Monday, July 27, 2009

வெற்றிக்கான இரண்டு மந்திரங்கள்...!!!!!!!!!!!!

ஓம். ரீம். ஐஸ் க்ரீம். !! இதுதான் அந்த இரண்டு மந்திரங்கள்.

இதனை தினமும் இரவு பதினோரு மணியில் இருந்து பண்ணிரண்டு மணிவரை இடைவிடாமல் ஜெபித்துவந்தால் வாழ்க்கை வளம்பெறும். இளமை திரும்பும். நீண்ட ஆயுள் கிடைக்கும்..!!!

என்ன நக்கலா !! அப்படீங்கறீங்களா ? அடப்போங்க சார்...!!! எத்தனை பதிவு எழுதினாலும் நாடு திருந்தமாட்டேங்குதே ? பாலியல் வன்முறை நடக்குது...கத்தரிக்காய் கிலோ இருவது ரூபாய் விக்குது. பஸ்ல நடத்துனர் டிக்கெட் சில்லறை தராம ஏமாத்துறார்...!!!

சரி நம்ம உண்மையிலேயே மேட்டருக்கு போவோம்..அங்க சுத்தி இங்க சுத்தி வந்துட்டாண்டா மேட்டருக்கு..!!! என்று டென்ஷன் ஆகவேண்டாம்...இந்தாருங்கள் மூன்று மந்திரங்கள்..!!

1. Take it Easy... !!!
2. One At a Time... !!!


தமிழ் பதிவில் ஆங்கிலத்தில் ஏன் மந்திரம் என்று குழம்பவேண்டாம். சோ எங் பக் என்ற என்னுடைய சவுத் கொரிய ரசிகைக்காக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்..!!!

முதல் மந்திரத்தை பார்ப்போம்..!!

Take It Easy !!



அடிக்கடி இதை சொல்லுங்கள்...நன்பரிடத்தில்...பணியிடத்தில்...

கடுமையான பணிச்சூழல் அதிகரித்து, மண்டை காய்ந்துகொண்டிருக்கும்போதுகூட.....உங்களுக்கு நீங்களே கூட சொல்லிக்கொள்ளலாம்..!! டேக் இட் ஈஸி...எவ்ளோ ஈஸியான மந்திரம் பாருங்க...

எப்போதெல்லாம் எதாவது ப்ரச்சனை உங்களை சூழ்கிறதோ, அப்போது எதிரில் இருப்பவரிடமும் சொல்லலாம்..மனைவியிடம் கூட அடிக்கடி சொல்லலாம்...உங்கள் பிள்ளையிடம் சொல்லலாம்..

இடுக்கண் வருங்கால் நகுக, என்று அய்யன் திருவள்ளுவர் சொன்னதும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்று. இப்போதெல்லாம் இடுக்கண் வந்தால் நகுத்தீர்கள் என்றால் சென்னையென்றால் கீழ்ப்பாக்கம், பெங்களூரென்றால் நிம்ஹான்ஸ். நகுத்தல் என்றால் கன்னட மொழியிலும் சிரித்தல். தெரியுமா ?

பிரச்சினைகள் உங்களை சூழும்போது மனதுக்குள் இதனை சொல்லுங்கள். டேக் இட் ஈஸி. எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் நம்மால். நமக்கு அதற்கான தகுதியும் திறமையும் இருக்கிறது. டேக் இட் ஈஸி. டேக் இட் ஈஸி. எளிதாக எடுத்துக்கொள்வேன். கோபப்படமாட்டேன். வெற்றியாளன் நான். டேக் இட் ஈஸி...

எங்கே ஒருமுறை சொல்லுங்கள்...டேக் இட் ஈஸி...!!!

One At a Time !!



முதலில் பல பிரச்சினைகளைக்கு காரணம், நாம் பல விஷயங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு, எல்லாவறையும் ஒரே நேரத்தில் செய்துமுடிக்கவேண்டும் என்று கொலைவெறியோடு அலைவது..ஒரு சிலர், இது போன்று பல செயல்களை, பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் அசகாய திறமையை வளர்த்துக்கொண்டு கலக்குவார்கள். ஆனால் அந்த திறமை குறைவாக கொண்டிருப்பவர்கள், அதையும் செய்யமுடியாமல், இதையும் செய்யமுடியாமல், குடும்ப வாழ்க்கையிலும் மொக்கை, பணியிலும் டொங்கு, பிஸினஸிலும் ஊற்றல் என்று மண்டையை பிய்த்துகொண்டு அலைவார்கள்...!!!

ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது, அய்யோ, இன்னொரு வேலை இருக்கிறதே, அதை செய்யவில்லையே என்று டென்ஷன் ஆவது...

