Showing posts with label கவிஜை மொக்கை. Show all posts
Showing posts with label கவிஜை மொக்கை. Show all posts

Wednesday, July 18, 2007

துபாய் வலைப்பதிவர்களின் கவனத்துக்கு: கவிதை திறனாய்வு (அய்யனார்)

எனது சமீபத்திய பின்னவீனத்துவ கவிஞர்கள் பற்றிய பதிவில் துபாய் வலைப்பதிவாளர்களை தனது கொலைவெறி பின்னவீனத்துவ கவிதைகளால் டருஜு ஆக்கி வரும் அய்யனார் பற்றி ஏன் எழுதவில்லை என்று பல பதிவர்கள் கோபித்துக்கொண்டார்கள்...

அவர்களின் ஆதங்கத்தினை போக்கும் விதமாகவும், உண்மையான மொக்கைகளை அடையாளம் கண்டு மெச்சும் விதமாகவும், கொலைவெறியுடன் இருக்கும் துபாய் வலைப்பதிவர்களை தாகசாந்தி செய்வதற்காகவும் இந்த பதிவு...

என்னுடைய கல்லூரி காலத்து தோழன் ஒருவன் இதுமாதிரிதான்...புரியாத கவிதைகளை எழுதுவதில் வல்லவன்...கடைசிவரை அவனது கவிதை நோட்டுப்புத்தகம் எனக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்துவந்தது...

அய்யனார் கவிதைகளில் எனக்கு பிடித்த வரிகள்

"உன் அதிர்வுகளில் குலைகிறதென் நிசப்தம்
உன் பிரசன்னத்தில் ஓடிப் பதுங்குகிறது என் நிழல்
உன் கட்டுக்களற்ற சொற்கள் நிறைக்கிறதென் துவாரங்களை
முன் தீர்மாணங்களில்லாத அடுத்தநிமிடங்கள்
தற்கொலை செய்துகொள்கின்றன

நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்"

என்ன ஒன்னு...ஒரு எழவும் புரியல...முதல் வரி உன் அதிர்வுகளில் குலைகிறதென் நிசப்தம்...குலைக்கிறதுன்னா நாய் தான...உன் பிரசன்னத்தில் ஓடி பதுங்குது நிழலா ? ஏது இந்த பிரகாஷ் ராஜ் படத்துல நடிப்பானே பிரசன்னா அவனை சொல்றீங்களா ? உன் கட்டுகளற்ற சொற்கள் ? சொல்லை எப்படி கட்டமுடியும் ? தாலி தான் கட்டமுடியும்...அடுத்த வீட்டுகாரன் பொண்டாட்டி நம்மளோட ஓடிவந்தத...அடுத்த நிமிடங்கள் தற்கொலை செய்துக்குதா ? கடிகாரத்தை தூக்கிபோட்டு உடைக்கனுமா ?

//நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்"
//

பிகரை கூட தொரத்திட்டு கவுஜ எழுதறதுக்கு நீர் என்ன அருந்ததி ராயா இல்லை இல்ல உமா மகேஸ்வரியா ? ( யாருடா இந்த உமா மகேஸ்வரி ?)

இப்போ விஷயத்துக்கு வருவோம்...என்ன சொன்னாலும் கோச்சுக்க மாட்டேங்குறாரு நம்ம அய்யனார்...அவர் ஒரு பாசக்கார பருந்து...நேசக்கார நேரு...அதனால அவரை பின்னூட்டங்கள் வழி வாழ்த்துவோம்...எப்படி ? ஒரு கவிதையின் மூலமாகத்தான்...உங்களால் முடிந்த அளவு திட்டியோ கொட்டியோ பாசத்துடனோ ஒரு கவிதைப்பின்னூட்டம் போடனும்...(ரொம்ப முக்கியம், அது கவிதையா இருக்கனும்)...

வாங்க...வரிசையா ஒடிவாங்க...பினாத்தல் சுரேஷ், அபி அப்பா, குசும்பன், மின்னுது மின்னல், தம்பி, கோபி, சென்ஷி, சேகர், லியோ சுரேஷ், மகி எல்லாரும் வாங்க...அய்யனாரை வாழ்த்தி கவுஜையாக இடுங்க பின்னூட்டம்..