Thursday, November 09, 2006

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 6

பாகம்1 பாகம்2 பாகம்3
பாகம்4
பாகம்5

வாட்சை பார்த்தேன்...

மணி ஐந்து ஐம்பது....

திவ்யா வீட்டு தோட்டத்திற்கு அருகில் சமீபித்திருந்தேன்...ஆழமாக ஒருமுறை மூச்சை உள்ளிழுத்துக்கொண்டேன்...

கண்கள் விரைவாக அலைபாய்ந்தன....

மனம் ஆத்மார்த்தமாக திவ்யா - திவ்யா - திவ்யா என்று கூவிக் கூப்பாடு போட்டு குட்டிகலாட்டா கொண்டிருந்தது.

தோட்டத்தில் தானே இருப்பேன் என்று சொன்னாள்...எங்கே போனாள் என் பட்டாம்பூச்சி என்று மனது கிடந்து அடித்துக் கொண்டிருந்தது...

கீழ்வானம் சிவந்து - தானும் ஏதோ திவ்யாவைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிற மாதிரி சில வெண் மேகக் கூட்டங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன..

திவ்யா வீட்டு தோட்டம் - ஒரு சிறிய கட்டிடம் - மின்சார மோட்டாருடன் - சில சீத்தாப்பழ மரங்கள் - ஒரு பெரிய வேப்ப மரம் சூழ்ந்தது..

பெரிய கிணறு - அதில் எங்கள் காதலை போல தளும்பி, நிரம்பி வழியும் நீர்...

தோட்டம் முழுமையும் பசுமையான எலுமிச்சை மரங்கள் - அதனூடாக சில தேக்கு மரங்கள் என்று ரம்மியமாக இருந்தது...

எலுமிச்சை மரங்களூடாக நடந்து கொண்டிருந்தேன்...

க்ரீச்..க்ரீச்...என்று பூச்சிகளின் சப்தம் தவிர ஒன்றுமில்லை..காரணம் திவ்யா வீட்டு நிலம் மற்றும் தோட்டம் - அதன் பிறகு - வனத்துறையால் பராமரிக்கும் நீலகிரி காடு - பிறகு தரிசு நிலங்கள் கொண்ட காடு.. மேட்டுப்பகுதி... சொல்லப் போனால் திவ்யா வீட்டு தோட்டம் தான் அந்த கிராமத்தில் கடைசி - பயிர் செய்யக் கூடிய நிலம்...

அதற்கு பிறகு காடு போல் அடர்ந்த பாறைகள் நிறைந்த தரிசுப் பகுதி... நரிகளும் கூட உண்டு அங்கே...

சிறு கல் ஒன்று முதுகை தாக்கியது....

அடிங்ங்ங்...என்று இயற்கையாக எழும் கோபத்தோடு, சட்டென திரும்பி பார்த்தேன்...

கூடையில் இருந்து உதிர்ந்த ஒற்றை மலர் போல - எலுமிச்சை மரத்துக்கருகில் - கீழ்வானத்தின் சிவந்த நிறத்தையும் , எலுமிச்சையின் மஞ்சள் நிறத்தையும் - மிக்ஸியில் போட்டு அடித்த ஜூஸ் மாதிரி - கூட்டிக் கலந்த நிறத்தில் தேவதை போல்

திவ்யா...

திடீர் என சம்மந்தம் இல்லாமல் - கவிதை ஒன்று ஞாபகம் வந்தது...

பூஞ்சோலை இல்லாத ஊரில் குடியிருந்தேன் என்று நினைத்திருந்தேன்..
உன்னை பார்க்கும் வரை....

மெல்ல சிரித்துக் கொண்டேன்...

ஏன் சிரிக்கிறீங்க...இது அவள்....

சும்மா தான்...ஒரு கவிதை ஞாபகம் வந்திட்டது...என்றேன்...

என்ன கவிதை...என்றாள்...

சொன்னேன்...

அவளும் சிரித்துக் கொண்டாள்...கவிதை எல்லாம் கூட எழுதுவீங்களா ?

இல்லைமா - எங்கோ படிச்சது...

DONT CALL ME AMMA...திவ்யான்னு கூப்பிடுங்க...(என்ன இவ, மின்சாரக்கனவு திருட்டு வி.சி.டி ல பார்த்திருப்பாளோ !!!)

சரி சரி...

