு சொல்லுங்க, உங்களுக்கு தேவையான டேட்டாவை தரேன்

காமராஜ் said...

ரவி..

இந்தியத் தொழிற்தாவாச்சட்டம் 1948 தொழிலாளர்களுக்குக்கிடைத்த மிகப்பெரும் கேடயம். கண்ணுக்குத் தெரியாத அந்தக் கேடயத்தைப் பற்றி தொழிற்சங்க உறுப்பினர்கள் தெரிந்துகொள்வதில்லை. தொடர்ந்து 240 நாட்கள் வேலைபார்க்கிற எல்லோருக்கும் pf, நிரந்தர வேலை தரவேண்டும். வெறும் ஏழு பேர் சேர்ந்து சங்கம் வைக்கிற உரிமை தொடங்கி வேலையில் ஏற்படும் தவறுகளுக்கு மெமோ, அதற்குப் பதில்தர மூன்று மாத அவகாசம், பின்னர் குற்றப்பத்திரிகை, அதற்கு பதில்தர ஆறுமாதம். பின்னர் துறை சார்ந்த வழக்கு, அதற்கு தொழிலாளிக்கு வக்கீல். தண்டனை அதை அப்பீல் செய்ய உரிமை. எல்லாம் கடந்தாலும் அப்புறம் ரெகுலர் கோர்ட். இப்படி ஒவ்வொரு மணித்துளியிலும் அது நம்மோடு கூட இருந்தது. இவ்வளவு ஏன் சொடக்குபோட்டுக்கூப்பிட்ட மேலதிகாரியை நடு மன்றத்தில் வைத்து மன்னிப்புக்கேட்க வைக்கிற தன்மானம் எல்லாம் தந்தது இந்த ஐடி ஆக்ட். அதுதான் வரம் அதுவே சாபமானது.

கொடிப்பிடித்ததும் சம்பளம் எவ்வளவு உயரும் எனும் ஏக்கம் வந்துவிடுகிற அவர்கள் பை நிறைந்ததும் பைபாஸில் பயணம் செய்வார்கள். lpg க்கு எதிராக எதாவது சொன்னால் அப்படியே அப்பீட்டாவார்கள். அப்புறம் கறாராக சொன்னால் இன்னொரு போட்டிச்சங்கம் ஆரம்பித்துவிடும்.

இந்த சாதாரண நடைமுறைகளையும் தாண்டி மென்பொருள் நிருவணங்கள் தங்களை ID Act லிருந்து சட்டபூர்வமாக
விலக்குப்பெற்றுக் கொள்கின்றன. எனவே தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படும். அதாவது குரல்வளை நசுக்கப்படும். விரல்நுனிக்குள் உலகம் வந்துவிட்டாலும் நிலமை என்னவோ சிக்காக்கோ போராட்டத்துக்கு முந்திய காலமாகும். கணினித்துறையில் ஒருவர் அறுபது வயது வரை வேலைபார்ப்பது உலக அதிசயமாகும்.
திர்ப்பூர், கோயம்பத்தூர் பின்னலாடைபெண் தொழிலாலர்கள், BPO பெண்கள், சரவணாஸ்டோர் அகதிகள் ஒரு புறம்
மெண்பொருள் தொழிலாளர்கள் இன்னொரு கடைசியில் இடையில் நாங்கள் மத்திமர்கள்.

பத்து வருடத்துக்கு முன்னால் தெருமுனைகளில் நீங்கள் விசனப்படுகிற இதே விசயத்துக்காக முக்கி முக்கி கத்தியபோது
நாங்கள் தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு ரத்தம் சிந்தும் கலைக்கூத்தாடிகளானோம்.
வலைத்தலத்தில் இப்படியான பதிவுகள் வருவது நம்பிக்கையைத்தருகிறது. உரையாடல் துவங்கட்டும் அம்பலப்படுத்துங்கள்.
தீர்வு வரும்.

கொஞ்சம் அதிகமோ ? .

கல்வெட்டு said...

//இந்த சாதாரண நடைமுறைகளையும் தாண்டி மென்பொருள் நிருவணங்கள் தங்களை ID Act லிருந்து சட்டபூர்வமாக
விலக்குப்பெற்றுக் கொள்கின்றன. //

காமராஜ்,
அதுதான் உண்மை. கம்பெனிகளுக்கு அரசாங்கம் தரும் I.T சலுகை பாக்கஜில் இது முக்கியமான ஒன்று. இந்தக் கொடுமை தவிர சிறப்பு பொருளாதர மண்டலத்தில் அதிக சலுகைகள்.

***

வெளிநாட்டிற்கு அவுட்சோர்ஸ் செய்தால் வரிச்சலுகை கிடையாது என்று ஒபாமா சொல்கிறார். அவர் நாட்டைபற்றி கவலை அவருக்கு.

அல்லக்கை இந்தியக் கம்பெனிகளை யார் கட்டுப்படுத்துவது ?

உதாரணம்....

இந்தியாவை நேசிக்கும் முதலாளியின் ஒரு கம்பெனி (இன்ஃபோசிஸ், டாடா...) அமெரிக்காவைல் புராஜக்டை எடுக்கும்.

