Monday, November 06, 2006

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 4

பாகம்1 பாகம்2 பாகம்3
திவ்யா வீட்டிலிருந்து என் வீட்டுக்கு 5 நிமிட நடை...ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தேன்...

அதிகாலை குளிரிலும் வியர்க்க ஆரம்பித்திருந்தது...

புஸ்...புஸ்...என்று மூச்சு வாங்கியது...

வந்து பரபரவென உள்ளே நுழைந்தேன்...

இளமாறன் காலை ஒரு மிதி...ஆ ஆ ஆ என்றான்...

கோவிந்தன் கையை ஒரு இடறு...டேடேய்ய்ய்ய்ய்....என்று அலறினான்....

ஒருவழியாக படுக்கையை வந்து அடைந்தேன்...காலையில் திவ்யாவை சந்திக்கப் போகிறேன் என்ற நினைவு உள்ளமெல்லாம் நிறைய, தூக்கம் கண்களை இழுத்துச் சென்றது....எப்போது தூங்கினேன் என்று தெரியாது...

உலுக்கி எழுப்பினான் கார்த்தி...டேய் குமார்...டேய்.....எந்திரிடா...இன்னைக்கு உன்னோட முறை....எழுந்து தண்ணி பிடி, தொட்டியை நிரப்பு....டேய்....

எங்கள் அறையில் உள்ள ஐந்து பேரும் ஒவ்வொரு நாளைக்கு தெரு பைப்பில் தண்ணீர் பிடித்து வீட்டில் உள்ள பெரிய குளியல் தொட்டியை நிரப்புவது வழக்கம்....

ப்ளீஸ்டா காட்டு கார்த்தி செல்லம்...இன்னைக்கு ஒரு நாளைக்கு எனக்கு பதிலா நீ பிடிடா...கண்ணையே திறக்க முடியல டா செல்லம்....ப்ளீஸ்...கெஞ்சினேன்...

கார்த்தி என்பது அவரின் இயற்ப்பெயர், காட்டுக்கார்த்தி என்பது நாங்கள் வழங்கிய காரணப்பெயர்..காட்டான் என்று அழைக்கப்படும் கார்த்தி, பார்ப்பதற்க்கு செங்கல் சூளையில் பணிபுரிபவன் மாதிரி இருந்தாலும் வெள்ளை மனசுக்காரன்...

ஒழிஞ்சு போ சனியனே...பிடிச்சு தொலையறேன்....காலேஜுக்காவது வரியா இல்லையா....இன்னைக்கு கோபால் லேப் ( cobol lab)...

இல்லை கார்த்தி...ஒரு வேலை இருக்கு...மெஸ் வரைக்கும் போகனும்...

அட பன்னி....தினமும் மெஸ்ஸுக்குதாண்டா திங்க போய்க்கிட்டிருக்கோம்... என்னா வேலை சொல்லு....சொல்லு.....மேட்டரை சொல்லுடா...டேய்...குமார்....

நான் ஏதாவது உருப்படியா செய்துடுவேனோ என்றுதான் பயலுக்கு டென்ஷன்...

கொஞ்சம் தொல்லை செய்யாம அந்த பக்கம் போறியா..நைட்டு தூக்கமே இல்லை...

டேய்...இன்னும் நான் உனக்கு தண்ணி புடிக்கலை...உனக்கு தண்ணி புடிச்சு வைக்கறேன்னு சொன்னேன் பாரு...என் புத்திய செப்பல் த மாறுதலங்கா...(செருப்பாலே அடிச்சிக்கனும் என்பதின் இந்தி)..இவருக்கு என்னமோ சல்மான் கானுன்னு நெனப்பு...இந்தியில திட்டுது பாரு எடுபட்டது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே மரம் மாதிரி கிடந்தேன்..

நாய்,உருப்புடியா ஏதும் செய்யறதில்ல...என்று புலம்பிக் கொண்டே காட்டு கார்த்தி குடங்களோடு வெளியேறுகிறான்...

மீண்டும் கனவில் ஆழ்கிறேன்...எப்போது தூங்கினேனோ தெரியாது...மீண்டும் விழிப்பு வந்தது - மணி பார்த்தேன்...காலை 10:00....