இங்கே நிற்க வேண்டாம், அந்த சின்ன பாறைக்கு பின்னால் தான் நான் எப்போதும் உட்காந்து தனிமையை ரசிச்சிக்கிட்டே கவிதை எழுதுவேன்...அங்கே போலாம்..என்றாள்..

சரி திவ்யா - அங்கேயே போயிடலாம்...

மேலும் ஒரு கவிதை ஞாபகத்துக்கு வந்து படுத்தி எடுத்தது...அதை அப்போது திவ்யாவிடம் சொல்லவில்லை என்றாலும் இப்போது வாசகர்களுக்கு சொல்லிவிட எண்ணுகிறார் குமார்...

என்ன கவிதை அது....

" உலகிலேயே மிகச் சிறிய கவிதை..உன் பெயர்..." ( டேய், சுட்டது போதும்..சுயமா சிந்திக்க தெரியாதா...)

அந்தச் சிறு பாறை - எங்களுக்காகவே ஆண்டவன் படைப்பில் உருவான கருப்பு கவிதை போல் இருந்தது...

ஆளுயர சிறு பாறை - சாலையில் செல்பவர்களுக்கு பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் பற்றி தெரியாது...

பின்னால் இருப்பது - பார்க்கில் உள்ளது போல் இயற்கையே அமைத்த ஒரு பெஞ்ச்..அதில் அமர்ந்தால் கண்ணுக் கெட்டிய தூரம் வரை வனம்...ஏற்கனவே வாசகர்களிடம் சொல்லிய வனத்துறையால் பராமரிக்கப்படும் - தரிசு நிலக்காடு...

அங்கே ஏற்கனவே திவ்யா கொண்டுவந்த ஒரு சிறு டிபன் பாக்ஸ் - ஒரு சிறிய டைரி...

இந்த டைரி உங்களுக்காக கொண்டு வந்தேன்...என்றாள்...(இன்னும் உள்ளது என்னோடு)

என்ன இருக்கிறது அதில்...

என் கவிதைகள்...என்றாள்...

நீயே ஒரு கவிதை...நீ எதற்கு எழுத வேண்டும் கவிதை...ஹி ஹி என்று வழிசல் காமெடி செய்தேன்...

கீழ் வானத்திற்கு போட்டியாக - அவள் தோட்டத்தில் அவள் அப்பன் காய்கறிகாரன் விதைத்து, விளைந்து, கனிந்திருந்த தக்காளிகளுக்கு போட்டியாக - அவள் கன்னம் சிவந்தது...(பறித்து வித்துறப்போறான்...)

சிறிய டிபன் பாக்ஸில் - எங்க மாடு கன்னு போட்டிருக்கு... சீம்பால்... அம்மாவிடம் கிருந்திகாவுக்கு கொடுக்கனும் என்று வாங்கி வந்தேன்...என்றாள்...(இந்த பொய் எப்படிதான் கிளம்புமோ தெரியாது...ஆனால் மூஞ்சியை மட்டும் ஒன்னுமே தெரியாதமாதிரி வைத்துக்கொள்ளுவார்கள் இந்த பெண்கள்..)

மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடித்தாயிற்று....பிறகு, நம்மாளு கொண்டுவந்ததாச்சே...

எல்லாம் சாப்பிட்டீங்களே...இளமாறன் ரோட்ல பார்த்து கேட்டார்..அவருக்கும் கொண்டுபோவீங்கன்னு தான் நிறைய கொண்டுவந்தேன்...

அவன் சாப்பிடமாட்டானே...(அந்த நாய்க்கு எதுக்கு சீம்பால்.., நேத்து ஒரு தம்மு குடுரான்னதுக்கு என்ன ஆர்ப்பாட்டம் செய்துது)

குமார்..உங்களுக்கு பாட்டு பாடத் தெரியுமா ? என்றாள்...

ம்ம்ம்....இது நான்...

எந்த பாட்டு பிடிக்கும்...அதை பாடுங்க...என்றாள்..

திரும்ப திரும்ப கட்டாயப்படுத்தியதில்...

புதிய முகத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில்...(டீக்கடையில் இருந்த ஓக்கே ஒக்க சினிமா கேஸட்..இளங்கோ அண்ணன் எப்போ பார்த்தாலும் கந்தா, கடம்பா, கதிர்வேலான்னு ஏதாவது சாமி பாட்டை போட்டு கொடுமைப்படுத்துவார்..)

ஜூலை மாதம் வந்தால்..
ஜோடி சேரும் வயசு..
மாலை நேரம் வந்தால்...
பாட்டு பாடும் மனசு..

