சர்வேசன் தேவையில்லாத ஒரு பதிவை செய்திருக்கிறார்..வலைப்பதிவர்கள் பதிவதும், நிறுத்துவதும் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது...அதை சர்வே என்ற பொது இடத்தில் ஓட்டெடுப்புக்கு விடுவதற்கு முன், அந்த குறிப்பிட்ட பதிவர்களின் அனுமதியை கண்டிப்பாக கேட்டு பெற்று அதன் பிறகே செய்திருக்கவேண்டும்...
கிளம்பு, காத்துவரட்டும் என்ற ஆதிக்க சிந்தனையும், அழுக்கு வெறியும் தொனிக்கும் வகையில் இருக்கும் அந்த பதிவை உடனே நீக்கவேண்டும்...அவன் மூக்கின் மேல் கைவைக்க நீங்கள் யார் ? சுகுணாவோ, அரைபிளேடோ உங்களிடம் வந்துகேட்டார்களா ? உடனடியாக ஆவண செய்வீர்கள் என்பதால் பதிவாகவே இடுகிறேன்...ஜனநாயகத்திலும் அடுத்தவர் கருத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதால் தானே சர்வே போன்றதொரு அருமையான தளத்தை நடத்துகிறீர்கள்...புரிந்துணர்ச்சிக்காக காத்திருக்கிறேன் சர்வேசன் அவர்களே..
அதில் இன்னொரு விஷயம் சொல்லவேண்டும்...அந்த பதிவில் முதல் பின்னூட்டமாக வந்துள்ள முகமூதியின் கசட்டு எழுத்துக்கள், அவரது உள்ளம் எவ்வளவு அழுக்கானது என்று காட்டுகிறது..
"அப்படியே கீழ்க்கண்ட சர்வேக்களையும் எடுக்கவும்.
1) சுகுணா திரும்பி வந்துவிட்டேன் என்று அறிவிக்க எடுக்கும் காலம் ::
அ) 1 நாள்
ஆ) 2 நாள்
இ) 3 நாள்
2) சுகுணா திரும்பி வருவதற்கு கொடுக்கப்போகும் ஜல்லி
அ) ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆண்/பெண்/திருநங்கை தொலைபேசியில் திட்டி மீண்டும் வலைப்பதிய அழைத்தார்
ஆ) நண்பர்கள் (ஒருத்தரை பன்மையில் விளிக்கலாமா?) அழுதுகொண்டே அழைத்தனர்
இ) எனக்கு மப்பு கலைந்த பின்புதான் நான் போறேன் என்று என்னையறியாமலேயே அறிவித்ததன் அபத்தாம் புரிய வந்தது. "
அவன் போறேன்னு சொன்னானே...வந்துருவான் போலிருக்கே...என்று பொறாமைத்தீயில் வெந்துவெளிவரும் இந்த பின்னூட்டம் சொல்லாத கதைகள் பலவுண்டு போலிருக்கே...
அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் எழுதும் சுகுணா திவாகர் போன்றவர்கள் வலையில் இருக்கும் வரை தன்னுடைய புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடமுடியாது என்பது போலவும், தன்னுடைய அறிவுஜீவித்தனத்தை வெளிக்காட்டி இண்டலிஜெண்டலி பட்டம் வாங்கமுடியாது போலவும் இருக்குங்கோவ்...
அதுதான் எங்களைபோன்றவர்கள் வந்து உமக்கு டோட்டலா வெச்சுட்டோமுல்ல ஆப்பு...அப்புறம் என்னவேண்டிக்கிடக்குது புண்ணூட்டம் ? இந்த மேதாவித்தனத்தை வேறெங்காவது சென்று காட்டவும்...
இதுபோன்ற கழிசடைகளின் கசடு எண்ணத்தை தூள்தூளாக்கவாவது மீண்டும் சுகுணா வரவேண்டும்...அப்போது இன்றைக்கு இந்த முகமூதிக்கு இருக்கும் அற்ப சந்தோஷம் காணாமே பூடும்...