Tuesday, November 07, 2006

ஆதலினால் காதல் செய்தேன்..பாகம் 5

பாகம்1 பாகம்2 பாகம்3
பாகம்4

கட்டிடத்தில் நுழைந்த நான் - கண்ட காட்சி...

ஆச்சர்யமான ஆச்சர்யம்...என் நண்பன் கோயிந்து அங்கே புகை பிடித்துக் கொண்டிருக்கிறான்...

அடப்பாவி...எப்போதிலிருந்துடா இந்தப் பழக்கம்...அறையில் நல்லவன் மாதிரி இருந்துவிட்டு, இங்கே வந்துதான் நீ புகைக்கிறாயா...

வேண்டாம் விட்டிருப்பா...உடம்புக்கு கெடுதல் என்று அறிவுரை சொல்லிக் கொண்டே

(அட்ராசக்கை..தம்மு கடன் கேட்க இன்னொரு நாய் மாட்டிக்கிச்சி..காலேஜ்ல அடுத்தவனுக்கு தம் பழக்கத்தை பழக்கி கொடுக்கறது எதுக்கு..இதுக்குத்தான்...)

கோபால் லேபுக்கு இருவரும் விரைந்தோம்...

மனதுக்குள் - திவ்யா...

கண்ணில் - திவ்யா...

கைகளில் - திவ்யா...பால்பாயின்ட் பேனாவால் திவ்யா என்று கிறுக்கி வைத்திருந்தேன் கையில்....

என் மனதை திவ்யா கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்று கொண்டிருந்தாள்..

எதிலும் மனம் செல்லவில்லை..."கோபால் லேப்" கழிந்தது..சனியன் எந்த புரோகிராமுக்கும் அவுட்புட் வரவில்லை...(நமக்கு எப்போ வந்திருக்கு..கம்ப்யூட்டர் ஷட்டவுன் மட்டும்தான் சரியா நடக்கும் நாம கையை வச்சா..)

இயற்பியல் ஆசிரியர் - வகுப்பு மாணவர்களை அழைப்பதாக செய்தி வந்தது...

கல்லூரி வகுப்பறைக்கு எல்லோரும் செல்லுமாறு சொல்லி இருந்தார்...

பாடங்களை முடித்து விட்டிருந்தார்...

விரைவில் வரப்போகும் பிஸிக்ஸ் பிராக்டிக்கல் எக்ஸாம் பற்றி சொல்வதாக சொல்லி வரச் சொல்லி இருந்தார் என்று குள்ள கண்ணன் ஊகம் படித்தான்..

அவர் எனக்கு மிக அறிமுகமானவர்...வகுப்பில் நான் இல்லை என்றால் கண்டிப்பாக தேடுவார்...ஆனால் அதற்குள் திவ்யாவிற்கு பள்ளி முடிந்து விடும்...பள்ளி வாசல் அருகே வைத்து அவளை சந்திக்க முடியாது...

பல்லைக் கடித்துக் கொண்டு வகுப்புக்குச் சென்றேன்...

ஒரு இன்ப அதிர்ச்சி செய்தி...ஆசிரியர் - பேச் ஒன்று மாணவர்களை இயற்பியல் ஆய்வகத்துக்கு (Physics Lab) அழைப்பதாக செய்தி அனுப்பினார்...

ஆகா...இறைவனுக்கு நன்றி என்று மனதுக்குள் மத்தாப்பு வெடித்தது...காரணம், நான் இரண்டாவது பேச் ( Batch) மாணவன்...குமார் என்று பெயர்வைத்த பேரண்ட்ஸ் வாழ்க..பின்ன..அறிவானந்தம், அறிவழகன், அடுப்பு வாயன் எல்லாம் 'A' வில் ஆரம்பிக்கும்..எப்போ பார்த்தாலும் பலியாடு மாதிரி நிக்கனும்..(பேருவைக்கும் போது பார்த்து வைங்கடா அப்பனுங்களா...)

துள்ளி எழுந்தேன்...

பள்ளி நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தேன்...

பத்து நிமிடம் லேட்...இப்போது பள்ளி முடிந்து எல்லோரும் போயிருப்பாங்க... கண்களில் கண்ணீர் முட்டியது....துக்கம் தொண்டையை அடைக்குது....

பள்ளியை நெருங்க நெருங்க - பள்ளி விட்டு அனைவரும் போய்விட்டது தெரிந்தது...

நடை தளர்ந்தது...

மெல்ல நடந்து கொண்டிருந்தேன்...

பின்னால் இருந்து ஒரு சப்தம்....சீக்கிரம் வாடி, எங்க வீட்டில தேடுவாங்க... நான் ஸ்கூல் பேகை வைத்து விட்டு எங்க தோட்டத்துக்கு போக வேணும் என்று ஓட்டமும் நடையுமாக ஒரு சின்னப் பெண் என்னை கடந்து சென்றாள்...அது என்னோட செல்ல மான்குட்டி அப்படீன்னு சொல்லித்தான் தெரியவேண்டுமா...

