
வணங்கா மண் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது...அந்த கப்பலை சோதனை செய்து, அதில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று தெரிந்தபிறகும் அந்த கப்பலை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.
இதற்கு ஒரே காரணம்தான். அவை தமிழர்களால் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருந்துப்பொருட்கள்...இலங்கை கொலைவெறி அரசின் பேரினவாதம் மற்றும் வல்லாதிக்கத்தின் இன்னொரு எடுத்துக்காட்டாக நிற்கிறது இந்த சம்பவம்...
இந்த கப்பலை அனுமதிக்கவேண்டும் என்று எந்த நாடும் சொல்லவில்லை, எந்த அமைப்பும் கேட்கவில்லை...அப்படி கேட்டாலும் இலங்கை அரசும் அதை கேட்கப்போவதில்லை. போர் வெற்றியின் பட்டாசு சத்தத்தின் இடையே எந்த அழுகுரலும், கூக்குரலும் அவர்கள் காதில் விழப்போவதில்லை...
ஆனால் கல்கத்தாவுக்கு போகும் இந்த கப்பல் அதில் உள்ள பொருட்கள் ஏலம் விடப்பட்டு ஸ்க்ராப் இரும்புக்குத்தான் செல்லப்போகிறது என்று நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன...
அதனால் சொல்கிறேன், அந்த கப்பலை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள்...சென்னை துறைமுகத்தில் நிற்கட்டும். முடிந்தால் கலைஞர் அதனை இலங்கைக்கு அனுப்புவார். இல்லையென்றால் திருச்சியிலும், திண்டுக்கல்லிலும், மதுரையிலும், ராமநாதபுரத்திலும் பரவி வாழும் இலங்கை 'அகதி' களிடம் கொடுத்துவிடுகிறோம்...
தமிழ் வலையுலகில் இருக்கும் ஈழ, அரசியல், பத்திரிக்கை நன்பர்களாக லக்கிலுக், பாலபாரதி, அபி அப்பா, உடன்பிறப்பு, எம்.பி உதயசூரியன், ஆழியூரான், சுகுணா திவாகர், வளர்மதி, சோபா சக்தி, தமிழச்சி, ஓசை செல்லா, தமிழ் சசி, பெயரிலி, ஜ்யோராம் சுந்தர், வினவு போன்றவர்கள் அதற்கு உதவுவார்கள்...!!! என்ன உதவுவாங்க தானே ? அப்ப நீங்க பதிவுக்கு ஒரு ஒட்டை போட்டுட்டு (கப்பல்ல ஓட்டை போடச்சொல்லல) கிளம்புங்க...