அய்யோ நம் செல்லக்குட்டி எட்டு மணிக்கு வந்து வெயிட் பன்றேன்னு சொன்னாளே ? நாம இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கோமே...

அவசரம் அவசரமாக காலைக் கடன்களை முடித்து விட்டுக் கிளம்பினேன்....

ஓட்டமும் நடையுமாக மெஸ் இருக்குமிடம் அடைந்தேன்...

அங்கே ஒரு சிறிய திண்ணை போன்ற அமைப்பு இருந்தது...அங்கே என் தேவதை...சின்னப் பெண்....முழுமதி...பெண் மான்...தங்கச் சுரங்கம்.... கொஞ்சும் அருவி...என் உயிர்....

அமர்ந்திருந்தாள்....

பச்சை பாவாடை தாவணி...முன்னால் இழுத்து விட்ட இரட்டை சடை... கண்ணாடி வளையல்கள்....நெற்றியில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவில் சின்னப் பொட்டு....கைகளில் இரு புத்தகம்....அருகில் அவளது ஸ்கூல் பேக்...

ஸாரி திவ்யா - லேட்டாகிடுச்சி...அயம் வெரி சாரி....

கீழே குனிந்து கையில் இருந்த ஒரு சின்னக் குச்சியால் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து ஒரு மின்னல் பார்வை பார்த்தாள்..

லாரிக் கடியில் வைத்து நசுக்கிய எலுமிச்சை பழம் மாதிரி - சிதறியது என் மனம்...

என்ன சக்தி இந்த கண்களில்...சுட்டெரிப்பதுபோல் பார்த்தாள்....

நான் உடைந்த பார்வையில் அவள் முன்...என்ன சொல்லப்போகிறாளோ என்ற அதிர்ச்சியில் உறைந்து போனேன்...

பட்டெனச் சிரித்தாள்...கலகலவென...மாதுளையை கையால் உடைத்தால் பட்டென சிதறுமே...இரு கைகளால் முத்துக்களை வாரி எடுத்து பளிங்கு தரையில் வீசினால் சிதறுமே...அதுபோல இருந்தது...

ஹெல்லோ குமார்...நான் சின்னப் பொண்ணு...எனக்கு எதுக்கு இப்படி பயப்படுறீங்க..இத்தனைக்கும் நான் ஸ்கூல் - நீங்க காலேஜ்....

ஹி ஹி...வழிந்தேன்....

சிகரெட் பிடிப்பீங்களா ?

பக்கென்று இருந்தது....ஹய்யோ இவ எப்போ பார்த்தா...இவள் வரும்போது தான் பிடிக்கறதில்லையே...என்று நினைத்தபடி...

எப்பவுமே இல்லை திவ்யா...எப்பவாவது...

ஏன் சிஸர் பில்டர் பிடிக்கிறீங்க - கிங்ஸ் வாங்கிக்கிங்க...சிஸர் பில்டர் பிடிச்சி இருமிக்கிட்டு இருக்கிறீங்களாமே ரூம்ல...கோவிந்தன் அண்ணா சொன்னார்...

ஆமாம், காசு இருந்தா கிங்ஸ் என்ன 555 கூட அடிப்பேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு..( சிசர் பில்டர் 10 சிகரெட் உள்ள பாக்கெட் 3 ரூபாய்..எக்ஸாம் டைம்ல கைகொடுக்கும் கை..)

இல்லை ஆக்சுவலி எனக்கு கிங்ஸ் பிடிச்சா தான் இருமல் வருது...நான் இப்போ எல்லாம் ரொம்ப குறைச்சிட்டேன்...ஒரு நாளைக்கு ஒன்னே அதிகம்...(அதுதான் கிடைக்குது..)..போகப்போக குறைச்சிடுறேன்மா...

டேய்...கோவிந்தா...வைச்சிக்கறண்டா நாயே உன்னை....என்று மனதுக்குள் எண்ணியபடி...மீண்டும் வழிந்தேன்....

கொஞ்சம் தைரியம் வந்து விட்டது எனக்கு....திவ்யா - ராத்திரி பூரா எழுதியாவது லெட்டரை முடிச்சியா இல்லையா...

