Wednesday, July 08, 2009
ஒளிவட்டம் சுமக்கும் வலைப்பதிவர்கள்
சமீபத்தில் ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள் என்ற பதிவை பார்த்தேன்..
நீங்களோ நானோ, அல்லது எல்லோருமோ, ஒரு வகையில் அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்டிருப்போம்...
இதற்கு அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கூட விதிவிலக்கல்ல...இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, வாழ்க்கையில் ஒரு முறை கூட லஞ்சம் கொடுக்காதவரை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கமாட்டார்.
இந்தியன் தாத்தா ஒரு விதிவிலக்கு. இருந்தாலும், அது ஒரு திரைப்படம் என்பது உங்களுக்கு தெரியும்.
இருந்தாலும் பிச்சைப்பாத்திரம் எழுதும் எதுவும் எனக்கு பிடிக்காது, இதுவும் எரிச்சலைத்தான் கொடுக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையில் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டேன்.
இருந்தாலும், ஒரு உண்மை உரைத்தது. அதனால் இந்த பதிவு.
சுயதொழில் செய்யும் ஒரு சில வலைப்பதிவர்களை தவிர, ஒரு பத்து சதவீதம் இருக்குமா ?, மீதி தொண்ணூறு சதவீதம் பேர், வலைப்பதிவுகளை அலுவலகத்தில் வைத்து பார்க்கிறீர்கள்.
ஒரு நிறுவனத்தில் கூலிக்கு நின்று, சம்பளம் பெறும் நாம், நிறுவனத்திற்கு உழைப்பதை விட்டுவிட்டு, சொந்த மின்னஞ்சலை திறந்து பார்ப்பது கூட குற்றம். இதுல வலைப்பதிவில் வேறு மொக்கை. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
நானும் திருடன். நீரும் திருடன். இதில் அவன் சரியில்லை, ஆட்டுக்குட்டி சரியில்லை என்று என்ன நொள்ளை நொட்டை ? முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சொறி. அதன் பின் அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை சொறியலாம். என்ன நான் சொல்றது ?
இந்த பதிவுக்கு அலுவலகத்தில் இருந்து பார்க்கும் யாரும் பின்னூட்டம் போடாதீங்க என்று சத்தியமாக நான் சொல்லமாட்டேன். ஹி ஹி...முடிஞ்சா ஓட்டு போடு, இல்லன்னா நெகட்டிவ் ஓட்டுபோடு...!!
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
நாங்கள் செய்த, செய்ய போகின்ற பாவங்களை பொறுத்தருள்க !!
amen..
இப்படிக்கு,
மென்பொருள்துறையில் சிங்கி அடிப்போர் சங்கம்
தம்பீ..
ஆபீஸ்ல உனக்கு வேலை வெட்டியே இல்லையாடா..?
டெய்லி நாலு போஸ்ட் போட்டுக் கொல்றியேடா கண்ணா..?
பிச்சைப்பாத்திரம் தளத்தினை புரிந்து கொள்ள முடியவில்லையெனில் நீ ஒரு அன்னிய தேசத்து பதிவனாகி விடுவாய்..!
புரிந்து கொள்ள முயற்சி செய்..!
நான் வீட்ல இருந்துதான் பின்னூட்டம் போடுறேன்..
அதனால எனக்குப் பின்னால ஒளிவட்டமெல்லாம் இல்லை..
பெஞ்சில் வாழுவோர் சங்கத்தின் பின்னூட்டம் வாழ்க வாழ்கவே...
அண்ணே. அந்த மங்காணி சொல்றது இந்த மங்குணிக்கு புரிய மாட்டேங்குது.
நீங்க ஏண் அந்த பதிவறுடன் சண்டை போடுகிறீர்கள் ?
பதிவர் சக்கரை.
நீங்கள் எந்த கடையில் போய் கிரைண்டர் கேட்டாலும், மிக்ஸியை தான் காட்டி கேட்பீர்கள் என்று தெரியும்.
பரவாயில்லை. உங்கள் சுண்ணாம்பு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்கிறேன்.
