கொஞ்ச நாளைக்கு முன்னாலயே உங்களுக்கு இந்த லெட்டர் எழுதனும்னு நெனைச்சேன்...ஆனா இப்ப தான் நேரம் கிடைச்சது...
வலையுலகில் எனக்கு பிடிச்ச எழுத்தாளர்கள் அப்படீன்னு எடுத்துக்கிட்டா....தேசிகன், லக்கி, அடுத்தபடியா நீங்கதான்...
குழப்பமா எழுதுனா தான் அது எழுத்து, மீதி எல்லாம் ஊறுன உளுந்து அப்படீன்னு நினைக்கிற இந்த காலத்துல, தெளிவான நடையில, என்னை மாதிரி தற்குறிக்கும் புரியற மாதிரி நீங்க எழுதுறது தான் உங்களை ரொம்ப பிடிச்சதுக்கு காரணம்...
ஆமாம்...ஏதோ கேள்விப்பட்டேன்...உங்க பேருல எவனோ பின்னூட்டம் போட்டு உங்க பேரை 'கெடுத்துட்டான்' அப்படீன்னு திரட்டிகள்ல இனிமே இணைக்கமாட்டேன் அப்படீன்னு சொல்லிட்டீங்களாமே ?
ஏம்பா...
யாரோ செய்த அந்த செயல் எப்படி உங்களை, உங்கள் எழுத்தை, உங்கள் முடிவுகளை மாற்றலாம் ?
எழுத்துலகில் மட்டுமா, அல்லது இப்படித்தான் நிஜ வாழ்க்கையிலும் இருக்கீங்களா ?
பார் எக்ஸாம்பிள்...
நீங்க 100 பேர் வேலை செய்யுற ஒரு கம்பெனியில மேனேஜரா இருக்கீங்க...நல்லா வேலை செய்யற ஒருத்தருக்கு பதவி உயர்வு தர்றீங்க...
ஆனா அது புடிக்காத பொறாமை புடிச்ச பயபுள்ளைக ரெண்டு பேர், உங்க காதுல விழற மாதிரி, பாருடா...அந்த பயல் ஆயில் அடிச்சதால அவனுக்கு மட்டும் பதவி உயர்வு என்று பேசுறாங்க...
இப்ப நீங்க என்ன செய்வீங்க...
1. அவங்களை உடனே கண்டிப்பீங்க...அவங்களோட எண்ணம் தவறுன்னு புரியவைப்பீங்க..
2. அய்யோ அப்படி பேசுறானுங்களே...அப்படீன்னு அந்த நல்லா வேலை செய்யற, நியாயமா பதவி உயர்வு கிடைக்கவேண்டிய நபரோட பதவி உயர்வை பறிச்சுடறீங்க...
3. இப்படி பேசிட்டாங்களே...கவரிமான் பரம்பரையாச்சே நான்..என்று வேலையை விட்டு நின்னுடறீங்க..
தல..மேனேஜ்மெண்ட் ராஜாவான நீங்க இதுல முதல் ஆப்ஷனை தானே நீங்க எடுப்பீங்க...
அதே நேரம் உங்களை பற்றி தெரிந்த, அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றவர்கள், இந்த புறணியை கண்டுக்கிடுவாங்கன்னு நினைச்சீங்களா...அப்கோர்ஸ் நாட்...அவங்களுக்கு உங்களை நல்லா தெரியுமாதலால், இதனை புறந்தள்ளிடுவாங்கதானே ?
கார்க்கி தளத்தில், பரிசல் தளத்தில், உங்களை படிக்க லிங்க் தந்திருக்காங்க...எனக்கும் அப்படி லிங்க் தர தெரியும், அல்லது narsim.in அப்படீன்னு நேரடியா உங்க தளத்தின் முகவரியை போட்டு உங்க தளத்துக்கு வரவும் தெரியும்...
சாருவும், ஜெயமோகனும் என்ன திரட்டிகள்ல இணைச்சு வெச்சா எழுதறாங்க ? அவங்க வாசகர்கள் அவர்களை நேரடியா போய் படிக்கலையா ? அது மாதிரி உங்களை படிக்க தெரியும் தல எனக்கு...இருந்தாலும், திரட்டிகள் மூலமாத்தான் நீங்க அறிமுகம். அந்த திரட்டியை விட்டு போறேன் என்று நீங்கள் சொன்னதும் இந்த மடலை எழுத தோனுச்சு எனக்கு...
தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை, புறணி பேசுதலும், பொறாமையும், அடுத்துக்கெடுத்தலும் இருந்துக்கிட்டே தான் இருக்கும் நர்சிம். இதனை புறந்தள்ளி தொடர்ந்து நடைபோடுறதில் தானே உங்கள் நெஞ்சுரம் வெளிச்சமாகும் ?
வெகுஜன இதழ்களில் உங்கள் படைப்புகள் வரும்போதே தெரியலையா, உங்களால் ரசனையாக எழுத முடியுது என்று ? யாரோ எவரோ செய்யும் சிறிய அவதூறுகளை புறந்தள்ளி, மீண்டும் திரட்டிகளில் நீங்கள் நடைபோடுவதை காண ஆவலாயிருக்கும் நன்பனின் மடல்...!!!
36 comments:
நானும் இதனை வழிமொழிகிறேன் நர்சிம்!
மாநக்கல் சிபிக்கு டபுள் ரிப்பீடேய்!!
பேருக்கு முன்னால் பிரபல பதிவர் என்று போட்டுக்கொண்டதால், நாமக்கல் சிபிய பிரபல பதிவர் நாமக்கல் சிபி என்றே அழைக்கப்பட்டார்.
(ஏழாம் வகுப்பு தமிழ் பாடநூல், 2020 ஆம் ஆண்டு)
ரவி வழி மொழிகிறேன்
வாங்க நர்சிம்........
நன்றி ப்ரியமுடன் வசந்த், பொடி டப்பா.
சாரி அபி அப்பா..
அன்பின் ரவி
நானும் முதலில் அப்படித்தான் சில பின்னூட்டம் எழுதினேன்.
நர்சிம்முடைய நிலையில் இருந்து நாமும் யோசித்து பாக்கணும்.
அவர் இரண்டு விஷயங்கள் கூறி இருந்தார், திரட்டிக்களிலிருந்து விலகுவது மற்றும் பின்னூட்டமே இடுவதில்லை, இதில் இரண்டாவதை நீக்குவதாக அவரே கூறி விட்டார். நாமெல்லாம் நேரடியாக சென்று அவர் எழுதுவதை படித்து விடுவோம், முடிந்த வரை அனைவரும் தமது வலைப்பூவில் link கொடுப்போம் (நானும் எழுத தொடங்கினால் - ஒரு serious matter பற்றி ஒரு Boston based பதிவரிடம் பேசி வருகிறேன், பார்ப்போம்). காலம் எல்லா காயத்தையும் ஆற்றும், அதுவரை நாம் பொறுமை காப்போம். இதுவும் கடந்து போகும்.
மேலும் ரவி, we dont use the same yardstick for all our decisions, not every decision is rational, some of them would be emotional and we need to respect one's feelings.
இப்போது நர்சிம்மை மேலும் மேலும் எழுத மட்டும் கூறிக்கொண்டு மற்றதை அவரிடமே விட்டுவிடுதல் நலம் என நினைக்கிறேன். Hope you will agree with me..
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
ஸ்ரீ..
அப்போ எளிதாக ஒருவரை இன்ப்ளூயன்ஸ் செய்து காயப்படுத்திவிடலாம் என்ற அந்த அனானிக்கு வெற்றியாகிறது...
அதை எப்படி அனுமதிக்கலாம்...
நாளைக்கு பரிசல். அடுத்த நாள் லக்கி. அப்புறம் கார்க்கி. அப்புறம் நாமக்கல் சிபி. அப்புறம் அபி அப்பா. அப்புறம் வினவு. அப்புறம் தமிழ் ஓவியா. அப்புறம் ஆசிப். அப்புறம் சென்ஷி. அப்புறம் ஆதிமூலக்ருஷ்ணன். அப்புறம் பழமைபேசி. அப்புறம் மோகந்தாஸ்.
