Friday, June 19, 2009

"உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள் பாகம் 2

21. கில்லி..! (Gilly) : அபுஅஃப்ஸர்

சுட்டி வேலை செய்யவில்லை...எங்கே தேடியும் கதையை கண்டுபிடிக்க முடியவில்லை...கூகிளிட்டு பார்த்தால் கில்லி தளத்தின் பல சுட்டிகள் வருகின்றனவே தவிர இந்த கதையை கண்டுபிடிக்க முடியவில்லை..இதனை அபுஅப்ஸருக்கு தெரிவித்துள்ளேன்....

22. நிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை : மொழி

அழகான நடை, நல்ல மெசேஜ்...தேர்ந்த எழுத்தாளரைப்போல கதையினூடாக ஒன்றவைக்கும் வித்தை கைவந்திருக்கிறது இவருக்கு..

கண்டிப்பாக வாசிக்கவும், யோசிக்கவும் வைக்கப்போகும் கதை இது...

என்னுடைய மதிப்பெண் 70/100

23. நூல் : Keith Kumarasamy

ஒரு உண்மைச்சம்பவத்தை எழுத்தில் வடித்திருக்கிறார்...நான் எப்போதும் ரசிக்கும் ஈழத்தமிழ் நடை...இயல்பானதும், அழகானதுமான அந்த நடை ஒன்றே போதும் தனிப்பட்ட அளவில் நான் இந்த கதையை ரசிக்க...

என் பரிந்துரை : ஒருமுறை கண்டிப்பாக வாசியுங்கோ...

என்னுடைய மதிப்பெண் 50/100


24. மன்மதனின் முடிவு : Covairafi

முதல்பார்வையில் கண்ணில் படுவது, கொஞ்சம் இடைவெளி விட்டு சிறிய பத்திகளாக எழுதியிருக்கலாம் என்பது...மேலும் படிக்கப்படிக்க, கொஞ்சம் சுருக்கமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது...

தலைப்பிலேயே கதை முழுவதையும் யூகிக்க முடிவது இன்னொரு மைனஸ். கதையில் பாய், அய்யர், காதரின், பரணி என்று பல மதங்களை வலிந்து நுழைத்தது போன்ற தோற்றப்பாடு எழுவதை தவிர்க்க இயலவில்லை...

எடுத்துக்கொண்ட தீமுக்காக கண்டிப்பாக பாராட்டலாம்...

என்னுடைய மதிப்பெண் 50/100

25. காத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்

இயல்பான கதை. கொஞ்சம் நகைச்சுவை உணர்ச்சியும் எழுத்தாளரிடம் இருப்பதால் கதையை தொடர்ந்து படிக்க எந்த தடையுமில்லை...கணினி சம்பந்தமான சில விஷயங்களை அப்படியே பயன்படுத்தினால் மற்றவருக்கு புரிய வாய்ப்பில்லை. உதாரணம் KT. நாலேஜ் ட்ரான்ஸ்பர் என்று சொல்வது மென்பொருள் துறையில் இருப்பவர்களுக்குத்தானே புரியும்...

முடிவும் நன்றாகவே வந்து விழுந்துள்ளது...முதலுக்கு மோசமில்லை...

என்னுடைய மதிப்பெண் 55/100

26. அப்பா வீடு : கே.பாலமுருகன்

கொஞ்சம் நீளம்...எடுத்துக்கொண்ட உழைப்பிற்காக எழுத்துப்பிழைகளை மன்னித்துவிடலாம்தான்...சில படங்கள் கதையோடு ஒட்டாமல் இருப்பது வேறுபாடாக தெரிகிறது...

நல்ல முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...

என்னுடைய மதிப்பெண் 58/100

27. பச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும்! (உரையாடல் சிறுகதை போட்டிக்கு) : அபி அப்பா


தட்டுவாணி, முண்டச்சி என்பது போன்ற வட்டார வழக்கு கொஞ்சம் பெரிதான (சிறு) கதைக்குள் நம்மை சிக்கவைத்து இழுத்துக்கொண்டு போகிறது...நகைச்சுவையான சம்பவங்கள் கொஞ்சம், சமூக பொருளாதார சூழ்நிலைகள் கொஞ்சம், சாதி பிரச்சினை கொஞ்சம் என்று இழுத்துச்சென்று முடிகிறது காதை...

