Friday, July 11, 2008

தமிழ்மணம் ஹேக் செய்யப்பட்டது !!!!!!1

இன்று காலை தமிழ்மணம் ஹேக் செய்யப்பட்டது...!!! அதிர்ச்சியான இந்த தகவலை நான் அறிந்துகொண்டது ஒரு காமெடி பதிவை தமிழ்மணம் நிர்வாக குழுவின் வலைப்பதிவில் இருந்து போடப்பட்டபோதுதான்...

இந்த காமெடி பதிவை படியுங்கள் !!!

யார் அந்த ஹேக்கர் ? நமது அன்புக்குரிய திரட்டியான தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவரின் மூன்றுவயது குழந்தைதான் அது :)))

ஹி ஹி !!!!

காமம் என்ற தலைப்பிட்டு கதை எழுதிய சுந்தரின் பதிவை "***" கொடுத்து எடிட் செய்து, எடிட்டர் வெற்றிலைப்பாக்கு ஆனந்தவிகடன் அய்யங்கார் மாமா போல் நடந்துகொண்டது சரி !!! ஆனால் பதிவருக்கு எந்தவித விளக்கமும் கொடுக்காமல் இந்த செயலை செய்தபோதுதான், இவ்வளவு நாட்களாக சிறப்பாக இயங்கிவரும் நிர்வாகத்தினர் கணினி ஹேக் ஆகிவிட்டதோ என்று சந்தேகம் ஏற்பட்டது...

"காமத்துப்பால்" பற்றி தலைப்பிட்டு திருக்குறள் விளக்கம் எழுதினால் அதைகூட மட்டுறுத்தல் செய்வார்களா என்ன ? திருவள்ளுவரே, உமக்கேன் இந்த கதி ?

///அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்////

இப்படி சொன்னால் என்ன அர்த்தம் ? அதே எடிட்டர் மனோபாவம் தானே ?

//இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால்//

இந்த நம்பிக்கை சரியா - தவறா என்று கொஞ்சம் யோசித்திருக்கவேண்டும்...ஜ்யோராம் சுந்தர் அப்படி செய்யவில்லை என்பது என்னுடைய கருத்து...!!!

நிர்வாகத்தின் தரப்பிலிருந்து பதிவர்கள் கருத்துக்கேட்டிருக்கவேண்டும்...ஒரு சர்வே வைத்திருக்கவேண்டும்...அப்படி வெளிப்படையாக - ட்ரான்ஸ்பரண்ட்டாக இந்த செயலை செய்திருந்தால் - யாரும் கேள்விகேட்டிருக்கப்போவதில்லை...

அமெரிக்காவில் இருந்து திரட்டியை நடத்துவதால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போய்விட்டதா என்ன ? அனைத்து வாசகர்கள் கருத்தை வெளிப்படையாக கேட்கும் பழக்கமே கிடையாது என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு...குறைந்த அளவு பதிவர்களின் கருத்தை கேட்டு(பதிவர்கள் - தமிழ்மணம் நிர்வாகிகள் சந்திப்பு போன்ற) அதன் அடிப்படையில் முடிவெடுப்பது சரியில்லை...

///தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம். ///

குப்பையான குமுதம் நடுப்பக்க வாசகர்களை விட, பதிவை படிப்பதை விட அதன் உள்ளடக்கத்தை உணரும் தரமான வாசகர்கள் தமிழ்மணத்துக்கு வருதல் நலம்...(இந்த இண்டலக்சுவல் லிஸ்ட்ல நான் இல்லை, ஹி ஹி, நான் சினிமா நிருபர் - வாழ்க..கோஷ்டி :) )

இணையத்துல குப்பைகள் இல்லையா என்ன ? குப்பையை பார்க்கவேண்டும் என்று நினைப்பவர், தமிழ்மணத்தில் உள்ள காமக்கதைகளை பார்த்துத்தான் குப்பையாவார் என்றில்லை...குப்பை என்றும் குப்பைதான்...!!!!

