இன்றைக்கு போர்ப்பகுதிகளில் சிக்கியுள்ள / எஞ்சியுள்ள தமிழர்கள், ஒன்று விடுதலை புலிகள், அல்லது அவர்களின் உறவினர்கள் என்ற வரலாற்று உண்மையை கருணா அம்மான் கண்டுபிடித்துள்ளார்...
வடக்கு / கிழக்கு அரசியல், துரோகம், பதவி, பணம், குழிபறிப்பு என்று எல்லா கந்தாயங்களையும் விட்டுவிடுவோம்...அவற்றிற்கு அதற்கு தகுந்த நியாயங்கள் அநியாயங்கள் இருக்கலாம், அதை பற்றி பேசும் அளவுக்கு எனக்கு முதிர்ச்சியில்லாமல் கூட இருக்கலாம்..
ஆனால், எஞ்சியுள்ள சிவிலியன்களை முற்றுமுழுதாக கொன்றொழித்துவிட, சிங்கள பேரினவாதத்திற்கு கிடைக்கும் க்ரீன் சிக்னல் இந்த கருத்து அல்லது பரப்புரை.
இதனை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அங்கே ஈழத்தில் சிங்கள பேரினவாத கொலைவெறிப்படை, தன்னுடைய அத்தனை பேரழிவு ஆயுதங்களையும் மக்கள் மீது பிரயோகிப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் கொத்துக்கொத்தாக மடிவதாகவும் தகவல் கிடைக்கிறது.
இதற்குமேல் எதுவும் எழுத மனம் வரவில்லை. வரலாறு உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறது, உண்மையும் சத்தியமும் அவற்றுக்குரியதான வேலையை காலம்தாழ்த்தியாவது செய்யும்.