Wednesday, October 17, 2007

தமிழ்மணமா, கண்டிப்பு மாமியா, தடி ஊன்றும் தாத்தாவா ?

அதென்ன இப்படி ஒரு வம்படியான தலைப்புன்னு பாக்க்குறீங்களா ? சில சமயம் அப்படித்தோன்றும் எனக்கு..பதிவின் பெயரே இம்சைதானே...சும்மா இருந்தா எப்படி ? ஆங்...விஷயம் என்னன்னு கேட்குறீங்களா ?

சூடான இடுகைகளுக்கு சூடு வைத்த தமிழ்மணத்தின் பாஸிச நடவடிக்கையை எதிர்த்துத்தான் இந்த பதிவு...இதை ஏன் அப்பவே போடலைன்னு கேட்குறீங்களே ? எனக்கு எப்ப தோனுதோ அப்பத்தான் போடுவேன்....(என்ன திமிர் !!!)

எல்லாருக்கும் நூத்துக்கணக்கா பின்னூட்டம் வருது...பின்னூட்ட விளையாட்டு விளையாடுறாங்க..அதை தடு...அப்படீன்னு ரவிஷங்கர் புலம்பினாரு...உடனே புள்ளைங்க விளையாட்டை தடுக்க வந்த கண்டிப்பு மாமி மாதிரி, நாப்பது உயரெல்லை..ஷட்டப்...எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ளே விளையாடு...வெளிய போப்படாது...ஷனியனே...அப்படீன்னு மடக்கிப்போட்டுட்டாங்க...

நாங்களும் எவ்ளோ சொன்னோம்...பதிவெல்லாம் கூட போட்டோம்.."யோவ் அந்தாள் வயத்தெரிச்சல்ல சொல்றான்யா", அவனுக்கு எவனும் பின்னூட்டம் போடுறதில்லைன்னு புலம்புறான்யா...பின்னூட்டம் நூத்துக்கணக்கா போறது ஒன்னும் பெரிய மேட்டர் இல்லைய்யா, அது நாங்களே போடுறது தான்யா...அப்படீன்னெல்லாம் சொன்னோம்...கேக்குற வழியா தெரியல்லியே...இன்னைக்கும் அந்த பாஸிஸ நடவடிக்கை தொடந்துக்கிட்டுத்தான் இருக்கு...

அந்த ஆள் பதிவு போட்டதுக்கு பரிசீலிச்சு நடவடிக்கை எடுத்தீங்க இல்ல...ஏன் அதுக்கப்புறம் பதிவு போட்ட பயலுக பதிவை மறுபடி பரிசீலிக்கறது ? சுப்ரீம் கோர்ட்டே வழக்குகளை திரும்ப ஆராயும் போது, தமிழ்மணம் ஆராயக்கூடாதா ?

சரி அடுத்த மேட்டருக்கு போவோம்..(போயிட்டாண்டா...நாரதப்பய...கொளுத்திப்போடுறதுக்குன்னே கிளம்பிடுறாய்ங்கடா...)

அடுத்த விஷயத்துக்கு வரும்போது ஒரு டிஸ்கி போடுவோம்...இந்த பதிவு யாரையும் குறிப்பது அல்ல..(டேய் இப்பதானடா ரவிஷங்கர கலாய்ச்ச..)

அடுத்தது ஏன் தமிழ்மணம் எனக்கு தடி ஊன்றும் தாத்தாவா தோன்றுதுன்னா (நல்லா கிளப்புறானுங்கடா பீதிய...) யாரோ எவரோ, யாரு பெத்த புள்ளையோ, சூடான இடுகைகள் பற்றி டென்ஷனா ஒரு ஒப்பாரி வெச்சுதாம்...

ஓசை செல்லா பதிவு எப்ப பார்த்தாலும் ஜூடான இடுகையில வருது...மடிப்பாக்கம் சுனாமி எதைச்சொன்னாலும் அது சூடான இடுகையா, திராவிட திம்மிகள் போடும் இடுகைகள் மட்டும் ஏன் சூடான இடுகையில வருது, காண்ட்ரவர்ஸியா தலைப்பு வெச்சா சூடான இடுகையில வருதுன்னு எல்லாரும் காண்ட்ரவர்ஸியாவே தலைப்பு வெக்குறானுங்க ( லேய், அவன் எப்படி தலைப்பு வெச்சா உனக்கென்ன), அப்படின்னு ஒரே கொடுமைக்கூத்து புலம்பல்...

என்னடா இவனுங்க புலம்பல் ஓவராப்போச்சேன்னு தமிழ்மணமும் சூடான இடுகைக்கு ஜூடு வெச்சுருச்சு ( என்னோட கற்பனைதானுங்க இது)....அதனால தான் சொன்னேன்...தடி ஊன்றும் தாத்தா மாதிரி...லைட்டா தட்டினா டடங்கு புடங்குன்னு ஆடி உழுந்துடுறாரு...பாவம் தாத்தா..