என்று எளிதாக ஒவ்வொருவரையும் கொச்சைப்படுத்திவிடலாம்தானே ?
எல்லா பதிவிலும் அதர் ஆப்ஷன் எடுங்க, அனானி ஆப்ஷன் எடுங்க என்று கரடி மாதிரி கத்திக்கொண்டிடுக்க நாம் என்ன லூசா ?
ரோட்டில் இருந்து புழுதியை எறிபவர்களுக்காக சாலையில் போகும் வாகனத்தை நிறுத்திகொண்டிருக்க முடியுமா ? தொடர்ந்து பயணிக்கவேண்டாமா ?
அப்படி அவரது எமோஷனல் டிஸிஷனில் நாம் தலையிடுவதாக வைத்துக்கொண்டாலும், அவர் எமோஷனலாக எடுக்கும் தவறான டிஸிஷனில் தலையிட்டுத்தானே ஆகவேண்டும் ?
வழிமொழிகிறேன்!
இது point ரவி , அனானி மற்றும் அதர் ஆப்சனை அனைவரும் நீக்க வேண்டும்.
நீங்கள் கூட ஒரு முறை நான் அனானி கமென்ட் போட்டதாக கூற, நான் எப்போதும் அப்படி செய்வதில்லை என்று கூறினேன், அதன் பின்னர் அந்த ஆப்சனை எடுத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
அனானி ஆப்சன் வைத்திருப்போரை நாம் யாரும் படிப்பதில்லை, பின்னோட்டம் இடுவதில்லை என்று ஏன் முடிவெடுக்க கூடாது. save srilankan tamilians என்று பதிவில் போட்ட மாதிரி இதற்கும் ஒரு logo போடலாமே. தமிழ்மண நிர்வாகிகளிடம் பேசி அனானி ஆப்சன் உள்ள பதிவுகளை விலக்கி வைக்கலாமே. இதெல்லாம் செய்தால் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் செய்யலாம்.
நாமெல்லாம் சேர்ந்து ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடும் நேரத்தில் நர்சிம்மும் சிறிது ரிலாக்ஸ் ஆகி வந்து சேர்வார் என்று நம்புவோமே.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம், Boston
என்னோட கருத்துக்கு உடன்படுவோரெல்லாம் கொஞ்சம் சீக்கிரம் வந்து கை தூக்குங்க, எதாச்சும் செய்யணும் பாஸ்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம், Boston
போலி பிரச்சினையில் தமிழ் வலையுலகமே சிக்கி சீரழிந்தபோதே நடக்கலை.
வெறும் மொக்கையான பின்னூட்டத்துக்கு எல்லாரும் அவங்க பேண்ட்விட்தை செலவு செய்யனுமா ஸ்ரீ.
ஒரு கிறுக்கு புத்திக்கு எவ்வளவு பலியாடுகளப்பா ?
ஆக்கப்பூர்வமா எதாவது சொல்லலாம் என்றால் அதை மொக்கை பின்னூட்டம் என்று நீங்கள் சொல்லி விட்டதால், இதற்கு மேல் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை ரவி.
இதே மாதிரி ஒருவாரம் பதிவுலகம் நாறட்டும், வேறொருவர் நான் ஆட்டத்துக்கு
வரலைன்னு சொல்லட்டும் நாமெல்லாம் ஒரு வாரம் வாங்க தலை என்று பதிவிடுவோம். ஆட்டம் நல்லா இருக்கும்
என்றும் அன்புடன்
ஸ்ரீராம், Boston
ரிலாக்ஸ் ஸ்ரீ..
ஒருவரின் கிறுக்கு புத்தியால் நூற்றுக்கணக்கான பதிவர்கள் அவர்களுடைய பேண்ட்விட்தை செலவு செய்யனுமா என்பது என்னுடைய கேள்வி...
கை தூக்குங்க பின்னோட்டம் ஒரு ஜோக் (just to relax as you said), ஒரு logo போடுவதற்கு bandwidth செலவாகுமா என்று எனக்கு நிஜமாகவே தெரியாது.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
அனானி, அதர் ஆப்ஷன் எடுக்கும் முடிவுக்கு நான் கை உயர்த்தவில்லை!
//தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை, புறணி பேசுதலும், பொறாமையும், அடுத்துக்கெடுத்தலும் இருந்துக்கிட்டே தான் இருக்கும் //
கரெக்ட்..
http://vidhoosh.blogspot.com/2009/07/blog-post_3187.html
please visit here. There is a small gift for you:)
-vidhya
பர்சனல் லெட்டர் எல்லாம் பப்ளிஷ் பண்ணலாமா??
:)
நானும் முன்பு அவர் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது, ஒரு கடித இடுகையினால் அதை அவருக்கு விளங்கவைக்க வேண்டிய அவசியமில்லை எனவும், அதை அவரிடமே விட்டு விடுவது நல்லது என்றும் தோன்றுகிறது.
எமோஷனல் டிஸிஷனில் அவர் ஒன்றும் எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லவில்லையே...
அவரவர் தளத்தில் லிங்க் கொடுத்து வாசகர்களை படிக்கவைப்பதும் எனக்கு சரியாக படவில்லை. நர்சிம்மின் எழுத்து வாசகர்களை அவர் தளத்திற்கு அழைத்துச் செல்லும், இது அவரை அடுத்த நிலைக்கும் கொண்டுச் செல்லும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
அதே நேரம்,
//ஒருவரின் கிறுக்கு புத்தியால் நூற்றுக்கணக்கான பதிவர்கள் அவர்களுடைய பேண்ட்விட்தை செலவு செய்ய //
வேண்டாம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.
( முதன்மையாய் வாசகனாகிய நான், நல்ல எழுத்து எங்கிருந்தாலும் தேடிச்சென்று வாசிக்கிறேன். அது சாரு, ஜெமோ, எஸ்ரா மட்டுமல்ல செந்தழல் ரவி ஆக இருந்தாலும் சரியே :) )
மேடம்
//பர்சனல் லெட்டர் எல்லாம் பப்ளிஷ் பண்ணலாமா??//
இப்படி கேட்டா நம்ம பொழப்பு எப்படி ஓடும்
//நாளைக்கு பரிசல். அடுத்த நாள் லக்கி.//
நல்லவேளை. எனக்கு முன்னால் பரிசல் இருக்கிறார்.
நர்சிம்மோடு பர்சனலாக பேசியதில் இந்த அனானி பிரச்சினைகளுக்கு முன்பாகவே வேறு ஒரு பிரச்சினையின் போதே இந்த முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது.
அனானிகளை திட்டக்கூட பயமாயிருக்கு தல... ஹாக் பண்ணிடுறாங்களே..
ரவி வழி மொழிகிறேன்
ஆஹா சமுதாய நோக்கில் எழுதப்பட்ட ரவியின் இன்னொரு பதிவு. அனானி அதர் ஆப்சன் போன்றவற்றை நீக்குவது சிறந்தமுடிவாக இருந்தாலும் சில நல்ல அனானிகளின் பின்னூட்டங்களை இழந்துவிடும் வாய்ப்புகள் உண்டு.
நானும் இதனை வழிமொழிகிறேன் நர்சிம்!
ரவி அண்ணே, கருப்பு பிரச்சனையின் போது உங்களுக்கு நான் போட்ட வெகு சாதாரண பின்னூட்டத்திற்காக அனானியால் அசிங்கப்பட்டவன் நான் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். நீங்கள் என் பதிவில் பாருங்கள் இன்றும் அனானியும்,அதர் ஆப்ஷனும் இருக்கின்றது.பயந்தால் வேலைக்காவாது என்பதை உணர்ந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.
அப்புறம் மற்ற எவரையும் விட நர்சிம்மை நான் நன்கு அறிந்தவன்.அதனால்தான் இது சம்மந்தமாக இதுவரை அவரிடம் நான் எதுவும் பேசவில்லை.