என்னிடம் பேசவில்லை...ஆனால் அந்த டிச்சி மூஞ்சு தோழிக்கு தெரியாமல் எனக்கு இரண்டு செய்திகள்...(எப்படித்தான் இப்படி அட்டுகளா பார்த்து பிரண்டு பிடிக்கறாளுங்களோ)

செய்தி 1 : நான் உடனே தோட்டத்துக்கு போகிறேன்..(சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலம்.. கத்தரிக்காய் / கீரை வகைகள் / எலுமிச்சை ஆகியவற்றை பயிர் செய்து கொண்டு இருந்தார் அவள் அப்பா, ஊருக்குள்ள "கத்தரிக்கா" பேமிலி என்று பெயர்..அது என்னமோ பெரிய வேல்ஸ் இளவரசர் பேமிலி மாதிரி சுத்திவருவான் என்னவளோட இத்துப்போன அண்ணன்..)

செய்தி 2: நீயூம் வா...

ஆக அந்த தோழிக்கு தெரியாமல் செய்தி என்னை வந்து அடைந்தது...

என் நடையின் வேகம் அதிகரித்தது...

விரைவாக வீட்டுக்கு சென்று, குளித்து, நல்ல டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு (துவைக்கவில்லை..ஆனா அவ்ளோ அழுக்கு இல்லை..)

படபடப்பாக கிளம்பினேன்...

அந்த நேரம் பார்த்து - கோவிந்து கல்லூரியில் இருந்து வந்தான்...

எங்கேடா போற குமார் ?

வெளியே..இது நான்...

வெளியேன்னா ?

வெளியேன்னா வெளியேதான்...

ஏண்டா இப்படி எரிந்து விழுகிறாய்...என்னமோ சந்திர மண்டலத்துக்கு போகிற மாதிரி....

அதானே...ஏன் நான் எரிந்து விழுகிறேன்.....என்று மனதுக்குள் நினைத்தபடி...

சாரிடா சனியனே...நான் வந்து சொல்லுறேன்...என்றேன்..

கொஞ்ச நாளா நீ சரியில்லடீ....இரு கவனிச்சுக்கிறேன்...இது கோவிந்து...

அட ஒன்னுமில்லைடா.....என்றபடி - அறையை விட்டு வெளியேறினேன்..

திவ்யா வீட்டு தோட்டம் சமீபித்தது...இருபுறமும் மரங்கள் அடர்ந்த சாலை...எந்த பரபரப்பும் இன்றி சோம்பல் முறித்துக்கொண்டிந்தது மாலைச்சூரியன்...

இன்று என் வாழ்வில் - ஒரு முக்கிய நிகழ்ச்சி நடக்கவிருப்பதை அறியாமல்... மெல்ல சமீபித்தேன்....

என் கண்கள் தென்றலை (திவ்யாவை) தேட ஆரம்பித்தன....

26 comments:

Anonymous said...

soo soon ? cool man. when will be the next part ?

ரவி said...

விரைவில்..!!

Anu said...

its so interesting
5 bagamum padichten
but still no answer to my question

- யெஸ்.பாலபாரதி said...

//என் நண்பன் கோயிந்து அங்கே புகை பிடித்துக் கொண்டிருக்கிறான்...
//

என்னிடம் கோயிந்துக்கு காப்பிரைட் இருக்கு ரவி!

ரவி said...

பாலா, அதை பீன்ஸ்..சே..பொன்ஸ் கடன் வாங்கி இருந்தாங்களே, குட்த்துட்டாங்களா...

கார்மேகராஜா said...

இன்றே அடுத்த பதிவையும் போடுங்களேன்.

Viji said...

ஏங்க அந்த பிசிக்ஸ் வாத்தியார் பேரு ராஜெந்திரனா?

ரவி said...

கார்மேகா...வாங்க...இன்னைக்கேவா...ஏன் ரொம்ம்ம்ம்ப அவசரம்...:)))...உங்க கதை என்று சந்தேகம் வந்திட்டதா..

ரவி said...

///ஏங்க அந்த பிசிக்ஸ் வாத்தியார் பேரு ராஜெந்திரனா? //

அப்படியும் வச்சிக்கலாம்....இது கதை தலைவா...

என்னோட பிசிக்ஸ் வாத்தியார் பெயர் மறந்திடுச்சி..ஆனா ஆசிட் வாய் என்று பெயரிட்டு கூப்பிடுவோம்..என் க்ளாஸ்மெட் யாரையாவது கேட்கனும், ராஜேந்திரன் என்று யாராவது எடுத்தாங்களா என்று..

Muthu said...

பெரிய பதிவு தொடராக இருக்கும் போலிருக்கிறது.பொறுமையாக படித்து பிறகு எழுதுகிறேன்.