அவன் ரேஞ்சுக்கு சாரு நிவேதிதாவோ, ஜெயமோகனோவா சண்டை போடுவாங்க. இந்த செந்தழல் ரவியாவது போடுறானேன்னு சந்தோஷம்படுயா..
தொடர்ந்து என்னுடைய பதிவுக்கு ஓட்டு போட்டு ஆதரவளிக்கும் பதிவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி...
அண்ணே... அப்படி நெனச்சி தான் எம்முதுகை ஒரு நாள் சொறிஞ்சேன்... அன்னிலே இருந்து தொடர்ந்து நாலு நாள் கை வலி....
me the first.
ஹி ஹி நையாண்டியாரே.....
நான் ஆபீஸ்ல இருந்துதான் பின்னூட்டம் போடுகிறேண். ஒளிவட்டம் எதுவும் காணவில்லையே.
பதிவில் இருப்பது உங்கள் போட்டோவா. நல்ல fair ஆ இருக்கீங்க.
இப்படிக்கு,
ஆபீஸில் உக்காந்து பின்னூட்டம் போடுவோர் சங்கம்.
செந்தழல், கடந்த ஓராண்டுக்கும் மேலாக உங்கள் 'தனித்திரு...' வலைப்பூவை வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்களின் தனிப்பட்ட பதிவர்களை தாக்கும் சில பதிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் ஒத்த கருத்துள்ளவர்களின் எழுத்துக்களுக்கு எப்பொழுதுமே என் உள்ளத்தில் நெருங்கிய இடமுண்டு..
உலோகப் பறவை அழைக்கிறது, மூன்று தினங்களுக்குப்பின் மீண்டும் தொடர்கிறேன்..
ரொம்ப சரியா சொன்னிங்க...
ஹி.. ஹி.. ஆபீஸ்ல இருந்துதான் பின்னூட்டம் போடுறேண்.
ஷாகுல் கனேஷ், ஆபீஸ்ல இருந்து பின்னூட்டம் போடுவோர் சங்கத்துக்கு இவ்ளோ ஆதரவா?
நாகா.
நீங்கள் சொல்வது போல தனிப்பட்ட பதிவர்களை தாக்கும் இடுகைகளை போடுபவர்களை எனக்கும் பிடிக்காது. அப்படிப்பட்ட இடுகைகளை பார்த்தால் ஒரு பாஸிட்டிவ் ஓட்டு குத்திவிட்டு, கோபித்துக்கொண்டு வந்துவிடுவேன்...
மொன்னையா ஒரு பத்து கும்மி பின்னூட்டம் போட சொன்னாலும் பரவாயில்ல ஒரு + கேட்டு ஓவர்சீஸ் எஸ் எம் எஸ் அனுப்பராய்ங்க கெரக புடிச்சவனுங்க....
கருமம் கருமம் இந்த இம்சைக்கெல்லாம் + குத்த வேண்டியதா இருக்கு.,
// அண்ணே... அப்படி நெனச்சி தான் எம்முதுகை ஒரு நாள் சொறிஞ்சேன்... அன்னிலே இருந்து தொடர்ந்து நாலு நாள் கை வலி....
Wednesday, 08 July, 2009
Blogger மணிகண்டன் said...
me the first.//
ஏய் இம்சை...பத்து பின்னூட்டத்துக்கப்புறம் வந்து மீ த ப்ர்ஸ்டுன்னு....என்ன எளவுடா இது
மணிகண்டன்...
என்ன கொடுமை...ஆனா அந்த அனானி கமெண்டு நான் போடலை.
அவ்வ்வ். பொட்டி...
ஒன்னுமே புரியுல உலகத்துல..
அடப்போங்க ஆபீஸ்ல ரொம்ப போர் அடிக்குது அப்புறம் என்ன பண்ணுறது இதை தவிர..
ஏங்க அவரோட பதிவு அப்படி என்ன தப்பா இருக்கு கரெக்டா தானே சொல்லி இருக்கார்..
இல்லை உங்களுக்குள் எதாவது உள்நாட்டு விவகாரமா..!!