அட என்ன இது...என்னவளுக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாது என்று நினைத்திருந்தேன்....பட்டென தலை குனிந்தாள்...மெல்ல சிரித்தாள்...அவள் கன்னங்கள் - சேலத்து மாம்பழம் போல சிவந்தன...

அப்படியே கிள்ளலாம் போல எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டு....
எங்கே அந்த லெட்டர் என்று கேட்டேன்..

மெல்ல புத்தகத்தை விரித்து எடுத்தாள்...

அட இதென்ன...கடிதம் என்றால் ஒரு புத்தகமே போடலாம் என்பதுபோல 10 பேப்பர்களை கொடுத்தாள்...

பட்டென வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்தேன்...அவள் கரங்கள் முதல் முதலாக என் கையில் பட்டது...இதென்ன...இவள் கையை வாழைத்தண்டு போல படைத்து விட்டானா பிரம்மன்...அவ்வளவு வழவழப்பான கை....இவுங்க அப்பன் காய்கறிகடைகாரன் கூறுபோட்டு வித்துடப்போறான்...

எழுந்து கொண்டாள் பட்டென....எங்க ஸ்கூல்ல தேடுவாங்க...அடுத்த பீரியட் மேக்ஸ் ( maths) அவர் எங்கப்பாவுக்கு தெரிஞ்சவர்...நான் போயாகனும்.... என்று படபடவென கிளம்பி விட்டாள்....

சற்றுத் தூரம் சென்று பட்டென மின்னல் வெட்டியது மாதிரி திரும்பி பார்த்தாள்..நான் அவளையே - அவள் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்...அவள் திரும்பியபோது மீண்டும் எங்கள் கண்கள்
சந்தித்துக் கொண்டன...

ஏய்...மறுபடி எப்போ பார்க்கலாம்...சத்தமாக கத்தினேன்...கொஞ்சம் அதிகமாக கத்துகிறோனோ என்று கூடத் தோன்றியது....

உதட்டை குவித்து விரல் வைத்தாள்...

உஸ்ஸ்ஸ்ஸ்....சத்தம் கூடாது....

படிச்சு பாருங்க...தெரியும்...என்று மெல்ல எனக்கு மட்டும் கேட்பது போல சொல்லிவிட்டு தெரு திருப்பத்தில் மின்னலாக மறைந்து விட்டாள்...

அவள் போகும் திசையையே சில நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தவன், சுய உணர்வு வந்தவனாக திரும்பி நடந்தேன்...

கோபால் லேபு வேறு உள்ளது, கல்லூரிக்குப் போகலாமா, அல்லது வீட்டுக்கு போய் லெட்டரை படித்துவிட்டு நித்திரையில் ஆழலாமா என்ற கேள்விக்கு கல்லூரிக்கு போகலாம் என்று மனம் முடிவெடுத்தது....

இதே முன்பு கல்லூரி லேபை கட்டடித்துவிட்டு உறக்கத்தில் ஆழுவது வழக்கமாக இருந்தது...சிரித்துக் கொண்டேன்...இந்த காதல் செய்யும் மாயம்தான் என்ன ?

அந்த கடிதத்தில் என்ன இருக்கும் என்று எண்ணியவாறு, உடனே படிப்பது என்று முடிவு செய்து சற்று ஒதுக்கு புறமான இடம் செல்ல தீர்மானித்தேன்... கல்லூரி செல்லும் வழியில் இருந்த கைவிடப்பட்ட பழைய பள்ளி கட்டிடத்தினுள் நுழைந்தேன்....

அங்குதான்....

...காதல் பயணம் தொடரும்.........

39 comments:

மங்கை said...

///அய்யோ நம் செல்லக்குட்டி எட்டு மணிக்கு வந்து வெயிட் பன்றேன்னு சொன்னாளே ///

அட அட.. நல்லாவே வழியிறீங்க..

ரவி said...

ஹி ஹி !! இது சிரிப்புங்க..

Anonymous said...

machhi kalakura da.........

ரவி said...

நன்றி பிரபா !!

Anonymous said...

இதுவரை நன்றாகத்தான் போகிறது..நீ எப்படி அந்த கிளைமாக்ஸ் எல்லாம் எழுதப்போகிறாய் என்பது தெரியலை.