குள்ள மாமா என்றே எழுதியிருக்கலாம்...ம் க்கு ப்ராக்கெட் போட்டு போட்டு எழுதியது தேவையற்றது என்று தோன்றுகிறது...

என்னுடைய மதிப்பெண் 65/100

28. இடைவெளியே ஓடிவிடு :

Nதமிழின் மால்வேர் இருப்பதாக கூகிள் க்ரோம் சொல்கிறது. கதையையும் படிக்கவில்லை, லிங்கையும் தரவில்லை...

29. தங்கையுடையான் : முரளி குமார் பத்மநாபன்

முதல் வரியே கவர்கிறது...தொண்ணூறுகளில் புரியாமல் படித்த பாலகுமாரன் நாவல் போல இருக்கிறதே என்று நினைத்தபோது, கொஞ்சம் எளிமையான நடைக்கு தாவிவிடுகிறது. அப்பாடா தப்பித்தோம் என்று நினைக்கையில்...உண்மையில் இது தரமான கதைதான் என்பதை அடுத்தடுத்த எழுத்துக்கோர்வைகள் சொல்கின்றன...

முடிவு அவ்வளவு ரசிக்கவைக்கவில்லை என்றாலும், நல்ல நடைக்காக கண்டிப்பாக வாசிக்கவேண்டிய படைப்பு...

என்னுடைய மதிப்பெண் 65/100

30. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் : கடைக்குட்டி

ஆங்காங்கே கலர் அடித்து எழுதியுள்ளார் கடைக்குட்டி. அமெச்சூர்த்தனமாக இருந்தாலும், எழுதவேண்டும் என்று முயல்வதை பாராட்டலாம்...

கதையில் ட்விஸ்ட் என்பதை வாசகர்கள் கண்டுபிடிக்கவேண்டும், அதை எழுத்தாளரே சொல்வது சரியல்ல..சிறுகதையின் அடிப்படையை படிப்பது நலம்...

என்னுடைய மதிப்பெண் 45/100

31. கனவு : ரத்னாபீட்டர்ஸ்

கோர்வையாக எழுதமுடிகிறது எழுத்தாளரால்...மறுபிறவி, கனவு, லண்டன் என்று கொஞ்சம் இலக்கில்லாமல் பயணிக்கும் கதை என்றாலும், முயற்சி நன்று. இன்னும் நிறைய வாசித்து எழுத பழகலாம்...எழுத்தி இருக்கும் நாடகத்தனம், அதனுடன் ஒன்றவிடாமல் தடுக்கிறது...

எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பது சிறப்பு...

என்னுடைய மதிப்பெண் 30/100

32. “வலி” : ஜாக்கிசேகர்

கதையை பத்து வரிகளுக்கு முன்னாலேயே முடித்திருந்தால் இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கும்...

எழுத்துப்பிழைகளை சரி செய்து, தேவை இல்லாத வசனங்களை எடிட் செய்திருந்தால், ஒரு பர்பெக்ட் சிறுகதை ரெடி...பாஸ்ட் புட் போல...

என்னுடைய மதிப்பெண் 60/100

33. குட்டிப் பாப்பா : வெட்டிப்பயல்

கொஞ்சம் ஏற்றுக்கொள்ளமுடியாத கதைக்கரு...உணர்வு ரீதியில்...மற்றபடி நல்ல தரமான எழுத்து நடை முதல் பத்து வரியை படித்தவர்களை கடைசி வரி வரை கொண்டு செல்கிறது...

கொஞ்சம் இலக்கில்லாத பட்டம் போல பறந்து பிறகு சரியாக டார்கெட் ஆடியன்ஸை தாக்குகிறது...நேரடி அனுபவம் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதே கதையின் முதல் வெற்றி...போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்....

