Thursday, July 09, 2009

மெகா சீரியலுக்கு கதை எழுதுவது எப்படி ?



ஒரு படத்தில் மெகா சீரியலுக்கு மட்டும் தான் கதை எழுதுவான் இந்த மகாதேவன் என்று விவேக் துடிக்க, பான் பராக் போட்ட சேட்ஜி ஒருத்தர், 'பொம்ளே மன்ஸ புரிஞ்சு எல்தனும்' என்று அட்வான்ஸ் கொடுத்துவிட்டு போக, அதில் பல லேடீஸ் கையில் அடிவாங்கி காமெடி செய்வார் விவேக்.

மெகா சீரியலுக்கு கதை எழுதுவது என்பது அவ்வளவு கடினம் இல்லை, எல்லோரும் எழுதலாம், என்பதை இந்த பதிவின் மூலம் உப்பு புளி ப்ராஸோ போட்டு பளபளவென விளக்குகிறேன்..

முதலில் புதிய சீரியல் தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ் மழை பொழிந்துவிட்டு, அதன் பின் கடைசியாக கதை பற்றி பார்க்கலாம்...



முதலில் உங்களுக்கு தேவை கதை என்று சீரியசாக எதிர்பார்க்கவேண்டாம். மார்க்கெட் இழந்த, மார்க்கட்டு இழக்காத, ஒரு பழம் பெரும், பேரிளம், நடிகை. சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி கால்ஷீட் கிடைப்பது போன்றது இது...

அதன் பிறகு தேவை, பெரிய சேனலில் ஒரு ப்ரம் டைம் ஸ்லாட். அதாவது மக்கள் டிவி பார்க்க உட்காரும் நேரமான மாலை நேரத்திலோ, அல்லது லேடீஸ் வேலையை முடித்துவிட்டு டிவி முன் உட்காரும் மதிய நேரத்தையோ கணக்கிட்டு, அந்த நேரத்தில் உங்கள் சீரியல் வரும்படி லாபி செய்துவிட்டால் போதுமானது...

மிக மிக முக்கியமானது டி.ஆர்.பி ரேட்டிங். அந்த ரேட்டிங் போடும் கம்பேனிக்கு கொஞ்சம் அமவுண்டு தட்டிவிட்டு, உங்கள் சீரியலுக்கு நல்ல ரேட்டிங் வருமாறு காட்டிவிட்டீர்கள் என்றால் உங்கள் சீரியல் எப்போதும் டாப் டென்னில் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். விளம்பரதாரர்களும் உங்களை மொய்ப்பார்கள்...

இதை எல்லாம் செய்து முடித்த தயாரிப்பாளரே இந்த கதை என்ற மேட்டரை கடைசீயாக தேடுவார்கள். இனிமேதான் உங்க வேலை ஆரம்பிக்குது. ஆனால் கொஞ்சம் புது சீரியல் டைரக்டர்களுக்கும் டிப்ஸ் தந்திட்டு வந்திடறேனே...




சினிமாவைப்போல அந்த ஹீரோவுக்கு அப்படி எழுதனும், இந்த ஹீரோவுக்கு இப்படி எழுதனும் என்றெல்லாம் யாரும் உங்களை ப்ரஷர் செய்யமாட்டார்கள். இன்னைய தேதிக்கு ஒரே சீரியல் ஆக்டர் பத்து நாடகத்தில் நடிக்கிறார். ஏழெட்டு டிவி சானல் இருப்பது யாருக்கு லாபமோ இல்லையோ, இவர்களுக்கு நல்ல லாபம்.

ஒரு சீரியலுக்கும் இன்னொரு சீரியலுக்கும் உடல் அமைப்பை பட்டினி கிடந்து மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி மேக்கப் போட்டு எல்லாம் கஷ்டப்படவேண்டாம். ஒரு சீரியலில் வில்லனை, இன்னொரு சீரியலில் கதாநாயகனாக ஆக்கலாம்.

பெரிய வித்யாசம் காட்டவேண்டும் என்றால், ஒரு மூக்குக்கண்ணாடியை மாட்டிவிட்டுவிட்டீர்கள் என்றால் போதும். இல்லை ஒரு சீரியலில் டி ஷர்ட், இன்னொரு சீரியலில் புல் ஹாண்ட் ஷர்ட் போட்டால் கூட நம் வீட்டு லேடீஸ் அதை நுணுக்கமாக புரிந்துகொண்டு பார்ப்பார்கள்...