ஹே..அச்சம் நாணம் என்பது...ஹைதர் காலப்பழசு...
முத்து முத்தம் போடவா...(ஹே வெட்கம் ) ரத்த சுத்தம் புதுசு...

புதியதல்ல முத்தங்கள் இனி பொய்யாய் வேஷம் போடாதே..
உள்ளமெல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையால் மூடாதே..

காடு மலைகள் தேசங்கள் காண்போமா காற்றைக் கேள்...
வீடு வேண்டாம் கூடொண்று கேட்போமா காட்டைக் கேள்...

அட..குமார்..அருமையா பாடுறீங்க...என்றாள் என்னவள்...

திவ்யா..சும்மா சொல்ல வேண்டாம்...என்றேன்...

அட உண்மையா தான் சொன்னேன் குமார்...என்றாள்...

பலகதைகள் பேசி...

வெளிச்சம் குறையும் வரை அவள் டைரியிலிருந்து கவிதைகள் படித்து...

மணி பார்த்த போது ஏழு...

குமார்...வீட்டுல கிருத்திகா வீட்டுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்..கிளம்ப வேண்டும் என்றாள்...

கிளம்ப எத்தனித்த போது...

கையில் டார்ச் லைட்டுடன் - இருவர் பாதையை விட்டு விலகி - திவ்யா தோட்டத்துக்கு வருவது தெரிந்தது...

பரபரப்பாக சொன்னாள்...அய்யோ அது எங்க அப்பாவும் அண்ணாவும்...(இந்த இத்துப்போனவனுங்க இப்போ ஏன் வர்ரானுங்க)

அவள் பரபரப்பு என்னையும் தொற்றிக் கொண்டது...

இப்போது பாதைக்கு போக வேண்டும் என்றால்...அவர்களை தாண்டித்தான் போக வேண்டும்...எதிரில் காடு...பின்னால் திவ்யாவின் அப்பாவும் அண்ணாவும்...

திக்கு தெரியாமல் தவித்தேன்...

இதயம் பட பட என்று துடிக்க ஆரம்பித்தது...

அவள் கைகளை கெட்டியாக பற்றிக் கொண்டு...காட்டை நோக்கி பார்த்தேன்..

தொலைவில்..நரி ஒன்று...ஊஊஊஊஊஊஊ என்று ஊளையிட்டு அமைதியை கிழித்தது....

..காதல் பயணம் தொடரும்...

35 comments:

மங்கை said...

ஹ்ம்ம்ம்...அப்புறம்

ரவி said...

என்ன மங்கை, அதுக்குள்ள படிச்சிட்டீங்களா...

இல்லை சும்மாங்காட்டியும் ம்ம் அப்புறம்னு போட்டுட்டு அப்பீட் ஆகிட்டீங்களா ?

Anonymous said...

காலகுரா

ரவி said...

//காலகுரா //

என்ன சொல்ல வர்றீங்க

Unknown said...

ரவி உங்களுக்கு பாடக் கூடத் தெரியுமா???? ;)

கார்மேகராஜா said...

......இந்த டைரி உங்களுக்காக கொண்டு வந்தேன்...என்றாள்...(இன்னும் உள்ளது என்னோடு).......


வெறும் கதை என்று சொன்னீரே!

கதைக்கும் நிஜத்திற்கும் தொடர்பு தெரிகிறதெ!

கார்மேகராஜா said...

பதிவை கொஞ்சம் பெரிதாக போடுங்கள். நன்றாக இருக்கிறது.

இன்றே இன்னொரு பதிவை எதிபார்க்கலாமா?

ரவி said...

//ரவி உங்களுக்கு பாடக் கூடத் தெரியுமா???? ;) ///

அருள்., கிவ் அண்ட் டேக் பாலிஸியா ?

ரவி said...

////வெறும் கதை என்று சொன்னீரே!

கதைக்கும் நிஜத்திற்கும் தொடர்பு தெரிகிறதெ! .////

அந்த கதையின் நாயகன் அந்த டைரியை வெச்சிருக்கமாதிரி சொல்லி இருக்கேன் தலைவா :))

Anu said...

wow so thrilling....

அனுசுயா said...

இது கதையல்ல நிஜமா?
இல்ல நிஜமல்ல கதையா?
எப்டியிருந்தாலும் நல்லா விருவிருப்பா போகுது.

ரவி said...

நன்றி அனிதா..

ரவி said...

நன்றி அனு..!!!