ஆனால், அந்த புராஜக்டை அவர்களின் "சீனா" அல்லது "மெக்சிகோ" அலுவலகத்தில் வைத்து நடத்தும்/முடிக்கும்.

ஏன் ??? அங்கே குறைந்த விலையில் மனித வளம் கிடைக்கிறது.

ஒபாமா செய்தது போல , ஆர்டர் எங்கிருந்து வந்தாலும் ஆன்சைட் வேலைகள் தவிர மற்ற பணிகள் இங்கேயே (இந்தியாவில்தான் ) செய்யவேண்டும் , மற்ற நாட்டில் பதிவு செய்யப்பட்ட கிளைக்கம்பெனிகளுக்கு கடத்துதல் கூடாது , அப்படி நடந்தால் இந்தியாவில் கிடைக்கும் எந்த வரிச்சலுகையும் கிடையாது என்று சொல்ல புர்ட்சியாளர் மன்மோகன் சொல்ல முடியாது.

கம்பெனிகளுக்காகத்தான் சட்டங்கள் தவிர மக்களுக்கு அல்ல.

***

உழைக்கும் வர்க்கத்துக்கு காவலானாக வேடம் போடும் கோமாளி கம்யூனிஸ்ட்களும் இதையெல்லாம் பேச மாட்டார்கள். சீனாவில் மழை பெய்தால் ஸ்ரிவில்லிபுத்தூரில் குடை பிடித்தால் மட்டும் போதும் என்று , "மக்களுக்காக", "மாநிலத்திற்காக" (முல்லைப் பெரியார்) ஏதும் செய்யாமல் கூட்டணி குறித்தே பேசும் மொக்கைகள்.

நடந்து முடிந்த பாரளுமன்ற தொடரில் (மன்மோகனின் முந்தைய ஆட்சி) காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்த அல்லக்கை கம்யூனிஸ்டுகள் என்றாவது ஒரு நாள் இந்த ஐ டி ஆக்டை நீக்க முயற்சி செய்தார்களா?

**

எல்லாரையும் விட்டு கம்யூனிஸ்டுகளை மட்டும் ஏன் தாக்குறீங்க?

சிம்பிள்... இந்த அல்லக்கைகள்தான் உழைக்கும் வர்க்கத்திற்காக மட்டும் இருப்பதாக இன்னும் பாவ்லா காட்டுகிறது என்பதால்...

வேடத்தை கலைத்துவிட்டு, "ஆமாம் நாங்களும் கொள்ளைக்கூட்டம்தான்" என்று மற்ற கட்சிகள் போல அறிவித்து "அரிவாள் சுத்தியலை" கீழே போட்டுவிட்டால், இவர்களையும் கேள்வி கேட்கப்போவது இல்லை.

***

சென்ஷி said...

:-(

ரவி said...

காமராஜ் விரிவான கருத்துக்கு நன்றி, பிறகு பதில் தருகிறேன்..

கல்வெட்டு, கம்முனுஸ்டுகளுக்கு அந்த அளவு விவரம் பத்தலையோ ??

தீபக் வாசுதேவன் said...

ரிடிப்ப் இணையத்தளத்தில் 'பொருளாதார சறுக்களால் பணியிழந்தோர் பக்கங்களில்' ஒரு கர்ப்பிணி பெண் தனது அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளார்:

'I was treated unfairly because of my pregnancy'

தீப்பெட்டி said...

கண்டிக்க வேண்டிய விஷயம்

ரவி said...

வாங்க தீபக்.

அந்த லிங்கில் பின்னூட்டம் இடுபவர்கள் உண்மையில் மிகப்பெரிய வன்முறை செய்கிறார்கள்..

நீ ஏன் வீடு வாங்கினே, நீ ஏன் கார் வாங்கினே என்றெல்லாம் கேட்பது மிக கொடுமை...

ரவி said...

வாங்க தீப்பெட்டி நன்றி

பதி said...

ரவி,

உங்களது இந்த பதிவை IT துறையில் உள்ள உறவினர்கள்/நண்பர்களுக்கு அனுப்பி விபரம் கேட்டிருந்தேன்.

இது போன்ற சம்பவங்கள் நடப்பினும் பதிவில் உள்ள அளவிற்கு இல்லை என்றும் இது சற்றே மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுவதாகவே அனைவரும் தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், ஒரு வருடம் விடுமுறை கேட்ட பெண் ஒருவர் சென்னை இன்போசிஸில் வேலையை விட்டு அனுப்பப்பட்டதாக தகவல்.

ஆனால், பொதுவாக பெரும்பாலான நிறுவனங்களில் கர்ப்பிணி பெண்கள் அவர்கள் வேலை செய்யும் Project'ல் இருந்து விடுவிக்கப்பட்டு வெட்டியாக (bench) இருக்க வைக்கப்படுவதாக அனைவரும் கூறுகின்றனர்...

ரவி said...

பதி...

பெங்களூரில் நடைபெற்ற சம்பவம்...உறுதிசெய்யப்பட்டுள்ளது...