சீரியலில் வரும் மெயின் ஆக்டர் பத்து நாள் லீவு என்றால் கவலையே படவேண்டாம். துணை கேரக்டரில் நடிக்கும் நடிகர்களை இப்படி அப்படி பேசவைத்து, அவர் நடித்த பழைய காட்சிகளை தூக்கி, அவர் காரில் வந்து இறங்குவது மாதிரி, ஆட்டோவில் போவது மாதிரி காட்டிவிட்டீர்கள் என்றாலே போதும். அவரே நடிப்பது மாதிரி தோற்றப்பாடு வந்துவிடும்...

ஹீரோயினுக்கு தம்பி பொண்டாட்டியாக நடிக்கும் நடிகை, திடீர் திருமணமாகி பாரின் ட்ரிப் போய்விட்டால் கூட கவலையே வேண்டாம். இயல்பாக வேறு நடிகை ஒருவரை நடிக்கவைத்து, அவருக்கு ரெண்டு டயலாக் இப்படி அப்படி கொடுத்து விட்டீர்கள் என்றால் டாப் டக்கர். அதாவது நம்ம லேடீஸ்க்கு இது தெரிந்தாலும் கண்டுக்கிடமாட்டாங்க...

பொதுவாக, சீரியலில் வரும் அப்பா கேரக்டர்கள் மிக மொக்கையாக காட்டப்படவேண்டும். ஒன்று குடிகாரனாக, அல்லது ரவுடியாக, அல்லது மனைவியின் வார்த்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத டங்கனாக இருத்தல் அவசியம். இது சைக்காலஜிக்கலாக லேடீசை கவர உதவும்..

நேரத்தை ஓட்டவேண்டும் என்றால் பெரிதாக கஷ்டப்படவேண்டியதில்லை. வாரத்தின் ஆரம்பத்தில் யாரையாவது காணாமல் போக வைங்க. அப்புறம் வியாழன் வரைக்கும் அவரை ஆட்டோவில், பஸ்ஸில், ட்ரை சைக்கிளில் தேடுவது போல காட்சிகளை அமைத்துவிட்டீர்கள் என்றா போதும்..

வெள்ளிக்கிழமை வாக்கில் தேடப்படும் நபர் இடதுபுறம் திரும்ப, தேடும் நபர் வலதுபுறம் திரும்ப, அப்படியே இயக்கம் இலுப்பைக்குடி இருட்டுவாயன் என்று டைட்டில் கார்ட் காட்டி சஸ்பென்ஸாக முடித்துவிட்டீர்கள் என்றால், பல் போன கிழவி கூட வெத்திலை பாக்கு குத்தி தின்றுகொண்டு மண்டே வரும் அடுத்த பாகத்துக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கும்..

டைட்டில் சாங் என்பது மிக மிக முக்கியமானது...சித்தீதீதீ என்று அழைத்தே மக்களை தன்வசப்படுத்திய சித்தியை மறந்துவிடவேண்டாம். அதுபோல லல்லாலா ஓ ஓ ஓ என்று ராகமாக முடியும்படி ஒரு டைட்டில் சாங்கை ஒரு டொங்கு இசையமைப்பாளரை பிடித்தாவது அமவுண்ட் தட்டி தயாரிப்பது மிக முக்கியம்...



டி.ஆர்.பி ரேட்டிங் குறைகிறது, மூன்று வருடமாக ஓட்டும் சீரியல் தொங்குகிறது என்றால் கவலையே இல்லை. மக்கள் வெகுவாக ரசித்த ஒரு சில கேரக்டர்களை, கொஞ்சம் உங்களோடு ராசியில்லாததால் சாவடித்து, அந்த கேரக்டரை முன்பே முடித்து வைத்திருந்திருப்பீர்களே, அவர்கள் மீண்டும் அழைத்து, அவர்கள் உயிராக வருவது போல காட்டினால் கண்டுகொள்ளமாட்டார்கள் மக்கள்.