தமிழ்மணத்தை கூகிள் விளம்பரம் செய்து அதன் வாசகர் தளத்தை விரிவாக்குதல் நலமே !!! இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு "காசி" என்பவர் யார் என்றுகூட தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது...அதுபற்றி எனக்கு கவலை இல்லை...(அவருக்கும் இல்லை, கேட்டால் சொல்வார்..)..

தமிழ்மணம் நிர்வாகம் அடிக்கடி சொல்வது போல தமிழ்மணம் என்பது முழுக்க முழுக்க வாசகர்கள் எழுதும் பதிவுகளால் செயல்படுவது...இதில் வெத்தலைப்பெட்டி எடிட்டர் மாமா இல்லை...ஆனால் சர்வாதிகார போக்கின் மூலம், மீண்டும் வெத்தலைப்பெட்டி மாமாவின் நிலைக்கு கொண்டுசென்றுவிடாதீர்கள்...

இந்த பதிவின் மூலம் நான் சொல்லவருவது

ட்ரான்ஸ்பரன்ஸி தேவை...
பதிவர்களின் கருத்தை கேட்கவேண்டும்...

பி.கு: ஆனா எனக்கு ஒரு ஆசை சுகுணா திவாகர், ஜ்யோராம் சுந்தர், அய்யனார், பைத்தியக்காரன், ஆடுமாடு, வளர்மதி...இந்த பின்னவீனத்துவ குழுவினரை ஒரு ரூம்ல பத்து புல் வோட்கா, டாஸ் காப்பிடல்ஸ், ஒரு பண்டல் சிகரெட் பாக்கெட் கொடுத்து அடைச்சுடனும் :))

14 comments:

வால்பையன் said...

//எனக்கு ஒரு ஆசை சுகுணா திவாகர், ஜ்யோராம் சுந்தர், அய்யனார், பைத்தியக்காரன், ஆடுமாடு, வளர்மதி...இந்த பின்னவீனத்துவ குழுவினரை ஒரு ரூம்ல பத்து புல் வோட்கா, டாஸ் காப்பிடல்ஸ், ஒரு பண்டல் சிகரெட் பாக்கெட் கொடுத்து அடைச்சுடனும்//

ஏதாவது மிச்ச மீதி இருந்தா கூப்பிடுங்க

வால்பையன்

ரவி said...

பதிவுல இன்னா மேட்டர் இருக்குன்றத பாக்காத...

சரக்க மட்டும் பாரு !!!!

வால், ஐ வில் கால் யூ சூன்...ஒரு வேட்69 புல் இருக்கு...பெங்களூர் வந்தா தரேன்..

Athisha said...

\\
இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு "காசி" என்பவர் யார் என்றுகூட தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது...அதுபற்றி எனக்கு கவலை இல்லை...(அவருக்கும் இல்லை, கேட்டால் சொல்வார்..)..
\\


தல உண்மையாவே எனக்கு காசினா யாருனே தெரியாது

எனக்கு மட்டுமில்ல என்ன மாதிரி பல புது பதிவங்களுக்கும் தெலியாது

இதுக்கு எதுக்கு 2 வருஷம் இப்பவே நிலைம அப்படித்தான் இருக்கு


\\
பி.கு: ஆனா எனக்கு ஒரு ஆசை சுகுணா திவாகர், ஜ்யோராம் சுந்தர், அய்யனார், பைத்தியக்காரன், ஆடுமாடு, வளர்மதி...இந்த பின்னவீனத்துவ குழுவினரை ஒரு ரூம்ல பத்து புல் வோட்கா, டாஸ் காப்பிடல்ஸ், ஒரு பண்டல் சிகரெட் பாக்கெட் கொடுத்து அடைச்சுடனும் :))
\\

வெளிய யாரும் நீங்களா கூப்பிட்டாலும் வரமாட்டங்க

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரவி,

உங்கள் பதிவிற்கு நன்றி.

நீங்கள் பின் குறிப்பில் சொல்லியுள்ளது நன்றாக உள்ளது. மதுவும் புத்தகங்களும் இருக்கும்போது காமம்கூட என் நினைவில் வராது... நிஜமாகத்தான்... இவையிரண்டும் அதிக போதையுடையவை.