ப்ரயாரட்டைஸ் செய்யுங்க...மனைவிக்கு ஒரு காபி தந்துவிட்டு, அப்புறம் வாஷிங் மெஷினில் துணி போடுங்க. காபி பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு வாஷிங் மெஷினுக்கு போனால் காபி கொதித்து கீழே கொட்டும். இந்த நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் இன்னும் டென்ஷன் ஆகும்...தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல்லிக்கொண்டே காபி பாத்திரத்தை எடுக்க போனீர்கள் என்றால் குழந்தை திடீரென அழும். பாத்ரூமில் லைட் எரிந்து கரண்ட் வேஸ்ட் ஆகும். யாராவது அந்த நேரத்தில் வீட்டு பெல் அடித்தால் டோட்டல் டேமேஜ். இது ஒரு உதாரணம். அடியேனின் சொந்த வாழ்க்கையை இதில் கோர்த்து பார்த்து குஜால் ஆகவேண்டாம்...

எது முதலில். எதற்கு ப்ரயாரிட்டி. அதை சரியாக கணித்து செயல்படுவதில் உங்களுக்கு வெற்றி...வாஷிங் மெஷின். தொலைபேசி அழைப்பு. அப்புறம் பார்க்கலாம். அழும் குழந்தையை எடுங்கள். கேஸ் ஸ்டவ்வை நிறுத்துங்கள். கதவை திறந்து பதில் சொல்லுங்கள். குழந்தையோடு காபியை மனைவிக்கு கொடுத்துவிட்டு, வாஷிங் மெஷின் போங்கள். இது எவ்வளவு எளிமையாக இருக்கிறது ?

எங்கே மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் ஓன் அட் எ டைம்...!!!

இதை கடைபிடித்தால் ஒரு மண்டலம் அதாவது 48 நாளில் கிடைக்காத வெளிநாட்டு பயண ஆசை பூர்த்தியாகும், தடைப்பட்டிருந்த செவ்வாய் தோஷ திருமணம் நடைபெறும், வெகுநாட்களாக வீட்டில் இருக்கும் மகனுக்கு வேலை கிடைக்கும்...!!!


மூன்றாவது மந்திரம் கூட ஒன்று உண்டு. அது எனக்கு பின்னூட்டம் அளித்தாலோ அல்லது ஓட்டு போட்டாலோ சொல்லப்படும்..!!!

35 comments:

உங்கள் ராட் மாதவ் said...

//
இதை கடைபிடித்தால் ஒரு மண்டலம் அதாவது 48 நாளில் கிடைக்காத வெளிநாட்டு பயண ஆசை பூர்த்தியாகும், தடைப்பட்டிருந்த செவ்வாய் தோஷ திருமணம் நடைபெறும், வெகுநாட்களாக வீட்டில் இருக்கும் மகனுக்கு வேலை கிடைக்கும்...!!!//
Super :-)

Anonymous said...

enga thalana thalathan

ரவி said...

ரேட் மாதவ். ரசித்தமைக்கு நன்றி....

ரவி said...

Anonymous said...
enga thalana thalathan

நன்றி அனானி.

இந்த பின்னூட்டத்தை நானே போட்டுக்கலைன்னு சொன்னா நம்பவா போறாங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

Suresh Kumar said...

மூன்றாவது மந்திரம் கூட ஒன்று உண்டு. அது எனக்கு பின்னூட்டம் அளித்தாலோ அல்லது ஓட்டு போட்டாலோ சொல்லப்படும்..!!!//////////////////

பின்னூட்டம் போட்டுஉட்டேன் அதையும் சொல்லுங்க

ரவி said...

தனிபதிவாக சொல்லனுமா இல்லை இதே பதிவில் சொல்லனுமா ?

S.A. நவாஸுதீன் said...

ரெண்டாவது மந்திரத்தைக் கடைப்பிடித்து ஒன்னும் சரியாய் வரலைன்னா முதல் மந்திரத்தையும் கடைபிடிக்கலாம். சரிதானே

ரவி said...

ரெண்டாவதை கடைபிடிக்கும்போது முதல் மந்திரத்தை உபயோகிங்க.

ரொம்ப சீரியஸாக கடைப்பிடிக்க ஆரம்பிக்கப்போறீங்கன்னு நினைக்கிறேன்..

வாழ்த்துக்கள்...!!!

Unknown said...

நல்ல பயனுள்ள மந்திரங்கள். நன்றி.

க.பாலாசி said...