அந்த கேரக்டரை ரசித்த கிழவி ப்ராணணை விட்டிருக்கலாம். அந்த கேரக்டரை ரசித்த லேடீஸ் கல்யாணமாகி பாரின் கிளம்பியிருக்கலாம். என்று பல லாம்கள், தொடர்ந்து ஒரு வருடத்துக்கு மேல் ஒரே சீரியலை பார்ப்பவர்கள் ரொம்ப கம்மி. அதனால் நீங்கள் என்ன ராவடி செய்தாலும் அதை கண்டுக்கிடமாட்டார்கள்...

உங்களுக்கும் அரிதாரம் புசுற ஆசையிருந்தா அதுக்கும் பிரச்சினையில்லை. சினிமா மாதிரி ஒரு சீன்ல வர்ர தொல்லை கூட இல்லை. நல்ல கேரக்டரா நீங்களே டிசைன் பண்ணி அதுல நீங்களே நடிக்கலாம்...பொதுவுடமை பேசலாம். புரச்சியாளரா நடிக்கலாம்...

டப்பிங் பேசறதுக்கு ரொம்ப கஷ்டப்பட தேவையில்லை...டப்பிங் த்யேட்டர்ல தொடர்ந்து டப்பிங் பேசுற லேடீஸ், யாருக்கு வேண்டுமானாலும் கொரல் உடுவாங்க. கையில காசு வாயில தோசை. கொரலை யாருமே கண்டுக்கிடமாட்டாங்க. நோ ப்ராப்ளம்ஸ்..

ஒரு பாப்பா படுக்கையில் மூச்சா போவதில் ஆரம்பித்து, அவள் கிழவியாகி கட்டையில் போகும்வரை நாடகத்தை நடத்திப்போகலாம். டி.ஆர்.பி ரேட்டிங்கும், சானலின் ஆசீர்வாதமும் மட்டும் இருந்தால் போதும். மே மாசம் முடிக்கிறேன் என்று பத்திரிக்கையில் பேட்டியில் சொன்னீங்களே என்று கிறுக்கு வலைப்பதிவு பத்திரிக்கையாளர் யாராவது குறுக்கு கேள்வி கேட்டால், எந்த வருஷம்னு சொன்னனா ? எந்த நூற்றாண்டுன்னு சொன்னனா ? என்று மடக்கிவிடலாம்...

கடைசியாக...கதை..

அதுக்கு ஒன்னும் பெரிசா அலட்டிக்காதீங்க சார்...

வீட்ல சண்டை சச்சரவு, உப்புமாவில் உப்பில்லை, மூன்றாவது தெருக்காரன் நாலாவது தெருவில் சின்ன வீடு வைத்திருக்கிறான், அந்த சின்னவூட்டுக்கு ரெண்டு புள்ளைங்க, கள்ளக்காதல், சொத்து தகராறு, தரும அடி, குடும்ப தகறாறு, ஒன் சைட் லவ், வெட்டிட்டு ஜெயிலுக்கு போறது, கல்யாணத்துல பிரச்சினை என்று எவ்ளோ தினத்தந்தி டெய்லி மேட்டர் உங்களுக்கு தெரியும் ? அதை எல்லாம் அப்படியே ஒரு லைன் இடைவெளி விட்டு ஒருலைன் எழுதுங்க சார். அது தான் கதை.

உண்மையான டிவி சீரியல் கதை ரைட்டர்கள் கோச்சுக்கமாட்டாங்கன்ற நம்பிக்கைல மொக்கைய போட்டுட்டேன். நீங்க ஓட்ட போடுங்க சார்...

32 comments:

கலை said...

:)))))))))))))))))))))))))))))))

நாடோடி இலக்கியன் said...

:)
தினத்தந்தி மேட்டருதான் ஜூப்பர்.

ரவி said...

நன்றி நாடோடியாரே.....

நாஞ்சில் நாதம் said...

குறும்படம் எடுப்பது எப்படி?
சிறுகதை எழுதுவது எப்படி?
திரைக்கதை எழுதுவது எப்படி?
மெகா சீரியலுக்கு கதை எழுதுவது எப்படி ?

ஆஹா கெளம்பீட்டாங்கையா கெளம்பீட்டாங்கையா

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே.. ரொம்ப நொந்து போய் இருக்கீங்க போல...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அட்வாண்சோட நிறையப் பேர் உங்களத் தொறத்துவாங்களே தல..,

ரவி said...