ரவி said...

இளமை, உளறிக்கொட்டாதே !!!

இன்பா (Inbaa) said...

கலக்கலா 'கல கல' ன்னு போகுது ...

//என் பெயர் குமார்..என் //

இதுதான் புரியவே இல்ல ...

ரவி said...

இன்பா !!! அது ஒரு பேரு...அவர்தான் இந்த கதைக்கு ஹீ(ஹீ)ரோன்னு வெச்சிக்குங்க...

நீங்க சொல்றதப்பாத்தா இது என்னமோ என்னோட கதை மாதிரி இருக்கு...

Anonymous said...

இது டூ மச்..

ரவி said...

வாங்க தலை. பிளாக் கணக்கு இன்னும் இல்லையா ?

ரவி said...

எது TOO MUCH னு சொல்றீங்க ??

Anonymous said...

///நீங்க சொல்றதப்பாத்தா இது என்னமோ என்னோட கதை மாதிரி இருக்கு... ///

இது என்னாதுப்பா ரவி ?

இன்பா (Inbaa) said...

//
நீங்க சொல்றதப்பாத்தா இது என்னமோ என்னோட கதை மாதிரி இருக்கு...
//

ஓ அப்படியா... கதை நீங்க எழுதுனது இல்லியா? :-)

Pot"tea" kadai said...

தல, செம இன்டரஸ்டிங்...தூங்காம அப்டியே மெக்காஸ்க்கு போய் யாருகிட்டயாவது போயி ஜொல்லு விடலாமான்னு தோணுது...

ஹூம்...நல்லா எஞ்சாய் பண்ணியிருப்பீங்க போல....

ரவி said...

///ஓ அப்படியா... கதை நீங்க எழுதுனது இல்லியா? :-)///

அடப்பாவி...வாயக்குடுக்க முடியாது போலிருக்கு...பயங்கர இண்டலிஜெண்டலியா இருக்கீங்களே..

நான் என்ன மண்டபத்துல யாராவது எழுதிக்கொடுத்ததையா வந்து இங்க போட்டுக்கினிருக்கேன்..

:))))

நல்ல ப்ரஸன்ஸ் ஆப் மைண்ட் உங்களுக்கு...நடத்துங்க..

ரவி said...

///தல, செம இன்டரஸ்டிங்...தூங்காம அப்டியே மெக்காஸ்க்கு போய் யாருகிட்டயாவது போயி ஜொல்லு விடலாமான்னு தோணுது...

ஹூம்...நல்லா எஞ்சாய் பண்ணியிருப்பீங்க போல....///

என்னப்பா, என்னை ஜொள்ளுப்பாண்டி ரேஞ்சுக்கு கொண்டுவிட்டுட்டீங்க !!!

நீங்க எல்லாம் காதலிக்கவே இல்லையா ? எந்த பொண்ணு பின்னாலியும் சுத்தவே இல்லையா ? பொட்டிக்கடை, உடனே உண்மையை உளருங்க..

மதுமிதா said...

ரவி கொஞ்சம் நிதானமா போங்க:-)
காதல்ல வேகம் மட்டும் போதாதுங்க:-)

என்னதிது ஒரே நேரத்தில் நாலுகால் பாய்ச்சல்.

PKS said...

// லாரிக் கடியில் வைத்து நசுக்கிய எலுமிச்சை பழம் மாதிரி - சிதறியது என் மனம்...//

Differnt Vuvamai. nalla iruku.

ரவி said...

வாங்க மதுமிதா, ஏற்க்கனவே எழுதியது..அதான் எகிறுகிறது..

ஏழு பாகத்துக்கு பிறகு தினறும் பாருங்க..!!!! :)))))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பி.கே.எஸ்

நாமக்கல் சிபி said...

தலைவா...

சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க...

சூப்பரா போகுது கதை...

இளமாறன் said...

Dai venna, ithellam romba over da. Athukkaga neenga renduperum (mani) yepdi adichukkittingangrathum sollu. appathaan interestinga irukkum.

பொன்ஸ்~~Poorna said...

ரவி,
கதை படிக்க ரொம்ப நல்லா இருக்கு.. அடுத்த பாகம் எப்போ?