நல்லா யோசிச்சு பாருங்க..படிக்கறவன் எதை வேனாலும் படிப்பான்...அது சூடான இடுகையா இருந்தா என்ன, ஆறிப்போன நாறிப்போன இடுகையா இருந்தா என்ன ? தமிழச்சி பெரியார் பற்றி போடும் எல்லா இடுகையும் நல்ல இடுகை என்னைப்பொறுத்தவரை...ஒரு நாளைக்கு பத்து போடுறாங்க..எல்லாம் சூடான இடுகையில வந்தா பரவால்லையா...

பரண் அப்படீன்னா என்ன ? பழசு...பழைய சாதம் வேண்டுமா இல்ல புதிய சாதம் வேண்டுமான்னா எதை எடுப்பாங்க மக்கள் ? ( நான் தனிப்பட்ட முறையில் பழைய சாதம் மற்றும் கெட்டித்தயிரை 'செல்வம்' எலுமிச்சை ஊறுகாயோடு வெட்டு வெட்டென்று ஒரு காலத்தில் வெட்டியவன்)...

பரணில் இருப்பவை பற்றி சொல்லும்போது, இந்திராகாந்தி செத்ததை பழையை பேப்பரை வைத்து டீக்கடையில் படிச்ச விவேக் ஜோக் நியாபகம் வருவதை தடுக்க முடியவில்லல..

பத்ரி எழுதிய பழைய இடுகை உண்மையில் நல்லாத்தான் இருக்கு...ஆனால் அதோட சேர்ந்து பழைய மொக்கைகளான ஆண் பெண் கற்பு நிலை (4), எனது ஒரிசா நினைவுகள் ( அப்போது பிஜு பாட்டீல் முதல்வர்), ஜெயலலிதா அரசு சாலைப்பணியாளர்களை ஏன் நீக்கியது (அவன் மறுபடி ஜாப்புக்கு வந்து ரிட்டேரே ஆயிட்டான்), போன்ற மொக்கை தூசு பிடித்த மேட்டர்களை படிக்கவேண்டி இருக்கு..

டோண்டு ராகவன் எப்பவாது நல்லதா ஒரு பதிவு போட்டா ஆட்டோமேட்டிக்கா அது சூடான இடுகையில வருது...அதை விட்டு, அவரோட ஐ.டி.பி.எல் நினைவுகளையா படிக்குறாங்க மக்கள் ? தீவு மற்றும் பெயரிலி கூட மொக்கைப்பதிவு போட ஆரம்பித்துவிட்ட இந்த காலத்தில் தமிழ்மணம் நிர்வாக குழு சிந்தித்து, முடிவெடுக்கவேண்டும்..

இந்த பதிவின் மூலமாக விடுக்கும் கோரிக்கை..

1.பின்னூட்ட உயரெல்லையை அகற்றுவது..
2.சூடான இடுகைகளை மீண்டும் முகப்பில் காட்டுவது..

என் மேல டென்ஷனாகாதீங்க...நான் அப்படித்தான்...இது சூடான இடுகையில் வந்துத்தொலையும்...வழக்கம் போல மேலும் ஒரு முறை சூடான இடுகை மேல் க்ளிக் செய்து பேண்ட் விட்த் வேஸ்ட் செய்து படிங்க...வணக்கம்..

26 comments:

செந்தழல் ரவி said...

1223345 டெஸ்ட் மெஸ்ஸேஜ் ( காப்பிரைட் திரு.ஹரிஹரன்)

செந்தழல் ரவி said...

சொந்த செலவில் சூனியம் ( காப்பிரைட் திரு.வரவணை)

செந்தழல் ரவி said...

வீடு வா வாங்குது ( காப்பிரைட் : திருமதி.துளசி கோபால்)

செந்தழல் ரவி said...

பின்னூட்ட கேப்மாறித்தனம்

போலீஸ்காரன் said...

இந்த பதிவில் பின்னூட்ட கயமை நடைபெறுகிறது...

Anonymous said...

அந்த ஆள் பதிவு போட்டதுக்கு பரிசீலிச்சு நடவடிக்கை எடுத்தீங்க இல்ல...

இன்னாபா புச்சா ஸ்டோரி லைன் கீது? நீயி ராங்கா ரோசிச்சு பிரதர்ங்க ஸிஸ்டர்ங்கள ராங்கா ரோசிக்க வெய்யாதபா.

