Showing posts with label அநியாயம். Show all posts
Showing posts with label அநியாயம். Show all posts

Thursday, May 28, 2009

இது என்ன அநியாயம் ????



பாருங்க இந்த படத்தை...இதில் மத்திய ரெண்டு கேபினெட், ஒரு மாநில உள்ளாட்சி அமைச்சர்கள் இருக்காங்க...அதுவும் இல்லாம ஒரு முதல் அமைச்சரும் இருக்கார்...கண்டுபிடிங்க பார்ப்போம் ? அடிங்...என்று சொல்லவேண்டாம்...

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லனும்...அழகிரிக்கு இந்தியும் தெரியாது, இங்கிலீசும் தெரியாது, அவரை எப்படி கேபினெட்டுல வெச்சுக்கறதுன்னு கேட்டானாம் ஒரு குடுமி...ஐ மீன் சிங்...இது என்ன அநியாயம் ?

ஒரு தமிழனாக எனக்கு வந்த எரிச்சலில் சொன்னென்...அப்ப லல்லுவுக்கு இந்தி மட்டும்தானே தெரியும் ? தமிழ் தெரியாத இவர் எப்படி போன கேபினட்ல தமிழ்நாட்டுக்கு மந்திரியா இருந்தார் ? (மத்திய ரயில்வே அமைச்சர்னா தமிழ்நாட்டுக்கும் தானே ? )

என்ன அநியாயம், இந்த சாரு இவ்ளோ நாள் கெனத்துல போட்ட கல்லுமாதிரி இருந்துட்டு, இப்ப கொடுத்த காசுக்கு மேல கூவுறமாதிரி ஒரு பதிவு போட்டிருககாரு..
..சாருவின், ஜெமோவின் கள்ள மவுனங்களை டவுசர் கிழித்த தமிழ்நதியின் பதிவு பார்த்துட்டீங்கதானே ? இல்லைன்னா இந்தாங்க லிங்க்...!!!



லக்கிலுக்குக்கு பொண்ணு பொறந்திருக்கு...வாழ்த்துக்கள்...தொலைபேசியில் அழைக்கமுடியாத சூழலில் ஒரு பதிவை போட்டு வாழ்த்திக்கறேன்...என்ன அநியாயம், இந்த ஆளு கல்யாணம் ஆனவர்னு கூட தெரியாம பலபேர் இருந்திருக்காங்க...ஒருவேளை இவர் சுண்டக்கஞ்சியும், பட்டை சரக்கும் டெய்லி அடிப்பாரு என்று தெரியாதவங்களும் உண்டோ ? பத்த வெச்சியே பரட்டை..

டீச்சரின் பூனை செத்துப்போச்சாம்...வருத்தங்கள்...அவரும் கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார்...சாரி டீச்சர்...

என்ன அநியாயம் ? இந்த இலங்கையில இத்தனை மக்கள் செத்ததுக்கும் ஒரு சுவரொட்டி ஒட்டுங்கடே...என்னது, பஜன பாடனுமா ? கடவுளை தேடனுமா ? சரி சரி, நீங்க உங்க வேலையை பாருங்க...