மெளலி (மதுரையம்பதி) said...

என்ன செந்தழலாரே, வேலை வெட்டி ஒண்ணும் இல்லயா?...ஒரே சுயபுராணமா இருக்கு?

Unknown said...

ரவி தொடரட்டும் காதல் பயணம்.. :)

ரவி said...

கருத்துக்கு நன்றி பொன்ஸ் + தேவ் + அமுக பெங்களூர் பெருந்தலைவர் மவுல்ஸ்...

ரவி said...

///என்ன செந்தழலாரே, வேலை வெட்டி ஒண்ணும் இல்லயா?...ஒரே சுயபுராணமா இருக்கு? ///

தலை, இது கதையாக்கும்...

ரவி said...

இளமை, இப்பதான் நீ வரியா ?அப்போ உன் பெயரை வெச்சு கமெண்ட் போடும் தமிழரசனை ஒரு பொதுமாத்து மாத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..

மெளலி (மதுரையம்பதி) said...

//தலை, இது கதையாக்கும்...//

அதாங்க, சொந்த கதை......?

மெளலி (மதுரையம்பதி) said...

ஆனா ஒங்க எழுத்து நடை நல்லா இருக்கு.....ரொம்ப காஷுவலா போகுது.....நடத்துங்க....

ரவி said...

//அதாங்க, சொந்த கதை......?//

இதுவே கதை...அதிலென்ன சொந்தக்கதை சோகக்கதை !! ஹி ஹ்

//ஆனா ஒங்க எழுத்து நடை நல்லா இருக்கு.....ரொம்ப காஷுவலா போகுது.....நடத்துங்க.... //

நன்றி நன்றி !!

ஜொள்ளுப்பாண்டி said...

//லாரிக் கடியில் வைத்து நசுக்கிய எலுமிச்சை பழம் மாதிரி - சிதறியது என் மனம்...//

அடங்கோ இப்போ உங்க இதயம் என்ன ரேஞ்சுல இருங்குங்கண்ணா ?? ;)))))

//என்னவளுக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாது என்று நினைத்திருந்தேன்....//

ரவி கேப்பிலே இப்படி போட்டு தாக்குறீயளே!!! ம்ம்ம் அவுககீது படிச்சா நெசமாலுமே லாரிகடியில் எலுமிச்சை தாங்கோ :)))

ஷைலஜா said...

பயணங்கள்முடிவதில்லை ரவி! ம்ம்...சிலர் இங்க கமெண்ட்ஸ் அடிக்கறதப்பாத்தா 2+2=4?!!
ஷைலஜா

ரவி said...

////பயணங்கள்முடிவதில்லை ரவி! ம்ம்...சிலர் இங்க கமெண்ட்ஸ் அடிக்கறதப்பாத்தா 2+2=4?!!
ஷைலஜா ////

இதென்ன அநியாயம் !!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

லாரிக் கடியில் வைத்து நசுக்கிய எலுமிச்சை பழம் மாதிரி - சிதறியது என் மனம்...

வர்ணணை எல்லாம் கலக்கறீங்க. அடுத்த பாகம் எப்போ ரெண்டு மூணு வகையா முடிவு இருக்கலாமுன்னு தோணுது. அடுத்த பாகம் போடுங்க.

காதலோடு நகைச்சுவை வர்ணணை உணர்வுகள்ன்னு நல்லாவே இருக்கு.

ரவி said...

இன்னும் கொஞ்ச நேரத்தில் போட்டுவிடுகிறேன்..!!! கருத்துக்கு நன்றி..

Unknown said...

"அங்குதான்....

...காதல் பயணம் தொடரும்........."

காத்திரமான வரிகள், தொடரட்டும் உங்கள் இலட்சியப் பயணம்.
பாராட்டுக்கள் ரவி.

doondu said...

நெல்லுக்கு ஓடிய ஜொள் அப்படியே புல்லுக்கும் பாய்ந்து...

வேண்டாம்... பழைய நினைவுகளைக் கிளப்பாதீர்கள்!

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்!

ரவி said...

வாங்க டோண்டு. உங்க பழைய நினைவுகளை கொஞ்சம் சொல்லுறது.?

Anonymous said...

Nalla Irukku Ravi