என்னுடைய மதிப்பெண் 60/100

34. என் தோழியின் இருப்பு : பாலமுருகன் கேசவன்

கதைக்கு பொருத்தமான படத்தை தேர்வு செய்தது பாராட்டுக்குறியது..கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒரு கதை...நல்ல மஞ்சள் மாலைப்பொழுதில் சூடான தேநீருடன் வாசிக்கும்போது இன்னும் சுகமாக இருக்கக்கூடும்...

என்னுடைய மதிப்பெண் 70/100

35. வக்கிரம் : நர்சிம்

இந்த எழுத்தாளரை உச்சந்தலையில் நறுக்குன்னு கொட்டனும் போல வக்கிரமாக உள்ளது...கதையை ரெண்டு மூனு முறை படிச்சும் ஒன்னும் பிரியல...ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் ரேஞ்சுக்கு வாசகர்களை உயரத்தில் வைத்ததற்கு ஒரு ஷொட்டு..

வாசகர்களையே முடிவை கணித்துக்கொள்ளச்சொன்ன உத்தி என்னைப்பொறுத்தவரை புதிது. நன்று. பரிசை குறிவைத்து கோல்போட்ட கதை இது...எளிய நடை...மொத்தத்தில் நல்ல கதை...

என்னுடைய மதிப்பெண் 70/100

36. மனையியல். : இரா. வசந்த குமார்.

சிக் சிக் என ஆரம்பித்து நச் இச் என முடிந்த கதை. ரயிலில் பயணிக்கும் கதை மாந்தருடன், நாமும் அந்த மூட்டைப்பூச்சு வாசனை சீட்டில் அமர்ந்திருப்பதுபோல கதைக்குள் இழுத்துவிடுகிறார் எழுத்தாளர்..

மெல்லிய உணர்வுகளை மென்மையாகவே வார்த்தைகளில் சொல்லும் வரம் இவருக்கு வாய்த்திருக்கிறது...சொல்லி வைத்து அடிக்கிறார் கில்லி...கண்டிப்பாக வாசிக்கவேண்டிய கதை..

என்னுடைய மதிப்பெண் 70/100

37. பொட்டலம் [\'உரையாடல்\' சிறுகதை போட்டிக்கு] : ராமலக்ஷ்மி

சமூகம் சார்ந்த சிறுகதை. சற்று நீளமாக தோன்றினாலும், கதையோட்டத்தில் தெரியவில்லை. சுவாரஸ்யமான எழுத்து இயல்பிலேயே வந்திருக்கிறது எழுத்தாளருக்கு...எடுத்துக்கொண்ட கதைக்களம் எளிமையானதாக இருந்தாலும், அதில் வலிமையான மொழியை வாசகர்களுக்கு கம்யூனிகேட் செய்வதில் வெற்றிபெற்றிருக்கிறார் ராமலஷ்மி. பாஸ் மார்க்...

என்னுடைய மதிப்பெண் 60/100

38. தற்செயலாக பறிக்கப்பட்ட ஒரு மலர் : ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

இயல்பிலேயே வெளிப்படும் கவிதைபோன்ற வரிகளும், எங்கேயும் பார்த்திராத உவமைகளுமாக..இன்னும் எளிமையாக சொல்லனும்னா ச்சும்மா மஜாவா இருக்கு கதை...

அழுத்தமான சம்பவக்கோர்வைகளும் அதனை நுணுக்கமாக வெளிப்படுத்தும் விதமும்...

இதோ, இன்னொரு தேநீர்க்கதை..நான் ரசித்தேன்...

என்னுடைய மதிப்பெண் 65/100

39. வன்முறையின் தொடக்கம் : அரவிந்த்

நல்ல நடை. கரண்ட் அபையர்ஸ் பேசும் சின்னஞ்சிறு கதை...முடிவை சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குன்றிவிடும். இறுதியில் எழுதப்பட்ட ஒரு பத்தியை பின்னூட்டமாக சொல்லியிருந்திருக்கலாம். கதை என்பதை மறந்து பிரச்சினை என்று மனது திசைமாறிவிடுகிறது...

