Monday, June 22, 2009

தமிழ்மணம் நெகட்டிவ் ஓட்டை எப்போது நீக்கும் ?அப்பாடா...சாயா சிங் படத்தை போட இன்னொரு சான்ஸ் கெடைச்சிருச்சு..

அதாவது நான் சொல்ல வர்ரது என்னன்னா, முந்தா நாள் என்னுடைய பதிவு 4 ஓட்டு வாங்கி வாசகர் பரிந்துரையில் பார்த்தேன் (உரையாடல் கதை விமர்சன பதிவு)

ஆனா நேற்று திறந்து பார்த்தால் நெகட்டிவ் ஓட்டுகளில் வந்து நிற்கிறது. அதாவது வாசகர் பரிந்துரைக்கு என்ன அர்த்தம் ? நிறைய வாசகர்கள் பரிந்துரைத்தால் அது சூடான இடுகையில் வரவேண்டும் என்பது தானே ?

சொம்பு விஜய், சாக்ரீம் மகேஷ் மாதிரி கொலைவெறி குப்பன்கள் இருபத்தெட்டு ஐடி வைத்து, பத்து முறை ரைவுட்டரை சுவிட்ச் ஆப் செய்து டைனமிக் ஐப்பி மாற்றி, ப்ராக்ஸி தளங்களில் இருந்து ஓப்பன் ஐடி உள்ளே நுழைந்து மைனஸ் ஓட்டு குத்தினால் நாங்க என்ன செய்வது ?

ஓப்பன் ஐடி அன்ப்ரேக்கபுளா என்ன ? அது ஒன்று MAC அட்ரஸை எடுப்பதில்லையே ? அதே சமயம், பத்து சிஸ்டம் வைத்துள்ள புரவுசிங் செண்டர் ஓனர் பத்து மைனஸ் ஓட்டு குத்த முடியுமே ?

டிவிஆர் அய்யா பதிவில், நெகட்டிவ் மார்க் போட இது என்ன மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எக்ஸாமா என்று சொன்னது காமெடியாக இருந்தாலும் அது தானே உண்மை ? ஏன் கன்ஸிடர் செய்யக்கூடாது ???

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
க்வாட்டர் கோயிந்து

10 comments:

ரவி said...

கயமை. 1

ரவி said...

தமிழ்மணத்தில் ஓட்டு போடுங்கப்பா............

குவாட்டர் கோயிந்தன் said...

நான் பதிவே போடலியே....

ரவி said...

அப்ப ஓட்டாவது போடுங்க ஹி ஹி

மதிபாலா said...

தமிழ்மணத்துல ஓட்டெல்லாம் போடுவாய்ங்களா?

அதென்னமோ எனக்கெல்லாம் அது விழறதே கெடயாது.

அட நலலாருந்தா நல்லாருக்குன்னு போடுங்க. இல்லாட்டி நெகட்டிவ் ஓட்டாவது போடுங்க.

ரெண்டுமே இல்லே...ஹ்கூம்.

:(((((

நாமக்கல் சிபி said...

பிடிச்சிருந்தா பதிவை சூடாக்க ஓட்டுப் போடணும்!

பிடிக்கலைன்னா பின்னூட்டத்துல மட்டும் சொல்லிட்டு ஓடிப் போயிடணுமா? என்ன நியாயம் இது?

ரவி said...

வினவு மற்றும் தமிழ் ஓவியாவை வாசகர் பரிந்துரையில் இருந்து தடை செய்தேலே கூட நலம் ஹி ஹி

வினவு said...

ரவி,

உரையாடல் கதைகளுக்கு மதிப்பெண் போட்டு ( அதற்கு வாழத்துக்கள்) களைத்துவிட்டீர்கள் போலத் தெரிகிறது. வினவின் பதிவுகளை தினமும் ஒரிரு ஆயிரம்பேர் படிக்கும்போது தமிழ்மணத்தில் பத்து பதினைந்து வாக்குகள் வாங்குவது பெரிய பிரச்சினையல்ல. ஆனால் எங்களுக்கு மற்றவர்களை விட எதிரிகள் அதிகம். அதனால் நெகட்டீவ் வாக்குகள் ஏன் விழுவதில்லை என்பதுதான்எங்ளுக்கே ஆச்சரியம். போகட்டும், மனுஷ்யபுத்திரன் போன்றோரைப் பற்றி பதிவு போட்டால்தான் செந்தழல்ரவி போன்ற மூத்த பதிவர்கள் வினவில் பின்னூட்டமிடுவார்கள் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

நட்புடன்
வினவு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கென்னவோ இந்த நெகடிவ் ஓட்டு விஷயம் பிடித்தே இருக்கிறது. ஆனால் இந்த டைனமிக் ஐபி மாதிரியான சமாச்சாரங்களைக் கவனித்துக் கொண்டால் போதுமானது :)

Kingkvgu said...

வினவு மற்றும் தமிழ் ஓவியாவை வாசகர் பரிந்துரையில் இருந்து தடை செய்தேலே கூட நலம் ஹி ஹி