கொரியா தென் கொரியா மற்றும் வட கொரியாவாக பிளவுபட்டுக்கிடப்பது அனைத்து பதிவர்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...
இங்கே இரண்டு நாடுகளுக்கும் இடையே அமெரிக்காவின் கட்டைப்பஞ்சாயத்தில் உருவான இடம் தான் இந்த டீ.எம்.ஸீ..
இந்த இடத்தில் இரண்டு நாடுகளும் அரசுமுறையில் விடயங்களை பரிமாறிக்கொள்ளவும், கட்டைப்பஞ்சாயத்து ஒப்பந்தங்களை நிறைவேற்றவும் கட்டடங்களை கட்டிவைத்துக்கொண்டு பாதுகாப்புக்கு நிற்கிறார்கள்...நம்ம இந்தியா பாக்கிஸ்தான் பார்டர்ல பில்டிங்ல இல்லையா...அதுமாதிரி தான்...
இது வட கொரியாவில் இருந்து எடுக்கப்பட்டது...
இது தென் கொரியாவில் இருந்து எடுக்கப்பட்ட படம்...
இரண்டு பக்கமும் ஆப்பீஸர்கள் நிக்குறாங்க பாருங்க...
இந்த வடகொரிய மக்களும் தென்கொரிய மக்களும் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் எல்லா விடயங்களிலும் ஒன்றுதான்...இவர்களை இப்படி பிரித்துப்போட்டது மேற்கு உலக நாடுகளின் சுயநலமும், அமெரிக்கா மற்றும் ருஷ்யாவின் பனிப்போரும் தான்...விசு படம் சம்சாரம் அது மின்சாரத்தில், விசு கோடு போடுவார் - அதுவும் அவர் வீட்டுக்கு நடுவில் கோடு போடுவார்...அது வீட்டுக்குள் இருந்தவர்கள் எடுத்த முடிவு...ஆனா இங்க பக்கத்துவீட்டுக்காரன், அப்படி கூட சொல்லமுடியாது...அடுத்த தெருவுக்காரன் போட்டிருக்கான் கோடு...ஹும்...!!!
இப்போ இந்த இரண்டு நாடுகளும் அடித்துக்கொள்கின்றன...ஒருபக்கம் தென் கொரியாவில் அமெரிக்காவின் ஆதரவில் வந்து கொட்டும் வளமை...ஜப்பானை தட்டிவைக்க நினைக்கும் அமெரிக்கா, தென் கொரியாவை வளர்த்துவிட்டு குளிர்காய்கிறது...கம்யூனிசம் வீழ்ந்து, அமெரிக்காவுடனான பனிப்போரிலும் தோற்று, உள்ளாடை நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் உள்ளாடையையே கொடுக்கும் நிலைக்கும், அழகிகளை உலகநாடெங்கும் அனுப்பி விபச்சாரம் செய்யவிட்டும் இன்று காலத்தை ஓட்டுகிறது ருஷ்யா...மனிதகுலத்தின் மாபெரும் ஆபத்து அணு உலைகள் டெக்னாலஜி தான் மிச்சம்...அதைக்கூட இன்று கல்பாக்கத்துக்கு கூட்டி கொடுத்து துட்டு சேர்த்து ப்ரட்டு வாங்கி தின்னுகிறார் புடின்..ச்சே அதை விடுங்க...
இந்த இரண்டு நாடுகளுக்கும் ( வடகொரியா மற்றும் தென்கொரியா) இடையேயான பனிபோர் சொல்லிமாளாது...இரண்டாயிரத்து நாலாம் ஆண்டுவரை இரண்டு பக்கமும் லவுட் ஸ்பீக்கர்ல கத்தி கத்தி திட்டிக்குவானுங்களாம்...2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு அக்ரீமண்ட் படித்தான் இதை நிறுத்தி இருக்கானுங்க...கொடிமரத்துல கூட ஒரு சண்டை...தென் கொரியா 98 மீட்டர் உயரத்துல ஒரு கொடி மரம் வெச்சு அதுல கொடியேத்தி இருக்கானுங்க...அதை பார்த்து கடுப்பான வட கொரியா, 160 மீட்டர் உயரத்துல உலகத்திலேயே உயரமான கொடிமரம் கட்டி அதில் கொடியேற்றி தனது அரிப்பை தீர்த்துக்கொண்டது...
உலகத்திலேயே உயரமான கொடிமரம்...
இப்போ தலைப்பை ஒருமுறை படிங்க..."மூன்றாம் உலகப்போருக்கு காரணமாகப்போகும் தமிழ் பதிவர்"...வேற யாரு...இங்க ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் நான் தான்...வரும் சனிக்கிழமை இங்கே போகப்போகிறேன்...நிறுவனம் ஏற்பாடு செய்யும் டூர்...இங்க தான் மேட்டரே இருக்கு...வடகொரியாவிடம் அணுஆயுத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இருப்பதாக என் மேனேஜர் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்...வடகொரியாவில் இருக்கும் அவரது ஒன்னுவிட்ட சித்தப்பா முந்தா நேத்து மூணு மணிக்கு போன்ல சொன்னாராம்....
நான் அங்கே போகப்போறேன் இல்லையா...அங்கே ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் தென் கொரிய ஆப்பீஸர் அசமஞ்சமா இருக்கும் நேரம் பார்த்து ஏதாவது அரை செங்கல்லை எடுத்து அவன் மண்டையை பேத்துடுறேன்...திரும்பி பார்த்தான்னா வட கொரியாக்காரன் தான் அடிச்சான் அப்படீன்னு சொல்லிட்டு அப்பீட் ஆகிடுறேன்...
அவன் இவனை சுட, இவன் அவனை சுட, ஓரே குஜாலா இருக்காது...அப்புறம் என்ன, அணு ஆயுத ஏவுகணையை அனுப்பி அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ், நியூஆப்புலியன்ஸ் இந்தமாதிரி ஏதாவது ஒரு ஊர் செங்கல்லை பேர்த்துட்டான்னா கூட அமெரிக்கா குண்டு போட ஆரம்பிச்சிரும்...அப்படியே பிரச்சினை பெருசாகி உலகப்போராகிடுச்சின்னா...
ஹையா ஜாலி ஜாலி...