யாத்ரீகன் said...

>>> இந்த பின்னவீனத்துவ குழுவினரை ஒரு ரூம்ல பத்து புல் வோட்கா, டாஸ் காப்பிடல்ஸ், ஒரு பண்டல் சிகரெட் பாக்கெட் கொடுத்து அடைச்சுடனும் <<<

:-)))))

சென்ஷி said...

//எனக்கு ஒரு ஆசை சுகுணா திவாகர், ஜ்யோராம் சுந்தர், அய்யனார், பைத்தியக்காரன், ஆடுமாடு, வளர்மதி...இந்த பின்னவீனத்துவ குழுவினரை ஒரு ரூம்ல பத்து புல் வோட்கா, டாஸ் காப்பிடல்ஸ், ஒரு பண்டல் சிகரெட் பாக்கெட் கொடுத்து அடைச்சுடனும்//

அவசரத்தில் என்னை மறந்து தொலைத்த செந்தழல் ரவி வாழ்க.. வாழ்க :))

மோகன் கந்தசாமி said...

////வால், ஐ வில் கால் யூ சூன்...ஒரு வேட்69 புல் இருக்கு...பெங்களூர் வந்தா தரேன்..////

ஐ வில் கம்மு ஒன்டே,
லெட்ஸ் கும்மு நன்றே!

Kasi Arumugam said...

லூசாப்பா நீயி? இந்த இடுகையில எதுக்கு காசி வர்றான்?

(சரி, சரி, 69 இருக்கட்டும். அடுத்த வாரம் பெங்களூர் வர்றேன், பாத்துக்கலாம்)

ரவி said...

அதிஷா !!!

தமிழ்மணம் காசி என்று கூகிளில் போட்டு தேடவும்...

ஒருவேளை ஏதாவது தகவல் கிடைத்தாலும் கிடைக்கலாம் :))

ரவி said...

///

நீங்கள் பின் குறிப்பில் சொல்லியுள்ளது நன்றாக உள்ளது. மதுவும் புத்தகங்களும் இருக்கும்போது காமம்கூட என் நினைவில் வராது... நிஜமாகத்தான்... இவையிரண்டும் அதிக போதையுடையவை.

//

:))))))))

நுணுக்கமாக காமத்தை அணுகும் உங்கள் முயற்சி அற்புதமானது...

அது Tamilமணத்தில் வந்தாலும் - சரி, வரலைன்னாலும் சரி...

நான் தேடி படிக்கத்தான் போறேன்...

ரவி said...

வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி யாத்ரீகன்...!!!

ரவி said...

//அவசரத்தில் என்னை மறந்து தொலைத்த செந்தழல் ரவி வாழ்க.. வாழ்க :))

Friday, 11 July, 2008
///

யோவ் சென்ஷி !!!!

இரும்படிக்கிற எடத்துல ஈக்களுக்கு என்ன வேலை இருக்கமுடியும் ? நாம அப்படியே ஒரு டாஸ்மாக் பக்கம் செட்டிலாவலாம் வா...

ரவி said...

///சரி, சரி, 69 இருக்கட்டும். அடுத்த வாரம் பெங்களூர் வர்றேன், பாத்துக்கலாம்)///

தொலைபேசி எண் இருக்கில்ல ? வண்டி அணுப்பவா ?

குசும்பன் said...

பி.கு: ஆனா எனக்கு ஒரு ஆசை சுகுணா திவாகர், ஜ்யோராம் சுந்தர், அய்யனார், பைத்தியக்காரன், ஆடுமாடு, வளர்மதி...இந்த பின்னவீனத்துவ குழுவினரை ஒரு ரூம்ல பத்து புல் வோட்கா, டாஸ் காப்பிடல்ஸ், ஒரு பண்டல் சிகரெட் பாக்கெட் கொடுத்து அடைச்சுடனும் :)) ///


மப்பில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று காது கொடுத்து கேட்டு ஒரு பதிவு போட உங்களையும் கூட சேர்த்து அடைக்கவேண்டும்.