என்னுடைய மதிப்பெண் 50/100


40. தங்கையுடையான் : முரளிகுமார் பத்மநாபன்

ஏற்கனவே சேர்க்கப்பட்டு விமர்சனமும் செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும், நல்ல கதை இது...படிக்க மறக்கவேண்டாம்..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒவ்வொருவரும் ஒரு படைப்பை உருவாக்க உழைப்பை சிந்துகிறார்கள்...அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்..ஒவ்வொருவரின் படைப்பும் அவர்களை பொறுத்தவரை சிறப்பானதே...இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

பொதுவாக பார்க்கும்போது, சிறுகதை, போட்டிக்கு எழுதுகிறோம் என்றதும் பதிவர்கள் முகத்தை ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி போல் வைத்துக்கொள்வார்கள் என்று கற்பனை செய்யத்தோன்றுகிறது,...அல்லது நல்ல நகைச்சுவைக்கு பஞ்சம்...ஒன்றிரண்டு பேரைத்தவிர, முயற்சி கூட எடுக்கமாட்டேங்குறாங்க நம்ம மக்கள்...!!!

மற்ற கதைகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க....

33 comments:

கே.என்.சிவராமன் said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு ரவி... ஊர் கூடி தேர் இழுப்பது என்றால் இதுதான் :-)

தொடருங்கள்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அன்புடன் அருணா said...

ப்ச்ச்..ப்ச்ச்...ரெண்டாவது வரிசையிலும் என் கதை இல்லையா????OK...OK!!!

வெட்டிப்பயல் said...

நல்ல வேளை கொஞ்சம் கூட ஏற்றக் கொள்ள முடியாத கதைனு சொல்லுவீங்களோனு பார்த்தேன்...

இன்னைக்கே எல்லா விமர்சனமும் வந்துடுமா? :)

சென்ஷி said...

இதுல இருவது கதை தே(ஏ)றிடுச்சா இல்லையா.. :))

வால்பையன் said...

இதுலயும் நான் இல்லையா!

அண்ணே பி.பி ஏத்தாதிங்கண்ணே,
அப்புறம் நானும் பி.பி ஏத்த வேண்டியிருக்கும்!

அபி அப்பா said...

அன்பு ரவி!

எனக்கு 65 என்பது சந்தோஷமா இருக்கு.

சரவணகுமரன் said...

விமர்சனங்கள் அருமை... அனைத்து கதைகளையும் படித்து கருத்து கூறுவதற்கு மிக்க நன்றி...

சரவணகுமரன் said...

//இயல்பான கதை.//

//கணினி சம்பந்தமான சில விஷயங்களை அப்படியே பயன்படுத்தினால் மற்றவருக்கு புரிய வாய்ப்பில்லை. //

இயல்பான கதையல்லவா? அதான் இயல்பா இருக்கணும்ன்னு...ஹி..ஹி.. :-)

வால்பையன் said...

//அபி அப்பா said...
அன்பு ரவி!
எனக்கு 65 என்பது சந்தோஷமா இருக்கு.//

இல்லாட்டி வந்து கடிச்சி வைப்பேன்னு மிரட்டுனிங்களாமே!

Thamiz Priyan said...

கலக்கல் ரவி! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! நல்லா விமர்சனம் பண்றீங்க..:)
என் கதை எப்ப வந்து திட்டு விழுமோன்னு திக் திக்ன்னு இருக்கு..;-)))

Unknown said...

கன்னிமுயற்சிக்குக் கிடைத்த 50 மதிப்பெண்கள் 500 மதிப்பெண்களுக்கு சமன்.

தேவன் மாயம் said...

என் கதையின் தலைப்பு ஃபாண்ட் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி ரவி!!! இப்போது மாற்றிவிட்டார்கள்!!

இரா. வசந்த குமார். said...

அன்பு செந்தழல் ரவி...

வாழ்த்துக்கள். நன்றிகள். கீழ்க்காணும் கண்ணிகளையும் அடுத்த பதிவில் கொடுத்தால், அனைவருக்கும் பயன் அளிக்கும் என்பது என் திண்ண எண்ணம்.

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.

புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.

நர்சிம் said...

ரவி..

ஒரு கதைக்கு குறைந்த பட்சம் 5 நிமிடம் என்றாலும் எவ்வளவு நேரம்.. அதுவும் ஒவ்வொரு கதையையும் மேலோட்டமாக படிக்காமல் 4 வரிகளில் விமர்சனம் செய்யும் அளவிற்கு என்றால்.. மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..