மங்கை said...

நல்லதுகே காலம் இல்லை

அவசர அவசராமா பின்னூட்டம் போட்டுட்டு லேட்டா மீட்டிங் போய், இப்பதான் திட்டு வாங்கீட்டு வந்து உக்கார்ந்துட்டு இருக்கேன்..

அந்த முதல் பின்னூட்டம் வாபஸ் போங்க..

குசும்பு ஜாஸ்தி ரவி

ஷைலஜா said...

புத்தகக் காட்சிக்கு வரப்போ டைரியும் கூட வருமா?:)
ஷைலஜா

Anonymous said...

Mr. Ravi!!

Pls. pay attention on Ceylon Tamils. Pls. visit :www.tamilnet.com
www.puthinam.com

ரவி said...

சேச்ச்சே...மங்கை..ச்ச்ச்சும்மா...கோச்சுக்காதீங்க...

ரவி said...

ஷைலஜா, அதை நீங்க, கதையோட ஹீரோ குமாரிடம் தான் கேட்கவேண்டும்...:))

மதுமிதா said...

பத்து காகிதம் வேணாம்
ஒரு காகிதத்தில ஒருவரியைக் காட்டுங்க முதல்ல.

என்ன சஸ்பென்ஸ் வேண்டியிருக்கு
கடிதத்தைப் படிக்கிறதுக்கு முன்னே
என்ன ஒரு பில்ட்அப்!

காட்டுக்குள்ளேயும் தொடருமா காதல்?
ன்னு கன்னாபின்னான்னு எழுதணும்னு நினைச்சேன் ரவி

/// எங்கள் காதலை போல தளும்பி, நிரம்பி வழியும் நீர்...///

இந்த வரியைப்போட்டதால இப்ப தப்பிச்சிட்டீங்க.

சரி உங்க குமார்ட்ட சொல்லி திவ்யாவுக்கு எங்களை அறிமுகம் செய்து வைங்க:-)

கவிதை பத்தி பேச வேண்டியிருக்கு:-)

ரவி said...

அப்பா..தப்பிச்சேன்...மதுமிதாவோட கோபத்திலிருந்து...

அடுத்தவங்களுக்கு வந்த லெட்டரை படிக்க அப்படியென்ன ஆர்வம் :)))

திவ்யா அறிமுகம் கண்டிப்பா கிடைக்கும்..:)) கேட்டுப்பாக்கிறேன் (குமாரிடம்)

கார்மேகராஜா said...

(((அந்த கதையின் நாயகன் அந்த டைரியை வெச்சிருக்கமாதிரி சொல்லி இருக்கேன் தலைவா :)))

அதனால்தான் அண்ணே உங்ககிட்ட கேட்டேன்.

கப்பி | Kappi said...

இப்ப தான் தல ஆறு பாகத்தையும் ஓரே மூச்சுல படிச்சுட்டு வரேன்...செம ஸ்பீடா போகுது...கலக்கல்..அடுத்த பாகம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க ;)

அதுசரி..உங்க செல்லப் பெயர் குமார்ன்னு இத்தனை நாளா சொல்லவே இல்லையே ;)

PKS said...

// பெரிய கிணறு - அதில் எங்கள் காதலை போல தளும்பி, நிரம்பி வழியும் நீர்... //

இந்த வரியை எடுத்துப் போட்டு "அட்றா அட்றா" என்று எழுத வேண்டும் என்று நினைத்தேன். பின்னூட்டத்தில் "காதல் கவிதாயினி" மதுமிதா அவர்களே எடுத்துப் போட்டுவிட்ட பின்னே நான் என்ன சொல்வது?

பெண்களைக் கவர்ந்த கலைஞர்கள் பிரபலமடைகிறார்கள். நீடித்து நிற்கிறார்கள். நடிகர்களில் இருந்து எழுத்தாளர்கள்வரை இது பொருந்தும். உங்கள் பதிவுக்கு வருகிற பெண்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது. :-)

உங்களுக்கு நிறைய சென்ஸ்-ஆஃப்-ஹியூமர் இருக்கிறது. வலிந்து நுழைக்காத, மிகைப்படுத்தாத, இயல்பான ஹியூமர். உதாரணமாக, "அடுப்பு மாதிரி இருக்கிற என் இடுப்பைத்" தொட்டு அந்த அமைச்சருக்கு என்ன ஆகப் போகிறது என்று ஒரு பதிவின் பின்னூட்டத்தில் எழுதியிருந்தீர்கள். இன்று அதை நினைத்தாலும் எனக்கு சிரிப்புதான். தமிழ் சினிமா காமெடி ஒன்றில் வருகிற வசனம்தான் - அடுப்பு மாதிரி இடுப்பு. ஆனால் பொருத்தமான இடத்தில் வைத்து பட்டையைக் கிளப்பி விட்டீர்கள். இந்த நகைச்சுவை உணர்வுடன் கொஞ்சம் சீரியஸ்னஸ், கொஞ்சம் ஆழம், கொஞ்சம் விஷயம் எல்லாம் கலந்தால் அடுத்த நிலைக்குப் போகலாம்.