மடிபாக்கம் சுனாமி தொட்டு மடிசாரு மாமிங்க ரேஞ்சுல சூடா இட்லிவட சட்னிவட தயிர்வட விக்கனும்ணா தமிழ்மணம் சிண்ட புடிச்சுகிறாங்கோ. மாமாங்களோட டையி புட்சு இயுக்கமாட்டாங்களே. நைசா தமிழ்மணத்த குத்திண்டே இருப்பா. மாமிக்கு டைமு அவ்ளோ நல்லா கீறதா தெர்யலே. மொகமூடி பிளாக்குல காமெண்டுல பின் குத்தறது, ஸ்டார்ல பின் குத்துறது. இதுக்கு பனானவுல பின் குத்துற ஸாரி கொத்தற பினாயில் விவசாயபார்ட்டி வேறே பின்னுக்கே பின் குத்தறது. இத்தன ரோதன அந்தாண்டேன்னா இந்தாண்டே நீயி. படா பேஜாரா பூட்டுப்பா

தமிழச்சி said...

நல்லா யோசிச்சு பாருங்க..படிக்கறவன் எதை வேனாலும் படிப்பான்...அது சூடான இடுகையா இருந்தா என்ன, ஆறிப்போன நாறிப்போன இடுகையா இருந்தா என்ன ? தமிழச்சி பெரியார் பற்றி போடும் எல்லா இடுகையும் நல்ல இடுகை என்னைப்பொறுத்தவரை...ஒரு நாளைக்கு பத்து போடுறாங்க..எல்லாம் சூடான இடுகையில வந்தா பரவால்லையா.../////

இப்படியெல்லாம் பயங்காட்டாதிங்க!!!!!!!!!!!!

ILA(a)இளா said...

ரவி, போன ஆட்சியில, நடந்தவை.

1. அரசு பணியாளர்கள் வேலை பிடுங்கல்
2. மினி பஸ்க்கு ஆப்பு
இப்படி எத்தனையோ இருந்தாலும் ஒரு தேர்தல் வந்த உடன் உடனடியாக வாபஸ் ஆச்சு. (ஆஹா சொ.செ.சூ)
அதுமாதிரி இல்லீங்களே தமிழ்மணம்(தப்பிச்சுட்டான்யா)

செந்தழல் ரவி said...

Ravindran: ok
ok


Sent at 8:47 PM on Wednesday
Ravindran: what the hell


ila: :))


Ravindran: how mokkai comment it is


ila: அம்மா ஆட்சியில இப்படித்தானே வாபஸ் ஆச்சு
40+ வரக்காரணம் - @#%$#%^#

ILA(a)இளா said...

நான் போடும் எல்லாப் பதிவுகளும் சூடான் இடுகையில் வருதுங்க ரவி. ஆனா நான் யாரையும் தாக்கியோ, திட்டியோ எழுதறதும் இல்லே,. தலைப்பும் சூடா இருக்கிறது இல்லே. விருப்பப்பட்டு மக்கள் படிக்கிறாங்க அது சூடா வருது. பெனாத்தல், ஆசிப், பாலாபாய், ரவி, சுனாமி, செல்லா அப்புறம் என்னுடைய பதிவுகள் சூடா ஆக காரணம் ஒன்னும் தலைப்பு இல்லீங்க. மக்கள் கூட்டம்(இது தானா சேர்ந்த கூட்டம், சேர்த்த கூட்டம் இல்லே)

செந்தழல் ரவி said...

///இப்படியெல்லாம் பயங்காட்டாதிங்க!!!!!!!!!!!!///

அப்படித்தான் காட்டுவோம்...

தமிழச்சி தற்கொலைப்படை,
சியோல்,
ரிபப்ளிக் ஆப் சவுத் கொரியா.

எவனா இருந்தா எனக்கு என்ன said...

ரவி இத பாருங்க. தமிழ்மணம் இவ்வளவோ பதிவுகள திரட்டுது. ஆனா அதுல எத்தன பதிவு தமிழ்மணத்துக்கு ஒரு லிங்க அவுங்க பதிவுல கொடுக்கிறாங்க? மீதி அத்தன திரட்டிக்கும் கொடுப்பாங்க. ஆனா தமிழ்மணத்துக்கு ஒரு லிங்க் கொடுக்க மாட்டாங்க. ஏன்னா அது யாரோ வீட்டுபிள்ளை இல்லீயா? கேலி பண்ண வசவு பண்ண மட்டும் செய்யராங்க. இத பத்தி நீங்களும் பதிவு போட முடியாத நெலைல இருக்கீங்க. தமிழ்மணம் ஆளுங்களும் அழுத்தி சொல்லறதா தெரியல்லீங்க.

செந்தழல் ரவி said...