ரவி அத்தான். இது உச்ச கட்ட அவமானம். எனக்கு ஒரு வழி சொல்லி விட்டு அடுத்த பதிவு போடுங்கள்..
***
ஆனா அந்த அனானி கமெண்டு நான் போடலை
***
ஏன் போடலை ?
பதிவு மட்டும் நல்லா வக்கனையா போடுங்க..!
இதுல ரவி டாட் காம் வேறயா ஹி ஹி
பொத்தான் அறுந்தால் சட்டையில்லை. அத்தான் இல்லைன்னா ரசிகர் மன்றமில்லை.
வரவேண்டியது வராததால்
கேக்கவேண்டிய இடத்துல கேக்க வேண்டி இருக்கு.
தயவு பண்ணி கேட்டிருங்க.
ok fine. i will let u know. but u can still reply to that mail id
//செந்தழல் ரவி said...
பொத்தான் அறுந்தால் சட்டையில்லை. அத்தான் இல்லைன்னா ரசிகர் மன்றமில்லை.//
புரிந்து கொண்டேன் அத்தான்.. புரிந்து கொண்டேன். உங்கள் நல்வாழ்வு தான் எனக்கு முக்கியம். ஒரு நாளுக்கு நான்கு இல்லை. நானூறு பதிவுகள் போடுங்கள். நாள் தவறாமல் வந்து நான்கு பாசிட்டிவ் குத்துகளும் நாற்பது பின்னூட்டங்களும் போட்டுவிட்டு போகிறேன்.
எங்ங்ங்கிருந்தாலும்ம்ம்ம்ம்ம்ம் வாழ்ழ்ழ்ழ்க..
:-)))
ஏதாவது செய்யணும் பாஸு
ரவியண்ணே,
எனது கடும் கண்டனங்களை இங்கு பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது!
ஆஃபிஸில் இருந்து பின்னூட்டம் போடாத காரணத்தினால் எனக்கு ஒளிவட்டம் இல்லை என்று ஆகிவிடுமா??? இது நல்ல போங்கா இருக்கே!
எனக்கு(ம்) பின்னாடி ஒரு பெரிய ஒளிவட்டம் இருக்கு....நீங்க பாக்கமுடியாது...ஏன்னா உங்களுக்கு கண்ணு கூசும் :0))
இந்தா பாருங்க ரவி அண்ணே....
நானேல்லாம் விதிவிலக்கு.
கடுமையா கம்பேனிக்கு மட்டுமே உழைக்குறவங்க ஜாதி.
எப்பவாவது வலையுலகம் பக்கம் வந்தா அது வீட்ல இருந்துதான். இப்ப கூட பாருங்க மணி என்னான்னு... இந்திய நேரப்படி அதிகாலை 1:45.
நான் தாராளமா இங்க பின்னூட்டலாமில்ல!
நல்லாச் சொல்லியுள்ளீர்கள் ரவி!!
//நானும் திருடன். நீரும் திருடன். இதில் அவன் சரியில்லை, ஆட்டுக்குட்டி சரியில்லை என்று என்ன நொள்ளை நொட்டை ? முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சொறி. அதன் பின் அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை சொறியலாம். என்ன நான் சொல்றது ?//
:-)))
சிரித்துச் சிரித்த்க் கண்களில் நீரே வந்து விட்டது. அதுவும் எத்தனையோ விஷயங்களுக்கு இது பொருந்தும் என்று நினைக்கும் போது!
//Anonymous said...
ஏதாவது செய்யணும் பாஸு
//
கதவ மூடிக்கினா இல்ல தொரந்துக்கினா?
பாஸ்.. அரசியல்ல இதெல்லாம் பார்த்தா வேலைக்காகுமா.
நரெஸ் கண்ணன் என்ற காமெடி பீஸ் உங்கள் பதிவுக்கு நேர் பதிவு போட்டிருக்கிறது பார்த்தீர்களா
//ஒளிவட்டம் சுமக்கும் வலைப்பதிவர்கள்//
தலைக்குமேலே ஒளிவட்டம்.
ஓஹ் அது லைட்டா?
well said, i like it.
நன்றி குப்பன் யாஹு தீபா அனானி இளா.
Post a Comment