Friday, October 05, 2007

மணமகள்(ன்) தேவை - Puthoor.R.Kumaresan

மணமகள் தேவை:

வருகின்ற நவம்பருடன் அறுபது வயது முடிகின்ற (60 மட்டில்), நாகப்பதனி ஜாதியை சேர்ந்த மனமகனுக்கு தகுந்த இளசான சைசான மனமகள் தேவை...எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இந்த வரன் கஞ்சா (மட்டும்) சுவைப்பது (நீங்கள்) கண்டுக்கபடாது..விதவைகள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், புருஷனுடன் ஊடல் கொண்டு ஊடால வந்தவர்கள் கண்டிப்பாக அப்ளை செய்யக்கூடாது...சொந்தமாக வீடு, நிலம், வாஷிங் மெஷின், அண்டர்வேர் காயவைக்க கொடி எல்லாம் உள்ள இந்த வரன் சமூகத்தில் ஒரு ஹாட் கேக்...நாகப்பதனி ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்புகொள்க...

மணமகன் தேவை:

57 வயது நிரம்பிய அரசு வேலை பார்க்கும் அழகான இளம்பெண்ணுக்கு உடனடியாக மனமகன் தேவை..தகுதியான வரன்களுக்கான இண்டர்வியூ, நேரடி நேர்முக தேர்வாக புத்தூர் கே.கே.கல்யாண மண்டபத்தில் நடைபெறும்...தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண் 9884629291

அய்யோ முடியல...!!! என்னால சிரிப்பு தாங்க முடியல....நீங்க அந்த பதிவை ஒருக்கா படிங்க...ஆப்பரேஷன் செய்த வலியை கூட தாங்கிக்கிட்டு சிரிச்சேன்...

2 comments:

Anonymous said...

:))))))))))))))

வவ்வால் said...

ரவி!

கொரியாவில் போய் ரொம்ப ஒரியா இருந்திங்களா, ஆபரேஷன் வரைக்கும் போய் இருக்கு. உடலை கவனித்து கொள்ளுங்கள் , அதற்குள் இம்சை தர வந்துட்டிங்க!(அந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பார்னு நினைக்கிறேன் சின்ன ஆபரேஷனா செய்து இருக்கார்!)டாக்டருக்கு பையன் இருக்கானா , என்ன படிக்கிறார்னு எதுக்கும் விசாரிச்சு வையுங்க! யாரு கண்டா பையனுக்கு தொழில் பழக உங்களை பயன் படுத்தி இருந்தா?