ஏதாவது டெம்ப்ளேட் ப்ரச்சனையா இருக்கும் தல...என்னோட டெம்ப்ளேட்ல கூட (பிலாகர் பீட்டாவுல இப்பத்தான் மாறினென்) தமிழ்மணம் லிங்க் இருக்கு...

ஆனா இமேஜ் / லிங்க் வரமாட்டேங்குது....

ஏதோ டெக்னிக்கல் பால்ட்...!!!!

செந்தழல் ரவி said...

அனானி அண்ணே, நீங்க சொல்ற அந்த பதிவை படிச்சு உண்மையிலேயே நல்லா சிரிச்சேன்...

முகமூடி / கொத்தனார் பற்றி சொல்லி இருக்கறத வெளிய உடமுடியாது, மன்னிச்சுருங்க....

செந்தழல் ரவி said...

///நான் போடும் எல்லாப் பதிவுகளும் சூடான் இடுகையில் வருதுங்க ரவி.///

இளா...

நாகை சிவா உங்க பதிவை எதுக்கு எடுத்து போடுறார் ?

(பின்ன ? சூடான் இடுகைன்னா அவரோடது தான ?)

எவனா இருந்தா எனக்கு என்ன said...

ரவி நீங்க பயங்கர ஆளுங்க. திராவிட கூத்து ஆடினாலும் ஆரியத்தோட பகை கொன்னுடக்கூடாதுங்குற பாலிசில சூப்பர் கேர்புல்லா இருக்கீங்க. பொழைச்சுக்குவீங்க.

மங்களூர் சிவா said...

//
ஒரு முறை சூடான இடுகை மேல் க்ளிக் செய்து பேண்ட் விட்த் வேஸ்ட் செய்து படிங்க...வணக்கம்..
//
bandwidth wasted.

மங்களூர் சிவா said...

//
செந்தழல் ரவி said...
1223345 டெஸ்ட் மெஸ்ஸேஜ் ( காப்பிரைட் திரு.ஹரிஹரன்)
//
avarai Enpaa vambukku izhukkureenga.

but it is his style.

SP.VR. SUBBIAH said...

படிக்கறவன் எதை வேனாலும் படிப்பான்...அது சூடான இடுகையா இருந்தா என்ன, ஆறிப்போன நாறிப்போன இடுகையா இருந்தா என்ன ?//

அதானே!
சரி, கொரியாவில பாமபு சூப்
சாப்பிட்டீங்களா இல்லையா?

மாசிலா said...

//1.பின்னூட்ட உயரெல்லையை அகற்றுவது..
2.சூடான இடுகைகளை மீண்டும் முகப்பில் காட்டுவது..//

ரிப்பீட்டே!

கும்மிகள் வாழ்க! தமிழ்மணத்திற்கு அவர்கள் சேவைகள் தேவை.

மாசிலா said...

**தோழர்** காபி ரைட் தமிழச்சி!
மறந்துட்டீங்களா ரவி?

லக்கிலுக் said...

அவர்கள் செய்வது எனக்கு சாதகமாக அமைந்தாலும் சரி, பாதகமாக அமைந்தாலும் சரி. நான் தமிழ்மணத்தின் முரட்டு தொண்டன்.

எனவே இப்பதிவை செல்லமாக கண்டிக்கிறேன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நான் எழுதுறது எதுவுமே சூட்டுல வர மாட்டேங்குதே.. என்ன செய்யலாம்பூ? இனிமே உன் லாங்வேஜ்ல மாத்தி எழுதட்டுமா..?

தம்பி said...

//'செல்வம்' எலுமிச்சை ஊறுகாயோடு வெட்டு வெட்டென்று ஒரு காலத்தில் வெட்டியவன்)...//

மட்டை ஊறூகாயா? அல்லது பாக்கெட் ஊறூகாயா? என்பதை சொல்லவில்லயே டோழரே.

உள்ளூர் தமிழன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நான் எழுதுறது எதுவுமே சூட்டுல வர மாட்டேங்குதே.. என்ன செய்யலாம்பூ? இனிமே உன் லாங்வேஜ்ல மாத்தி எழுதட்டுமா..?
//

வாத்யாரே. ஜூடா இருந்தா தான் ஜூடான இடுகைல வருமாம். ஆறிப்போன மொளகா பஜ்ஜி கணக்கா எய்துனா அதை வெச்சிக்கினு நாமளே ஊறுகா போட்டு துன்ன வேண்டியதுதானாம்.

நெசமாலுமே நெய்தமிழன் said...

உண்மைதமிழன் சார் இனிமே பதிவே எழுதமாட்டேன்னு டைட்டில போட்டு ஒரு பிளாக் எழுதுங்க. பிச்சுக்கிட்டே ஜூடாவும். அந்த நல்ல காரியத்த நீங்களாவது பண்ரதாவது. அதெல்லாம் நடக்கற காரியமா