//நாளைக்கு பரிசல். அடுத்த நாள் லக்கி. அப்புறம் கார்க்கி. அப்புறம் நாமக்கல் சிபி. அப்புறம் அபி அப்பா. அப்புறம் வினவு. அப்புறம் தமிழ் ஓவியா. அப்புறம் ஆசிப். அப்புறம் சென்ஷி. அப்புறம் ஆதிமூலக்ருஷ்ணன். அப்புறம் பழமைபேசி. அப்புறம் மோகந்தாஸ்
//
புது பதிவர்களின் கவனத்திற்கு... நான் பிரபலப் பதிவர் இல்லைன்னு இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டீங்களா?? என்னைய யாரும் ஆப்படிச்சுடாதீங்க சாமிகளா
:)
//அவரது எமோஷனல் டிஸிஷனில் நாம் தலையிடுவதாக வைத்துக்கொண்டாலும், அவர் எமோஷனலாக எடுக்கும் தவறான டிஸிஷனில் தலையிட்டுத்தானே ஆகவேண்டும் ?//
நச்...,
வழிமொழிகிறேன்.
நண்பரே ஒருமுறை செந்தழல் ரவி சொன்னதை மறுபரிசீலனை செய்யவும் இந்த பதிவை நான் நேற்றிரவு படித்த போது கருத்தை காலையில் போடலாம் என்றிருந்திருந்தேன்..காலையில் எழுந்து என் ப்லாக்கை பார்த்தால் ஒரு அனானியின் அட்டகாசம் அங்கும்..ப்லாக்கை மூடிவிட்டு ஓடுங்கள் என்று...அதற்காக நான் அந்த பின்னுட்டதை எடுக்கவும் இல்லை அப்படியே வைத்திருக்கிறேன் பாராட்டையும் வாழ்த்தையும் ஏற்றுக் கொள்கிறேன் அவர் கருத்தையும் பரிசீலனை செய்வோம் என்று...போராட்ட வாழ்க்கையில் இது ஒரு பொது சம்பவமா நினைச்சி நீங்க தொடர்ந்து எழுதுங்க...என்னையே எடுத்துக் காட்டாய் சொல்லியிருக்கேன் பாருங்கள்...
எம்.எம்.அப்துல்லா said...
ரவி அண்ணே, கருப்பு பிரச்சனையின் போது உங்களுக்கு நான் போட்ட வெகு சாதாரண பின்னூட்டத்திற்காக அனானியால் அசிங்கப்பட்டவன் நான் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். நீங்கள் என் பதிவில் பாருங்கள் இன்றும் அனானியும்,அதர் ஆப்ஷனும் இருக்கின்றது.பயந்தால் வேலைக்காவாது என்பதை உணர்ந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.
ஆம் உண்மை....அனானியும் அதர் ஆப்ஷனும் அவசியம் இருக்கனும்...இதை எடுத்தால் எதிர் கொள்ள தயங்குபவர்களாகவும் அச்சம் கொண்டவர்களாகவும் சித்தரிக்கபடுவோம்...அவர்களுக்கு வெற்றியை நம் கையில் தந்தது போலாகிவிடும்...
அன்பின் செந்தழல் ரவி..
அன்பிற்கு நன்றி நண்பா.
சிந்திக்கவைத்ததற்கும் சேர்த்து.
நன்றி.
எனக்கும் இது போல பர்சனலா கமெண்ட் அடிச்சு ஒருத்தர் எழுதுகிறார்.
பிடிக்காவிட்டால் சைலண்டா பின்னூட்டத்தை தூக்கிவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் தேவையில்லாதது.
ராம், சந்ரு, அப்துல்லா அண்ணே, தமிழரசி, சுஜ்மலா, வந்தியத்தேவன், மகேஷ்
நன்றி...
புரிந்துணர்வுக்கு நன்றி நர்சிம். விரைவில் முடிவெடுத்து அறிவிப்பதை காண ஆவலாயிருக்கிறேன்...!!!!
//
ஆம் உண்மை....அனானியும் அதர் ஆப்ஷனும் அவசியம் இருக்கனும்...இதை எடுத்தால் எதிர் கொள்ள தயங்குபவர்களாகவும் அச்சம் கொண்டவர்களாகவும் சித்தரிக்கபடுவோம்...அவர்களுக்கு வெற்றியை நம் கையில் தந்தது போலாகிவிடும்//
இது சரின்னும் தோனுது.. ஆனா வேணாம்ன்னும் தோனுது.. என்ன சகா பண்ணலாம்?
Post a Comment