Friday, December 08, 2006

சிலை உடைப்பைத் தடுக்கப் பத்து யோசனைகள்!

'சிலை' மாதிரி அசங்காமப் படிக்கும்படியா யாராச்சும் பதிவு, பின்னூட்டம் போடுங்களேன்.

கடவுளுக்கும் சிலை. கடவுளை மறுத்தவருக்கும் சிலை. இதான் வேற்றுமைலயும் ஒற்றுமையா? சரிதான்.

கல்லிலே கலைவண்ணம் காணுங்கப்பா. கொலை வண்ணத்தைப் பாக்காதீங்க.

சிலை உடைப்பைத் தடுக்கப் பத்து யோசனைகள்!

1. சுத்தி போகஸ் லைட் வச்சி கண் கூசும்படியா செஞ்சிரலாம்.

2. மேல் லேயருக்குள்ளே கம்பி வலையை வச்சி சிலை செஞ்சி அதுல மின்சாரம் பாயற மாதிரி பண்ணிட்டா கடப்பாரையால தொட்டதும் சிலை மாதிரி நின்னுருவாய்ங்க.

3. சிலையை சுத்திக் கொஞ்சம் சில்லரையைச் சிதறவிட்டுட்டா (எத்தனை 'சி'!) பயக காசு பொறுக்கிட்டு ஓடிப் போய்ருவாய்ங்க.

4. ஜெனடிக்கல் இன்ஜினியரிங் மூலமா கைகால்களைச் செஞ்சிட்டா சிலையே இடிக்க வர்றவங்களைக் கும்மாங்குத்து குத்தி வெரட்டிரும்.

5. நாமக்கல் ஆஞ்சநேயரு மாதிரி பெரிசா வச்சிட்டா இடிச்சுத் தள்றதெல்லாம் நடக்கற காரியமா?

6. குட்டிக்குட்டியா மேசை மேல வச்சிக்கற மாதிரி சிலை செஞ்சிட்டா எல்லாரும் வச்சிக்கலாம். முச்சந்தில நாற வேணாம். மேலும் இது பயங்கர பிஸினெஸ் வேற. தமிழ்நாட்டுல ஆறு கோடி மைனஸ் ஒரு லாரிக்கும் குறைவா இருக்கற அய்யமாருங்க போக அஞ்சுகோடியே தொண்ணித்தொம்பது லட்சத்து தொண்ணித்தொம்பதாயிரத்து தொளாயிரத்து சொச்சம் (ம்ஹீம். படிக்கும்போது கூட இவ்வளவு சரியா நம்பரைத் தமிள்ல எளுதினதில்லை)தமிளருங்க வாங்கிருவாங்க. என்னா பணம் நெனச்சுப் பாருங்க!

7. மலைக்கோட்டையை பெரியார் மலைன்னு டிக்ளேர் பண்ணிட்டா தீர்ந்தது பிரச்சினை.

8. மொபைல் சிலையா வச்சிட்டா ராத்திரி கராஜுல வச்சிப் பூட்டிரலாம்.

9. இது கொஞ்சம் அதீதமான யோசனை. ஒரு குங்குமத்த வச்சி சூடம் கொளுத்திட்டா முடிஞ்சது. ஒரு பய தொடமாட்டான்!

10. ஒரு ரவுண்டானா வச்சி நடுவுல செலய வச்சிட்டா ஸ்ரீரங்கம் போக்குவரத்துல ஒரு பய கிட்டக்க போய்க்க முடியாது.

இது 10 வாங்கினா ஒண்ணு இலவசம்ங்கற ரீதியிலான 11வது யோசனை! பிள்ளையார் சிலையைக் கடல்ல கரைச்சு முடிச்சதும் கடல்லருந்து பெரியார் சிலையை வெளிய எடுத்துட்டு வந்து நிறுவற நிகழ்ச்சி நடத்தலாம். மொதநா ராத்திரியே இதுக்கு சிலையை உள்ள போட்டு அடையாளத்துக்கு கம்பு நட்டு வச்சிக்கணும்!

இது மாதிரி ஏன் சொந்த செலவுல சூன்யம் வச்சிக்கறேன்னு தெரியலையே! :( :(

This Pinnuuttam Was Given by சுந்தர் [pepsundar@yahoo.com].............!!!!

7 comments:

கோவி.கண்ணன் [GK] said...

இதே மேட்டருக்கு 100 + பின்னூட்டம் வாங்கியும் பின்னூட்ட வெறி அடங்கலையா ?

:))

VSK said...

பின்னுட்டத்தில் படித்ததுமே நினைத்தேன்!!

அவர் சார்பில் இதைத் தேன்க்குடு போட்டிக்கு அனுப்புங்களேன்!

முதல் பரிசு நிச்சயம்!

:))

VSK said...

பின்னுட்டத்தில் படித்ததுமே நினைத்தேன்!!

அவர் சார்பில் இதைத் தேன்கூடு போட்டிக்கு அனுப்புங்களேன்!

முதல் பரிசு நிச்சயம்!

:))

கருப்பு said...

எங்க அய்யா பிரச்னை உங்களுக்கு கிண்டலா இருக்குதா?

ராஜன் said...

அசத்தலா கீது சாரே....

Anonymous said...

//
எங்க அய்யா பிரச்னை உங்களுக்கு கிண்டலா இருக்குதா?
//

ங்கொய்யாக்கு முக்காடு போட்டு நிப்பாட்டிட்டாய்ங்கடீய்!

Sundar Padmanaban said...

விடாது கருப்பு

//எங்க அய்யா பிரச்னை உங்களுக்கு கிண்டலா இருக்குதா?//

அய்யய்யோ... கிண்டல் பண்றதுக்கும் ஒரு தகுதி வேணுங்களே. எனக்கு அது சுத்தமா கிடையாது.

யாரையும் இந்தப் பின்னூட்டப் பதிவு புண்படுத்தியிருந்தால் மன்னிக்க. நான் ராமர் சிலைக்கோ பெரியார் சிலைக்கோ விரோதியில்லை.

நன்றி.