இந்தத் தொடரைப் பொருத்தவரைக்கும் - ஒரு பதின்ம வயதினர் எழுதியது போல இருக்கிறது. விசேடமாகச் சொல்ல எதுவுமில்லை. ஆனால், ஆர்வமுடன் பலரைப் படிக்க வைக்க உங்கள் நடையும் நகைச்சுவையுணர்வுமே காரணம்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

Boston Bala said...

ஹாட்டா பறக்குது... வெகு ஜோர்!

Santhosh said...

ரவி அப்புறம் கதையை மேல சொல்லுங்க.. :))

Santhosh said...

சரி அது என்ன blogயின் முதல் பக்கத்துக்கு போனா இந்த பதிவு தெரியலை.. ???

Dr.Srishiv said...

ஐயா
ரொம்ப டெண்ஷன் பண்றீங்க, என்ன பண்ணார் குமார் அந்த சூழலில்? மேலும் பெண்ணின் தந்தையை அவன் , இவன் என்று ஏகவசனத்தில் அழைக்கவேண்டாமே? நமக்கு ஒரு தங்கை இருந்து நம் தந்தையை ஒருவர் அவ்வாறு அழைத்தால் நாம் மகிழ்வோமா? இது என் சொந்த கருத்தே, தவறாக எண்ணவேண்டாம், மனதில் பட்டதைச்சொன்னேன், வணக்கம்,. அடுத்தபகுதியை எதிர்பார்க்கும்,
ஸ்ரீஷிவ்...:)

சரவணன் said...

நல்லா இருக்குங்க.... அடுத்த பாகம் எப்போ?

Viji said...

கதை நல்லா இருக்குதுங்கண்ணா, கதையோட கூட வருகிற மெல்லிய நகைச்சுவை அருமை. எதொ ஒரு பின்னூட்டத்துக்கு பதில் எழுதறப்ப இனி கொஞ்சம் சீரியசா எழுதப்பொகிரேன்னு நீங்க சொன்ன மாதிரி ஞாபகம், இப்படியே நகைச்சுவயோட எழுதுங்க தோழரெ..

ரவி said...

அப்படியே செய்துடலாம்..

நாமக்கல் சிபி said...

மக்களே குமார்ன்ற பேர் எல்லாம் பொதுவா ரெண்டாவது பேட்ச்ல வராது...
ரவிங்கற பேர்தான் ரெண்டாவது பேட்ச்ல வரும்... இதுக்கு கதைக்கு யோசிச்சி பேர் வைக்கனும்... சரி நீங்க உண்மைய ஒத்துக்கற நேரம் வந்துடுச்சி.


"கதை" நல்லா விடறீங்க...
கதை சூப்பர் ;)

Jay said...

நல்லகதை ... பாராட்டுக்கள் ... தொடர்ந்து வாசித்து வருகின்றேன்.

Dr.Srishiv said...

ஹா ஹா ஹா
வெட்டிப்பயலின் ஆராய்ச்சி பாராட்டுக்குரியது ;), அதுதானே? குமார் எப்படி ரெண்டாவது பேச்ல வருவார்? ;) என்ன ரவி மாட்டிக்கிட்டீங்களா? :D உண்மையை ஒழுங்கா அடுத்த பகுதில போட்டு நாயகனின் பேரையும் மாத்துங்கப்பா ;)
ஸ்ரீஷிவ்...:)

Divya said...

கதை விறு விறுப்பாக போகுது, சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க

Anonymous said...

அட ரவி

மேல எழுதுங்க தலைவ, கொஞ்சம் வேலை காரணமா உங்க இந்த பிளாக் படிக்க லேட் ஆகிடுத்து..... அடுத்த பாகம் எழுதுநிங்கனாதான் நான் கமென்ட் பன்னுவேன். உங்கள் நிலா உறவு....