தென்சென்னையில் சரத்பாபு சுயேச்சையாக நிற்கிறார். மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படம் வந்ததில் இருந்து, தேர்தலுக்கு தேர்தல் ஐ.ஐ.எம்மில் இருந்து ரெண்டுமூனு பேர் கிளம்பி வந்துடறானுங்க..ஜனகனமன..ஜனங்களை நினை...அப்படீன்ற பாட்டை ஹம் பண்ணிக்கிட்டு..
அதுலயும், கவர்மெண்ட் காலேஜுல படிச்சவன் அரசியலுக்கு வந்தா குமுதம் ஆனந்தவிகடன் கண்டுக்கமாட்டாங்க. அதுல எல்லாம் பேட்டி வரனும்னா நீங்க ஐ.ஐ.எம்ல இருந்து தான் வரோனும்...
கொஞ்சம் அழகா இருக்க கிராமத்து பொண்ணுகக்கிட்ட ஏ..நீ ஹீரோயின் மாதிரி இருக்க என்று கோடம்பாக்கத்து கனவை விதைப்பதுபோல இந்த ஆள்கிட்டயும் யாராவது ஜொள்ளீயிருப்பாங்க போல...
அவன் அவன் ஓட்டுக்கு எட்டாயிரம் கொடுக்கராய்ங்களாம். அந்த பண பலம் கூட்டணி பலம் அதிகார பலத்துக்கு இடையில் எப்படி ஜெயிப்பது என்று கூட கணக்கு போடத்தெரியாத இந்த இளைஞர், எப்படி எம்பி ஆகி எம்பி எம்பி குதிச்சு பாராளுமன்றம் போகமுடியும் ?
இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை முக்கியமாக நிக்குது. இவருக்கு அதை பற்றி எதாகிலும் தெரியுமா ?
தனி ஒரு எம்பிக்கு தேர்தல் நிதி ஒரு கோடியோ ஒன்னரை கோடியோ தராய்ங்க. ஆனா வருடத்துக்கு ஏழு கோடி டர்ண் ஓவர் செய்யும் இந்த புட் கிங், அதை விட நிறைய பணத்தை மக்களுக்கு செலவு செய்யலாமே ?
பாராளுமன்றத்துல எல்லாரும் கெழவங்களா இருப்பாய்ங்க. காத்து பிரியுவாங்க. ஒரே கப்படிக்கும். பெசாம பொழப்பை பார்த்துக்கிட்டு போங்க தம்பி. இங்கிலீசுல நீங்க கொடுத்திருக்க தேர்தல் அறிக்கையை படிச்சுட்டு, ஹிண்டு பேப்பர் படிக்கற முன்னூத்து சொச்சம் பேர் போடற ஓட்டு வாங்கி தோக்கறதை விட்டுட்டு, அந்த நேரத்துல இன்னும் நாலுபேருக்கு உதவி செய்யுங்க. இன்னும் கொஞ்சம் பேருக்கு வேலை கொடுங்க. அவங்க குடும்பமாவது நல்லா இருக்கும்...
புத்தியா பொழைங்கடே...