//ப்ரயாரட்டைஸ் செய்யுங்க...மனைவிக்கு ஒரு காபி தந்துவிட்டு, அப்புறம் வாஷிங் மெஷினில் துணி போடுங்க. காபி பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு வாஷிங் மெஷினுக்கு போனால் காபி கொதித்து கீழே கொட்டும். இந்த நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் இன்னும் டென்ஷன் ஆகும்...தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல்லிக்கொண்டே காபி பாத்திரத்தை எடுக்க போனீர்கள் என்றால் குழந்தை திடீரென அழும். பாத்ரூமில் லைட் எரிந்து கரண்ட் வேஸ்ட் ஆகும். யாராவது அந்த நேரத்தில் வீட்டு பெல் அடித்தால் டோட்டல் டேமேஜ். இது ஒரு உதாரணம். அடியேனின் சொந்த வாழ்க்கையை இதில் கோர்த்து பார்த்து குஜால் ஆகவேண்டாம்...//

இதை, முதல் மனைவியை முதலிலும், இரண்டாமதை இரண்டாவதும், 3வதை....
இப்படி எடுத்துக்கலாமா?.. ஏன்னா இப்படி சொல்லும்போது இன்னும் கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கும்ல.

தமிழ் அமுதன் said...

நல்லாத்தான் படிச்சுகிட்டு வந்தேன், ரெண்டாவது மந்திரத்துக்கான படத்துல
அந்தக்கா கொண்டுவர்ற ''பீர் கிளாச'' பார்த்தோன எல்லாம் மறந்து போச்சு!!


''take it easy''

செந்தழல் ரவி ரசிகையர் மன்றம் said...

அவ்வ்வ்.. ரம்யா.. இப்போ இந்த சோ எங் பக் வேறயா? ஒன் அட் எ டைம்.. இதை உங்களுக்குள் ஆயிரம் தடவை சொல்லிக் கொள்ளவும்.

சரி. டேக் இட் ஈஸி. டேக் இட் ஈஸி. நீங்க ஐ லவ் யூ சொல்லுங்க.. நான் ஒரு வோட்டு போடுறேன்.

ரவி said...

பாலாஜி, அதிகம் டிவி நாடகம் பார்க்கவேண்டாம்.

ரவி said...

ஜீவன் டேக் இட் ஈஸி...

ரவி said...

சோ எங் பக் எமது கொரிய மொழி டீச்சராவார்.

நாமக்கல் சிபி said...

எவ்வளவு நல்ல தத்துவங்களை எளிமையா சொல்லி இருக்கீங்க!

லெட் தம் டேக் திஸ் ஈஸி என்றா?

Vidhoosh said...

:) Good post..

T.V.ராதாகிருஷ்ணன் said...

பயனுள்ள மந்திரங்கள்

Admin said...

எனக்கு முக்கியமான மந்திரம் தேவை படுது தர முடியுமா...

நிகழ்காலத்தில்... said...

\\ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது, அய்யோ, இன்னொரு வேலை இருக்கிறதே, அதை செய்யவில்லையே என்று டென்ஷன் ஆவது...\\

திருப்பூர் பக்கம் வந்து பாருங்க.,

இது சாதரணம்:))

வால்பையன் said...

அந்த பீர் அத்தனையும் என் வீட்டுக்கு அனுப்பினா இன்னும் நாலு மந்திரம் நான் சொல்லுவேன்!

சம்பத் said...

சூப்பர் தத்துவங்கள்....நல்ல எழுதறீங்க....இன்னிலேர்ந்து நானும் உங்கள் நண்பன்.. :)

ரவி said...

நன்றி டிவிஆர் அய்யா

நான் said...

கேட்க நல்லாத்தான் இருக்கு...

வினோத் கெளதம் said...

Tala,

I given
"Interesting Blogger Award"..
to U..

ரவி said...

கிறுக்கன் நன்றி !!!!!!

ரவி said...

நன்றி வினோத். நானும் போட்டுக்கறேன்...

சின்ன அம்மணியும் கொடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன்..!!!

விக்னேஷ்வரி said...

நிஜமாவே நல்ல மந்திரங்கள் தான் ரவி. நன்றி.

Radhakrishnan said...

மிகவும் அருமையான மந்திரங்கள். நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய இரண்டு.

மிக்க நன்றி.

அன்புடன் அருணா said...

:)
third on????

ரவி said...

aruna.

take it easy. one at a time.

'first things first'

this is the third one.

Anonymous said...

Good one...

Keep rocking..

Ram

ரவி said...

நன்றி ராம்..

CS. Mohan Kumar said...

ரவி,

இன்று தான் உங்கள் வலை தளம் வந்தேன். கலக்குறீங்க. குறிப்பாய் இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நீங்க சொன்ன ரெண்டு idea- வும் ரொம்ப சரி. பலரும் அறிந்தது. எனினும் நீங்க எளிமையாய் அழகிய உதாரணங்களுடன் எழுதியுள்ளீர்கள்.

நானும் ஒரு blogger-தான். நம்ம பதிவு பக்கம் ஒரு முறை வந்து பாருங்களேன்.
http://veeduthirumbal.blogspot.com/

மோகன் குமார்

Anonymous said...

ஆனா ஒன்னுமட்டும் தெரிய மாட்டேங்குது... பிரச்சனை வரும் போது இந்த வார்ததைகளே மறந்து போகிறதே,,, என்ன செய்ய...