ரவி said...

///its so interesting
5 bagamum padichten
but still no answer to my question ///

மிக்க நன்றி...உங்கள் கேள்விதான் என்னவோ !!!!

- யெஸ்.பாலபாரதி said...

//பாலா, அதை பீன்ஸ்..சே..//
தல.. என்ன இது..? :-(

//பொன்ஸ் கடன் வாங்கி இருந்தாங்களே, குட்த்துட்டாங்களா...//

இப்போதைக்கு கோயிந்து என்னிடம் தான் இருக்கார்.

ரவி said...

//பொறுமையாக//
ஆகட்டும்
//
படித்து
//
ஆமாம் படிக்கனுமில்ல..

//பிறகு
எழுதுகிறேன்.
//
எழுதித்தான ஆகனும்...

:)))))))

ரவி said...

//
என்ன இது..? :-(
//

பழக்க தோஷம் ஹி ஹி..

உங்களிடம் கோயிந்து, என்னிடம் ஒரு குவாட்டர் பக்கார்டி இருக்கு..அனுப்பி வைங்க..

:)))))

கார்மேகராஜா said...

..........கார்மேகா...வாங்க...இன்னைக்கேவா...ஏன் ரொம்ம்ம்ம்ப அவசரம்...:)))...உங்க கதை என்று சந்தேகம் வந்திட்டதா............


என்னோட வாழ்க்கைங்கிற கதையும் இப்ப இப்படித்தாங்க போய்ட்டிருக்கு.

அதான்.

ரவி said...

////என்னோட வாழ்க்கைங்கிற கதையும் இப்ப இப்படித்தாங்க போய்ட்டிருக்கு.///

அப்டிப்போடு...

மங்கை said...

eppidi ravi??????

thaanaa varuthaa???

mangai

ரவி said...

அதெல்லாம் அப்படியே தானா வருது...:))

கார்மேகராஜா said...

((eppidi ravi??????

thaanaa varuthaa???

mangai))


மங்கை எனும் திருப்பெயர் கொண்ட மங்கை தமிழில் எழுதினால் சுவையாக இருக்குமென நினைக்கிறோம்.

இல்லையா ரவி அண்ணா?

ஷைலஜா said...

மனதுக்குள் திவ்யா கண்ணில் திவ்யா சரிதான்
கையில் திவ்யான்னு அடுத்தவரி பார்த்து அப்டியே ஷாக் ஆயிட்டேன் கையில் இருந்த பேனால பேரை கிறுக்கினேன்னு அடுத்தவரில எழுதினதை பார்த்ததும்தான் மூச்சே வந்தது... அதானே...குட் பாய் ஆச்சே ரவீ?:)

ஷைலஜா

Unknown said...

ம்ம்ம்... இப்போதுதான் 5 பாகமும் படித்தேன்... முடிவு சுகமோ, சோகமோத் தெரியவில்லை... ஆனால் காதல் கதைகள் எல்லாமே படிக்க சுவாரஸ்யமானவை தான்!!!

இதுவரைக்கும் நல்லாத்தான் போகுது...சீக்கிரமா ( சுபம் போட்டு :) )முடிச்சு வையுங்க!!!

G.Ragavan said...

// ஆனால் அந்த டிச்சி மூஞ்சு //

இந்த டிச்சி அல்லது டிச்சுங்குற சொல்லாடல கரூர்ல இருந்தப்பதான் மொதல்ல கேட்டேன். சாக்கடைன்னு தூத்துக்குடியில சொல்லிப் பழகியிருந்த எனக்கு டிச்சுன்னா மொதல்ல புரியலை. அப்புறந்தான் சாக்கடைன்னு புரிஞ்சது. சாக்கடைன்னு சொல்ல மாட்டீங்களான்னு கேட்டா, "இல்ல. டிச்சும்போம்"ன்னு சொல்லீட்டாங்க.

Santhosh said...

ரவி,
டென்ஷன் தாங்க முடியலை அடுத்த பதிவு எப்ப போடுவீங்க.. அது என்ன ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு ஒரு 4,5 பதிவாப்போட்டு முடிங்கப்பா :))

மதுமிதா said...

போதும் ரவி

எப்பய்யா திவ்யா கொடுத்த காகிதத்தை வாசிக்கப் போறீங்க

அந்த பாகம் வந்ததும் சொல்லுங்க
வீட்டில் வேற வேலை பார்க்க வேணாமா:-)

Anonymous said...

kalakakkkkkaara Po.

Santhosh said...

யப்பா ரவி எங்கப்பா அடுத்த பாகத்தை காணோம்? போட்டுட்டேன்னு சொன்னே ஏப்ரல் மாசம் கூட இல்ல இது. சின்ன புள்ளைங்களை இப்படி எல்லாம் ஏமாத்த கூடாது என்ன? :))