நாஞ்சிலாரே...அடுத்த எப்படி உங்களை கொலைவெறியாக்கும் என்பதில் சந்தேகமில்லை...

நாஞ்சில் நாதம் said...

\\ நாஞ்சிலாரே...அடுத்த எப்படி உங்களை கொலைவெறியாக்கும் என்பதில் சந்தேகமில்லை... //

வேண்டாம், வலிக்கும். இதோட நிறுத்திடுவோம். அப்புறம் அழுதுருவேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

♫சோம்பேறி♫ said...

இங்க ஒரு ஓட்டு போட்டா, பத்து பின்னூட்டம் ஃப்ரீனு சொன்னனுவ.

நெசம் தானா செந்தழலாரே?

ரவி said...

சோம்பேறி, சமயம் பார்த்து காலை கவ்வுவது இப்படித்தானோ?

சென்ஷி said...

:)))

கலக்கல்!

ரவி said...

நன்றி சென்ஷி........

Anonymous said...

LOL

வெட்டிப்பயல் said...

Kalakal :)

Anonymous said...

வெள்ளிக்கிழமை வாக்கில் தேடப்படும் நபர் இடதுபுறம் திரும்ப, தேடும் நபர் வலதுபுறம் திரும்ப, அப்படியே இயக்கம் இலுப்பைக்குடி இருட்டுவாயன் என்று டைட்டில் கார்ட் காட்டி சஸ்பென்ஸாக முடித்துவிட்டீர்கள் என்றால், பல் போன கிழவி கூட வெத்திலை பாக்கு குத்தி தின்றுகொண்டு மண்டே வரும் அடுத்த பாகத்துக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கும்..//

செம காமெடி அண்ணே..

Anonymous said...

super.

ரவி said...

நன்றி வெட்டிப்பயல்

Anonymous said...

very super

PPattian said...

//ஒரு சீரியலில் டி ஷர்ட், இன்னொரு சீரியலில் புல் ஹாண்ட் ஷர்ட் போட்டால் கூட நம் வீட்டு லேடீஸ் அதை நுணுக்கமாக புரிந்துகொண்டு பார்ப்பார்கள்...//

லேடீஸ் மனசை என்னமா புரிஞ்சி வச்சிருக்கீங்க பாஸ்.. சூப்பர்

ரவி said...

நன்றி புபட்டியன்

ரவி said...

நன்றி அனானி..

Anonymous said...

எப்படியும் கதையில் ஒரு பெண்ணுக்கு ஒரு கணவனும் இரண்டோ மூன்று காதலன்களும் இருக்கவேண்டும். ஆணுக்கு ஆகக் குறைந்தது இரண்டு மனைவிகள் இருக்கலாம், காதலிகள் எண்ணிக்கை இயக்குனரின் திறமைக்கேற்ப மாறுபடும்.

ரவி said...

நல்லா சொன்னீங்க அனானி. தம்பி பொண்டாட்டியாவோ, ஆட்டோக்காரன் பொண்டாட்டியாவோ இருந்தால் இன்னும் குஜால்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Admin said...

எங்களுக்கும் நடிக்க ஆசைதான் இடம் கிடைக்குமா?...

ரவி said...

நன்றி சந்ரு. வடிவுக்கரசி புருஷன் ரோல் இருக்கு பண்றீங்களா ?

Admin said...

ஐயோ.... விடுங்கடா சாமி...... இந்த வம்புக்கு நான் வரல்லையா.......

"உழவன்" "Uzhavan" said...

ஹா.. ஹா.. கலக்கலான அலசல். :)
இப்ப இது செம பிஸினஸ் வேற.. அரைமணி நேரத்துல சீரியல் வர்றது வெறும் 10 நிமிஷந்தான்..

ரவி said...

ஆமா உழவன். விளம்பரத்தை வெச்சே நேரத்தை ஓட்டுவாங்க

Muruganandan M.K. said...

அருமையான கிண்டல்

Thamiz Priyan said...

எப்படிண்ணே உங்களால மட்டும் ஃபுல் பார்மில் எப்பவுமே இருக்க முடியுது?.. ;-))

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகா ஒரு பாயிண்டும் விடாம எழுதிருக்கீங்க ரவி. கலக்கல்.