இங்கே பரபரப்பு ஓய்ந்துவிட்டது. தின்ற பிரியாணி செரித்துவிட்டது. அங்கே ஈழத்தில் மக்கள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டு, பிடிக்கப்படுகிறார்கள்.
ஒரு தலைமுறையை ஏற்கனவே ஊனப்படுத்திவிட்டார்கள். இன்னும் எஞ்சியுள்ளவர்களை கொல்லவோ, ஊனப்படுத்தவோ வெறியோடு நிற்கிறார்கள்.
மனது பதைபதைக்கிறது. ஈழ போராட்டம் இனி இணையப்போராளிகளான பி ராயகரனும் சீரி ரங்கனும் நடத்துவதுதானா ?
*********************
சுகந்திர போராட்ட வீரர் ஜே.கே.ரித்திஷ், ஏழைபங்காளர் கேசி பழனிச்சாமி, பழுந்த காந்தியவாதி அழகிரியண்ணன் என்று பல காளைகள் தோள் தினவெடுத்து காத்திருக்கின்றன. வேண்டும் கேபினெட்டுகள்...
விஜயகாந்த் வீணாய்ப்போன தமிழக அரசியல் சாபம். ஸ்பாய்லர். பாட்டாளிகளின் நிலை இனி தெரியவில்லை. வைகோவும் தோல்வி. திருமா என்ன குரல் எழுப்புவார் என்று தெரியவில்லை...
இதோ தலைவர் கிளம்பிவிட்டார். இந்தமுறை குறைந்தபட்சம் ஆறு கேபினெட். தகவல் தொழில்நுட்பம், ரயில்வே..பிரதமர் பதவியை தவிர அனைத்தையும் கேட்டுபார்க்கலாம்....
கடைசி நேரத்தில் ராஜகண்ணப்பன் கண்ணில் மண்ணை தூவிவிட்டார் சிவகங்கை சீமான். ஜெயிச்சுட்டாராமே ? நம்பவே முடியவில்லை. இளங்ஙோவன் மகனோ எதிர்கட்சி வெற்றி வேட்பாளரின் கையை முறுக்கி அடிக்கிறார். கதர்சட்டைகளும் நல்லவர்கள் தான் போலிருக்கிறது..
இணையத்தில் என்ன சொல்லியும் அதிமுக ஜெயிக்கலியே ? ஒருவேளை இனிவரும் காலத்தில் தமிழகத்தில் எல்லோரும் இணையத்தை பார்வையிடும் வகையில் மாறன் பேமிலி இண்டர்நெட் பிஸினஸ் செய்தால் ஒருவேளை சாத்தியம்..
வாழ்த்துக்கள் லக்கி, சஞ்ஜெய், அபி அப்பா, உடன்பிறப்பு.
***************