நன்றி பாஸ்.

லக்கிலுக் said...

ரவி!

மார்க் போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது எனக்கு நல்ல மார்க் போட்டிருந்தாலும் :-) போட்டி முடிவுகளில் இன்ஃப்ளூயன்ஸ் ஏற்படுத்தி விடுமோ என்று நினைக்கிறேன்.

மார்க் இல்லாமல் வெறும் விமர்சனமாக இருந்தால் தேவலை இல்லையா?

முரளிகண்ணன் said...

அருமை செந்தழல்ரவி.

பரிசல்காரன் said...

பாராட்டத்தக்க செயல் ரவி!

நந்தாகுமாரன் said...

Lucky Luke சொல்வதை வழிமொழிகிறேன் ... என்றாலும் ஆனந்த விகடனின் marks எல்லாம் M.G.R. மற்றும் ரஜினி படங்களின் வெற்றியை எதுவுமே செய்ய முடியவில்லை என்ற சரித்திர நீரூபணத்தால் ... பார்ப்போம் ... மற்றபடி ரவி உங்களின் இந்த முயற்சி பாராட்டிற்கு உரியது

Anonymous said...

அபுஅஃப்சரின் பல பதிவுகள் காணாமல் போய் விட்டன அதில் கில்லி பதிவும் ஓன்றுப்பா....

வினோத் கெளதம் said...

நம்ம ஸ்டோரி ஒன்னுகிது கொஞ்சம் பார்த்துட்டு சொல்லுங்க..;)

http://julykaatril.blogspot.com/2009/06/blog-post_09.html

ரவி said...

வசந்த், நன்றி...

சுட்டி என்ற வார்த்தையை விட கண்ணி என்ற வார்த்தை குஜாலாக இருக்கிறது...

ரவி said...

லக்கி, பள்ளியில் கூட மார்க் போடுகிறார்கள்...எண் ஒரு அடையாளம்தான்...

ரவி said...

நர்சிம் நன்றி...

ரவி said...

வினோத், பார்க்கிறேன்...அந்த சுட்டியில் சேர்த்துட்டீங்களா

ரவி said...

அலியாரின் பதிவை ஆர்க்கைவில் இருந்து எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நல்லதொரு முயற்சி ரவி,

நானும் ஒரு கதை எழுதியிருக்கிறேன் நேற்று.. சும்மா பாத்து சொல்லுங்கோ

ராமலக்ஷ்மி said...

உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி ரவி. பெரிய குறை ஏதும் சொல்லப்படவில்லை. அப்போ அறுபது மார்க் என்றால் நான் முதல் வகுப்பில் பாஸ்:)!

நேரம் எடுத்து தாங்கள் செய்யும் இந்த நல்ல முயற்சிக்கு என் பாராட்டுக்களுக்கும்!

கடைக்குட்டி said...

உங்கள் முதல் இடுகையிலேயே என் படைப்பைத் தேடினேன்,,,

கடைக்குட்டி ஒரு கத்துகுட்டிதானுங்க....

கண்டிப்பா இன்னும் இன்னும் நல்லா எழுதிட்டு கூப்பிடுறேன் வாங்க...

கடைக்குட்டி said...

ஆனாலும் இவ்ளோ டீடெய்லா...

யப்பாஆஆஆஅ....

எங்க இருந்துதான் இவ்ளோ பொறுமையோ...

அதற்கு ஒரு சலாம் :-)

ஷாகுல் said...

நல்ல முயற்சி. எனக்கு எப்போ மார்க் போடுவீங்க?

வினோத் கெளதம் said...

எந்த சுட்டிங்க..

ரவி said...

ஷாகுல், படிச்சிக்கிட்டே இருக்கன்...

Unknown said...

நண்பா மிக்க நன்றி,
என்னுடைய கதைக்கு உங்களுடைய சிறுவிமர்சனம், நன்றி. அதுவும் 65 மார்க். ஆவ்வ்வ்வ்வ் ........:-)