Thursday, March 01, 2007

கலைஞர்,வைகோ,அம்மா

இன்றைய தினத்தந்தியில் இருந்து ரெண்டு விஷயம் மண்டை காயவைத்தது...!!

செய்தி 1: இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்...கலைஞர் இரண்டாம் முறையாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம்....

என் 'இம்சை' பார்வை : சார்...சீ.எம் சார்...ப்ளீஸ்..வேண்டாம்...இன்னுமா லெட்டர் எழுதி தபால் ஆபீஸ் மூலமா அனுப்புறீங்க...ஒரு எஸ்.எம்.எஸ் / இமெயில் போடுங்க...அட்லீஸ்ட் பேக்ஸ்லயாவது அனுப்புங்களேன்...இன்னுமா அரதப்பழசு லெட்டர் எல்லாம்...என்னதான் பேரன் ஸ்டாம்பு ப்ரீயா குடுத்தாலும்....

செய்தி 2: பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதலுக்கு வைகோ வாழ்த்து.."வீரம் செறிந்த பஞ்சாப் மக்கள் உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி...அப்புடி இப்புடி சோன் பப்புடி" : மதிமுக தலைமைக்கழக அறிக்கை..

என் 'இம்சை' பார்வை : அடப்பாவிங்களா..உட்டா அர்னால்டு சுவாசுநேகருக்கு, ஹிலாரி கி'லி'ண்டனுக்கு, கிரேக்க ஸ்பார்ட்டாக்கஸ் எல்லாருக்கும் வாழ்த்து சொல்வீங்க போலிருக்கே...இந்த விஷயம் பாதலுக்கு தெரியுமா ? இல்லை பஞ்சாப் எஸ்.டி.டி கோர்டு தெரியுமா உங்களுக்கு ? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது எப்படிப்பா கரெக்ட்டா எதிர்க்கட்சிக்கு போயிடுறீங்க ? (சொந்த)அம்மாவின் ஆசீர்வாதமாவது கிடைக்கட்டும்.

செய்தி : மத்திய பட்ஜெட்டில், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக எதுவும் இல்லை. பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க வந்த பட்ஜெட்..

என் 'இம்சை' பார்வை: அடப்பாவமே...மொதல்ல வாழப்பாடி ராமமூர்த்தி எடுத்ததுக்கெல்லாம் அறிக்கை கொடுத்து டார்ச்சர் ஆவாரு..அதை இந்தம்மா கையில் எடுத்திருச்சே..வீட்ல வேலை இல்லையோ...பேசாம யாராவது தமிழ்மணத்தை அறிமுகப்படுத்துங்கப்பா...ஆந்திராக்காரன் வேற திராச்சை தோட்டத்தை ஆட்டையை போடப்பாக்குறான்....யாராவது ஒரு கிலோ சீட்லெஸ் திராட்சை பார்சல் அனுப்புங்கப்பா...

No comments: